Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

சிங்கள இனவாதத்தின் இனச் சுத்திகரிப்பு

  • PDF

இலங்கை வரலாற்றில் கடந்த பல தசாப்தங்களாக சிங்கள இனவாத அரசு இனவாதக் குண்டர்களை வைத்தும், ஆயுதப் படைகளை ஏவியும் தமிழர்களை இலங்கையின் தெற்கில் வாழும் உரிமையை மறுத்து இனச்சுத்திகரிப்புச் செய்துள்ளது. ஆனால் இப்போது சிங்கள இனவாத அரசே உத்தியோக ப+ர்வமாக தமிழர்களை இலங்கையின் தலைநகரத்தில் இருந்து எதேச்சதிகாரமாக வெளியேற்றி தனது அதி உச்சகரமான மனித உரிமை மீறலை செய்து, உலகம் முழுவதின் கண்டனத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளது.


இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை புரிந்து கொள்ளவும், அந்த அபிலாசைகளை தீர்ப்பதற்கோ சிறிய அளவிலும் முயலாத இலங்கை அரசு மாறாக தேசிய இனப்பிரச்சனையை ஆயுத முனையால் தீர்த்துவிடலாம் என்று வெறித்தனமாக செயற்படுகின்றது. இச்செயல் மூலம் இலங்கையில் தொடர்ந்துவரும் இரத்தக் களரியையும், மனித உரிமை மீறல்களையும் உக்கிரப்படுத்துவதற்கான அடித்தளத்தையே ராசஐபக்ஷவின் அரசு ஏற்படுத்தியிருக்கிறது.


சிங்கள மேலாதிக்க சக்திகளின் உதவியுடன் ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ அரசு தமிழ் மக்கள் மீதும் அவர்களது வாழ்விடங்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி உயிரிழப்புக்களையும் அவலங்களையும் உண்டாக்கி வருகிறது.


தமிழ்பேசும் மக்களின் வாரலாற்று வாழ்விடங்களில் இனவிகிதாசாரத்தை மாற்றி சிங்கள மேலாதிக்கத்தை
நிலைநாட்டுவதற்கு முனைந்து வருகிறது

.
இதன் தொடர்ச்சியாகவே இலங்கையின் தலைநகரத்திலிருந்து "தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே" தமிழ் மக்களை வெளியேற்றியுள்ளது சிங்கள இனவாதம்.


உலகச் சமூகமே கண்டிக்கும் இச்செயலை இலங்கையில் சிங்கள இனவாதத்தையும், மேலாதிக்கத்தையும் அண்மைக்காலமாக தீனிபோட்டு தீவிரமாக வளர்த்துவருகின்ற இனவாதக் சக்திகளும் கண்டித்துள்ளன. இதில் வியப்பேதுமில்லை. "இலங்கையர்" என்ற பொதுவடையாளத்தை அனைத்து இனமக்களுக்கும் கொடுத்து, தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து சிங்கள மேலாதிக்கத்தை ஒற்றையாட்சியின் கீழ் தொடர்வதே இவர்களது திட்டமாக இருந்து வருகிறது. இந்த இனவாத சக்திகள் வடிப்பது வெறும் முதலைக் கண்ணீரே!


தனது அரசே திட்டமிட்டு கட்டவிழ்த்துவிட்ட இனவாதச் செயலுக்கு, ராஜபக்ஷ வருந்துவதாக தெரிவித்திருக்கிறார். இவரது வருத்தமும் மேலே குறிப்பிட்ட இனவாத சக்திகளின் முதலைக் கண்ணீரைப்
போன்றதுதான். தனது அரசே உருவாக்கிய தீர்வுக்குழுவின் நியாமான தீர்வறிக்கையை கணக்கிலெடுக்காமல் குப்பையில் போட்டுவிட்டு உலகம்பூராகவும் ஆயுதக் கொள்வனவுக்கு அலைந்துதிரிகிறார் ராஜபக்ஷ.


ராஜபக்ஷ அரசின் அதியுச்சகரமான பாசிசச் செயலை கருமையம் கடுமையாகக் கண்டிக்கிறது.


இலங்கை அரசுக்கு இப்போது பொருளாதார உதவிகளை பகுதியாக நிறுத்தியிருக்கும் நாடுகள் தமது ஆயுத உதவிகளையும் முற்று முழுதாக நிறுத்தவேண்டும். தமிழ்பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளும் அபிலாசைகளும் மதிக்கப்பட வேண்டும். சமாதானத்துக்கும் நியாமன தீர்வுக்குமான அழுத்தத்தை சர்வதேச சமூகம் தொடர்ந்து இலங்கை அரசின்மீது செலுத்த வேண்டும்.


ஆனி 13, 2006 - கருமையம் -
சிங்கள இனவாதத்தின்
இனச் சுத்திகரிப்பு
தொடர்பு: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it