Language Selection

இவ்வருடத்துக்கான, சமாதானத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிர் பெயரில் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.இத்தகைய விருதினது வழி புரிய முற்படும் ஒவ்வொரும் ஏதோவொரு வகையில் தத்தமது புரிதலைக் கொண்டிருக்க முடியும்.என்றபோதும்,உலக ஆளும் வர்க்கக் கண்ணோட்டம், அதன் எதிர்கால அரசியல் நகர்வுக்குத் திட்டமிடப்பட்ட எதிர்பார்ப்பும் அதுசார்ந்த வியூகம் இருக்கிறது.இந்த வியூகம்சார்ந்த நிலைப்பாடுகளுக்கமையவே ஓபாமாவென்ற குறியீடு சமாதானத்துக்கான நோபல்பரிசைப் பெறும் தகுதியாக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீடு குறித்துப் பல வகைகளில் புரிந்துகொண்டாக வேண்டும்.

அ): ஓபாமா, அமெரிக்காவினது மாறிவரும் உலக அரசியலை வெளிப்படுத்தும் ஒரு ஊடகம்,
 
ஆ): ஒபாமா, நடுநிலையானதும், சமாதானத்துக்குமானதும் என்பதான புனைவு,
 
இ): ஒபாமா, மக்கள் நல்வாழ்வு மற்றும் மனிதவுயிர்வாழ்வுப் பாதுகாப்பு எனும் சுட்டல்
   
இந்த மூன்றுவகைக் குறிப்பானக இன்றைய அமெரிக்க ஜனாதிபதி உருவாக்கப்பட்டுள்ளார். குறி குறிப்பானகச் செயற்பட வைக்கின்றபோது அதன் தேவையையொட்டி எழுப்பப்படும் சகலதும் ஏதோவொரு நலனுக்கு இசைவானது.
 
அந்த நலன் என்ன?
 
உலகத்தில் சமாதானந் தழைத்தோங்கி, உலக மானுடர்கள் சகோதரத்துவத்துடன் தத்தமது தேசத்தின் வளங்களை நிறிமுறையோடு பகிர்ந்துண்டு வாழ்வதா இதன் நலன்? அல்லது, சில தேசங்களது கூட்டோடு, உலக வளங்களைச் சுருட்டித் தமது இனத்துவ அடையாளத்தைப் பேணி, உற்பத்தியைத் தக்கவைத்து உலகைத் தமது விருப்புக்கமைய ஆளுவதா?
 
 


இத்தகைய கேள்விகள் இரண்டும் சமகால அரசியல் போக்களால் எழுவது.கடந்தகால ஐரோப்பிய மக்களதும்,அவர்களது இராசதானியங்களதும் மனித நடாத்தையானது இத்தகைய கேள்விகளுக்குள் நம்மைத் தள்ளிவிடுபவை மட்டுமல்ல, அதன்வழி இன்றுவரை ஐரோப்பிய-அமெரிக்க அரசியல் நடாத்தையுமே இத்தகைய கேள்வியின்பால் நம்மைக்கொண்டுசென்று இயக்குகிறது.
 
இன்றைய நோபல் பரிசுக் கமிட்டியின் முழுப்பரிணாமத்தையும், புரிந்துகொள்வதற்கும் முன் அதன் இருப்பு அவசியமாக உணரத்தக்க அரசியலைப் புரிந்துகொள்வதே நம்மெல்லோருக்குமான தேவைகளில் ஒன்று.


தற்போதைய வர்த்தகச் சூழலில்-சந்தைப் பொருளாதாரப் போக்குகளில் பாரிய நிதியளித்துக் காக்கப்படும் நோபல்பரிசு அறக்கட்டளையை தத்தமது தேவைக்கேற்பவும், தமது அரசியல்-பொருளாதார மேலாண்மைக்குமாகவே மேற்குலக-அமெரிக்க தேசங்கள் பயன்படுத்துவதை மிகவும் நாணையத்தோடு ஒத்துக்கொள்ளவேண்டும். அவர்கள், தமது எதிர்காலத்தையும் அதில் தமது இருப்புத் தொடர்ந்து சிதையாதிருக்கும் பலமுறைகளில் திட்டமிட்டு இயங்கின்றார்கள். இயற்கை விஞ்ஞானம், மருத்துவம், இரசயனம், பொறியியல், சூழலியல், மனிதவளம்-இன இருப்பு, வர்த்தகம், நெறியாண்மை, அரசியல் ஆதிக்கம், அதிகாரம், சட்டம், தாக்குதல் வலு, பண்பாட்டு மேலாண்மை, பாராளுமன்றம், நீதி போன்ற பலபடிகளில் ஒன்றாகத்தாம் நோபல் பரிசு அறக்கட்டளையையும் புரிந்தாகவேண்டும்.
 
அது, இத்தகைய மேற்குலக நலன்சார்ந்த பின்னணிகளோடு தாம் இயங்குகிறது. இதன் பாத்திரத்தில் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்ட சமாதானத்துக்கான நோபல் பரிசு, அதன் இன்றையதும் கடந்தகாலத்துக்குமான நடவடிக்கைகளுக்கு மறைமுக அங்கீகரம் வழங்குவதும் அதன் வாய்ப்பாக அடுத்த தசாப்பத்தில் மேற்குலக நலன்சார்ந்த அடுத்தகட்ட ஆதிக்கத்தை மேலும் நிலைப்படுத்துவதில் மையங்கொள்கிறது.
 
இதையிங்ஙனம் புரிந்துகொள்வது அவசியம்:
 
1):வெறும் ஆலோசனைகளும்,அபிப்பிராயங்களும் சொல்பவருக்கும்,
 
2):ஆணு ஆயுதமற்ற உலகைக் குறித்து வெறும் கனவு காண்பவருக்கும்,
 
3):அவ்கானிஸ்த்தானைப் புதிய வியாட்னாமாக்கிப் போர் நடாத்துபவருக்கும்
 
சமாதானத்துக்கான நோபல் பரிசு-கீரிடம் வழங்கப்படுவதானது அவரது அரசியலுக்கு அங்கீகாரம் அளிப்பது, அடுத்த கட்ட அனைத்துவகை அமெரிக்க அரசியல்-ஆதிக்க நடவடிக்கைகளை நியாப்படுத்துவது-நிலைப்படுத்துவது, முடிந்தால் அதை உலகு தழுவிய வகையில் விஸ்த்தரித்து ஒற்றைத் துருவ ஆதிக்கத்தை மற்றைய குடிசார் சமூகங்களுக்குள் திணிப்பதுவரை நிகழ்த்துவதே இதன் புரிதலாகும். இதன்வழி அமெரிக்கா முன்னெடுக்கும் அனைத்துவகை விஸ்த்தரிப்பும் உலக சமாதானத்துக்கான முன்நிபந்தனையென்பதை இப்பரிசின்வழி நியாயமுறுத்துவதாகும்.

 

கடந்த காலத்தில்-இருஷ்சிய உடைவுக்கு முன் அமெரிக்கா செய்த அரசியல்-போர் நடவடிக்கைகள் ஒற்றைத்துருவத்திலிருந்து செய்யப்பட்டதல்ல. அங்கே, இரண்டு துருவங்களாக மூலதனச் சழற்சியும் அது சார்ந்த அரசியல்-ஆதிக்கமும் இயங்கியது. எனினும், சோசலிச நாடுகளது இறையாண்மையைப் பல வழிகளிலும் தோற்கடித்த அமெரிக்க மற்றும் மேற்குலகங்கள் 90 களின் மத்தியிலும், 2000 த்தின் ஆரம்பம்வரை இந்த ஒற்றைத் துருவ அரசியல்-பொருளாதார ஆதிக்கத்தைச் சுவைத்துத் தமது இராணுவ மேலாண்மையை உலகெங்கும் நிலைநாட்டின.குறிப்பாக,, ராக்கில், அவ்கானிஸ்த்தானில். ஆனால், இது நிலைத்திருக்கும் வாய்ப்பை அவை தமது அரசியல்-பொருளாதாரப் பலத்தின்வழியாகத் தக்கவைக்கும் சூழலொன்று 2002 ஆம் ஆண்டுக்குப்பின் மெல்ல இல்லாதாகிறது.
   
இருஷ்சியா-சீனாவுக்கிடையிலான நேட்டோவுக்கு மாற்றான சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கம் 2002 ஆம் ஆண்டு சென் பீட்டர்பேர்க்கில் ஆரம்பித்துக் கைச்சாத்தாகியபின், இன்னொரு வார்சோ அணியாக இந்தச் சங்காய்க் கூட்டு உருவாகிறது. இத்தகைய தருணத்தில் அமெரிக்கச்சார்பு நாடுகளது தலைமைத் தேசமான அமெரிக்காவினது ஒற்றைத் துருவ அரசியல் மெல்லச் சிதறுகிறது. அதுமட்டுமின்றிக் கடந்தகாலத்து சோசலிச-முதலாளிய முகாங்களெனும் இருபெரும் எதிரெதிர் நிலையைக்கடந்து, முதலாளித்துவ முகாம் இரு துருவங்களாக உலகை வேட்டையாடப் பிரிந்தன. இவற்றுள் மிகவும் மூலப்பொருள்கள் நிரம்பியதும், சந்தையில் மலிவாக உற்பத்தியைச் செய்யக்கூடியதும், இராணுவ-மனிதவலுவில் பலம்கூடியதுமாக இந்தச் சங்காய்க் கூட்டே இன்று உருவாகியுள்ளது.
 
ஐரோஆசியன் வலயத்தில் இருஷ்சியாவினது இறையாண்மை மற்றும் செல்வாக்குட்பட்ட பிரதேசமாக கஸ்பிஸ் எண்ணையூற்றத் தேசங்கள் இருக்கின்றன.என்னதாம் ஜோர்சியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் நேட்டோ உள்வாங்கினாலும், அஃது இருஷ்சிய இராணுவ ஆதிக்கத்திலிருந்து தப்பிடவிட முடியாதளவுக்கு அதன் தரைத்தோற்றம் இருக்கிறது. இதையுறுதிப்படுத்த 2008 இல் நடந்த யுத்தம்தாம் ஒசித்தியாவைக் காக்கும் இருஷ்சிய-ஜோர்ச்சிய யுத்தம்.அவ்வண்ணமே, சீனாவினது மிகப்பெரும் மனித ஆற்றல் அத்தேசத்தை உலகு தழுவிய உற்பத்தித்திறனுடைய தேசமாக மாற்றியுள்ளது. இது,சீன உற்பத்தி மற்றும் அதன் நிதியாதார வலுவோடு அமெரிக்க ஆதிக்கம் நிலவிய அனைத்து மண்ணிலும் சீனாவையும் அதன் ஆதிக்கத்தையும் திணிக்கும் சூழலை உருவாக்கியது. அது, கொங்கோ முதல் அங்கோலா, நைஜீரியாவெனத் தொடரும்.

 

சீனா, ஆபிரிக்காவின் கட்டுமானப்பணிகளில் பெரும் பங்கெடுத்தபடி அரேபியத் தேசங்களில் இருஷ்சியவோடிணைந்து காரியமாற்றுகிறது. இது, அமெரிக்கக்கூட்டினது கணிசமான ஆதிக்கவலுவைத் தோற்கடித்தபடியே தாம் சாத்தியமாகிவரும் இன்றைய சூழலில், ஓபாமாவுக்கான சமாதான நோபல் பரிசு அமெரிக்கா முன்னகர்த்தும் இன்றைய "பதுங்கிப்பாய்தல்-நட்பாகிக் கொல்லல், உட்புகுந்து தாலியறுத்தல்" போன்ற அதன் வெளியுலக அரசியலுக்குத் தர நிர்ணயமாகும், அதை நியாப்படுத்தி உலகை ஏமாற்றிக்கொள்ளவும், அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னைச் சமாதானப்பிரியனாக வேடம் இட்டுள்ளது. இதை வலுப்படுத்தி மேலும் கட்டியமைக்க இன்றைய நோபல் பரிசின்வழி அமெரிக்க மூலதனம் முயன்றுவருகிறது.
 
அமெரிக்கா இனி முன்னகர்த்தும் உலக அரசியலானது மிகவும் தந்தரமானதாகும். சமாதானவேடம் பூண்ட குள்ளநரிக்குப் புதிய முகமூடிகள் அவசியமாகிறது. அன்றைய காலத்தில் புஷ் வகையறாக்கள் சொல்லிய"ஜனநாயக"ப்படுத்தல் எனும் முகமூடிக்கு இப்போது "சமாதானம்-பயங்கரவாதத்தை முறியடித்தல்" என்று பெயராகிறது. சமாதானத்துக்கான பரிசைப்பெற்றவர் செய்வதெல்லாம் இனி உலக அமைதிக்கானதென்ற புலம்பலில் பலிகொள்ளப்படும் வலிமையற்ற தேசங்களது இறையாண்மை, அமெரிக்கக்கூட்டினது அடுத்த ஐம்பதாண்டு ஆதிக்கவலு நிலைப்படுத்தலின் தொடராகும். என்றபோதும், இருஷ்சிய-சீன வல்லரசுகளின் அரசியல் ரீதியான நகர்வையும் அவை கொண்டியங்கும் துரா நோக்கையும் முடக்குவதற்கான பரிந்துரையாகவே அமெரிக்கா தனக்குத் தானே பரிசளிக்க முனைந்துள்ளது.
 
 

 


கடந்த 23.09.2009 அன்று ஐ.நா.வில்(GENERAL DEBATE OF THE 64TH SESSION OF THE UNITED NATIONS GENERAL ASSEMBLY )உரையாற்றிய இருஷ்சியத் தலைவர் மெட்வேடேவ் தனது உரையை மிக நிதானமாகச் செய்திருக்கிறார். அவர் உலகத்துக்கு அச்சுறுத்தலாகவிருக்கும் வெள்ளையின நாசியப் பயங்கரவாதம் வரை தனது உரையின் இறுதியில் சுட்டிக்காட்டி, அமெரிக்க-மேற்குல நிறவாத அரசியல் தகவமைப்புகளையுஞ் சாடியபோது மாற்றுக்கருத்தற்ற மேற்குல வெள்ளையினவாதம், மிகச் சாதுரியமாகத் தமது நடாத்தைகளைச் சமாதானத்துக்கான முன் நிபந்தனையாகவும், அமெரிக்க அதிபர் வடிவினில் அமெரிக்காவை முன்நிறுத்துகின்றன. இந்த வகை அரசியலது தொடரில் இந்தச் சமாதானத்துக்கான நோபல் பரிசை தனியே "ஸ்க்கன்டால்"(Scandal: Obama gets the "peace prize)என்ற மொழிவுக்கூடாகத் திசை திருப்ப முடியாது. ஈராக், அவ்கானிஸ்த்தான் யுத்த நடவடிக்கைகளை முன்னிறுத்தி அமெரிக்காவின் அடுத்த நாடகத்தை மறைக்க முனையக்கூடாது. ஆனால்,ஜார்ன் ஓபேர்க்(Jan Oberg ist Leiter des Friedensforschungsinstituts TFF in Lund, Sweden )செய்து முடிக்கிறார்.
 
புதிய ஆதிக்கத் தெரிவுகளின்வழி, அமெரிக்க எடுக்கும் அரசியல் நகர்வுக்கான அங்கீகாரமே இப்பரிசினது நோக்காக இருப்பதற்கு வலுவான காரணிகளாக இருப்பது இன்றைய அமெரிக்க வியூகமே.
 
இனிவரும் கால அமெரிக்க அரசியல் நகர்வில் ஒபாமா அரசு செய்யும் அரசியல்:
 
1:உலக மூலவளத் தேவைக்கான போட்டியில் யுத்தத்தைச் சமாதான எல்லையில் வைப்பது,
 
2:வளர்ந்துவரும் பொருளாதார நகர்வில் ஐரோஆசியன் வலயத்தில் தனது நிலையைத் தக்வைத்து அதன் எண்ணை வளத்தைக் குறைந்தளவாவது மேற்குலகக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்வது,
 
3:அர்டிக்ஸ்-வடதுருவப் பனிவலயத்தில் கரையும் பல சதுரக் கிலோமீட்டர் கடல் நிலப்பரப்பில் பதுங்கிக்கிடக்கும் போட்டி வள அவகரிப்பில், அமெரிக்கா முதன்மையாக இருக்க முனைதலில் நடந்தேறும் அரசியலில் இருஷ்சியாவை தனிமைப்படுத்தல்.
 
4:தென்கிழக்காசிய வலயத்தில் மாறிவரும் சீனா-இருஷ்சியப் பொருளாதார ஆதிக்கம் மற்றும் கடற்போக்குவரத்து முரண்பாடுகளில் குறைந்தளவாவது அமெரிக்க நலனைப் பாதிக்காத நட்பு-பகை அரசியல்-ஆதிக்க வியூகத்தைக் கொண்டியங்குதல்.இதன் முரண்பாட்டில் சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கத்தையும் அதன் உறுப்பு நாடுகள் தவிர்ந்த செல்வாக்குக் உட்பட்ட பார்வையாளர்கள் தகுதிபெற்ற ஈரானைத் தாக்குவதற்கான தகுதியை அவ்கானிஸ்த்தானைத் தளமாக்கி எடுத்துபடி, இருஷ்சிய-சீன ஒப்பந்தத்துக்கு யுத்த நிர்ப்பந்தம் வழங்குவது,
 
5:இத்தகைய யுத்தத்தை, சமாதானத்தின் மூலமாக இருக்கும் அமெரிக்காவினது தலைமைப்பாத்திரத்தில் தவிர்க்கமுடியாது மனிதகாப்புக்கான நிபந்தனைகளில் ஒன்றாக்குவது.
 
6:இவற்றைச் செய்வதற்காக பனிப்போர் முகாந்திரத்தில் மையமாக இருந்த போலன்-செக்காய் ஏவுகணைப் பாதுகாப்பைத் தற்காலிகமாகக் கிடப்பில் போடுவது,
 
7: ஆர்மேனியாவுக்கும்,துருக்கிக்குமிடையிலான நட்புணர்வு-அரசியல் உறவு ஒப்பந்தத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை முதன்மைபடுத்துவது,
   
8:இதனூடாக துருக்கியை ஊடறத்துவரும் நபுக்கா(Nabucco) எண்ணைக் குழாயை இருஷ்சியாவிடமிருந்து தனிமைப்படுத்தியும், இருஷ்சியாவினது எரிபொருளில் தங்கியிராத (South Stream எண்ணைக் குழாய்க்கு எதிராக) மேற்குலகச் சார்பான சுதந்திரத்தை எரிவாயுப் பொருளாதாரத்தில் நபுக்காவை நிலைப்படுத்துவது.இதன்தொடரில் துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்துள் உள்வாங்கும் நெகிழ்வை மரபுசார்ந்த ஐரோப்பிய மேன்மைக்குள் மெல்ல உருவாக்குதல்,அதற்காகத் துருக்கிய அரசியலையும், இஸ்லாமிய மதவாத அடிப்படையையும் தனிமைப்படுத்திவிடத் தேவையான பண்பாட்டுக் கருத்தியலைத் தகவமைப்பது,
 
9:இதற்காக இருஷ்சியாவை நேட்டோவுக்குள் உள்வாங்க முனைவதும்,சீன-இருஷ்சியப் பலக்கூட்டை உடைப்பதும்,ஆப்பிரக்காவிலிருந்து சீனாவைத் தனிமைப்படுத்துவதும்,
 
10:உலகத்தின் எப்பாகத்தில் இனவிடுதலைப் போராட்டம் நிகழினும் அவற்றைத் துடைத்தெறியும் முயற்சியில் சங்காய் கூட்டுழைப்பு இயக்கத்துக்கும், நேட்டோவுக்கும் இடையில் பாரிய முரண்பாடில்லை.எனினும்,சீனாவைத் தனிமைப்படுத்துவதற்கு இருஷ்சியாவை மேற்குலகச் சார்பாக்குவது, மேற்குலக நபுக்கா எரிவாயுக்கு குழாயை இதற்காகப் பயன்படுத்துவது(இது,ஒரு கட்டத்தில் யுத்தமாக வெடிக்கும்போது இருஷ்சியா சீனாவிடமிருந்து அந்நியப்பட்டிருப்பதும் அவசியமான அமெரிக்கத் தெரிவாக இருக்கிறது. இனவிடுதலைப் போராட்டங்கள் தத்தமது பொருளாதார நிலைகளுக்கமைய ஆதிரித்தும்-அழித்தும் வருவது சமீபகால நிகழ்வாக இருப்பினும், இப்போதைய நிலைமையில் புதிய தேசங்களை உருவாக்குவதை ஏகாதிபத்தியங்கள் தமது வேலைத்திட்டத்திலிருந்து பின்தள்ளுகின்றன).
 
இன்றைய அதீத தேவையாக மேல்காணும் நிகழ்சிநிரல் அமெரிக்க மூலதனத்துக்கு இருக்கிறது. இதன் உச்சபட்சத் தெரிவானது உலகில் அமெரிக்க ஆதிக்கத்தைச் சமாதானத்துக்கான முன்னெடுப்பாகவும், இதுவே உலக அமைதிக்கான பணியாகவும் காட்ட முற்படும் அமெரிக்க மூலதனம், உலகில் தனக்கெதிரான அனைத்தையும் தனிமைப்படுத்தும் முதன் தெரிவாகத் தன்னைத்தானே உலகச் சமாதான அரசாக இந்த நோபல் பரிசின்வழி சொல்கிறது.அதையே அமெரிக்க அதிபர் ஒபாமா இப்போது சொல்லி வருகிறார்.இது,அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்காவது அமெரிக்காவின் தலைமையை உலகத்தில் நிலைநிறுத்துவதற்கான புதிய தெரிவுகளாகின்றன.இதை உறுதிப்படுத்தும் அமெரிக்க மூளை சீப்பினிக் பிறசென்ஸ்கி (Zbigniew Brzezinski )என்பது உலகறிந்த உண்மை.
   
உலகை ஏப்பமிட முனையும் ஏகாதிபத்தியம்,பாசிசத்தின் கடைக்கோடி நிலையாக இத்தகைய நோபல் பரிசின்வழி உலகைத் துடைக்க முனைவதை போராட்ட இயக்கங்கள்-ஒடுக்கப்படும் இனங்கள்சார்பாக எழும் எழிச்சிகள் புரிந்துகொண்டாக வேண்டும்.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
10.10.2009

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது