Language Selection

பி.இரயாகரன் -2023
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவாஸ்திகாவின் கருத்துரிமையை மறுத்து கருத்துரைக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் விஜகுமாரிடம், ஊடகவியலாளர் பிரஸ்ரெவ் கேட்ட கேள்வியும் - முன்வைத்த பதிலும்,  தேசிய இனத்தின் அழிவுக்கு எப்படி சவக்குழி தோண்டப்படுகின்றது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

புலியிசத்தின் பின்னால் பதுங்கி நிற்கும் தங்களது ஜனநாயக மறுப்பு வன்முறை வடிவத்தை, தமிழ் சமூகத்தின் மீட்சிக்கு உதவுமென்று நம்புகின்ற - நம்ப வைக்கின்ற கிணற்றுத் தவளைகளாக தம்மை முன்னிறுத்திக் கொள்கின்றனர்.

முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாக மக்களை பலியெடுத்தவர்களுக்கு திட்டமிட்டே பலிகொடுத்தவர்களின் வாரிசுகளே இவர்கள். எஞ்சி வாழும் மக்களுக்கு சொந்த சவக்குழியைத் தோண்டி வருகின்றனர். ஒரு தேசிய இனத்தின் எல்லாவிதமான சமூக இருத்தலையும், இல்லாதாக்குகின்ற வக்கிரமான லும்பன்தனமான பொறுக்கி அரசியலே - தமிழ் தேசியத்தின் பேரில் அரங்கேறுகின்றது.


சுவாஸ்திகாவின் கருத்துரிமையை மறுத்து கருத்துரைக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் விஜகுமாரிடம், ஊடகவியலாளர் பிரஸ்ரெவ் கேட்ட கேள்வியும் - முன்வைத்த பதிலும்,  தேசிய இனத்தின் அழிவுக்கு எப்படி சவக்குழி தோண்டப்படுகின்றது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

புலியிசத்தின் பின்னால் பதுங்கி நிற்கும் தங்களது ஜனநாயக மறுப்பு வன்முறை வடிவத்தை, தமிழ் சமூகத்தின் மீட்சிக்கு உதவுமென்று நம்புகின்ற - நம்ப வைக்கின்ற கிணற்றுத் தவளைகளாக தம்மை முன்னிறுத்திக் கொள்கின்றனர்.

முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாக மக்களை பலியெடுத்தவர்களுக்கு திட்டமிட்டே பலிகொடுத்தவர்களின் வாரிசுகளே இவர்கள். எஞ்சி வாழும் மக்களுக்கு சொந்த சவக்குழியைத் தோண்டி வருகின்றனர். ஒரு தேசிய இனத்தின் எல்லாவிதமான சமூக இருத்தலையும், இல்லாதாக்குகின்ற வக்கிரமான லும்பன்தனமான பொறுக்கி அரசியலே - தமிழ் தேசியத்தின் பேரில் அரங்கேறுகின்றது.

புற்றுநோய் போல் புலிப் பாசிசமானது, ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களைத் தொடர்ந்தும் ஒடுக்கி வருகின்றது. ஒரு சமூகம் முன்நோக்கிச் செல்லமுடியாத வண்ணம், ஜனநாயக ரீதியாக கருத்துச் சொல்லும் மனித சுதந்திரத்தை மறுப்பதென்பது ஒடுக்குமுறை தான். இது ஜனநாயகமல்ல, மாறாக வன்முறையாகும். அதிகாரம் இருந்தால் இதுவே சர்வாதிகாரமே. கருத்துச் சுதந்திரங்களை மறுக்கின்ற அரச ஒடுக்குமுறைகளுக்கு நிகரானது.      
  
புலியிசத்தை கொண்டாட அரசு தமக்கு ஜனநாயகரீதியான உரிமையை வழங்காத வரை, நாங்கள் மாற்றுக் கருத்தை பேசுவற்கு விடமாட்டோம் என்று கூறுகின்ற, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரின் கூற்றானது அரசின் ஜனநாயக மறுப்புக்கு நிகரானது. 

இதில் மாற்றுக் கருத்து என்பது அரசுக்கு ஆதரவானது என்ற கருதுகோள் புலியிசமாகும். இதுவே பாசிசத்தின் அரசியல் அடிப்படை. அரசுக்கு எதிரான அனைத்து மாற்றுக் கருத்தையும் மறுக்கின்ற, பாசிசமாகும்.

புலியிசத்தை கொண்டாட அதில் எந்த ஜனநாயகக் கூறும் கிடையாது. மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. புலியிசம் அழிவுகளையும் - தீமைகளையும் கொண்டது. தேசிய இனம் என்ற அடையாளத்தையே அழித்துவிட்டது. 

தமிழ்மக்களின் போராட்டத்தை அழித்த புலிகளை, மனித உயிர்த் தியாகங்களைக் கொண்டு  நியாயப்படுத்துவது, அதை "எங்களுக்காக போராடியவர்கள் - எங்கள் உரிமைக்காக போராடியவர்கள்" என்று கூறுகின்ற பொய்கள் உண்மையாகி விடுவதில்லை. எதார்த்தம் என்ன? ஒரு இனத்தின் இருப்பு என்பது, குறுகிய இனவாதத்தால் முடிவுக்கு வந்து கொண்டு இருக்கின்றது.           
   
புலிகளை பாசிசவாதிகள் என்றும், சர்வாதிகாரிகள் என்றும் எப்படிக் கூறமுடியும் என்ற தர்க்கத்தில் இருந்தான கேள்விகள் ஊடகவியலால் மறுக்கப்படுகின்றது. புலிகள் பாசிசவாதிகள், சர்வாதிகாரிகள் அல்லவென்றால், அதை அரசியல் அடிப்படையில் நிறுவுவதே அடிப்படையாகும். இந்த வகையில் அணுகுகின்ற கேள்வி - பதிலே பேட்டியாக இருக்கவேண்டும். இதை நிறுவும் வண்ணம் கேள்விகளின்றி, பதில்களுமின்றி, சக மனிதனின் கருத்தை மறுப்பதென்பது பாசிசத்தின் மற்றொரு முகம்தான். இதுதான் உண்மை. 

"எங்களுக்காக போராடியவர்கள் - எங்கள் உரிமைக்காக போராடியவர்கள்" எப்படி சர்வாதிகாரிகள், பாசிசவாதிகள் என்று கூறமுடியும் என்று கேட்கின்ற போது, சர்வாதிகாரமல்லாத  - பாசிசமல்லாத புலிகளின் பக்கத்தை அல்லவா முன்வைக்க வேண்டும்?
   
புலிகளை பாசிசவாதிகளல்லவென்று, சர்வாதிகாரிகளல்லவென்று … ஒருநாளும் நிறுவமுடியாது. புலிகள் ஜனநாயக இயக்கமென்று சொல்லும், அரசியல் சமூக அடிப்படைத் தன்மை அதற்கு கிடையாது. இதுவே என்றைக்குமான வரலாற்று உண்மை.   

“அண்ணாக்கள், அக்காக்கள் … பாசிசவாதிகள் என்று எப்படிக் கூறுவது? இது எந்த வகையில் நியாயம்” என்பது அறிவற்ற வாதம். இந்தத் தர்க்கமானது உலகில் பாசிசத்தையும், சர்வாதிகாரத்தையும் … மனித இனத்திற்கு எதிராக முன்வைத்த அனைவரையும், இதைக்கொண்டு நியாயப்படுத்துவதில் முடிகின்றது. இந்தத் தர்க்கம் எந்தவகையில் சரியானது?. ஜெர்மனி நாசிய – பாசிசம் நடத்திய உலக யுத்தத்தின் போது, மரணித்தவர்கள் அனைவரும் அண்ணாக்களும், அக்காக்களும் தானே?

