Language Selection

-சேது ரூபன்: சில கருத்துகள்
 
சேது ரூபன் கேட்கின்றார்„ஒரு செய்தியாளன் அரசுடன் தொடர்பில் இருப்பது தவறா?-குற்றமா?“ என.
 
இதை யாரிடம் கேட்கின்றார்?
 
பொதுவானவொரு மக்கட்டொகுதியின்முன்!
நன்று.

 

 

 

இதுவரை,புலிகளுக்கும் உங்களுக்குமானவுறவு,தனியே“செய்தியாளன்“என்பதாக இருக்கின்றதெனப் புலம் பெயர் மக்களுக்குச் சொல்கிறீர்கள் இதன் மூலம்!நீங்கள் புலியினது அரசியலை“தமிழீழத்தின்“பொருட்டு ஏற்று,அவர்கட்காகக் கருத்துக்கட்டியதென்பதை பலரும் அறிவர்.இந்த அரசியற்போக்கில் உங்களுக்கும் அரசுக்குமானவுறவு தனியே“செய்தியாளன்“என்பதுவரை நீடித்ததாகவிருந்தால், இலங்கை அரசு சசிகரனை-திச நாயகத்தைக் காரணமின்றித்தாம் கைது செய்து கூட்டில் அடைத்திருக்கிறது என்றாகிறது!
 
சேது ரூபன் என்ற „செய்தியாளன்“புலிகளையும்,அவர்களது கொலை அரசியல்-போராட்டத்தையும்“நியாயப்படுத்தியது அவரது(சேதுவின்) ஜனநாயக உரிமையென இலங்கை அரசுகொள்ளும்பட்சத்தில், அதை, ஏன் சசிகரனுக்கும்-திசநாயகத்துக்கும் வழங்கவில்லை என்ற கேள்வி எனக்கு விடையளிக்கிற அளவுக்குப் புரிதற்பாட்டை ஏற்படுத்தவில்லை!
 
இன்று,இலங்கை அரசுக்காகச்“செய்தி கேரிக்கும்-கருத்தூன்றும்“சேதுவுக்கு எங்கிருந்து“புலிகள் வேறு-செய்தியாளன் வேறு“என்ற தத்துவம் சரியாக இருக்கோ, அதை அவர்சார்ந்த அன்றைய புலியும் இன்றைய இலங்கை அரசும் கவனத்தில் கொள்ளாதது சேதுவின் பிரச்சனை இல்லை!அது,அமைப்பினது-அரசினதும் பிரச்சனை.எனவே,சேது சொல்லும்போது அதைப் புரியாதவர் கற்றுக்குட்டி.
 
இந்தப்பிரச்சனையை மேலும் விருத்திக்கிட்டுச் செல்ல முனையும்போது,சில கேள்விகள் எழுவது தற்செயலானது இல்லை.அது,வர்க்க அரசியலில் வர்க்கஞ்சார்ந்த கொள்கைகளுடைய நமது உணர்வில் அறுதியான-கறாரான புரிதற்பாடு.
 
 

என்றபோதும்,சேது,“செய்தியாளன்“.
 
இதன் தெரிவில், இன்று பாசிச இலங்கை அரசோடு கைகுலுக்கும்போது அது தமிழ் பேசும் மக்களது பிரச்சனையுள் கையாண்ட இலங்கையினது பாசிசத்துக்கும் சேதுவுக்கும் எந்த முரண்பாடுமில்லை.காரணம்: சேது வெறும்“செய்தியாளன்“-உலகினால் அங்கீகரிக்கப்பட்ட „செய்தியாளன்“. இத்தகைய „செய்தியாளன்“ புலிகள் வலுவாக இருந்தபோது, புலிக்காகக் குரல் கொடுப்பது அவரது தார்மீகக் கடமையாகிறது அது குற்றமில்லை!-இதைக் குற்றமென்று எவனும்-எவளும் உரைக்கமுடியாது-இது சேது அவர்களது வாதம்!
 
நன்று, அன்பா-நன்று!
 
இதை,இன்று உரக்கக் கூறும் காலமொன்று உருவாகியுள்ளது.
 
நீங்கள் கைகுலுக்கும்“விரிந்த“தளங்களின் மூலம் உங்களைப்போன்றவொரு செய்தியாளனான திச நாயகத்தை உங்களுடன் உறவாடும் இலங்கை அரசு 20 வருடச் சிறையுள் தள்ளியுள்ளதே! அது, குறித்து உங்களது குரலைக் காணவில்லையே?-இது, ஏன்?
 
