Sat04272024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
ஒடுக்கப்பட்ட மக்களும் - செல்லன் கந்தையாவும்

ஒடுக்கப்பட்ட மக்களும் - செல்லன் கந்தையாவும்

2003 யாழ் நூலகத்தை ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒர...

புது அவதாரமெடுத்துள்ள வெள்ளாளியம்

புது அவதாரமெடுத்துள்ள வெள்ளாளியம்

2003 இல் யாழ் நூலக திறப்புவிழாவை புலிகள் எதற்காக த...

அமெரிக்காவின் நிறவொடுக்குமுறையும் - இலங்கையில் இனவொடுக்குமுறையும்

அமெரிக்காவின் நிறவொடுக்குமுறையும் - இலங்கையில் இனவொடுக்குமுறையும்

அளவிலும்; பண்பிலும் ஒடுக்குமுறைகள் வேறுபட்டாலும், ...

முதலாளித்துவ

முதலாளித்துவ "சொர்க்கத்தில்" மனிதர்கள் வாழ முடியுமா!?

அமெரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக, மக்கள் போர...

கொரோனாவின் ஏஜண்டுகளாகியுள்ள பார்ப்பனிய காவி காப்பரேட் பாசிட்டுகள்

கொரோனாவின் ஏஜண்டுகளாகியுள்ள பார்ப்பனிய காவி காப்பரேட் பாசிட்டுகள்

கொரோனா வைரஸ் தொற்றும் - மரணங்களும், கொரோனாவின் இயற...

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?

செல்வந்தர்கள் தொடர்ந்து செல்வத்தைக் குவிப்பதையே, ம...

Back முன்பக்கம்

கட்டாய இராணுவ பயிற்சி- நாளை உங்கள் பிள்ளையும் பலியாகலாம்!

  • PDF

பல்கலைக்கழத்திற்கு தகுதிபெறும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கட்டாய இராணுவ பயற்சியின்போது லஹிரு சந்தருவன் என்ற பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளார். அடுத்த பலி உங்கள் பிள்ளையாகவும் இருக்கலாமென அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கிறது. ஆகவே இதற்கு எதிராக ஒட்டுமொத்த சமுதாயமும் அணிதிரள வேணடுமென ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை வருமாறு:

 

''பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் கட்டாய இராணுவப் பயிற்சியின்போது ஏற்பட்ட உபாதை காரணமாக இன்னொரு மாணவர் பலியாகியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நொச்சியாகம, வித்யாதர்ஷி வித்தியாலயத்தில் வர்த்தகப் பிரிவில் உயர்தரம் படித்து யாழ்.பல்லைக் கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட கன்னொருவ இராணுவ முகாமில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த லஹிரு சந்தருவன் விஜேரத்ன என்ன மாணவராகும்.


உடற்பயிற்சி செய்விக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த ஜனவரி 26ம் திகதி ஒர் இராணுவ அதிகாரியால் பேராதனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் நம்பிக்கையான தகவல்களிலிருந்து அவரது உதரவிதானம் (மார்பு வயிற்றிற்கிடையிலான மென் தகடு) பாதிக்கப்பட்டதால் ஹர்னியா நிலை உக்கிரமடைந்து நுரையீரல் பகுதிக்கு ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இதயம் செயலிழந்தமையால் மரணம் சம்பவித்துள்ளது.

இந்த மாணவர் சில காலமாக ஹர்னியா நோயினால் பாதிக்கப்பட்டவராக இருந்துள்ளார். அதனைக் கவனியாமல் அவரை கட்டாய உடற்பயிற்சியில் ஈட்டுபடுத்தியமையினால் அவர் மரணித்துள்ளார். அரசாங்கத்தினால் நடத்தப்பட்டுவரும் இந்த கட்டாய இராணுவப் பயிற்சிக்கு பலி கொடுக்கப்பட்ட இரண்டாவது மாணவர் இவராகும். இப்படியான பயிற்சியின் காரணமாக வெளிமடையைச் சேர்ந்த நிஷானி மதுஷானி என்ற மாணவி பயிற்சியின்போது சுகவீனமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மேலும் பல மாணவர்கள் அங்கவீனமடைந்துள்ளனர். இது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினரொருவரின் கேள்விக்கு பதிலளித்த உயர் கல்வி அமைச்சர் அவ்வாறு அங்கவீனமடைந்தவர்கள் 500பேருக்கும் அதிகமாகுமெனக் கூறினார். தவிரவும், ரன்டெம்பே இராணுவ முகாமில் வைத்து சீதுவை பஞ்ஞானந்த வித்தியாலயத்தின் அதிபராக இருந்த டப்.ஏ.எஸ்.விக்ரமசிங்க என்பவரும் மரணமடைந்தார். இது மிகவும் பயங்கர நிலைமையாக இருப்பதோடு, அரசாங்க இராணுவமயத்தின் அடுத்த பலிக்கடா யாராக இருக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. சமூகம் என்ற வகையில நாங்கள் அனைவரும் இந்த நிலைமையை தோற்கடிப்பதற்கு அணிதிரள வேண்டும். இல்லையாயின் அடுத்த பலிக்கடா நீங்களாக அல்லது உங்கள் பிள்ளையாக இருக்கலாம்.


அரசாங்கம் மாணவர்களை கட்டாயப்படுத்தி தனக்கு அடிபணிய வைப்பதற்காகவே இப்படியான பயிற்சிகளை நடத்துகின்றது. பல்லைக் கழக மாணவர்கள் மட்டுமல்ல விரிவுரையாளர்கள் உட்பட வெகுஜன செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இதனை எதிர்க்கும் நிலையிலும் மாணவர்களை அடக்குவதற்கான ஒரு நடவடிக்கையாகவே இந்த பயிற்சி தொடர்ந்து வழங்கப்படுகிறது. மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட நிமிடத்திலிருந்து மரண பயத்தொடு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இராணுவப் பயிற்சியின் வாயிலாகவும், அதன் பின்னர் பல்லைக்கழகத்தில் காலடி எடுத்துவைத்த நிமிடத்திலிருந்தும் வகுப்புத் தடை, மாணவர் தன்மையை இரத்துச் செய்தல், மஹபொல புலமைப் பரிசில் வெட்டப்படுதல் போன்றவற்றால் மட்டுமல்ல, வீடுகளில் மேற்கொள்ளப்படும் இராணுவ தலையீடுகள், கடத்தல் மற்றும் கொலை செய்தல் வரை நிலைமை மோசமாக உள்ளது. இந்த நிலை கடந்த காலங்களில் மாணவர்களுக்கு மாத்திரமல்ல ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் வரை வியாபித்திருந்தது. ஆகவே, இச்சந்தர்ப்பத்தில் போலி இராணுவ பயிற்சிக்கும், ஒட்டுமொத்த அடக்குமுறை செயற்பாட்டிற்கும் எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும்.



-அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம

Last Updated on Sunday, 09 February 2014 18:27

சமூகவியலாளர்கள்

< February 2014 >
Mo Tu We Th Fr Sa Su
          1 2
3 4 5 6 7 8
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28    

AllVideos Reloaded

புதிய ஜனநாயகம் :- புதியவை