Fri05032024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
July 2013

Wednesday, 31 July 2013

இலங்கை அரசியலும் புலம்பெயர் சமூகமும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 31 July 2013 11:57
பி.இரயாகரன் - சமர் / 2013

யூலைப் படுகொலைகள் முடிந்து 30 வருடங்கள் கடந்துவிட்டது. முள்ளிவாய்க்கால் படுகொலை நடத்து 4 வருடங்கள் கடந்துவிட்டது. இதற்குள் இனம் மதம் கடந்த  எத்தனையோ படுகொலைகளும், மனித அவலங்களும். நீதி மறுக்கப்பட்ட இனவாத சமூக அமைப்பில், உளவியல் அவலங்களுடன் மனிதன் நடைப்பிணமாகவே வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றான். இன்னமும் இன மத மோதல்கள் அரசால் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றது. இதனால் பேரினவாதத்தால் ஒடுக்கப்படும் இனங்கள் இன ரீதியாக சிந்திப்பதும், செயற்படுவதும் தொடருகின்றது. சிந்தனை செயல் தொடங்கி, வாக்குப் போடுவது வரை, அரசின் இன மத வாதத்திற்கு எதிரான அரசியலாகவே இருக்கின்றது. இதுதான் இன்றைய இலங்கையின் அரசியல் எதார்த்தம்;. புலம்பெயர் சமூகமே, புலிகளின் கனவுலகில் வாழ்ந்தபடி முடிவுகளை இலங்கையில் வாழும் மக்கள் மேல் திணிக்க முனைகின்றது.

Read more...
Last Updated ( Wednesday, 31 July 2013 12:21 )


Sunday, 28 July 2013

இலங்கை சிறைகளும் தமிழ் அரசியல் கைதிகளும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 28 July 2013 18:27
பி.இரயாகரன் - சமர் / 2013

பல வருடங்களாக எந்த நீதி விசாரணைகளுமின்றி அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, பேரினவாத அரசும், தமிழ் தேசியமும் கண்டுகொள்வது கிடையாது. இன்று குறைந்தபட்சம் 17 சிறைகளில், 954 பேர் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். இதில் 40 பேர் மட்டுமே தண்டனை பெற்றவர்கள். மிகுதி அனைவரும் நீண்ட பல வருடமாக விசாரணைகள் எதுவுமின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இனப்பிரச்சனைக்கான தீர்வு போல் தான், கைதிகள் விவகாரமும். பேரினவாத அரச நிர்வாகத்தின் கீழ் சட்டவிரோதமாக சிறைகளில் அடைத்து வைத்திருக்கும் அதே நேரம், இவர்களை தீண்டத்தகாதவராகவே தமிழ் தேசியம் அணுகுகின்றது.

Read more...
Last Updated ( Sunday, 28 July 2013 21:12 )


Saturday, 27 July 2013

இன மற்றும் மத வெறி நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு அணிதிரள்வோம்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 27 July 2013 16:52
அரசியல்_சமூகம் / விருந்தினர்

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடைபெற்று வந்து போரானது முடிவுற்ற பின்னர் நான்கு ஆண்டுகள் இன்று கடந்து விட்டன.


இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் சமீபத்தில் நடாத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின் போது நடந்தேறிய தாக்குதல் நிகழ்வுகள் வெளிப்படுத்துவது எதுவெனில், இலங்கையின் உள்நாட்டுப் போர் விளைவித்த வரலாற்றில் என்றுமே ஏற்பட்டிராத அழிவுகளையும், மனித அவலங்களையும், கொடூரங்களையும் இந்தச் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களிலுள்ள இனவெறிச்சக்திகள் மறந்து இனவாத தீயினைத் தூண்டும் போக்கில் பயணிக்கின்றனர் என்பதேயாகும். இனியும் எந்தவொரு நீண்ட பேரழிவானது எழாமல் தடுக்கும் வகையில், சிஙகள மற்றும் தமிழ் என இருபுறமும் உள்ள இனவெறிச் சக்திகளை நாங்கள் தோற்கடித்தாக வேண்டும்.