உங்களால் இலங்கை அரசிடம் இவ்வாதத்தைக்(செய்தியாளன் வேறு-புலிகள் வேறு) கறாராகச் சொல்லமுடியுமா? அங்ஙனம், முடியாதுபோனால் உங்களது ஊடகவியல் தர்மத்துக்கமைய அதை உலகத்தில் அம்பலப்படுத்திப் போராடமுடியுமா?-இது உங்களது கடமை இல்லையா?
 
சேது ருபன் கேட்கிறார், புலிகள் ஏன் தன்னைத் துரோகியாகப் பார்க்கவேண்டுமென.அதாவது,தான் புலியின் உறுப்பினர் என்றால் மட்டுமே அஃது, துரோகமாம்.அஃதாவது, புலிகள் „துரோகி“சொல்லிப் போட்டவர்கள் அனைவரும் புலிகளது உறுப்பினர்தாம் என்று சொல்கிறார்.ஆகப் புலிகள்“துரோகி“என்று கொன்றவர்கள் அனைவரும் புலிகளது உறுப்பினர்களானால், புலிகள் தமது அரசுடனான உறவாடலில், முதலில் கொன்று தள்ளப்பட்டிருக்க வேண்டியவர் பிரபாகரனே.ஏனெனில், அவர்தாம் தனது சுமூகமான உறவாடலைப் பிரேமதாசாவுடன் செய்து,தனது தாய் தந்தையரை இலங்கை அரசின் விமானம் மூலம் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கூட்டி வரச் செய்தவர்.
 
இது,வேறு-செய்தியாளனது கடமை வேறு!சொல்லக்கூடும்.சேது,இதைச் சொல்வார்.ஏனெனில்,அவர் புலி உறுப்பினரில்லை-மாறாகப் புலிக்கு ஆதரவாகக் கருத்துக்கட்டியது மட்டும்தாம்.இது,அவரது ஜனநாயக உரிமை!
 
புலிகளில் கணிசமான தலைவர்களுக்குக் கொள்கை-கோதாரி ஒன்றும் இருந்ததில்லை என்பதற்குச் சேது ரூபன் ஒரு உரைகல்.காற்றடிக்கும் திசைக்கேற்ப அவர்கள் பட்டம் ஏற்றிக்கொள்வர்கள்.இதுதாம,; அடியாட்சேவையின் இன்றைய உதாரணம்.
 
மக்களைச் சார்ந்து,அவர்களது விடுதலைக்காக இனவாத ஒடுக்குமுறை அரசை எதிர்த்துப்போராடும் அமைப்புக்கு-பத்திரிகையாளனுக்கு, ஒருபோதும் இத்தகைய நடிவடிக்கையைச் செய்ய எதிரி அநுமதிப்பதில்லை.
 
அரசுக்கும்,புலிக்கும் உறவுவைவைத்து அடுத்துக்கெடுக்கும் உளவாளிகள் மற்றும் ஒடுக்குமுறையாளர்களது ஏவல்படைகளுக்கேதாம் இத்தகைய நிலைப்பாடும்,உறவும் நிலைக்கமுடியும்.இன்றைய புலிகளது அழிவுக்குச் சேது போன்றவர்களது பாத்திரம் மிக நேர்த்தியாக இயங்கி இருக்கிறது.இதைப் பார்க்காத புலிகளது விசுவாசிகள், ஒடுக்கும் வர்க்கத்துச் செய்தியாளன்-பத்திரிகையாளன் இந்து இராமைப் போட்டுத் தாக்கினார்கள்.உள்ளிருந்து கருவறுத்த சேது போன்ற“செய்தியாளர்களை“கவனத்தில் எடுக்காது, தமது நட்பு சக்தியாகக் கனவுகண்டார்கள்.இப்போது,“செய்தியாளன்“உலகு தழுவி ஒடுக்கும் வர்க்கத்தோடு கைகுலுக்கும்போது அது“செய்தியாளன்“தார்மீக உரிமையாகிறது அன்பர் சேதுவுக்கு!
 
புலிகளின் கணிசமான புலம்பெயர் தலைவர்கள்-பினாமிகளும் இத்தகைய“கொள்ளை“யின் நிமித்தம் இப்போது இலங்கை அரசோடு கைகுலுக்குவது இந்த அர்த்தத்தில்தாம்.
 
வாசகர்களே,ஒன்றை வடிவாக இனங்காணுங்கள்!அதாவது,இலங்கைப் பாசிச அரசு மக்களைக் கொன்று புலிகளை அழித்ததுமட்டும் வரலாறு இல்லை.அத்தகைய அரசை மிக நேர்த்தியாகத் தாங்கும் இத்தகைய „செய்தியாளர்கள்“தாம் அதன் பாசிசப்போக்கின் கொலைக் களத்தை நியாயப்படுத்தும் முதற்றரமான உந்து சக்திகள்!
 
இலங்கை அரசை ஆதரித்துச் செய்தி வெளியிடும் செய்தியாளர்களை நாம் கூறுகிறோம்“ஒடுக்குமுறை அரசினது கைக்கூலிகள்“என்று.
 
அது,பரந்துபட்ட மக்களது நலனினது அடிப்படையில்.
 
இப்போது,சேது ரூபன் இலங்கை அரசோடும்,அதன் அடக்குமுறை ஜந்திரத்தோடும் உறவாடித்தாம் செய்திகளை மக்களுக்குச் சொல்வதாகவிருந்தால் சேது ரூபன் பரந்துபட்ட மக்களுக்கு எதிரான அரசுசார்பு-ஒடுக்குமுறை ஜந்திரம்சார்பு ஊதுகுழல்.
 
இத்தகைய ஊடக தர்மம் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சிறுபான்மை இனங்களதும்,பரந்துபட்ட இலங்கை-உலக மக்களதும் எதிரி என்பது நிர்ணயமானது.
 
புலிகளின் பினாமிகளுஞ்சரி,புலித்தலைமையும்சரி ஒருபோதும் மக்கள் நலனுடனான கொள்கையுடன் இருந்தவர்களில்லை என்பதை சேதுவின் இன்றைய நிலையிருந்து உரைக்கும்போது,அவர்களில் கணிசமானோர் இன்று இலங்கை அரசின் பின்னேதாம் நிற்கின்றனர்.இது,எதனால் ஆனது?
 
இதுதாம் வர்க்க நலன் என்பது!
 
புலிகள் உழைக்கும் வர்க்கத்தின் பரம எதிரி-பரந்துபட்ட தமிழ்பேசும் மக்களது வர்க்க எதிரி.இதுவேதாம் இன்றைய புலிகளது நிலைக்கான சரியான தெரிவு.இதுவேதாம்,அந்நிய அடியாட்படையென நாம் புலிகளை வரையறை செய்ததற்கான அடிப்படைக் காரணம்.அதன் உச்சபட்ச அரசியலை இன்றைக்குப் புரிவதற்குச் சேது ரூபன் ஒரு உதாரணம்.
 
சேது மீளவும், அடித்துக் கூறுகிறார்“சேது ரூபன் பாசிசக் கோட்டையின் உறுப்பினர் இல்லை“என.ஆகப் பாசிக் கோட்டை என்பது புலிகள்மட்டும்தாமென இந்தப் புத்திஜீவிச்“செய்தியாளர்“புரிவது புலனதகிறது.
 
இலங்கை அரசைப் பாசிசக் கோட்டை இல்லை என்று, இதன் மறுபுரிதலை அவர் சொல்லிச் செல்வது மிக அவசியமாகப் புரியப்பட வேண்டியது!
 
இன்று,புலிகளது விசுவாசிகள் தமக்குள் இருந்த விரோதிகளை இனங்காணாமல், நம்மைப் போட்டு“எட்டப்பன்-காக்கை வன்னியன்“என்று வாந்தியெடுக்கும்போது,முழுமொத்த தமிழ்ச் சமுதாயமே மிகப் பின்தங்கிய புரிதலில் உள்ளது புலனாகிறது.புலிகள் என்ற அமைப்பு, முழுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் தம்மைப்போலவே உருவாக்கித் தமது அடியாட்பாத்திரத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்துவிட்ட வரலாற்றுப்பாத்திரத்தில் சேது ஒரு உரைகல்.
 
இதற்குமேல், சேதுவுக்கு மக்கள் சமுதாயம் வர்க்கமாக இருப்பதால் அங்கு வர்க்க அரசியலும்-வர்க்க ஒடுக்குமுறையும் உள்ளதென்று கூற நாம் என்ன மூடர்களா?
 
சேதுவுக்குத் தனது வர்க்க நிலை நன்றாகவே புரிந்துள்ளது.அது,இனிவரும் அரசியலில், சேதுவை இலங்கையின் ஒரு தொகுதிக்குப் பாராளுமன்ற உறுப்பினராக்கும் அரசின் முயற்சியில் கொணர்ந்து நிறுத்தினாலும் ஆச்சரியமுண்டோ?
 
சேதுவிடம் இரட்டை முகமில்லை என்று அவரே உரைப்பது சரியானது!அது,ஆளும் வர்க்க-ஒடுக்குமுறை வர்க்கத்தின் ஒரே முகம் என்பது சரியானதுதாம் சேது.நான் அதை ஏற்கிறேன்!
 
நீங்கள்,உங்கள் பரந்துவிரிந்த உறவுகளைச் செவ்வனவே செய்வீர்கள் என்பது உங்களது கருத்திலிருந்துகொள்ளதக்கதே.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
29.12.09

 


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது