Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
20.05.2006 சில நேரங்களில் நமது கல்வியாளர்கள் "உண்மையில் படிப்பாளிகள்தானா? (கவனியுங்கள்: படிப்பாளிகள்தானா என்கிறோம்)" என வினாவத் தோன்றும். ஒரு மொழியில் இலக்கணப் பிழையை, எழுதுத்துப் பிழைகளை நாம் இலகுவாகச் செய்து விடுகிறோம். அதற்கான காரணம் மொழிப் பயிற்சியின்மையும், எழுதியதை மீள்நோக்கத்தக்க "ஆசிரியர்"(எடிட்டர்) இன்மையுமொரு காரணம். தமிழில்தாம் அதிகமாகப் பெரும் பொறுப்பற்ற மெத்தனப்போக்கு நிலவுகிறது! மொழியில் வாக்கிய-இலக்கண-எழுத்துப் பிழைகள் விடுவதைப் பெரியோர்(தமிழறிஞர்கள்) மன்னிக்கின்றார்கள். ஆனால் "பொருளில் குற்றமிட்டால்" நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம், குற்றமே!" இதை நக்கீரர் சொல்வதாகவேறு நாம் அறிகிறோம்! தமிழர்கள் எவ்வளவு உன்னதமாகத் தமது மொழிக்கு முதன்மை கொடுத்தார்!

இப்போது?...

"அந்த ஜங்ஷனில இருந்து, லெப்ஃடில திரும்பி அடுத்தவர்ற குறோசிங்கில ஸ்டிறைற்ற போனாக்கா சில்க்பாலஸ் வருமுங்க"

"வாங்க மேடம்-சார், என்ன ஃபீல் பண்ணிகிட்டிருங்கீங்க? இன்னைக்கு என்ன சாங் பாடப் போறீங்க?"

"சின்னமணிக்குயிலே!"

" பியுட்டுபுள் சாங்! இளையராஜா சாரின்ர வொண்டர்புள் கம்போஷிங்கல பாலாசாரின் அற்புதமான வாய்ஸ்..."

அட அரிகண்ட இராகங்களே!

உங்கள் வாயில கொள்ளிக் கட்டையை வைக்கேனா?

உங்கள் அப்பான் அல்லது ஆத்தாளுக்கு ஆங்கில வெள்ளைக்காரி-வெள்ளைக்காரனா துணை? இதுவா கல்வி?, கேணைத்தனமான கூட்டமே! இப்படி ஏசிவிடவேண்டுமெனத் தோன்றுகிறது! என்றபோதும் இதை இத்துடன் நிறுத்தி விஷயத்துக்குப் போவோம்.

பேராசிரியர் முனைவர்.க.அரங்கராசு என்ற பெரியார்:

" இலக்கண வரையறை என்பது ஒரு மொழியின் தனித்தன்மையைக் காப்பாற்றி வரும் பாதுகாப்புப் பெட்டகமாகும், மொழியின் வரையறை என்பது ஒரு இனத்தின் வரையறையாகுமாம். யாப்புக் கட்டுப்பாடென்பது ஒரு சமுதாயத்தின் கட்டுப்கோப்பாகும்." என்கிறார். (ஆய்வுச் சிக்கல்களும், தீர்வுகளும் பக்கம்:335)

ஆக ஒரு இனத்தின் "இருப்புக்கே" நிகராகக் கருதுகிறார்!

நாம் எவ்வளவோ போராடியும் "பிழையின்றி" எழுதுவதைத் தவிர்க்க முடியவில்லை! முயற்சிக்கின்றோம் என்ற வரையிலாவது ஒரு தெம்பு மனதில் நிழலாடுகிறது.