Read more...
Last Updated ( Saturday, 27 July 2013 16:57 )


Wednesday, 24 July 2013

சின்னவன்............................ PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 24 July 2013 15:08
அரசியல்_சமூகம் / கனகமணி

வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்திலிருந்து தெற்காக நூறு மீர்ற்றர் நடந்தால் கணேசுப் பரியாரியார் வீடு. கணேசுப் பரியாரியார் மட்டக்களப்பு பிரதேசத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஆயுள்வேத வைத்தியத்தில் கைதேர்ந்தவர்களில் ஒருவர். அந்தப் பிரதேசத்தில் இருக்கும் சின்னப்பிள்ளைக்கும் அவரை தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

Read more...
Last Updated ( Wednesday, 24 July 2013 15:11 )


Tuesday, 23 July 2013

முழுத்தேசத்தின் கரிநாள்!!!! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 23 July 2013 13:30
அரசியல்_சமூகம் / வேலன்

30 வருடங்கள் கடந்து விட்டன எத்தனையோ உயர்ப்பலிகளையும், உடமைகளை இழந்தும், லட்சக்கணக்கானவர்கள் புலம்பெயர்ந்தும் வாழ்கின்றார்கள். இத்தனை ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்தும் எந்தவொரு விடிவும் கிட்டாது தமிழ் தேசம் இருக்கின்றது. தமிழ் மக்களோ அல்லது மற்றையப் பகுதி இனமக்களோ சுயநிர்ணயத்தினை இழந்து தான் வாழ்கின்றார்கள். இலங்கை மக்களை அன்னிய சக்திகளின், உள்நாட்டு ஆட்சியார்களினால் ஆட்டிவிக்கப்படுகின்றார்கள். முழு இலங்கையின் உற்பத்தியே வெளிநாட்டின் சந்தையை நோக்கியதாகவும், வெளிநாட்டவர்களின் பொருளாதார நலனும் உள்நாட்டு மாபியா அரசியல் சக்திகளின் முதலீடுகளுக்கும் உட்பட்டு இருக்கின்ற வேளையில் தான் 30 வருட சிறைக்கொலை, இனக்கலவரம் நினைவில் கொள்ளப்படுகின்றது.

Read more...
Last Updated ( Tuesday, 23 July 2013 13:40 )


Monday, 22 July 2013

வலுவிழந்தவர்களாக மாறிச் செல்லும் தமிழ் சமூகம்..! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 22 July 2013 15:00
அரசியல்_சமூகம் / தேவன்

இலங்கை மக்கள் மதமாற்றம், ஆங்கிலக் கல்வி என்று ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காலம் இலங்கை காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்த காலம். ஆனால் இலங்கை மக்கள் கல்வியில் சிறப்புற வளர்ச்சி கண்ட காலமும் அந்த காலனித்துவ காலமே. இலங்கை முழுவதும் காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் யாழ்ப்பாண மேட்டுக்குடி சமூகம் கல்விக்கு கூடிய முக்கியத்துவம் வழங்கியிருந்தது. அந்த காலகட்டத்தில் அங்கு தான் கூடுதலான பாடசாலைகளும் நிறுவப்பட்டன. அந்த மக்கள் கல்வியினை நம்பி வாழ வேண்டிய தேவையும், சூழ்நிலையும் யாழ்ப்பாண சமூகத்தில் பெரியளவில் காணப்பட்டது. அல்லது அந்த மக்கள் கூலிகளாக வாழ வேண்டிய நிர்ப்பந்தமே அங்கிருந்தது.

