Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
February 2012

Tuesday, 28 February 2012

புலிகள் பாசிச இயக்கமல்லவாம்! வெறும் ஜனநாயக மறுப்பு இயக்கமாம்!! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 28 February 2012 21:50
பி.இரயாகரன் - சமர் / 2012

பாசிட்டுக்கள் மீண்டும் மூடிமறைத்து களமிறங்குகின்றனர். 1980 களில் வர்க்கரீதியான சமூக விடுதலையைப் பேசியபடி தான், பாசிசத்தை புலிகள் நிறுவினர். பார்க்க "சோசலிசத் தமிழீழம் - விடுதலைப்புலிகள் இயக்கமும் தேசிய விடுதலைப் போராட்டமும்" என்ற புலிகள் முன்வைத்த அரசியல் அறிக்கையை.

ஒட்டுமொத்த மக்களையும் மோசடி செய்யாமல் பாசிசம் வெற்றி பெறுவதில்லை. இன்று புலிகள் பாசிச இயக்கமல்ல என்று கூறுவதும் இந்த அரசியல் அடிப்படையில் தான். மீண்டும் புலி அரசியலை நிறுவ, அரசியல் மோசடியில் இறங்குகின்றனர்.

Read more...
Last Updated ( Tuesday, 28 February 2012 22:26 )

நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! – (தொடர் : 02) PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 28 February 2012 07:12
அரசியல்_சமூகம் / மாணிக்கம்

பனிப் புகார்
கும்மிய இருளுக்குள்
அதி காலை
கிடக்கின்ற வேளையிலே..,

Read more...


Sunday, 26 February 2012

அமெரிக்கா – புலி – அரசு எதற்காக ஜெனிவாவில் கூடுகின்றனர்? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 26 February 2012 13:12
பி.இரயாகரன் - சமர் / 2012

மனிதவுரிமையை நிலைநாட்டவா? தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்கு தீர்வு காணவா? தமிழ் மக்களின் மீதான குற்றங்களுக்கு நீதி வழங்கவா? ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவா? தேசத்தின் சுயாதிபத்தியத்தை பாதுகாக்கவா? சொல்லுங்கள்? இதனால் எதற்காவது நியாயம் கிடைக்குமா? இல்லை நியாயம் கிடைக்கும் என்று கூறுகின்ற, காட்டுகின்ற அனைத்தும், ஏன் இந்த மோசடியை அம்பலப்படுத்தாத அனைத்தும் பொய்யானது புரட்டுத்தனமானது. இதை ஒட்டுமொத்தமாக முன்வைத்துக் கோராத, போராடாத அனைத்தும் மோசடியானது.

Read more...


Saturday, 25 February 2012

புலம்பெயர் தேசங்களிலும், தாயகத்திலும் அரங்கேறும் இந்திய கைக்கூலிகளின் அரசியல் நாடகங்கள் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 25 February 2012 21:50
அரசியல்_சமூகம் / பரமன்

1

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் வந்த சில மாதங்களின் பின் "வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு" என்ற தலைப்பில் காலச்சுவடு ஒரு கட்டுரையை வெளியிட்டது. அக்கட்டுரை பற்றி எழுதிய தோழர் இரயாகரன் அவர்கள், காலச்சுவட்டில் வெளிவந்த கட்டுரை முள்ளிவாய்க்காலில் இருந்து இறுதி யுத்தத்தின் பின் வெளியேறி அரச இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டவரால் எழுதப்படவில்லை என் விவாதித்தார்.

Read more...
Last Updated ( Friday, 02 March 2012 17:29 )


Friday, 24 February 2012

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 45 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 24 February 2012 18:34
அரசியல்_சமூகம் / நேசன்

"தமிழீழ விடுதலைப் போராட்டம்" குறித்து செயற்குழுவுக்குள் ஆரம்பித்த விவாதம்

இலங்கை அரசுக்கும் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குமிடையில் பூட்டான் தலைநகர் திம்புவில் நடைபெற்றுக்கொண்டிருந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றிருந்தது. ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை இனவாத அரசு வடக்கு-கிழக்கு மக்கள் மீதான போருக்குத் தயாராகிக் கொண்டிருக்க, ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கிடையிலானதும், இயக்கங்களுக்குள்ளானதுமான முரண்பாடுகளும் மோதல்களும் - ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள்ளே காணப்பட்ட அரசியல் வறுமை காரணமாக தோற்றம் பெற்றிருந்த முரண்பாடுகளும் மோதல்களும் - வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.

Read more...
Last Updated ( Friday, 24 February 2012 19:09 )


Thursday, 23 February 2012

நீங்களெல்லாம் ஐந்தாம் படை என்று குற்றம்சாட்டிய புலிகள் - (வதைமுகாமில் நான் : பாகம் - 45) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 23 February 2012 13:31
பி.இரயாகரன் - சமர் / 2012

குறிப்பு : ஐந்தாம் படை பற்றி கேள்வி கேட்டு, அதைப் பற்றி விளக்கமும் தந்தார்.

விளக்கம் : நீங்கள் எல்லாம் ஐந்தாம் படை என்று மிரட்டியதுடன், கைக்கூலிகள் என்றார். யாருடைய கைக்கூலிகள் என்றதை மட்டும் அவர்கள் சொல்லவில்லை. அதாவது நாங்கள் மக்களின் கைக்கூலிகள் என்பதால், அதை மட்டும் அவர் சொல்லவில்லை. மக்களின் விடுதலையை நேசிப்பது கைக்கூலித்தனம் என, புலிகளின் பாசிச அகராதி கூறுகின்றது. மக்கள் நிலவும் சமுதாயத்தில் எதிர்கொள்வது, வெறும் இனவாத ஒடுக்குமுறையை மட்டுமல்ல. சாதியம், ஆணாதிக்கம், சுரண்டல், பிரதேசவாதம் என்று பரந்த தளத்தில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். இதற்கு எதிராக போராடுவது, கைக்கூலித்தனம் என்று தான் வலதுசாரிய புலிகளின் பாசிச அகராதி கூறுகின்றது. தாம் மட்டும் அரசுக்கு எதிராக போராடுவதையே, விடுதலைப் போராட்டம் என்கின்றனர். சாதியத்தை, ஆணாதிக்கத்தை, வர்க்க ஒடுக்கமுறையை எதிர்த்து போராடுவது, ஐந்தாம் படைக்குரிய செயல் என்றான். மக்களின் அடிப்படையான விடுதலைப் போராட்டம், விடுதலைப் புலிகள் சுரண்டி வாழும் பாசிச சொகுசு வாழ்க்கையை அழித்தொழிக்கும். அதனால் இதை ஐந்தாம் படைக்குரிய செயலாக வருணித்து, மக்களை நேசித்த தேசப் பற்றாளர்களை கொன்று ஒழித்தனர்.

Read more...
Last Updated ( Thursday, 23 February 2012 13:57 )


Tuesday, 21 February 2012

கொள்ளையடிக்க வழிகாட்டிய கடவுளே, வேதக் கடவுள்கள் - சாதியம் குறித்து பாகம் - 15 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 21 February 2012 18:17
பி.இரயாகரன் - சமர் / 2012

வேதமோ வேத-ஆரிய வரலாறாகும். இது அவர்கள் இந்தியாவில் நிலைபெறல் வரையிலான ஒரு காலத்தை உள்ளடக்கியதே.இது குறைந்தபட்சம் உழைத்து வாழும் மனித நாகரிகத்தை ஒரு சமூக வாழ்வாக கொண்ட, ஒரு சமூகத்தை அடிப்படையாகக் கொண்டவையல்ல.

Read more...
Last Updated ( Tuesday, 21 February 2012 18:22 )


Monday, 20 February 2012

அபலை…. PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 20 February 2012 20:52
அரசியல்_சமூகம் / நிலாதரன்

ஐயோ.ஐயோ.. ஏன் இந்த வாழ்க்கை…எனக்கு…     கடவுளே இந்த ஊரிலே வந்து வாழ்வதை விட நான் செத்துத் தொலைச்சிருக்கலாம். கேவலம்….  வெட்கம் விட்டு போய்ச் சரணடைந்தேனே..

Read more...


Saturday, 18 February 2012

உலகவங்கியும் அரசும் இணைந்து மக்களுக்கு எதிராக நடத்தும் பொருளாதார யுத்தம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 18 February 2012 11:12
பி.இரயாகரன் - சமர் / 2012

முழு இலங்கை மக்கள் மேலான யுத்தம் ஒன்றை அரசு தொடங்கி இருக்கின்றது. இந்த யுத்தத்துக்கு இன அடையாளம் கிடையாது. சாதி அடையாளம் கிடையாது. மத அடையாளம் கிடையாது. ஆண் பெண் பால் அடையாளம் கிடையாது. இப்படி எந்தக் குறுகிய அடையாளமும் கிடையாது. முழு மக்களையும் பாதிக்கும் இந்த யுத்தத்தின் விளைவுகளை அனுபவிப்பதில் மட்டும்தான், இந்த அடையாளங்களும் வேறுபாடு;களும் குறிப்பாக வேறுபடுகின்றது. இப்படி அரசு வர்க்கரீதியான யுத்தத்தை முழு மக்கள் மேலும் நடத்துகின்றது. இனவழிப்பு யுத்தத்தின் பின், அரசு முழு மக்கள் மேலான வர்க்க ரீதியான ஒரு யுத்தத்தை உலக வங்கியின் துணையுடன் தொடங்கி இருக்கின்றது. பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் முதல் இது யாரையும் விட்டு வைக்கவில்லை.

Read more...
Last Updated ( Saturday, 18 February 2012 11:27 )


Friday, 17 February 2012

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 44 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 17 February 2012 20:10
அரசியல்_சமூகம் / நேசன்

தளம் திரும்பவிருந்த சந்ததியார் சென்னையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்

உமாமகேஸ்வரனும் அவரால் தலைமை தாங்கி வழிநடத்தப்படும் புளொட்டின் செயற்பாடுகளிலும் உறுப்பினர்களிடையே தோன்றிவிட்டிருந்த அதிருப்தியும் உள்முரண்பாடுகளும் தளமாநாடு ஒன்றைக் கூட்டுவதை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. உமாமகேஸ்வரனின் உண்மையான சொரூபத்தையும் புளொட்டின் உண்மைநிலையையும் உணர்ந்து கொண்ட பலர் புளொட் செயற்பாடுகளிலிருந்து விலகிக் கொண்டிருந்தனர்.

எமது வெளியேற்றத்தின் பின் யாழ்ப்பாண மாவட்டப் பொறுப்பாளராக செயற்பட்டுக் கொண்டிருந்த வனிதா(சாந்தி) யாழ்ப்பாண மாவட்டப் பொறுப்பாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். வனிதாவின்(சாந்தி) பொறுப்புக்கு இந்தியாவில் இராணுவப்பயிற்சி முடித்து தளம் திரும்பிவந்திருந்த பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார். இராணுவப் பயிற்சி முடித்தவர்களை பொறுப்பாளர்களாக நியமிப்பதன் மூலம் புளொட்டை மீண்டும் ஒழுங்குபடுத்தி, புத்துயிரளித்து தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என உமாமகேஸ்வரனும் அவரது துதிபாடிகளும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

Read more...
Last Updated ( Friday, 17 February 2012 21:01 )

Page 1 of 5