Thu05022024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

இஸ்ரேல் பலஸ்தீன ஒப்பந்தம் இலங்கைக்கு ஒரு மாற்று அல்ல

  • PDF

இஸ்ரேல் பலஸ்தீன ஒப்பந்தத்தை இலங்கையில் இனப்பிரச்சனைக்கு மாற்றாக முன்வைக்கக் கோரி பல வேறுபிரிலும் முன் தள்ளப்படுகிறது. இஸ்ரேல் பலஸ்தீனம் வழியில்  ஈழப் போராட்டத்தைக் கைவிடப் புலிகளைக் கோருகின்றனர். இந்த வேண்டுகோளை இலங்கை வந்த அரபாத் கூடவிட்டு வைக்கவில்லை.

ஆனால் இஸ்ரேல்  பலஸ்தீனத்திலோ நீறுப+த்த நெருப்பாக நிலைமை மாறி வருகிறது. இஸ்ரேலிய ய+த ஆதிக்க வாதிகள் கிட்டலரின் வழியில் பலஸ்தீன மண்ணின் மைந்தர்களைக் கொன்று அழித்துவிடுவது மட்டுமின்றி  அவர்களின் மண்ணில் தொடர் குடியேற்றங் களை நடத்திவருகிறது. இதை எதிர்த் துப் போராடிவருபவர்களை கைது செய்தும், படு காயத்திற்குட்படுத்தியும் கொன்றும் தனது வெறிபிடித்த யுத்த ஆதிக்கத்தைதத் தொடர்கிறது.

இந்நிலையில் கையேலாத்தனத்தின் தொடர்ச்சியில் அரபாத் புலம்பவே முடிந்ததே ஒழிய, அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஏன் ஒப்பந்த்த தைக் கைச்சாத்திட  செய்த அமெரிக் கா  இஸ்ரேல் சார்பான நிலையை எடுத்து  வாக்களிப்பில் நடுநிலை,  வீட்டோ அதிகாரத்தை ஐக்கியநாடுகள் சபையில் பயன்படுத்தல், பலஸ்தீனம் மீது நிர்ப்பந்தம் கொடுத்தல் என்ற வகையில்  அமெரிக்கா ய+தஆதிக்கத் தைப் பறைசாற்றி பிரகடனம் செய்கின் றனர்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை  மறைமுகமாக ஊக்குவித்துச் செயற்படும் அமெ ரிக்க ரவுடித்தனத்தையே பலஸ்தீனத் தலைவர் அரபாத் உட்பட  பலர் இலங்கைக்கு மாற்றாக முன்தள்ளுவது என்பது மோசடியாகும்.

இன்று பலஸ்தீன மைந்தர்கள் தமது எல்லா பலத்தையும் பயன்படுத்தி போராட புறப்பட்டது என்பது, உலகக் கபடதாரிகளை  பீதிக்குள்ளாக் கியுள்ளது.  இதைப்பயங்'கரவாதம் வன்முறை, ஜனநாயக விரோதம்  என ஒருபுறம் ஒப்பந்தத்தைக் கைசாத்திட் டவர்கள்  முதல், உலக அரசுகள் அரற்ற  அந்த மக்கள் தமது விடுதலைக்காக தாம் போராடுவதைத் தவிர  வேறுவழியில்லை என்பதை அநுபவமூலம் கற்று போராட தொடங்கி வி;ட்டனர். இதை எந்த ஆயுதபலத்தா லும், துரோகத்தாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதுதான் நாளை தமிழீழத்திற்கும் நடக்கும் என்பதை நாம் புரியத் தவறின்  வரலாற்றில் மேலும்  மக்கள் விரோத துரோகிகள்  உருவாவது வதிர்க்கமுடியாது. இதை  எதிர்த்துப் பேராடுவதும் தவிர்க்க முடியாது.