Read more...
Last Updated ( Monday, 22 July 2013 15:02 )


Thursday, 18 July 2013

இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் கொடுங்கள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 18 July 2013 14:35
அரசியல்_சமூகம் / விஜயகுமாரன்

செக்கல் பொழுதின் மையிருட்டில் மனமெல்லாம் கிளுகிளுக்க தவநாதன், வனிதா வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தார். வாசல்படலையில் பூவரசம் குழைகள் கட்டியிருந்தன. வனிதாவின் புருசன் ஜெயக்குமார் வீட்டில் இருக்கிறார் என்பதன் சிக்னல் அது. ஏமாற்றத்தோடு வீடு திரும்பினார். பிறகொரு நாளில் படலையில் கட்டியிருந்த பூவரசம் குழையை ஆடு ஒன்று கடித்து தின்று விட்டது. காய்ஞ்ச மாடு கம்பிலே விழுந்தது போல தவநாதன் வீட்டிற்குள்ளே பாய்ந்தார். இண்டைக்கு இவற்றை முறையில்லையே இவரேன் வாறார் எண்டு யோசித்த வனிதா நிலைமையை விளங்கிக் கொண்டு கள்ளன், கள்ளன் எண்டு கத்தினா. கிழுவையை கடிச்சு, பூவரசை கடிச்சு கடைசியில் என்னையே கடிச்சிட்டுதே இந்த நாசமாப் போன ஆடு என்றபடி கவடு கிழிய வேலி பாய்ந்தார் தவநாதன். அப்பாவி ஜெயக்குமார் வீட்டிற்குள்ளே கள்ளன் வந்திட்டான் என்று அயல்சனங்களிற்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அயல் வீட்டுக்காரர்களிற்கு வந்த கள்ளன் யாரென்று விளங்கி விட்டுது. அன்றையிலேயிருந்து பூவரசங்குழை தவநாதனோடு ஒட்டிக் கொண்டு பூவரசங்குழை தவநாதன் என்றாகியது.

Read more...
Last Updated ( Thursday, 18 July 2013 14:41 )


Thursday, 11 July 2013

என்.ஜி.ஓ நாச்சியப்பனின் “மனிதஉரிமை” அவதாரமும் புலம்பெயர் ‘தலைவர்களின்’ கோவணத்தை கழட்டிய ‘இந்தி’ய அரசும்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 11 July 2013 07:07
அரசியல்_சமூகம் / விருந்தினர்

கடந்த மாதம் ஜீன் 14ம் மற்றும் 15ம் திகதிகளில் இந்திய அரசின் உளவுத்துறையின் அணுசரணையுடன் உருவாக்கப்பட்ட 'மனித உரிமைகள், உலக பொருளாதார வளர்ச்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு' (Parliamentarian Forum On Human Rights – FOR GLOBAL DEVELOPMENT –PFHRGD) என்ற என்.ஜி.ஓ (NGO) மாநாட்டில், தமிழக பாராளுமன்ற (மேலவை) உறுப்பினர் சுதர்சன் நாச்சியப்பன் தலைமையில் புலம்பெயர் "தமிழர்" தலைவர்களும் இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களும் பங்கெடுத்துக் கொண்டது அனைவருக்கும் நினைவிருக்கக் கூடும்.

Read more...
Last Updated ( Thursday, 11 July 2013 07:11 )


Tuesday, 09 July 2013

தமிழனாவது, மசிராவது சாதி தாண்டா எல்லாம்!! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 09 July 2013 16:00
அரசியல்_சமூகம் / விஜயகுமாரன்

அவன் மனிதன் இல்லை, தமிழன் இல்லை. அவன் பறையன், ஏழை. அவனிற்கு காதல் வர வேண்டுமென்றால் இன்னொரு பறைச்சி மீது தான் காதல் வர வேண்டும். அவள் வன்னியப்பெண். அவளிற்கு மனதில் காதல் அரும்பும் போது அவள் தனது காதலனின் சாதிச்சான்றிதழை வாங்கிப் பார்க்க வேண்டும். அவன் வன்னியனாக இருக்க வேண்டும். வேறு உயர்சாதி என்றாலும் காதலிக்கலாம். ஆனால் தப்பித்தவறியும் தாழ்த்தப்பட்டவனாக இருக்கக் கூடாது. மீறி இளவரசன், திவ்யா போல திருமணம் செய்து கொண்டால் தந்தை தற்கொலைக்கு தள்ளப்படுவார். தாய் மன உளைச்சலில் நோயாளி ஆக்கப்படுவார். மணப்பெண் தந்தையின்றி தவிக்கும் தன் பெற்றெடுத்த தாயிற்காக காதலை, கண் நிறைந்த கணவனை துறப்பாள். இறுதியில் அவன் தன் உயிர் துறப்பான்.


ஜந்தறிவு கொண்டவை என்று மனிதனால் சொல்லப்படும் மிருகங்கள் பருவகாலங்களில் உறவு கொள்ளும் போது, அந்த ஜோடியின் உறவிற்குள் அடுத்த மிருகங்கள் மூக்கை நுழைப்பதில்லை. பிராமணச்சிங்கம், வன்னியச்சிங்கம், பறைச்சிங்கம் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. சிங்கமும், புலியும் உறவு கொண்டு லைகர் (LIGER) என்ற புதிய இனத்தையே உருவாக்கி இருக்கின்றன. ஆனால் கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்தகுடிக் கூட்டத்திற்கு காதலிக்க வேண்டுமாயின் சாதிவெறி நாய்களின் சங்கத்தில் அனுமதி பெற வேண்டும்.


காதலிப்பதற்கு, மணம் செய்வதற்கு இரு மனங்கள் தான் தேவை என்ற அடிப்படை உயிரியல் இந்த சாதிவெறி நாய்களின் தலைவனான மெத்தப் படித்த மேதாவி மருத்துவனிற்கு தெரியவில்லை. கறுப்புக்கண்ணாடியும், காற்சட்டையும் போட்டுக் கொண்டு தன் சாதி பெண்களை பள்ளனும், பறையனும் மயக்குகிறார்கள் என்று பெண்களை அது கேவலப்படுத்துகிறது. குச்சிமிட்டாயும், குருவிரொட்டியும் குடுத்து குழந்தைப்பிள்ளைகளை கூட்டிப் போகிறார்கள் என்று அது கூக்குரல் இடுகிறது.


இந்த லட்சணத்தில் இந்த பன்னாடைகள் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று இனத்திற்காகவும், மொழிக்காகவும், நாட்டிற்காகவும் உயிரையும் கொடுப்போம் என்று வீரவசனம் பேசுகின்றன. பல்லாயிரம் போராளிகள் பாடுபட்டு கொண்டு வந்த பகுத்தறிவும் சமுகநீதியும் தான் தங்களின் கொள்கையும் என்று பல்லைக் காட்டுகின்றன. இது பத்தாது என்று கார்ல் மார்க்சின் படத்தை வேறு மேடைகளில் வைத்து நாங்களும் பாட்டாளிகள் தான் என்று பம்முகின்றன. பெரியார் இருந்திருந்தால் செருப்பாலேயே இந்த வெங்காயங்களை வெளுத்திருப்பார். தமிழ்நாட்டு தமிழர்கள் இருவரை வாழவிடாமல் கொலை செய்த இந்த சாதிச்சாக்கடை பன்னிகள் தான் ஈழத்தமிழர்களின் தோழர்களாம். இலண்டன் வரை கூப்பிட்டு மாநாடு நடத்துகிறார்கள் இளிச்சவாய் ஈழத்தமிழர்கள். எஞ்சி இருக்கும் ஈழத்தமிழரில் எவராவது சாதி மாறி மணம் செய்தால் அங்கு வந்தும் கொலை செய்யக் கூடிய கொடியவர்கள் தான் இவர்கள். மகிந்து இனப்படுகொலையாளி என்றால் இவர்கள் சாதிப்படுகொலையாளிகள்.


சவுதியின் மதச்சட்டங்கள் பணக்கார வெள்ளை நாடுகளை சேர்ந்தவர்கள் குற்றம் செய்தால் தொட்டுக் கூட பார்ப்பதில்லை. ஏழைத்தொழிலாளர்கள் என்றால் ஏன் என்று கூட கேட்காமல் தலையை வெட்டும். அது போல இவர்களின் சாதிச்சட்டங்களும் இவர்களின் சாதிப்பெண்கள் வேறு உயர்சாதி ஆண்களை கலியாணம் கட்டும் போது சத்தம் போடாமல் வாயையும், மற்றதையும் பொத்திக் கொள்ளும்.


கொப்புக்கு கொப்பு பாயும் கொரில்லா போல தமிழ்குடிதாங்கி மருத்துவர் அய்யா தேர்தலிற்கு தேர்தல் கட்சி தாவி அரசியல் கூட்டுக்கலவி செய்யும் போது சாதியோ, இனமோ பார்ப்பதில்லை. அது நான் பார்ப்பனத்தி தான், என்னை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று பார்ப்பனியத்தின் நச்சுவேர்களை அறுத்தெறிந்த தமிழ் மண்ணிலேயே நின்று தம்பட்டம் அடிக்கும் ஜெயலலிதா என்றாலும் சரிதான், ஈழத்தமிழரின் இரத்தம் குடிக்கும் சோனியாவின் காங்கிரசு என்றாலும் சரிதான். மகனிற்கு மந்திரிப்பதவி கொடுத்தால் போதும்.


இளவரசனின் இரத்தம் குடித்த பின்னும் இவர்களின் சாதிவெறி சற்றும் குறையவில்லை. வேலை இல்லாதவனிற்கு காதல் எதற்கு, அறியாப் பருவத்தில் ஆசைப்பட்டால் இப்படித்தான், வாழ்க்கை வீணாகி விடக்கூடாது என்ற அக்கறையில் தான் அய்யா அட்வைசுகளை அள்ளி விட்டார் என்று அகிம்சை பேசுகின்றன. நாய்களே, அவர்களின் வாழ்க்கையை தீர்மானிப்பதற்கு நீங்கள் யார்? வேலையில்லாத வன்னியர்கள் எவரும் காதலிக்கவில்லையா? இளவயதில் மணம் செய்து கொண்டதில்லையா? அப்போதெல்லாம் உங்களின் ஊத்தை வாய்கள் ஏன் ஊளையிடவில்லை.


அவன் மனிதன் இல்லை, தமிழன் இல்லை. அவன் பறையன், ஏழை. அவன் வன்னியப் பெண்ணை காதலிக்க கூடாது. அவர்கள் வன்னியர்கள். உயர்ந்த சாதி. வன்னிய குல சத்திரியர்கள். ஏனெனில் அவர்களின் ஆண்குறிகளில் சாதி பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருக்கிறது. ஆளுக்கொரு சாதி, சாதிக்கொரு சங்கம், சங்கத்தை வைத்து கட்சி, கட்சியை வைத்து மக்களை கொள்ளயடிப்பது, சாதிப்பெருமை பேசி கொலை செய்வது தான் ஆயிரம், ஆயிரம் மனிதர்கள் தம் உழைப்பையும், உயிரையும் கொடுத்து போரிட்ட தமிழ்மண்ணின் கையறுநிலையா? பகுத்தறிவும், சமத்துவமும் சேர்ந்து இவர்களிற்கு பாடை கட்ட வேண்டும்.

Read more...
Last Updated ( Wednesday, 10 July 2013 06:55 )


Friday, 05 July 2013

சாதிய பயங்கரவாதத்துக்கு பலியானது இளவரசன் மட்டுமல்ல காதலும் தான் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 05 July 2013 11:39
பி.இரயாகரன் - சமர் / 2013

சாதி வெறியார்களின் பயங்கரவாதம் இளவரசனைக் கொன்று இருக்கிறது. திவியா நடைப்பிணமாகப்பட்டு இருக்கின்றாள.; தன் தந்தை போல், தன் காதலன் போல், நாளை அவளும் கூடக் கொல்லப்படலாம். அவர்கள் தங்கள் விரும்பிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை சாதியம் தடுத்து நிறுத்தி இருக்கின்றது. தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மாணிக்க முடியாதவாறும், மரணித்து போகுமாறு சாதிய வக்கிரமும், சாதியப் பயங்கரவாதமும் கோரியிருக்கின்றது.

Read more...
Last Updated ( Friday, 05 July 2013 18:15 )

Page 1 of 2