Language Selection

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"ஒரு தொழிலாளியை ஊதியம் கேட்டதற்காக அடித்தேன் என்பது என் அடிப்படை அரசியல் அறத்தையே புரட்டிப்போடும் குற்றச்சாட்டு. ஒரு கம்யூனிஸ்டாக எனக்குப் பெருத்த அவமானத்தைத் தரக்கூடிய குற்றச்சாட்டு அது.”

”இந்தியாவுக்குச் செல்வதற்கு நான் ஊரில் பட்ட கடனையே ஆறுமாதமாகியும் இன்னும் நான் கட்டி முடிக்கவில்லை………… உண்மையில் அவ்வாறு தொழிலாளர்களின் ஊதியம் குறித்தவொரு பிரச்சினை அங்கே நடந்திருந்தால், அது அடிதடியளவிற்குச் சென்றிருந்தால் என்னிடம் தயாரிப்பாளர்தான் அறைவாங்கியிருப்பார். அதுதான் எனது வர்க்கப்பண்பு, அதுதான் எனது அரசியல் பாரம்பரியம்.”

 

”தொழிலாளியைத் தாக்கினேன் என்று எழுதுகிறீர்களே, நான் மட்டுமென்ன பிர்லா - டாடாவின் பேரப்புள்ளையா? நானும் கடந்த இருபது வருடங்களாக உணவுச்சாலைகளில் தட்டுக் கழுவியும் சுப்பர் மார்கெட்டுகளில் சுமைகளை ஏற்றியும் இறக்கியும் வேலை செய்துவரும் அடிமட்டத் தொழிலாளிதான்.”

 

மேற்; கண்ட வசனங்கள், அல்லைபிட்டி அந்தோணி தாஸ் என்கிற முன்நாள் புலியும், சிலகாலமாக சிறிலங்கா அரசின், பிரச்சாராக இந்திய இலக்கிய தளத்தில் செயற்படும் ஷோபாசக்தி என்பவர், கவுசாயினி லீனா மணிமேகலைக்கு வக்காலத்து வாங்க எழுதிய கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது. இதை மறுபிரசுரம் செய்தவர், ஈ.பி.ஆர்.எல்.எவ்  இருந்தவரும், இன்று உயிர்மெய் இணையத்தில் நடத்தும் இன்னொரு பம்மாத்து பேர்வழி.
   
இவ்வளவு காலமும் இப்படியான பல சுத்துமாத்துக்கள், அல்லைபிட்டி  அந்தோணி தாஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ சேர்ந்த கவிஞர் போன்ற பலரால் ஐரோப்பாவில் எழுதப்பட்டு வருகிறது. தங்களை இலக்கியவாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இடதுசாரிகள், கலகக்காரர்கள், மார்க்சிட்டுகள், கொம்யூனிஸ்ட்டுகள் என வேசமிடுவதன் மூலம், தமது சமூக அந்தஸ்தையும் காத்து வருகின்றனர்.

 

இதற்கு மேலாக, இவர்களில் பலர் புலம்பெயர முன், தேசத்தில்  செய்த கொலைகள், பாலியல் பலாத்காரங்கள், சுய தேவைக்கான களவுகள், சாதிவெறியாட்டங்கள் போன்றவற்றை மறைப்பதற்காகவே மேற்கூறிய வேசங்களை போடுகிறார்கள்.

 
இப்போது தேசத்தில் சண்டை முடிந்து விட்டது. இவர்கள் எத்தனை காலத்திற்கு தான் தொடர்ந்து, தங்கள் வேடங்கள் மூலம் தம் ஈனமான கொடூர முகங்களை மறைக்கப்போகின்றார்கள்?

 

புலியுடன் சேர்ந்து இந்த அந்தோணி (ஷோபா சக்தியின்) சமூக விரோதிக்கு மரனதண்டனை, என்ற போர்வையில் செய்த  கொலைகள், சாதிவெறியாட்டங்கள், சரவனையிலும், நாரந்தனையிலும் செய்த பாலியல் கொடுமைகள், மிக விரைவில் சந்திக்கு வரும். இவருடன் சேர்ந்து இந்த பஞ்சமா பாதகங்களில் ஈடுபட்ட புலியின் முன்நாள் தீவுப்பகுதி பொறுப்பாளர், அரியாலை நிலாதரன் (கலச்சுவடு கட்டுரையாளர்) மே 18 இன் பின் இந்தியாவில் நிற்கிறான்.

 

டக்ளசின் அனுசரணையுடன், இலங்கை அரசின் உதவியுடன் தான் அவன் இந்திய சென்றான். உள் இருந்து புலியின் முதுகில் குத்திய இவனை இப்போ, அல்லைபிட்டி அந்தோணி தாஸ் இன் இந்திய நண்பர்கள் தான் பாதுகாக்கின்றனர். இதற்கான அனைத்து ஏற்படும் செய்தவர்கள் அந்தோனியும், சுகன் என்பவருமாவர்கள்.
  
அந்தோணி தாஸ், ஒரு வேண்டுகோள், நீ எல்லா வேடமும் போடுபறவாயில்ல. ஆனால்  கொம்யூனிஸ்ட்டுகள் வேடம் மட்டும் போடாதே.....அது உனக்கு பொருந்தாது.......