எஸ்.வி. ராசதுரையின் அப்பட்டமான திரிபு அதுவும் மார்க்சியத்துக்கு எதிராக

சரிநிகர் 125 இல்  எஸ்வி ராசதுரை   '' எழுதாத வரலாறு'' என்ற

பெ. முத்துலிங்கத்தின் நாவலை அறிமுகம் செய்து  ஒரு தொடர் கட்டுரை யை எழுதியிருந்தார். அந்த நாவலை அறிமுகம் செய்த   தொடக்கநிலை யில் எஸ்வி ராசதுரையின்  வர்க்க குணம் மார்க்சியத்திற்கு எதிராக  அப்பட்டமாகத் திரிக்கும் துணிவைக் கொடுத்துள்ளது. அதைப்பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

''உண்மை என்ன?   திராவிடக்கழக வெளியீடு சென்னை (1985)  பெரியாரின் சுயசரிதை இயக்கத்தில்  நெகழ்ச்சித் தன்மை இல்லாததாலேயே  ப. ஜீவானந்தம் போன்றோர்  வெளியேறினர் என்கிறார் முத்துலிங்கம். (பக் 5)  உண்மையில் தமிழக இலங்கைச் சுழ்நிலைகளை சாதியம், பார்ப்பனியம் ஆணாதிக்கம்  தேசியஇன அடையா ளங்கள்  மதவாதம் போன்றவற்றை  கருத்திற் கொள்ளாத ஒரு யாந்திரிக மான  மார்க்சியம் தான் நெகிழ்ச்சித் தன்மையற்றதாக  இது இருந்திருக் கிறது. இந்த உண்மையைத்தான் பெரி யார்  ' சுயதரியாதை சமதர்மம் என்ற   எங்கள் நூல் மட்டுமின்றி  பெ.முத்து லிங்கத்தின் எழுதாத வரலாறும்  சுட்டிக் காட்டியிருக்கிறது. என எஸ்.வி ராசதுரை  என்ற மார்க்சிய விரோதி   முதல் வரியிலும் அடுத்த வரியில்  திரிக்கும் கலைதான் என்ன அற்புதம். பெ. முத்துலிங்கம் பெரியாரின் சுயமரி யாதை இயக்கத்தின்  நெகிழ்வுத் தன்மை  இல்லை எனச் சொல்ல  அதை மார்க்சியம் மீது சொன்னதாக  திரித்து கரடி விட  அதுவும் மார்க்சியத ;துக்கு எதிராக  எனின்  ... சுரண்டும் வர்க்க நேச கட்டுரையில் முரண்பட்ட  பொய்யைக் சுட காண மறுத்து விட்டது.

மார்க்சிய நெகிழ்ச்சி  தன்மையைக் கொண்டது அல்ல எனக் சுறும் போது  எஸ்.வி.ரா போன்றவர்களுக்கு  மார்க்சிய அரிச்சுவடியே தெரியாத   பேதைகள் என்பதை வெளிக்காட்டுகிறது.

மார்க்கசியம் மனிதன் மீது   செயற்ப டும் அனைத்து தளத்தின் மீதும்  இயங் குகிறது.  இதில் தவறு இழைக்கும் போது  வலது இடது தவறை இழைக் கின்றன.  இதிலிருந்து விடுபட  புரட்சி கரப் பிரிவுகள் தம்மை  விமர்சனத்துக் குள்ளாக்குகின்றன.  அது சாத்தியம் இல்லாது போதில்   வெளியேறி மீண்டும் போராடுகின்றன.

இது இந்திய இலங்கை கம்யுனிச வரலாறு ஆகும். மக்களிக் அடிப்படைப் பிரச்சனைகளை மீது   போராடாத அமைப்பு பெயரளவில்  கம்யுனிசக் கட்சிகளே. இதைப்பற்றி ஏதும் இன்றி  மார்க்சியம் மீது சேறடிப்பது முதலாளித்துவ காழ்ப்புணர்வுதான்.

இங்கு 'நெகிழ்ச்சி' என்பது  மார்க்சிய விரோதிகள் மார்க்சியத்திற்கு எதிராக  காட்டப் பயன்படுத்தும்  சொற்பதமேயாகும். மார்க்சியசமுதாயத்தில்  எல்லாப்பிரச்சனைகள் மீதும் செயலாற்றுகின்றன.   இதுதான் சோவியத் முதல் இருவரையும்  இன்று மார்க்சியத்தின் அடிப்படை  உயிராகும்..

அதைக்காணமறுத்து  மார்க்சிய விரோதிகள்  வர்க்கப் போராட்டம் மட்டும்  என மார்க்சியத்தை கற்பனை பண்ணிக் காட்டுவது  சாராம்சத்தில்  அரசியலைக் கைவிட்ட   பொருளாதார வாதத்திற்கு  சிக்கும் போக்கினைப் போன்று இவர்க்ள மார்க்கியத்திற்கு எதிராக  பிரச்சாரம் செய்ய திரித்துக் கட்டும்  அழுக்கு மூட்டையாகும்.

Last Updated on Sunday, 08 July 2012 19:21