Fri05032024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
September 2013

Thursday, 26 September 2013

....ஏனென்றால் புரட்சி என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல- அது நடைமுறை வேலையாகும்! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 26 September 2013 14:23
அரசியல்_சமூகம் / விருந்தினர்

நோர்வே மார்க்சிய தொழிலாளர் கட்சியை சேர்ந்தவரும், அதன் அரசியல் செயற்பாட்டாளரும், ஐரோப்பா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி" எனும் அமைப்பில் இயங்கி வரும் இடதுசாரி கொள்கையுடையவருமான தோழர் நியுட்டன் அண்மையில் இலங்கை வந்திருந்த போது, சகோதர மொழியில் வெளிவரும் இடதுசாரி வெகுசன வராந்த பத்திரிக்கை "ஜனரல" (மக்கள் அலை) விற்கு விரிவான நேர்காணல் ஒன்றினை வழங்கியிருந்தார். அதன் மொழிபெயர்ப்பு .

Read more...
Last Updated ( Thursday, 26 September 2013 14:38 )


Wednesday, 25 September 2013

லலிதா அன்று ஈழ அகதி, இன்று டென்மார்க்கில் - பிறாண்டா அம்மன் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 25 September 2013 14:44
அரசியல்_சமூகம் / விஜயகுமாரன்

இவர் 9 வயது சிறுமியாக இருந்தபோது அபிராமி அம்மனால் ஆட்கொள்ளப்பட்டார். மனித உருவில் அவதரித்த அபிராமி அம்பாள் தான் மாதாஜி அபிராமி உபாசகி என்பதில் ஐயமேதுமில்லை. இப்படி இவர் வளர்ந்து வருகையில் ஒன்பதாவது வயதில் இந்த மாதாஜி அவர்களுக்கு கனவில் அபிராமி அம்மன் தோன்றி 'நான் உன்னிடம் வருவேன்' என்றும் 'என்னை ஆதரிக்க வேண்டும்' என்றும் கூறினார். பின்பு திருமண காலத்தில் இவருக்கேற்ற ஒரு வாழ்க்கைத் துணையை அபிராமி அம்மாள் தேர்ந்தெடுத்து மணமுடித்து வைத்தார். இவர்களுக்கு பாலமுருகன் போல ஒரு ஆண் குழந்தையையும் அந்த அபிராமி அம்மாள் கொடுத்தார். அம்மா டென்மார்க் நாட்டில் (1994) இருக்கும் போது, அபிராமி அம்மன் அம்மாவின் கனவில் வந்து தன்னை நீ ஆதரிக்கவேண்டும் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டார்.

Read more...
Last Updated ( Wednesday, 25 September 2013 14:53 )


Tuesday, 17 September 2013

முக் குரங்காக வாழென்று..!? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 17 September 2013 06:51
அரசியல்_சமூகம் / மாணிக்கம்

ஈழம் முதற்கொண்டு
பிற தேசம் வரையெங்கும்
முக் குரங்காக வாழென்று...
போலிகள் சொல்வதை - நாம்
நிஜமொடு பார்த்திடும் போதினிலே
எழும் முதற் கேள்விகள் மூன்றினை
வாருங்கள் பாருங்கள் தோழர்களே..!

Read more...
Last Updated ( Tuesday, 17 September 2013 06:53 )


Sunday, 15 September 2013

நல்லூர் கந்தனின் தேர் உலாவும்… தேவலோக கந்தனின் கோபமும்… PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 15 September 2013 08:16
அரசியல்_சமூகம் / தேவன்

"சும்மா இருந்து ஏன் சிரித்துக் கொண்டிருகிறாய்.., மூளை கோளாறாகிவிட்டதா..? ஒரு முகம் கொண்டு நீ சிரிப்பதையே சகித்துக் கொள்ள முடிவதில்லை. ஆறு முகத்தாலை நீ சிரிக்கிறதை பார்க்க பயமாகவுள்ளது..!" – கணேசன்.


"என்னைப் பார்த்து யாரும் பயப்படுவதில்லை. உன்ரை முகத்தைப் பார்த்துத்தான் எல்லோரும் மிரளுகின்றார்கள்!" – கந்தன்.


"உன்னைப் போல பல வேசங்கள் போட்டு சனத்தை நான் ஏமாத்தவில்லை, யாரும் என்னைப் பார்த்து பயப்பட்டதுமில்லை.., எல்லாருக்கும் என்னை புடிச்சுமிருக்கு. விநாயகனே எங்களுக்கு அறிவைத்தா என்று என்னைத் தான் கேட்கிறார்கள்.., உன்னை யாரும் கேட்பதில்லை." – கணேசன்.

Read more...
Last Updated ( Sunday, 15 September 2013 08:30 )


Thursday, 12 September 2013

வடக்கின் தேர்தல், எதிர்பார்ப்பும் எதார்த்தமும்... PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 12 September 2013 07:23
அரசியல்_சமூகம் / விருந்தினர்

இன்னும் சில நாட்களில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. வரலாற்றில் முதன்முறையாக வட மாகாண சபைக்காக நடக்கும் தேர்தல் இதுவாகும். 1987ல் இந்திய-இலங்கை ஆட்சியாளர்கள் சேர்ந்து, வடபகுதி மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ற வகையில் மாகாண சபை முறையை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால், கடந்த 25 வருடங்களாக வடக்கில் மாகாண சபையை அமைக்க முடியவில்லை என்பதுதான் நகைப்புப்குறிய விடயம். எப்படியிருந்தாலும் இப்போது வடக்கில் மாகாண சபை தேர்தல் நடக்கப் போகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு வேட்பாளர்கள் பல்வேறு விடயங்களைக் கூறிக் கொண்டு உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்கிறார்கள். அதற்காக பல காரணங்களைக் கூறுகிறார்கள்.

Read more...
Last Updated ( Thursday, 12 September 2013 16:56 )


Friday, 06 September 2013

இலவசக் கல்வியையும் கல்விச் சுதந்திரத்தையும் வென்றெடுப்போம்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 06 September 2013 07:29
அரசியல்_சமூகம் / விருந்தினர்

கல்வி அறிவை பெறும் செயற்பாடாகும். எமக்கு முன் இருந்த அனைத்து தலைமுறைகளும் பெற்றுக்கொண்ட அனுபவங்களே அறிவு எனப்படுகிறது. இந்த அனுபவங்கள் அதாவது அறிவு மாபெரும் கடல் போன்ற களஞ்சியமாகும். இந்த களஞ்சியம் மனிதகுலத்தின் மாபெரும் சொத்து. இதற்குள் தான் எம்முன்னோரின் அனுவங்கள் அனைத்தும் சேமிக்கப்பட்டிருக்கின்றன. நியுட்டன், ஐன்ஸ்டீன், எடிசன், லிங்கன், ஹெகல், பிளேட்டோ, ஒளவையார்,வள்ளுவர், மார்க்ஸ், சித்தார்த்தன், விவேகாநந்தர், சேகுவேரா, பாரதி, கமல், கலாம், பிரபாகரன் ஏன், குப்புசாமி, வீரகத்தி, ரவி, அகிலா, விஜி என எல்லோரினதும் அனுபவங்களும் அடங்கும். இந்த அனுபவங்களே எமக்கு அறிவாக கிடைக்கின்றன. இந்த அறிவை பெறுவதற்காகவே நாம் கற்கின்றோம்.

Read more...
Last Updated ( Friday, 06 September 2013 07:39 )