Thu05022024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
October 2012

Tuesday, 30 October 2012

சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய முடியுமா? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 30 October 2012 09:50
பி.இரயாகரன் - சமர் / 2012

சுயநிர்ணயத்தை ஏற்காதவர்களுடன் ஒரேயொரு அடிப்படையான நிபந்தனையுடன் இணைந்து போராட முடியும். இனவொடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் போராடுபவர்களாக இருந்தால், அவர்கள் அப் போராட்டத்தை நடைமுறையில் முன்னெடுப்பவர்களாக இருந்தால், முதலில் நாம் ஆதரிக்க வேண்டும். வர்க்கக் கண்ணோட்டத்தில் இதை அவர்கள் முன்வைத்து செயல்படுத்துபவர்களாயின், இணைந்து போராடமுடியும். இதை நிராகரிப்பதற்கு என முன்வைக்கப்படும் எந்த அரசியல் தர்க்கமும் அடிப்படையற்றவை.

Read more...
Last Updated ( Tuesday, 30 October 2012 10:54 )


Monday, 29 October 2012

"சுயநிர்ணயம்" பேசும் சந்தர்ப்பவாதிகளை அரசியல்ரீதியாக இனம்காணல் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 29 October 2012 19:09
பி.இரயாகரன் - சமர் / 2012

கொள்கையளவில் "சுயநிர்ணயத்தை" ஏற்றுக்கொள்வதன் மூலம் தாங்கள் சரியான அரசியலைக் கொண்டிருப்பதாகக் காட்டும் சந்தர்ப்பவாதிகளின் கோட்பாட்டு அடித்தளம், அரசியல்ரீதியாக எப்படிப்பட்டது? ஒடுக்குமுறையாளன் முதல் பிரிவினைவாதி வரை "சுயநிர்ணயத்தை" தனக்குச் சார்பாக விளக்கி, செயல்படுவதைக் காண்கின்றோம். "சுயநிர்ணயத்தை" முன்னிறுத்தி அரசியலை குறுக்கிவிடுகின்ற செயல்பாடுகள், அரசியல் அரங்கில் அரங்கேறுகின்றது. "சுயநிர்ணயத்தை" ஏற்றுக்கொள்ளாதவர்களின் அரசியல் செயற்பாடு தவறானது என்று குறுக்கிக் காட்டிக்கொள்வதன் மூலம், தங்களைச் சரியான கோட்பாட்டை கொண்டு செயல்படுபவர்களாக நிறுவ முனையும் அரசியல் போக்கு இன்று முனைப்புப் பெற்றிருக்கின்றது.

Read more...
Last Updated ( Monday, 29 October 2012 19:15 )

தொடரும் இனவாத, மதவாத தாக்குதல் முறியடிக்க, ஒரு அணியில் அணிதிரள்வோம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 29 October 2012 14:54
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

அனுராதபுரத்தில் உள்ள மல்வத்து ஓய சிங்க கனுவ பள்ளிவாசலும், மதரஸா மதக்கல்வி நிறுவனமும் 26.10.2012 இரவு 10 மணியளவில் இன-மதவாத வெறிக்கும்பலால் தீ வைக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை இனங்கள், சிறுபான்மை மதங்கள் மீது வன்முறை சார்ந்த பேரினவாதிகளின் தாக்குதல்கள், ஒடுக்குமுறைகள் மகிந்த பாசிச அரசின் ஆசியுடன் தொடர்கின்றன. சிறுபான்மை இனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் மீதான தொடர்ச்சியான அடக்குமுறை மற்றும் தாக்குதல்கள் மூலம் இனங்களிற்கு இடையிலும், மதங்களுக்கு இடையிலும் பிளவை ஏற்படுத்தும், அரசினது தொடர்ச்சியான செயற்பாடாகவே இது உள்ளது.

Read more...
Last Updated ( Tuesday, 30 October 2012 10:53 )


Saturday, 27 October 2012

சோவியத்யூனியனில் குருச்சேவ் நடத்திய முதலாளித்துவ மீட்சி - இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் - 7 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 27 October 2012 17:01
பி.இரயாகரன் - சமர் / 2012

ஸ்டாலின் அவதூறுகளை பொழிவோர் அனைவரும், குருச்சேவ் நடத்தியதை முதலாளித்துவ மீட்சியாக‌ ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக குருச்சேவ் சோசலித்தின் பாதையை ஸ்டாலினிடம் இருந்து மீட்டு எடுத்தார் என்பதே, அவர்களின் அடிப்படையான கோட்பாடாகும். இதையே ஏகாதிபத்தியம் முதல் டிராட்ஸ்கியவாதிகள் வரை கைக்கொள்ளும் அடிப்படையான அரசியல் வரையறையாகும். ஆனால் உள்ளிருந்து முதலாளித்துவ மீட்சிகான அபாயத்தை லெனின் தீர்க்க தரிசனமாக விளக்கும் போது, “சிறு உடமையாளர்கள் நமது கட்சிக்குள் மேலாதிக்கம் பெறுவதற்கு, அதுவும் மிக விரைவாகப் பெறுவதற்கு எதிராக நமது கட்சிக்குள்ள பாட்டாளி வர்க்கத்தன்மை என்பது தன்னைச் சிறிதும் பாதுகாத்துக் கொள்ளாது என்று, சாதுர்யமுள்ள வெண்படையினர் அனைவரும் நிச்சயமாக நம்புகின்றனர்” என்றார். மீட்சிக்கான வர்க்க கூறுகள் தொடர்ச்சியாக உருவாவது, வர்க்க அமைப்பில் தவிர்க்க முடியாத அரசியல் நிகழ்ச்சி நிரலாகவே உள்ளது.

Read more...
Last Updated ( Saturday, 27 October 2012 17:05 )


Thursday, 25 October 2012

13வது திருத்தச் சட்டத்தை நீக்க முனைவதன் மூலம், இனவக்கியத்தை மேலும் சிதைக்க முனைகின்றனர் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 25 October 2012 14:04
பி.இரயாகரன் - சமர் / 2012

13வது திருத்தச்சட்டம் இனப்பிரச்சனைக்குரிய தீர்வல்ல. அதேநேரம் தீர்வல்லாத இந்த சட்டத்தை நீக்குவதையும் நாம் எதிர்க்கின்றோம். இதை நீக்குவதன் மூலம் இனங்களுக்கு இடையிலான இனநல்லுறவை சிதைப்பதுடன், இனவொடுக்குமுறையை தீவிரமாக்கவே அரசு முனைகின்றது. இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு ஏற்படுவதை தடுப்பதன் மூலம், மக்களை இன முரண்பாட்டுக்குள் தள்ளி அவர்கள் முரண்பட்டுக்கொண்டு வாழ்வதையே அரசு விரும்புகின்றது. அதையே அரசு மக்களுக்கு தொடர்ந்தும் திணிக்க முனைகின்றது. யுத்தத்தின் பின் தொடர்ந்து மக்களை பிரித்தாள்வதை அடிப்படையாகக் கொண்டு, தீர்வு காண மறுக்கின்றது. இந்த அடிப்படையில் இனங்கள் கொண்டிருந்த உரிமைகளையும் பறிக்கின்றது.

Read more...
Last Updated ( Thursday, 25 October 2012 14:07 )


Tuesday, 23 October 2012

முன்னிலை சோசலிசக் கட்சியும் புதிய திசைகளும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 23 October 2012 05:42
அரசியல்_சமூகம் / விருந்தினர்

சம உரிமை இயக்கம் என்கின்ற ஒரு முன்னணி அமைப்பினூடாக, இலங்கையில்இனஒடுக்குமுறைக்கும், இனவாதத்திற்கும் எதிராக போராடுவது, இனங்களுக்கிடையில் ஓர் ஐக்கியத்தை உருவாக்குவதுடன், சமத்துவமின்மையை உருவாக்கிய சமூக அமைப்பு முறையை தூக்கி எறிந்து புதியசமூக அமைப்புமுறையை உருவாக்குவதன் மூலம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளைஉண்மையில் வென்றெடுப்பது என்னும் செயல் திட்டத்தினை முன்னிலை சோசலிச கட்சி முன்வைத்துள்ளது.

Read more...
Last Updated ( Tuesday, 23 October 2012 05:46 )


Monday, 22 October 2012

தேவனின் திருச்சபை! மாஃபியாக்களின் கருப்பை!! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 22 October 2012 14:54
புதிய கலாச்சாரம் / 2012

"மூடப்பட்ட அந்தக் கழிவறையிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரலும், அதனுடன் ஒரு பெண்ணின் விசும்பலும் கேட்டது. நாங்கள் அந்த அறையின் கதவை உடைத்துத் திறந்த போது கண்ட காட்சி இதயத்தை நொறுக்குவதாய் இருந்தது. ஒரு கன்னியாஸ்திரி தனக்கு அப்போது தான் பிறந்திருந்த பச்சைக் குழந்தையை கழிவறையின் பீங்கான் கோப்பைக்குள்ளே திணித்துக் கொண்டிருந்தாள். குழந்தையின் கால்களிரண்டும் கோப்பையின் வெளியே துடித்துக் கொண்டிருந்தன.

