Wed05012024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

கர்ப்பிணி பெண்கள் நொறுக்கு தீனி சாப்பிட்டால் குழந்தையை பாதிக்கும்; மருத்துவ ஆய்வில் தகவல்

  • PDF

 

lankasri.comகர்ப்பிணி பெண்கள் நொறுக்கு தீனி சாப் பிட்டால் குழந்தையை பாதிக்கும் என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.கர்ப்பிணி பெண்கள் நொறுக்கு தீனி சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படுகிறதா என்று லண்டன் ராயல் மருத்துவ கல்லூரி நிபுணர்கள் ஆய்வு நடத்தினார்கள்.

பாடம் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் நொறுக்கு தீனி ஆகியவற்றை கர்ப் பிணி பெண்களும், பால் கொடுக்கும் பெண்களும் சாப்பிட்டால் அது குழந் தையை கடுமையாக பாதிக் கும் என்று தெரிய வந்தது.

குழந்தை வயிற்றில் இருக்கும் போதும், பின்னர் அது தாய்ப்பால் குடிக்கும் போதும் தான் உடலில் உள்ள பல உறுப்புகள் ஒருங் கிணைந்து வளர ஆரம் பிக்கின்றன.

அப்போது தாய் நல்ல சத்தான உணவுகள் சாப்பிட் டால் அதன் மூலம் குழந்தை உறுப்புகளும் நன்றாக வளரும்.

அதற்கு பதில் நொறுக்கு தீனி, பாடம் செய்யப் பட்ட உணவுகளை சாப் பிடும் போது அது உறுப்பு வளர்ச்சிகளை பாதிக்கிறது.

இதன் மூலம் குழந்தை களுக்கு 2-ம் நிலை நீரழிவு நோய் ஏற்பட அதிகமாக வாய்ப்பு இருக்கிறதாம். உறுப்புகளின் செயல்பாடு களிலும் பாதிப்பு ஏற்படு மாம்.

மனிதனும், எலியும் கிட்டதட்ட ஒரே மாதிரி உணவு பழக்கங்களை கொண்டுள்ளன. எனவே எலிகளுக்கு இந்த உணவு களை கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்த போது தெரிய வந்தது.


01 Jul 2008
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1214906078&archive=&start_from=&ucat=2&