Language Selection

"புலிகளோடு போர் மக்களையும் வேட்டையாடப் போகும்சட்டரீதியானவுரிமையும் இலங்கைக்கு கிடைத்துவிட்டது.இது,இலங்கை அரசவரலாற்றில் எந்தவொரு அரசுக்கும் கிடைக்காத வெற்றி-மகிந்தாவுக்குக் கிடைத்துள்ளது.இவ் வெற்றியின் பின்னே,உலக ஆளும் வர்க்கங்களின் கள்ளக்கூட்டும்,குறிப்பாக இந்திய ஆளும் வர்க்கத்தின் வர்க்க விசுவாசமும் அதுசார்ந்த பொருளாதார வியூகங்களும்
ஒளிந்துள்ளன."
48 மணி நேர யுத்த ஓய்வுக்குப் பின் இலங்கை-இந்தியக்கூட்டுத் தமிழ்பேசும் மக்கள்மீதான கொடும் போர் மீளவும் வேகமெடுக்கப் போகிறது!
இவ் யுத்த ஜந்திரம் புலிகளது யுத்த ஜந்திரத்தை உடைத்தெறியும்வரைப் புலிகளின் பகுதிகளுக்குள் சிக்குண்ட பாரிய மகட்டொகையை வேட்டையாடும் நிலைக்குள் காலக் கெடுவோடுகூடிய இடப்பெயர்வை வலியுறுத்தியதன் பின்பான காலம்,புலிகளின் யுத்த வலயத்துள் தொடர்ந்து தங்கியுள்ள ஒவ்வொரு மனிதரும் தனது உயிருக்குத் தானே பொறுப்பேற்பவராகச் சட்டரீதாயாக உலக அரங்குக்குக் காட்டப்படுகிறார்.இதை, இன்னும் வலுப்படுத்தத் தக்கவகையில், உலகத் தமிழ்ச்சமுதாயத்தின் மகட்டொகையில், 95 வீதம் தமிழ்நாட்டில் வாழும் நிலையில், அந்த மக்களின் அரசியற்றலைமையே(தி.மு.க.) "புலிகள் யுத்த நிறுத்தத்துக்கு மதிப்பளிக்கத் தவறியுள்ளதாக"ச் சட்டசபையில் குரல் கொடுக்கும்போது, இலங்கை அரசின்பக்கம் இன்னும் அதிகமான நியாயப்பாடு தவிர்க்கமுடியாது உருவாகிறது.
உண்மையில் இலங்கை அரசினது அரசியல் வெற்றி, இன்றிலிருந்தே மிகத் தெளிவாகவும்,நிதானமாகவும் தனது வெற்றியைத் தக்கவைக்கிறது!
இதுவரை கருணாநிதி தலைமையிலான தி.மு.க. இலங்கை அரசையும் அதன் இராணுவத்தையும் ஓரளவேனும் எதிர்த்தே வந்துள்ளது.அதன் எதிர்ப்பு வீரியமாகத் தமிழக மக்களிடம் சமுதாய ஆவேசமாக மாறுவதற்கு முன்னமே தி.மு.க. அரசைத் தமது அரசியல் சதுரங்க ஆட்டத்தின் மூலம் இலங்கை-இந்திய ஆளும் வர்க்கங்கள் வென்றெடுத்துள்ளனர்.எனவே,பெயர்ப்பலகைக் கட்சிகள்-குழுக்கள்-இயக்கங்கள் போடும் ஓலத்தையெல்லாம் எவரும் பொருட்படுத்துவதைவிட த.p.மு.க.வின் குரலுக்கு வலிவு அதிகமானதென்பது உலகத்தில் நிரூபணமானது.அதைத் தமிழக்த்திலும் பல்முறை நாம் பார்த்துவிட்டோம்.தி.மு.க.வோ ஒரு பெரும் ஆளும் வர்க்கமாகத் தமிழகத்தில் மாறியதன் விளைவே அது ஈழத் தமிழ் மக்களக்கு எதிரானதும்,இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்துக்கு இசைவாகவும் காரியமாற்றும் இன்றைய பொருளாதார நிலைமைகள் இலங்கை யுத்தத்தோடு சமரசஞ் செய்கின்றன.