Read more...
Last Updated ( Monday, 22 October 2012 15:03 )


Sunday, 21 October 2012

மக்கள் போராட்டத்தை நடத்த நாம் தயாராகிவிட்டோமா? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 21 October 2012 13:26
பி.இரயாகரன் - சமர் / 2012

எந்த வகையில்? எம்மையும், எம் நடத்தையையும் மாற்றினோமா? எம் எழுத்தை, எம் எழுத்துமுறையை மாற்றினோமா? எந்த வகையில், நாம் எம்மில் மாறி இருக்கின்றோம். மக்கள் போராட்ட அனுபவம் தான் உண்டா? இல்லை. எம்மில் இருந்து நாங்கள் மாற்றத்தை தொடங்காமல், மக்களை அணிதிரட்ட முடியாது. இதைப்பற்றி பேசுவது, எழுதுவது முதல் தங்களை இதற்குள் அடையாளம் காட்டுவது வரையான வரையறைக்குள், இதை முடக்கி பார்க்கின்ற, காட்டுகின்ற எல்லைக்குள் இது பேசப்படும் பொருளாகவே மக்கள் போராட்டம் இருக்கின்றது.

Read more...
Last Updated ( Sunday, 21 October 2012 13:30 )


Saturday, 20 October 2012

சிங்கள மக்களுடன் சேர்ந்து போராட நாங்கள் தயாராக இருக்கின்றோமா? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 20 October 2012 08:45
பி.இரயாகரன் - சமர் / 2012

சிங்கள மக்களுடன் இணைந்து போராடுவதையும், அவர்கள் தமிழ் மக்களுக்காக போராட முற்படுவதையும், பலரும் தங்கள் தங்கள் நிலை அவர்களால் அங்கீகரிக்கப்படுதல் என்ற குறுகிய பார்வையூடாக அணுகுகின்றனர். நாங்கள் சரியாக தான் இருந்தோம், இருக்கின்றோம், அவர்கள் தான் தவறாக இருந்ததாக கருதிக்கொண்டு, காட்டிக்கொண்டு அணுக முற்படுகின்றனர்.

Read more...
Last Updated ( Saturday, 20 October 2012 08:49 )


Thursday, 18 October 2012

இன்று வரை தொடரும் ஸ்டாலின் அவதூறின் அரசியல் எது? - இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 6 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 18 October 2012 12:04
பி.இரயாகரன் - சமர் / 2012

டிராட்ஸ்கிகள் தமது சொந்த அரசியலையே, ஸ்டாலினின் அவதூறுகளில் இருந்துதான் கட்டிய‌மைக்கின்றனர். அவர்களுக்கு இதைவிட வேறு வழியிருப்பதில்லை. இதை மூடிமறைக்க சொற்களில் “ஸ்டாலினை வரலாற்றுப் போக்குகள், அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் வைத்து புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, தனித்தனித் சம்பவங்களைப் பிரித்தெடுத்து நோக்குவதும் அதனடிப்படையில் விளக்கவதும் மார்க்சியமல்ல” என்ற கூறியே, அவதூறுகளை தொகுத்து வெளியிடுகின்றனர். இந்த தொகுப்பு என்பது அரசியலற்ற வெற்று வேட்டுகளின், எதிர்புரட்சியில் கொல்லப்பட்டவர்களின் பட்டியலைக் கொண்டு தூற்றப்படுகிறது. இங்கு தனிதனிச் சம்பவங்களை அல்ல என்ற கூறிய போதும், தனி தனி சம்பவங்களையே அவதூறின் தொகுப்பாக முன்வைக்கிறார்கள். அதிகாரம் என்றால் என்ன என்ற அடிப்படை அரசியலைக் கூட விவாதிக்க வக்கற்றவர்கள், அவதூறுகளின் தொகுப்பே மார்க்சியம் என்கின்றனர். எந்தவிதமான அரசியல் அடிப்படையுமற்ற பட்டியலைக் கொண்டு ஏகாதிபத்தியம் எதைச் செய்கின்றதோ, அதை அப்படியே டிராட்ஸ்கிகளும் காவடி எடுக்கின்றனர். இதைத் தான் நாம் மேலே டிட்டோவின் முதலாளித்துவ மீட்சி சார்ந்த போக்குக்கு எதிரான ஸ்டாலின் நிலையையும், முதலாளித்துவ மீட்சிக்கு சார்பான டிராட்ஸ்கிகள் நிலையையும் ஓப்பிட்டு ஆராய்ந்தோம். “ஸ்டாலினை வரலாற்றுப் போக்குகள், அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் வைத்து புரிந்து கொள்ளவேண்டுமே தவிர” என்று கூறி, தனிச் தனி சம்பவகளால் தொகுக்கப்பட்டு, அவை அவதூற்றல் நிரப்பபட்டுள்ளது. ஈராக் ஆக்கிரமிப்பை அமெரிக்கா  நியாயப்படுத்த எதை எல்லாம் செய்ததோ, அதுபோன்றே டிராட்ஸ்கிகள் சமகாலம் வரை  செய்கின்றனர்.

Read more...
Last Updated ( Thursday, 18 October 2012 12:07 )

Page 1 of 3