Language Selection

பி.இரயாகரன் -2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாம் முன்பு குறிப்பிட்டது போல், அரசியல் விபச்சாரம் செய்பவர்கள் கூடும் இடமோ தேசம் நேற்றாகிவிட்டது. சொந்தப் பெயரில் உள்ளவர்கள் கூட புனைபெயரில் வருகின்றனர். நாலாம் தரமான அரசியல் கொலைகார கும்பல்களும் கூடி நின்று எம்மை எதிர்க்கின்றனர்.

இப்படி நாலாம் தரமான இணையம் ஒன்று, இதற்காகவே பரிணாமித்துள்ளது. எம்மைப்பற்றி எந்த அவதூறையும், நாங்கள் எதிர்கொண்டு, எமது சொந்த அரசியல் பலத்தில் முடியடிப்போம்.

 

என்னை, எனது அரசியலை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத கூத்தாடிகளும், கொலை, கொள்ளையை, கூலித்தனத்தையே அரசியலாக செய்தவர்களும், அரசியல் இலக்கியம் என்ற பெயரில் இயங்கிய அரசியல் சீரழிவாதிகளும் சேர்ந்து, எதைத்தான் எனக்கு எதிராக சாதிக்க முனைகின்றீர்கள்.

 

தமிழ் பேசும் மக்களை என்னிடமிருந்தா மீட்கப்போகின்றிர்களா? எதை? எதற்காக? எப்படி? உங்களிடம் ஒரு துளி அரசியல் நேர்மை இருந்தால் அதைச் சொல்லுங்கள். ஏன் இந்தக் குதியம் குத்துகின்றீர்கள்? எதை, எந்த அரசியலை பாதுகாக்க? அலட்டலை விட்ட அதைச் சொல்லுங்கள். எதற்காக, எந்த அரசியலுக்காக அதைச் சொல்லுங்கள்? அதைச் சொன்னாலாவது, கொஞ்சம் அறிவு நேர்மை, இருக்கும். அதை சொல்ல முடியாத உங்களை, நாங்கள் எப்படி அழைப்பது? அதையாவது சொல்லுங்கள்.

 

சரி எனக்கு மாற்றாக, நீங்கள் யார்? நீங்கள் என்ன அரசியலை வைக்கின்றீர்கள்? அதைச் சொல்லுங்களேன். எனக்கு சொல்ல வேண்டாம், அதை தயவு செய்து மக்களுக்கு சொல்லுங்களேன். அதை சொல்ல வக்கு கிடையாது. இப்படிப்பட்ட உங்களை, உங்கள் அரசியலை, நாங்கள் எப்படி அழைப்பது?

 

கற்றன் நாஷனல் வங்கி பற்றியும், மொழி பற்றியும் சுற்றி சுற்றிக் கதைக்கும் அண்ணைமாரே அக்காமாரே, இதற்கு வெளியில் உங்களிடம் வேறு எந்த அரசியலும் கிடையாதோ? எங்கே தான், அதைப் போட்டு புதைத்துப் பாதுகாக்கின்றீர்களோ.

 

புலி அரசியல் போல், உங்களிடமும் எந்த அரசியலும் கிடையாது. புலிகள் அதனால் தான் கொல்லுகின்றனர். புலியெதிர்ப்போ, இந்திய இலங்கை உளவு அமைப்பில் சரணடைகின்றது. புலம்பெயர் நாட்டில் என்ன செய்வது, நினைத்த மாத்திரத்தில் எம்மைக் கொல்ல முடியாது. போக்கிடமாக கிடைப்பது தேசம்நெற். அதில் வந்து கும்மாளம் அடிக்கின்றீர்கள்.

 

நீங்கள் தான் சொல்லுகின்றீர்கள் ஜந்து பேரைக் கூட உருவாக்க முடியாதவர் என்கின்றீர்கள். இது மார்க்சியமில்லை என்கின்றீர்கள். ஆணாதிக்க சாதி மொழி என்கின்றீர்கள். தமிழ் மக்களின் நாகரீகமான மொழியில்லை என்று தேசம் ஆசிரியர் குழு கூறுகின்றது. இதை வாசிக்கவே விளங்காதவை என்கின்றீர்கள். மொழி பெயர்க்க ஆளை தேசம் நெற் பதிவு கூப்பிடுகிறது. 'ஸோ வெஸ் தொம்பே!!" என்கின்றீர்கள். அவதூறு செய்ய பாரிசில் இருந்து ஒடிவாருங்கள் என்று தேசம்நெற் ஊடாக அலறுகின்றீர்கள். இப்படி பலதைக் கூறும் நீங்கள், ஏன் தான் எனக்கு இந்தக் குதியம் குத்துகிறியள். எதைப் பாதுகாக்க? எப்படி அதை பாதுகாக்கின்றீர்கள். அதையாவது சொல்லுங்கள்.

 

தேசம் நெற் புரட்சி செய்யப் புறப்பட்ட நேரம் பொன்னானது. இடம் பொன்னானது. ஏன் அதை வீணாக்குகின்றீர்கள். அல்லது உங்கள் பார்வையில், உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்ய தேசம் நெற் அவதூறுக்காக உருவாக்கப்பட்டதா? அதையாவது சொல்லுங்கள்? தேசம்நெற்றின் அரசியல் நோக்கம் தான் என்ன? அதையா அது செய்கின்றது? எப்படி?

 

நீங்கள் கூறுவது போல ஒருவரைக் கூட வெல்லமுடியாத எனக்கு, மினக்கிட்டு எழுதும் உங்கள் புரட்சிகர நேரம் பொன்னானது அல்லவா! நீங்கள் அதைக் கூட பாதுகாக்க முடியாது, என்ன தினவ எடுக்கின்றீர்கள்.

 

நாம் எதற்கும் உதவாத ஒன்றை செய்வதாக கூறும் நீங்கள், என்னிடமிருந்த மாறுபட்ட சரியான ஒன்றை எப்படி எங்கே மனித குலத்துக்கு செய்கின்றீர்கள். அதையாவது சொல்லுங்கள். அதை செய்து காட்டுங்கள். இல்லை உங்களுக்கு இது பொழுது போக்கோ! இதுதான் உங்கடை அரசியலோ!

 

உங்களால் வேறு எந்த அரசியலும் செய்ய முடியாது என்றால் அதைச் சொல்லுங்கள். நாங்கள் சமூகத்தை சீர்குலைக்கும் நவீன பேர்வழிகள் என்று நேர்மையாக அதையாவது சொல்லுங்கள். இல்லை என்றால், மாற்று என்னவென்று சொல்லுங்கள். உங்களிடம் ஒரு துளி நேர்மை இருந்தால், ஏதோ ஒன்றையாவது சொல்லுங்கள், அதை செய்து காட்டுங்கள். நாங்கள் தரம் தாழ்த்தி தலை வணங்குகின்றோம்.

 

இதைவிட்டு விட்டு வம்பளக்காதீர்கள். பொறுப்பற்றவராக நடவாதீர்கள். தேசம்நெற்றின் விபச்சாரத்துக்கு உடந்தையாக்காதீர்கள்.

 

பி.இரயாகரன்
18.11.2007