ஜேர்மனியர்கள் தமது மொழியை இலக்கண சுத்தமாகக் கற்றவருக்கே "மெற்றிக் குலேஷன்" கல்வியில் அதிக புள்ளிகள் கொடுத்து, மருத்துவம்-பொருளாதாரப் பொறியியல் போன்ற அதியுயர்ந்த படிப்புகளைத் தொடர அனுமதிக்கின்றார்கள். மொழியை இரண்டாது வகுப்பிலிருந்து இறுக்கி வரும் இவர்களின் பாடசாலைகள் "தேர்ச்சியுற்ற" ஆசிரியர்களின் மூலம் இதை வெகுவாகச் சாதித்துவிடுகிறது.

எனக்கு ஆரம்பக் கல்வியை வழங்கிய திருமதி ரீட்டா கியோக்குமார் ஆசிரியையை நினைத்துப் பார்க்கிறேன்! எவ்வளவு சிறப்பான பெண்மணி! தமிழை அறிந்து அற்புதமாகப் படிப்புச் சொல்லித் தந்த என் அன்புக்குரிய பெரியார். அவரது கையெழுத்தானது அச்செழுத்தைவிட அழகானது!

"இரண்டு சிறு கண்கள் தேவனைப் பார்க்க

இரண்டு சிறு கைகள் அவர் வேலை செய்ய

இரண்டு சிறு கால்கள் அவரிடம் செல்ல

ஒரு சிறு இருதயம் அவருக்குக் கொடுக்க..."

மிக அழகாகப் பாடி, ஆடி எமக்குப் பாடம் நடாத்திய அற்புதமான அசிரியர் அவர்! இன்றுவரையும் இப்படியானவொரு ஆசிரிய அம்மையாரை நான் பார்த்தது கிடையாது. அந்த ஆசிரியருக்கும் எனக்குமான உறவு "ஏகலைவன்" நாடகம் வரை என்னைத் தயாரித்து மேடையேற்றிப் பாராட்டுக் குவியும் வரை தொடர்ந்தது. அவரே என் குரு. வாழ்க அம்மையே!!!

இன்றோ...

உயிர்மெய் எழுத்துக்கு உதாரணம் கூறும் நமது தமிழ் ஆசிரியர்கள்(புலம் பெயர் நாடுகளில்) "உயிரும் மெய்யும் பிணையுங்கால் உயிர்மெய்மை பிறக்கிறது" என்று வேறு கொல்லுகிறார்கள். தொல்காப்பியத்தை கண்ணாற் கண்டார்களோ நான் அறியேன். நல்ல காலம் "அம்மையும் அப்பனும் பிணையுங்கால் அம்மையப்பன்" பிறக்கிறாறென்றபடி வகுப்பெடுக்கவில்லை!

இது அவல நிலை!

இன்று படித்துப் பட்டங்களை நாய்க்குச் சங்கிலி, கழுத்துப்பட்டி கட்டியமாதிரித் தமது பெயருடன் இணைத்துப் பந்தாகாட்டும்- குறியீட்டுப் பயம் காட்டும்" பண்டித வன்முறையாளர்கள்", மிக எளிதில் தமது "படிப்பு வெறும் மனனம் பண்ணிய படிப்புத்தாம், தொழில் முறைப் படிப்புத்தாம்" என நிரூபித்தே வருகிறார்கள்! புத்திஜீவி என்போர், தினமும், பொழுதும் கற்பவர்கள்-படிப்பவர்கள்! நம்மிடம் புத்திஜீவிகள் இல்லையென்றே சொல்லிவிடலாம். இதனால் தொழில் முறையாளர்கள் மருத்துவம், பொறியியல் கற்றவுடன் "தாமே தலைமுறை காக்கும்" புத்திஜீவிகளாகப் புலம்புகிறார்கள்.

இவர்களிடம் "வள்ளுவன்" படும்பாடோ பெரும்பாடாய்ப் போயிற்று!

என்ன செய்ய?

"கவியுள்ளங் கண்டும் கற் காரிவர்

பொருளறிந் துமுள் வாங்கார்

பொய்த்துப்போன பொருள் கூறிப்

புகுவார் அறிவு வாதத்துள்!"

