Fri05032024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Tuesday, 19 June 2012
ஊடக தர்மங்கள் ! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 19 June 2012 20:34
அரசியல்_சமூகம் / கனகமணி

உலகெங்கும் பரந்து வாழும் பலவேறுபட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பணி மிகப்பெரியது. தனிமனித விருப்பு வெறுப்புக்களுக்கப்பால், ஊடகத்தின் அடிப்படை நியதிகளையும் விட்டு விலகாது ஒரு செய்திக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைப் பொறுத்து அதன் உள்ளடக்கத்தையும், தரவுகளையும் கொண்டு செல்வது ஊடகங்கள்தான்.  ஆனாலும், ஒரு சில ஊடகங்களைத் தவிர, பெரும்பாலான ஊடகங்கள் வியாபாரத்தையே நோக்கமாகக் கொண்டிருப்பதால்  போட்டி மனப்பான்மை தானாகவே வந்து விடுகிறது. அச்சு ஊடகங்கள் போன்று செய்தியை முந்தித் தருவது யார் என்று இன்றைய இணைய யுகத்தில் போட்டி போட முடியாது. ஆகவே அதிகமான தகவல்களையும், மேலதிக விபரங்களையும் யார் தருவது என்பதில் இணைய ஊடகங்கள் போட்டி போடுகின்றன.

Read more...
Last Updated ( Sunday, 24 June 2012 22:15 )

தமிழ் மக்களுக்காக சிங்கள மக்கள் போராட முடியுமா? இல்லை. - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 11 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 19 June 2012 08:59
பி.இரயாகரன் - சமர் / 2012

தமிழ் மக்கள் தமக்காக தாம் தான் போராடவேண்டும். சிங்கள மக்கள் இதற்கு ஆதரவாகவும், தமிழ்மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சிங்கள மக்களை அணிதிரட்டிப் போராட வேண்டும். இந்த நடைமுறைப் போராட்டம் தான், தமிழ் - சிங்கள மக்களுக்கு இடையில் இயல்பான அரசியல்ரீதியான ஒன்றிணைவை உருவாக்கும். இதைச் செய்யாது, சிங்கள புரட்சிகர சக்திகள் தமிழ் மக்களுக்காக தாம் முன்னின்று போராட முற்படுகின்றனர். இது தவறானது. தமிழ் இயக்கங்கள் தமிழ் மக்களுக்காகப் போராடியது போல், ஜே.வி.பி சிங்கள மக்களுக்காக போராடியது போல்தான் இதுவும். மக்கள் தாம் தமக்காக போராடுவதை இது தடுத்து நிறுத்துகின்றது.

Read more...
Last Updated ( Tuesday, 19 June 2012 09:09 )