Fri05102024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 10 April 2013
"சுயநிர்ணயக்" கோரிக்கை முன்வைக்கும் சந்தர்ப்பவாதிகளும் காரியவாதிகளும் (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 7) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 10 April 2013 13:17
பி.இரயாகரன் - சமர் / 2013

வர்க்க நடைமுறையற்ற சூழலில் "சுயநிர்ணயக்" கோரிக்கை என்பது தேசியவாதத்துக்கு உதவுவதே. மார்க்சியம் பேசிக்கொண்டு, வர்க்க நடைமுறையைக் கைக்கொள்ளாதவர்களின் அரசியல் இதைத்தான் செய்கின்றது. இதே அடிப்படையில் தான் மார்க்சியவாதிகள் அல்லாதவர்களும் "சுயநிர்ணயத்தைக்" கோருகின்றனர். மூடிமறைத்த தேசியவாத பிரிவினை அரசியலும், மார்க்சியத்துக்கு எதிரான அரசியலும், மூடிமறைத்த "சுயநிர்ணய" கோசத்துடன் அரங்கில் வருகின்றது. இதன் மூலம், இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான நடைமுறைப் போராட்டத்தை எதிர்க்கின்றனர். மார்க்சியவாதிகள் "சுயநிர்ணயத்தை" ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று, மார்க்சியவாதிகள் அல்லாதவர்கள் முன்வைக்கும் கோரிக்கை படுபிற்போக்கானது. மார்க்சியத்தை வர்க்க நடைமுறையுடன் ஏற்றுக்கொண்டவர்கள், சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ள கோருவதில் இருந்து, இது முற்றிலும் வேறுபட்டது, நேரெதிரானது.

Read more...
Last Updated ( Wednesday, 10 April 2013 13:21 )

இனங்களுக்கிடையேயான ஐக்கியமும் அதன் தேவையும் (40வது இலக்கிய சந்திப்பு -இலண்டன்) - ஒலி PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 10 April 2013 07:31
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இன்று இலங்கையில் நிலவும் இனமுரண்பாட்டை, மத முரண்பாட்டை எப்படிக் கையாள்வது என்ற கேள்விக்கு விடைகாணவேண்டும். நாங்களும் இனவாதியாக தொடர்வதா, மதவாதிகளாக இருப்பதா என்ற அடிப்படையான கேள்விக்கு, பகுத்தறிவுள்ள அனைவரும் சிந்திக்கவும், பதிலளிக்கவும் வேண்டும். தவறான கண்ணோட்டத்தையும், நடத்தைகளையும் மறுத்து, அதற்கு எதிராக வாழ்தலும் போராடுதலும், சுயவிசாரணை விமர்சனபூர்வமாக செய்வதும் தான், அடிப்படையான அரசியல் நேர்மையாகும். இந்தவகையில் சமூக விரோதம் கொண்ட இனவாதத்தை, சமூகம் சார்ந்து எப்படி எதிர்த்து நிற்கின்றோம் என்பதை நடைமுறையில் நிறுவியாகவேண்டும். இன்றுள்ள அரசியல் பணி இதுதான். இதைத்தான் இன்று சமவுரிமை இயக்கம் உங்கள் முன் நடைமுறையாகவும், நடைமுறையாக்கவும் கோருகின்றது.

Read more...
Last Updated ( Wednesday, 10 April 2013 07:35 )