தேனியிலொரு கட்டுரையைப் புலம் பெயர் தமிழரின் பெரும் புள்ளி- கல்வியாளர், பணக்காரர் என்ற பெயரெடுத்த

திரு.ஜெயதேவனின் சகோதரர் "டாக்டர்". நரேந்திரன் ராஜசிங்கம் அவர்கள் எழுதியிருக்கிறார்.

(கற்றதனால் ஆய பயன் "என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாரெனின்". கற்றறிந்த பெரியோரின் பாதங்களைத் தொழாதவன் கற்றதானால் எதுவித பயனுமில்லை என்கிறது குறள். இதில் வாலறிவன் என்ற சொல் தமிழாகும். இச் சம்பவம் நடந்த சில நாட்களின் பின்னரே எனது சகோதரரும், அவரது நண்பரும் சிறை வைக்கப்பட்டார்கள். அபிவிருத்தி அலுவல்களில் புலிகளுக்கு எந்தவித அக்கறையுமில்லை என்பதை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர்களது கவனம் பணம் கறக்குவதிலேயே இருந்தது. நான் அங்கு கண்ட மனிதர்கள் எந்தவித உணர்ச்சிகளுமற்ற றொபொட் போன்ற உருவங்களாகவும், கண்களில் இரக்க சுபாவமற்ற இறந்த மனித கண்களாகவும் பய உணர்ச்சியைத் தோற்றுவிப்பர்களாகவும் இருந்தனர். இதனால் ஓர் ஏமாற்றமடைந்த மனிதனாகவும், ஆத்திரம் கொண்ட மனநிலையிலும், தமிழர்களுக்காக கவலையடைந்த நிலையிலும் திரும்பினேன்.).

அவர் குறளுக்கு விளக்கிறார்: "கற்றறிந்த பெரியோரின் பாதங்களைத் தொழாதவன் கற்றதானால் எதுவித பயனுமில்லை என்கிறது குறள். " - அதாவது நரேந்தரரின் காலைத் தொழுதால் சரியாம்!:-)))))

"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.- குறள்- பாயிரவியல், கடவுள் வாழ்த்து: 2

...ம்... குறளின் இரண்டாவது குறளே இக் கல்வியாளருக்குப் புரியவில்லைப் பின்னிவர் எதைக்கூறி, எவர் கேட்க?:- ((((((

"வாலறிவன்"

எட வள்ளுவா இப்படி நம்ம கல்விப் பெருந் தகைகளையே மண்கவ்வ வைக்கிறாயே!

"தூய அறிவு வடிவம்: இறைவன்!"

இறைவன் இயக்கமாய், நாதமாய்-ஒலியாய் இருப்பதென்று "அத்வைதம்" பகலும். நாதப் பிரமம்.

அதையே "அன்பே சிவம்" என்று சைவர்கள் சொல்கிறார்கள். அன்பு என்றாலென்ன? மனதிலெழும் ஒரு அலை-அதிர்வு! இரக்கம், காதல், மோகம்-பணிவு, இசைவு! இதன் பண்புநிலை மாற்றம் வேதியியல் முறையில் புரிய முடியாது! அதிர்வலையால் "இயங்கு" ஒலியாகப் பரிணாமிக்கிறது. இஃது தியானிப்பின் உச்சம். இறை வடிவம். "வாலறிவன்": இறைவன்.

"தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால்(ஒருவர்), அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?" இதுதாம் மேற்காணும் குறளின் பொருள்! யாரு சொல்கிறார்?

பரிமேலழகர்!

எனது முப்பாட்டர்களுக்கு இருந்த கல்வியாண்மை என் தந்தை-தாய்மாருக்கு இல்லாது போனதால் பிள்ளைகளாகிய எனக்கு- நமக்கு அவர்கள் வடித்து வைத்ததையே வாயாறப் பருக முடிவதில்லை! பொருளறிந்து, பொய்யகற்றிப் புகட்ட முடியவில்லை!

எங்கும் நுனிப் புல் மேய்தல்!!

இது நோய்க்கான அறிகுறி. எவரிடுவார் ஒளடதம்?

ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்
20.05.2006

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது