Thu05092024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Friday, 26 April 2013
வடக்கு தேர்தலும் பாசிட்டுகளின் உத்தியும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 26 April 2013 12:11
பி.இரயாகரன் - சமர் / 2013

மக்கள் சுயமாக சிந்திக்கவும், செயற்படவும் கூடாது. இதுவே தேர்தல் நடக்கவுள்ள வடக்கில், அரசு கட்டமைத்துள்ள இராணுவப் பாசிசத்தின் வெட்டுமுகமாகும். இந்த நிலையில் வடக்கு தேர்தலில் தமிழ் மக்களை தோற்கடித்தல் மூலம், இலங்கையில் இனப்பிரச்சனையே இல்லையென்று உலகுக்கு அரசு காட்ட முற்படுகின்றனர். வடக்கில் தேர்தல் நடத்தாமல் தொடர்ந்து இருப்பது என்பதன் அர்த்தம், தமிழ் மக்களைக் கண்டு அஞ்சுவதும், தேர்தல் ஜனநாயகத்தையே கண்டு அஞ்சுவதும் தான். இந்த அரசின் பரிதாபகரமான இன்றைய அரசியலாகும்.

இந்த நிலையில் தேர்தலை வெல்வது என்ற அரசின் முடிவே, தேர்தல் ஜனநாயகத்தை மறுப்பதாகிவிட்டது. தேர்தல் மோசடியில் தொடங்கி மக்களை பிளப்பது வரையான, எல்லா மக்கள் விரோத செயற்பாட்டையும் கொண்டு தமிழ் மக்களை தேர்தலிலும் தோற்கடித்தல் என்பதே அரசின் செயல்தந்திரமாகும். யுத்தத்தில் வென்றவர்கள் தேர்தலில் வெல்வது பற்றிப் பேசுகின்றனர்.

Read more...
Last Updated ( Saturday, 27 April 2013 17:13 )

ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 9 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 26 April 2013 05:57
அரசியல்_சமூகம் / எல்லாளன்

பசியும் பசியைப் போக்க நாம் கையாண்ட தந்திரமும்

மீண்டும் எமது சாப்பாட்டு நிலைமைகள் (பிரிந்த பிறகு) நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுடனும் சம்பந்தப்பட்டிருந்தது. நாம் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் இன் பிரிவான ஈ.பி.ஐ.சி தகவல் நிலையத்திற்கு வாரத்திற்கு ஒரு தடவையாவது சென்று எமது தொடர்புகளை அவர்களுடன் வைத்திருந்தோம். ஈ.பி.ஐ.சிக்கு செல்லும்போது மத்தியான சாப்பாட்டு நேரம் பார்த்து செல்லத் தொடங்கினோம். அவர்கள் எம்மைக் கண்டவுடன் சாப்பிடச் சொல்லுவார்கள். அவர்களின் சாப்பாடு எமது நிலைமையை விட வசதியானது. மற்றும் அவர்களும் எமது நிலைமையை அறிந்து உதவி செய்தார்கள்.

ஒரு கட்டத்தில்  அவர்களும் கஸ்ரத்தில் கஞ்சி குடிக்கின்ற நிலையில் இருந்தனர். அதற்குப் பின் அவர்களை நாம் கஸ்ரப்படுத்தவில்லை. எமக்கு உதவி செய்த அரசியலுக்குச் சம்பந்தமில்லாத இந்தியாவில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். நகுலன் என்னுடன் ஏ.ஏல் படித்தவர். நிரஞ்சன் எனது ஊரைச் சேர்ந்த மாணவர். ரகு கல்லூரி அனுமதிக்காக காத்திருந்தவர். அவர்கள் எமது நிலைமையினை அறிந்து எமக்கு சாப்பாடு தந்தார்கள். தற்காலிகமாக தங்குமிட வசதிகளையும் செய்து தந்தார்கள். உதாரணமாக, சிலவேளைகளில் இலங்கை மாணவர்கள் தங்கி இருந்த இடங்களில் ஒன்றான நங்கநல்லூர், பழவந்தாங்கல் பிரதேசங்களுக்கு நாம் போகும்போது என்னுடன் படித்தவர்களோ ஊரவரோ என்னைக் கண்டால் தமது இருப்பிடத்திற்கு என்னைக் கூட்டிச் சென்று சாப்பிடச் சொல்வார்கள். ஆரம்பத்தில் இது தற்செயலான சம்பவமாக நடந்தது. என்றாலும் ஒரு கட்டத்தில் நானே அவ்வாறு சாப்பாட்டிற்காக அவர்களை சந்திக்கக் கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டேன்.

Read more...
Last Updated ( Saturday, 27 April 2013 09:42 )