புலிகளிலிருந்து உயிர்தப்பிய அண்ணாக்களின், அக்காக்களின் வாழ்க்கை இன்று எப்படிப்பட்டதாக இருக்கின்றது? கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் தமிழ்தேசியமானது, அவர்களை எப்படி நடத்துகின்றது? கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் இந்த தேசியமானது, செத்துப்போன அண்ணாக்களை, அக்காக்களை முன்னிறுத்திப் பிழைப்பதும், பணம் சம்பாதிப்பதுமே இன்று தமிழ்தேசியமாக நடந்தேறுகின்றது. ஒடுக்கும் இந்தத் தமிழ்தேசியமானது உயிருடன் வாழும் அண்ணாக்களின், அக்காக்களின் வாழ்க்கைக்கு ஒளியூட்டவில்லை. அவர்கள் இழிவுபடுத்தப்பட்டதுடன், தீண்டத்தகாதவர்களாக வாழ்கின்றனர். குறிப்பாக பெண்கள் வலதுசாரிய தமிழ்தேசிய ஆணாதிக்க தமிழனால், துன்பங்கள் மேல் துன்பங்களை அனுபவிக்கின்றனர். தமிழனால் தமிழன் ஒடுக்கப்படுவதையே, எங்கும்  எதார்த்தத்தில் காணமுடியும்.

புலியும், புலித் தலைமையும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிராக இருந்ததுடன், தமிழ் மக்களை ஒடுக்கக் கையாண்ட வழிமுறையானது பாசிசமாக இருந்தது. புலிகள் இயக்கத்தில் தாமாக இணைந்து கொண்ட, கட்டாயப்படுத்தி இணைத்துக் கொள்ளப்பட்ட அண்ணாக்கள், அக்காக்கள் மக்களை ஒடுக்குவதற்காக இணைந்து கொள்ளவில்லை. மாறாக அரசை எதிர்த்து போராடுவதற்காக இணைந்து கொண்டனர். ஆனால் புலிகளின் தலைமையானது மக்களை ஒடுக்க, அண்ணாக்களை, அக்காக்களை பயன்படுத்தியது. இதுதான் விடுதலைப்போராட்டம் என்று நம்பிய, அண்ணாக்கள், அக்காக்கள் கதை இவற்றையும் உள்ளடக்கியது. புலித்தலைமை ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளை, தங்கள் கூலிப்படையாக மாற்றியது.

சமூகத்தின் உயிரோட்டமான அனைத்தையும் ஒடுக்கியது. அறியாமையில் செயற்பட்ட அண்ணன்கள், அக்காக்களை, யாரும் பாசிசவாதிகள் - சர்வாதிகாரிகள் என்று கூறுவதில்லை. மாறாக தலைமையும், அதன் கொள்கையும் பாசிசவாதத்தையும் - சர்வாதிகாரத்தையும் கொண்டதாக இருந்ததுடன், அப்பாவி அண்ணாக்களை, அக்காக்களை தமது குறுகிய மக்கள் விரோத நலனுக்காக பலியிட்டது. இந்த உண்மையை மறுக்க முடியாதளவுக்கு இருப்பதாலேயே, தமிழ் சமூகத்தின் ஜனநாயகம் மறுக்கப்படுகின்றது.

இதன் மூலம் பாசிசப் புலிகளைப் போற்றவும் - கொண்டாடவும் முனையும் அதேநேரம், தமக்கு  ஜனநாயகம் மறுக்கப்படுவதாக கூறுகின்றனர். புலிகள் இருந்தவரை, அவர்கள் யாருக்கும் ஜனநாயகத்தை வழங்கியது கிடையாது. மாறாக வகைதொகையின்றி கொன்று குவித்தார்கள். பலர் காணாமல் போனார்கள். 

ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களைப் பற்றி பேச, கருத்து தடை இன்று கிடையாது. ஆனால் அதை வலதுசாரிகளும், புலியிஸ்டுகளும் பேசுவதில்லை. மாறாக ஒடுக்கும் தமிழனின் ஜனநாயகம் பற்றியே பேசுகின்றனர். தமிழனைத் தமிழன் ஒடுக்கும் அதிகாரம், அதற்கான ஜனநாயகமின்மை பற்றிப் பேசுகின்றனர். இவர்கள் பாசிட்டுகளின் வாரிசுகள். 

15.11.2023