Sat04272024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
ஒடுக்கப்பட்ட மக்களும் - செல்லன் கந்தையாவும்

ஒடுக்கப்பட்ட மக்களும் - செல்லன் கந்தையாவும்

2003 யாழ் நூலகத்தை ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒர...

புது அவதாரமெடுத்துள்ள வெள்ளாளியம்

புது அவதாரமெடுத்துள்ள வெள்ளாளியம்

2003 இல் யாழ் நூலக திறப்புவிழாவை புலிகள் எதற்காக த...

அமெரிக்காவின் நிறவொடுக்குமுறையும் - இலங்கையில் இனவொடுக்குமுறையும்

அமெரிக்காவின் நிறவொடுக்குமுறையும் - இலங்கையில் இனவொடுக்குமுறையும்

அளவிலும்; பண்பிலும் ஒடுக்குமுறைகள் வேறுபட்டாலும், ...

முதலாளித்துவ

முதலாளித்துவ "சொர்க்கத்தில்" மனிதர்கள் வாழ முடியுமா!?

அமெரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக, மக்கள் போர...

கொரோனாவின் ஏஜண்டுகளாகியுள்ள பார்ப்பனிய காவி காப்பரேட் பாசிட்டுகள்

கொரோனாவின் ஏஜண்டுகளாகியுள்ள பார்ப்பனிய காவி காப்பரேட் பாசிட்டுகள்

கொரோனா வைரஸ் தொற்றும் - மரணங்களும், கொரோனாவின் இயற...

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?

செல்வந்தர்கள் தொடர்ந்து செல்வத்தைக் குவிப்பதையே, ம...

Back முன்பக்கம்

சத்தியாகிரகத்திற்கு புதுவருட விடுதலைகிடையாது! அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு!!

  • PDF

பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சத்தியாக்கிரக போராட்டம் எதிர்வரும் புத்தாண்டு விடுமுறை தினத்தையொட்டி நிறுத்தப்படாது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர்ஒன்றிய செயற்பாட்டாளர்  நஜித் இந்திக்க தெரிவித்துள்ளார்.

நேற்று 8ஆம் திகதி மருதானை சீ.எஸ்.ஆர்  மண்டபத்தில் அனைத்து பல்கலைகழக மாணவர்  ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளார் சந்திப்பிலேயே மேற்கூறிய தகவலை அவர்  வெளியிட்டார்.

.

 

தற்போது பல்கலைக்கழகங்களில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளது. அதேவேளை ரஜரட்டை பல்கலைக்கழகம் போன்ற சமமான பிரச்சினைகள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சத்தியாகிரக போராட்டம்  நீண்டகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் இன்று வரையில் சத்தியாகிரக போராட்டம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

நான்காண்டுகால பாடவிதானத்தை மூன்றாண்டுகாலமாக குறைக்கப்பட்டுள்ளது. மாணவார்களின் கோரிக்கையானது மேற்படி பட்டப்படிப்பை நான்கு  வருடங்களாக அமுல்படுத்தும்படியாகும். இக்கோரிக்கையை முன் வைத்தே பேராதெனிய ருகுணு பல்கலைகழக மாணவார்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பேராதெனியவில் சத்தியாகிரகம் ஆரம்பித்து இம்மாதம் 8ஆம் திகதியுடன் 105நாட்களும் காலி நகர்சத்தியாகிரகம் 97 நாட்களையும் கொழும்பு சத்தியாகிரகம் 12 நாட்களையும் தாண்டி நடந்து கொண்டிருக்கிறது. மாணவார்கள் விரிவுரைகளில் தொடர்ச்சியாக கலந்து கொள்ளாவிட்டாலும் சத்தியாகிரகத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையிலும் இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் இன்று வரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இவ்விடயத்தில் உயர்கல்வி அமைச்சும் பல்கலைக்கழக ஆணைக்குழுவும் பிரச்சினையில் இருந்து விலகிநின்று பல்வேறு தரப்புகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். நாம் இவ்வாறான நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டியவர்கள் உயர்கல்வி அமைச்சும் பல்கலைக்கழக ஆணைக்குழுவுமேயாகும்.

நூறு நாட்களுக்கும் மேலாக தொடார்ந்து கொண்டிருக்கும் சத்தியாகிரகம் தொடார்பில் சுதந்திரக் கல்வியை பாதுகாப்பதாகக் கூறும் ஜனாதிபதியும் அரசும் இப்பிரச்சினையை தீர்த்துவைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. ரஜரட்டை பல்கலைகழக மாணவர்கள் தொடர்ச்சியாக 109நாட்களாக சததியாகிரகத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ரஜரட்டை பல்கலைகழகத்தில் ஏற்ப்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கு காரணம் கல்வியை மட்டுப்படுத்தலும் விற்பனையுமேயாகும்.

இவைதான் அரசாங்கத்தின் கொள்கையாக காணப்படுகிறது. இக்கொள்கைகளுக்கு எதிராகவே மாணவர்கள் போராடுகிறார்கள். ரஜரட்டை பல்கலைகழக முகாமைத்துவ பீடத்தை விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்க்கொள்ளபடுகின்றது. இதுவரை காலமும் பல்கலைகழகத்துள் வகுப்புகளை விற்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் தற்போது இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக மாணவர்கள் போராடும் போது மாணவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுப்பதற்க்கு பதிலாக ஆட்சியாளர்கள் மாணவர்கள் மீதான அடக்கு முறைகளை கட்டவிள்த்து விடுகிறார்கள். போராட்டத்துக்கு ஆதரவு தேடும் துண்டுப்பிரசுரங்களை வினியோகித்த மாணவர்கள் ஐவருக்கு ஐந்து வருடகாலத்துக்கு வகுப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு வகுப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் மீதான அநீதியான வகுப்பு தடைகளை நீக்கவேண்டும் என்பதும் மாணவர்களின் கோரிக்கையாகும். இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுப்பதற்க்குப் பதிலாக அரசு மாணவர்கள் மீதாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். அண்மை காலத்தில் இதுபோன்ற தீர்மானகரமான போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நியாயமான போராட்டத்திற்க்கு சம்ந்தப்பட்ட அதிகாரிகள் தீர்வு வழங்க தயாராக இல்லை.

எனவே நாம் தெளிவாக கூறிக்கொள்வது என்னவெனில் இந்த போராட்டத்தை விரிவுபடுத்தி இறுதிவரை தொடர்வோம் என்றாகும். எதிர்வரும் நாட்கள் நாட்டில் புதுவருட விடுமுறை நாட்களாகும். ஆனாலும் நாம் எந்த காரணத்திற்காகவும் சத்தியாகிரகத்தை நிறுத்தப்போவதில்லை. மாணவர்கள் பல்கலைகழகத்தில் தங்கியிருந்து விரிவான போராட்டத்தை முன்னெடுக்க தயார். எதிர்வரும் விடுமுறை நாட்களில் பாரிய போராட்டத்துடன் பாதயாத்திரையும் மேற்கொள்ள நாம் தயாராக இருக்கின்றேம்.

இவ் ஊடகவியலாளர்சந்திப்பில் ரஜரட்ட பல்கலைகழக மாணவர்சங்கத் தலைவருடன் பேராதெனிய வைத்திய பீட மாணவர் சங்க தலைவரும் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - லங்கா விவ்ஸ்

Last Updated on Thursday, 10 April 2014 13:51

சமூகவியலாளர்கள்

< April 2014 >
Mo Tu We Th Fr Sa Su
  1 2 3 4 5 6
7 8 9 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30        

AllVideos Reloaded

புதிய ஜனநாயகம் :- புதியவை