இந்நிலையில், "தி.மு.க. அரசை இலங்கை-இந்தியக் கூட்டுப் போர்முனை எங்ஙனம் இவ்வளவு இலகுவாக வென்றெடுத்தது"என்பதைக் கேள்வியாக்கினால், பதிலாக புலிகள் தரப்பிலுள்ள அரசியல் வெறுமை வெளிப்படும்.கூடவே,தி.மு.க.வினது வர்க்கத் தளத்தையும் நாம் மிக இலகுவாக இனங்கண்டுவிட முடியும்.
தமிழ்த் தேசியத்தின் குரல் எங்கிருந்து மேலெழுந்ததோ-அது, அங்கேயே மீளவும் சரணடைவதை இனங்காணமுடியும்.
இன்று, இவற்றைத்தாண்டி, நமது கவலையெல்லாம் புலிகள்-இலங்கையிந்தியக்கூட்டுப்போரில் சிக்குண்டுபோயுள்ள மக்களின் உயிரில் எந்தத் தரப்புமே இனி கரிசனைகொள்ள முடியாதவொரு சிக்கலால், இக் கொடும் யுத்தம் அவர்களைக் கொத்துக்கொத்தாக அழித்துவிடுமாவென்பதே!இலங்கை அரசோ தமது இராஜதந்திரத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்தெடுக்க விரித்த வலையோ தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய தமிழக அரசியலையே வெற்றிகொண்டபோது,புலிகள் மிகவும் பரிதாபத்துக்குரிய வகையில் தனிமைப்படுத்தப்பட்டுப்போய்யுள்ளார்கள்.இதுவே,இனிவரும் காலத்தில் மக்களின் அழிவுக்கு எவர் பொறுப்பானவர்கள் என்பதைத் தீர்மானிக்கப் போகிறது.
இலங்கையின் இந்தத் தந்திரம் இனி வகைதொகையின்றி போடப்படும் குண்டுகளுக்கெல்லாம் பதில் சொல்லும் பொறுப்பைப் புலிகளிடம் விட்டுள்ளது.தனது யுத்த நெறியை அது உலகுக்கு மீளவும் தந்திரமானமுறையில் நியாயப்படுத்திவிட்டது.இங்கு, புலிகளோ மக்களின் தயவின்றி ஒரு நாட்கூடத் தமது இருப்பைக்கொண்டியங்க முடியதென்பதன் எல்லைக்குத் தள்ளப்பட்டபின், அப்பாவி மக்களைக் கேடயமாக்குவதைத்தவிர வேறுவழி அவர்களுக்கு இல்லை.இந்தக் கேடயமாக்குதல் என்பதன் பொழிப்பைப் பற்பல வார்த்தைகளுடாக மொழிபெயர்க்கலாம் தமிழ்த் தேசியவாத மாஜை.ஆனால், இதையெல்லாம் எவருமே பொருட்படுத்தமாட்டார்கள்.இதை இப்போது அநுபவர்கள் ஈழத் தமிழர்கள்தாம்!
எனவே,மக்களை இடம்பெயர அநுமதிப்பதைத் தவிரப் புலிகளுக்கு வேறுவழியில்லை.இதைப் புலிகள் ஆயுத முனையில் தடுப்பார்களேயானால் இலங்கை-இந்திய இராணுவக்கூட்டால் போட்டுத்தள்ளப்படும் குண்டுகளுக்குக் கணிசமான தமிழர்கள் கொல்லப்படுவார்கள்.அவர்களின் குருதியோடு விளையாடும் "இயக்க இருப்பு"அரசியலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.இது, மிகவும் கொடுரமான அரசியல்.மக்கள் தமது உயிரைக் காப்பாற்றும் அடிப்படை உரிமையை இல்லாதாக்கும் போர்த் தந்திரம் எப்போதுமே அவர்களுக்கு விடுதலையளிக்கும் ஒரு தேச விடுதலையைச் செய்யாது.இதைப் புலிகள் காலங்கடந்து யோசிப்பதில் எந்தப்பலனும் இருக்கமுடியாது.ஏனெனில், புலிகளைப் பூண்டோடு அழிக்கும் முயற்சியில், இலங்கை-இந்திய இராணுவக்கூட்டுக் கணிசமான மக்களின் உயிரையும் சேர்த்தே அழிக்கப் போகிறது.இதைத் தட்டிக்கேட்கும் தார்மீக ஆதரவுடைய தழிகத்தின் அரசையே வென்றுவிட்ட "48 மணி நேர" யுத்த ஓய்வு,நடந்தேறும் மனிதப் படுகொலைக்கு முற்றுமுழுதான பொறுப்பும் புலிகளுக்கே உண்டென்பதைச் சட்டசபையில் தீர்மானமாகக்கூடக்கொணர்வதற்கு வாய்புகளே அதிகம்.
இலங்கையின் வரலாற்றில் தமிழ்பேசும் மக்களின் அரசியல் படுகொலை இன்றைய நிலைக்கு முன் எப்போதும் நிகழ்ந்தது இல்லை.அன்றைய கட்சிகள் ஓரளவாவது தமிழ்பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான குரலைக்கொண்டு உலகில் நியாயப்படுத்தும் அரசியலைச் செய்தே வந்துள்ளார்கள்.ஆனால்,புலிகளோ எமது மக்களின் அனைத்துவகை அரசியலையும் தோல்விக்கிட்ட நிலையில், தமிழ்பேசும் மக்களின் அனைத்து அடிப்படைவுரிமைகளையும் அதன் வாயிலான கோரிக்கைகளையும் செல்லாக்காசாக்கிப் பயங்கரவாதமாக உலகத்தில் காட்டி நிற்கிறார்கள்!
இது, எந்த வகை அரசியல் முன்னெடுப்பால் வந்ததென்பதை இனிவரும் காலத்தில் ஆய்வாளர்கள் ஆய்ந்து சொல்வதற்கு முன்பே, புலிகள் இந்த வேலையையும் தாமே தட்டிப்பறித்துத் தமது மக்கள் விரோத அரசியலை இன்றைய "48 மணி நேர" அவகாசத்துள் சொல்லி விடுகிறார்கள்.மக்களை இடம் பெயராதிருக்க அச்சப்படுத்தித் தடுப்பது மிகவும் கொடூரமானது.இதை எவரும்,எந்த நியாயவாதத்துக்குள்ளும் அமுக்கித் தடுத்து நியாயப்படுத்திவிட முடியாது.அங்ஙனம் புலிகளை நியாயப்படுத்துவதில்லுள்ள தமிழ்பேசும் மக்களின் இன்றைய நிலை,அவர்களது உயிரோடு விளையாடும்நிலையாகப் போராட்டம் மாறியதன் விளைவே இதுவென்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
எனவே,மக்கள் யுத்தப் பிரதேசத்தைவிட்டுப் பாதுகாப்பு வலயத்துள் பிரவேசிப்பது அவசியம்-அது,அவர்களது அடிப்படை உரிமை.இக்கோசம்கூட எதனால் எழுந்துள்ளது இன்று?இதுவரை நடாத்தப்பட்ட புலிகளின்போராட்டம் மக்கள் போராட்டமின்றி, ஒரு இயக்கத்தின் நலனின்பொருட்டும்-மேற்குலகினில் வாழும் மேட்டுக்குடித் தமிழர்களின் பொருளாதார நலனின்பொருட்டும் போராட்டப்பட்டத்தைச் சுத்த இராணுவவாதமாக்கி நடாத்திய அரசியலே இதன் கோசத்துக்கான நியாயத்தை இலங்கை அரசுக்கு-உலகுக்குக் கொடுக்கிறது.இதுவே,மக்களுக்கும் பொருந்திவிடுவதால் அவர்கள் புலிகளைவிட்டுக் கழலுதலைத்தவிர வேறுவழி அவர்களுக்கில்லை!
இலங்கை அரசு அனைத்துவடிவிலும் அரசியல் வெற்றிகளைக் குவித்தபோது,புலிகள் ஆயுத வித்தைகாட்டி மக்களையும்,இளைஞர்களையும் மயக்கியதன் விளைவுகளை இன்று மக்கள் மட்டும் பொறுப்பேற்க முடியுமா?இதன் பொறுப்புப் புலிகளுக்குரியதே.அவர்களே இவ்யுத்தத்தால் அழிபடுவது தவிர்க்க முடியாது.மக்களை உயிரோடு வாழவிடப் புலிகள் இவ் யுத்தத்தைவிட்டு ஒதுங்க வேண்டும்.சரணடையவேண்டும்.இதைவிட வேறொரு தெரிவு இப்போது தமிழ் மக்களுக்கில்லை.
எனவே,புலிகளைச் சரணடையவைத்து இருக்கின்ற அப்பாவி,அடிமட்டப் புலிகளையும்-மக்களையும் காப்பது அவசியமாகிறது.இதற்குமேல் வேறொருவகைப் போராட்டம் இலங்கைக்குள் நிலவுவதற்கு இன்றைய இலங்கையின் அனைத்துவகை அரசியலும் இடங்கொடுக்கவில்லை-யுத்த நிறுத்தம் உட்பட இதுவே கதை!புலிகள் சரணடைவதால் சர்வதேசச் சட்ட நிலைமைகள் மற்றும் ஓப்பந்த விதிகளும் இலங்கையைக் கவினிக்கும்போது, புலிகளுக்கான பொது மன்னிப்புக் குறித்து உலகம் அடுத்த தளத்துக்கு இலங்கையை இழுத்துவிடும்.அப்போது, மக்களினது உயிர்கள் மட்டுமல்ல அடிமட்டப் புலிப் போராளிகளினது கணிசமான உயிர்களைக் காத்த விவேகம் எமக்கானதாக இருக்கும்.ஏனெனில்,ஈழப்போராட்டம் தோல்வியடைந்துவிட்டது,இனி அதற்கு வாழ்வில்லை!-தமிழ்பேசும் மக்கள் இனிவரும் உலகக் காலவர்த்தமானதுக்கேற்பத் தமது வாழ்வைத் தகவமைத்துக்கொள்ளவே முயல்வர்.இதுவே,இப்போதுள்ள இலங்கைத் தமிழர்களின் வாழ்நிலையில் அவசியமுங்கூட.
இதை மறுத்து, மக்களை மேலும் தடுத்துக் கவசமாக்கியபடி யுத்தத்தைத் தொடரும்போது, புலிகளும் அழிந்து பலபத்தாயிரம் மக்களும் அழிக்கப்படும்போது உலகம் கைகட்டி வேடிக்கை பார்பதைவிடத் தமிழகமும் அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவுங்கூட வேடிக்கை பார்க்கும்.இதுவே,நிசமான உண்மை.இதைப் புரியப் பட்டுத்தாம் தெளிவோமெனப் புலிகள் பிடிவாதம் பிடித்தால், அப்போது தெளிவதற்குப் புலிகள் இருக்கப் போவதில்லை-மக்கள் ஆறாத இரணங்களோடு தொடர்ந்து
எதிர்காலத்தை எதிர்கொள்வார்கள்.
ப.வி.ஸ்ரீரங்கன்
31.01.2009


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது