Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 16 February 2012
குளோபல் பார்மாடெக் நிர்வாகத்தின் ஒடுக்குமுறை! ஒத்தூதும் தமிழக அரசு !! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 16 February 2012 13:36
புதிய ஜனநாயகம் / 2012

ஓசூர் சிப்காட்1 பகுதியில் இயங்கிவரும் குளோபல் பார்மாடெக் எனும் ஊசி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் 196 பேர் உள்ளிட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள் என சுமார் 600 பேர் வரை பணிபுரிகின்றனர். கடந்த 16 ஆண்டுகளாகத் தொழிலாளர்களுக்குச் சட்டப்படி ஊதியமோ, சீருடையோ, போனசோ தரமறுத்துக் கொத்தடிமைகளாக நடத்தி வருகிறது, இந்நிறுவனம். பல்வேறு சங்கங்களில் திரண்டு நீண்டகாலமாகப் போராடியும் பலனில்லாத நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கம் என்ற பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்கத்தில் சங்கத்தில் பெரும்பான்மை தொழிலாளர்கள் அணிதிரண்டு, ஊதிய உயர்வு கோரியும் நிர்வாகத்தின் அடக்குமுறை  பழிவாங்கலுக்கு எதிராகவும் போர்க்குணத்துடன் போராடி வருகின்றனர்.

Read more...

ஸ்பெக்ட்ரம் ஊழல் தீர்ப்பு: நுனி இது, அடி எது? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 16 February 2012 13:35
புதிய ஜனநாயகம் / 2012

முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவால், ‘முதலில் வருபவர்க்கு முதலில்’ என்ற அடிப்படையில் 2008 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 2 ஜி அலைக்கற்றை உரிமங்கள், தன்னிச்சையாகவும் நேர்மையற்ற முறையிலும் பொதுநலனுக்கு விரோதமாகவும் வழங்கப்பட்டிருப்பதால், அவற்றை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த உரிமங்களைக் காட்டித் தமது நிறுவனங்களின் பங்குகளை விற்றுப் பல நூறு கோடி ரூபாய் ஆதாயமடைந்த எடிசாலட் டிபி, டெலினார், டாடா டோகோமோ ஆகிய நிறுவனங்களுக்கு தலா 5 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

Read more...

மாமி-மாட்டுக்கறி-நக்கீரன்: பார்ப்பனக் கும்பலின் தீண்டாமை வெறி! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 16 February 2012 13:34
புதிய ஜனநாயகம் / 2012

ஜெயலலிதாவை அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆர். நியமித்த போது கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், பொன்னையன் ஆகியோர், ஜெயலலிதா பார்ப்பனர் என்பதைச் சுட்டிக்காட்டி, அதனை ஆட்சேபித்தார்களாம். “மாட்டுக்கறி சாப்பிடுகிற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க?”என்று எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பதிலளித்தாராம். இப்படி ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து தனக்கு நெருங்கியவர்களிடம் சமீபத்தில் ஜெ. பேசிக்கொண்டிருந்ததாக ஒரு செய்தியை நக்கீரன் வெளியிட்டது.

Read more...

தானே புயல் பேரழிவு: தேவை, அற்ப நிவாரணமல்ல; மறுவாழ்வு! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 16 February 2012 13:32
புதிய ஜனநாயகம் / 2012

வேரோடு சரிந்து கிடக்கும் மரங்கள், கற்குவியலாகச் சிதிலமடைந்து கிடக்கும் வீடுகள், நொறுங்கிக் கிடக்கும் படகுகள், பெயர்ந்து கிடக்கும் சாலைகள், உப்புநீரில் பாழ்பட்டுக் கிடக்கும் விளைநிலங்கள், விழுந்து கிடக்கும் மின்கம்பங்கள் எனப் போர் நடந்த பூமியைப் போல் காட்சியளிக்கின்றன தமிழகத்தின் கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள். கடந்த டிசம்பர் இறுதியில் 136 கி.மீ. வேகத்தில் தாக்கிய “தானே” புயலால் உணவு, உடை, குடிநீர், சாலை வசதி, மின்சாரம், படகுகள், மரங்கள்,  விளைநிலங்கள் என எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு, எதற்கும் வழியின்றி ஏறத்தாழ 15 இலட்சம் மக்கள் பரிதவிக்கின்றனர். உயிருக்கு மோசமான பாதிப்பை சுனாமி ஏற்படுத்தியது என்றால், வாழ்வைப் பல தலைமுறைகளுக்குப் பின்னுக்குத் தள்ளி, அதைவிட மோசமான பேரழிவை தானே புயல் ஏற்படுத்தியுள்ளது.

Read more...

கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பன-’மேல்’சாதிக் கும்பல்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 16 February 2012 13:31
புதிய ஜனநாயகம் / 2012

“கோயில் சொத்துகளை எல்லாம் நாத்திகம் பேசும் திராவிடக் கட்சியினர் விழுங்கி வருகின்றனர். இந்து தர்மத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், அறநிலையத்துறையிடம் இருந்து கோயில்களை பிடுங்கி, சுதந்திரமான ஆன்மீகவாதிகள் அடங்கிய வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என்று இந்து முன்னணி கோரி வருகிறது.

Read more...

இந்தோனேசியா: அறுந்த செருப்புக்காக ஐந்து ஆண்டு சிறை தண்டனை! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 16 February 2012 13:30
புதிய ஜனநாயகம் / 2012

இந்தோனேஷிய போலீசின் ஆணவத்திற்கும், நீதித்துறையின் திமிருக்கும் எதிராகத்  தேய்ந்துபோன ரப்பர் செருப்புகளை ஆயுதமாக உயர்த்தியிருக்கிறார்கள், அந்நாட்டு மக்கள். குப்பைத் தொட்டிக்குப் போகவேண்டிய தேய்ந்துபோன ரப்பர் செருப்புகள், போலீசு  நீதிமன்றங்களின் மீதான ஏழை மக்களின் வெறுப்பைக் காட்டும் சின்னமாக இந்தோனேஷியாவில் மாறிப் போயிருப்பதன் பின்னே, ஒரு பதினைந்து வயது சிறுவனின் வலியும் வேதனையும் அடங்கியிருக்கிறது.

Read more...

ஜெயா-சசி-சோ: அதிகாரச் சூதாட்டம்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 16 February 2012 13:28
புதிய ஜனநாயகம் / 2012

கடந்த ஆண்டு டிசம்பரில் தனது உடன்பிறவா சகோதரியும் அ.தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சசிகலா மற்றும் அவரது கணவர் நடராசன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுடன் கட்சியினர் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அ.தி.மு.க. தலைவியும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். அதைத் தொடர்ந்து சசிகலாவின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் அதிகாரிகளைக் களையெடுக்கும் அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

Read more...

டர்பன் மாநாடு: ஆடுகள் மீது பழிபோடும் ஓநாய்கள்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 16 February 2012 13:27
புதிய ஜனநாயகம் / 2012

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த அனைத்துலக நாடுகளின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு, ஏகாதிபத்திய வல்லரசுகளின் நோக்கங்களுக்கு ஏற்ப ஒத்தூதிவிட்டு, வெற்று ஆரவாரத்துடன் முடிந்துள்ளது.

அதிகரித்துவரும் புவியின் வெப்பம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றினால் விளையும் இயற்கைச் சேதங்களைத் தடுக்க வளி மண்டத்தில் பசுமைக்குடில் வாயுக்கள் எனப்படும் கரியமில வாயு, மீத்தேன் போன்றவற்றின் அளவைக் குறைக்க வேண்டும். இதற்காக உலக நாடுகள் 1992ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் ஐ.நா.மன்றத்தின் சுற்றுச்சூழல் மாநாட்டில் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கின. அதன் பிறகு,  ஜப்பானில் உள்ள கியோட்டோ நகரில்  நடந்த மாநாட்டுக்குப் பின்னர், இந்த ஒப்பந்தம் கியோட்டோ ஒப்பந்தம் என்ற பெயரில் நடைமுறைக்கு வந்தது.

Read more...
Last Updated ( Thursday, 16 August 2012 13:30 )

உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011): தீராத தலைவலி! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 16 February 2012 13:26
புதிய ஜனநாயகம் / 2012

2007ஆம் ஆண்டில் சப்பிரைம் அடமானக் கடன் நெருக்கடியாக முதலில் அமெரிக்காவில் தொடங்கிய நெருக்கடி, பின்னர் உலகப் பொருளாதாரத்தைக் கடுமையாகத் தாக்கிய பெரும் பின்னடைவாக வளர்ந்தது. பின்னர் இதுவே உலகு தழுவிய பொருளாதார நெருக்கடியாகப் பரிணமித்து, முதலாளித்துவ கட்டமைப்புக்கே ஏற்பட்ட நெருக்கடியாகத் தீவிரமடைந்துள்ளது.

2011, ஆகஸ்ட் 7ஆம் தேதியிட்ட “கார்டியன்” இதழில், அவ்விதழின் பொருளாதார ஆசிரியரான லேரி எலியட் எழுதிய கட்டுரை, கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து ஐந்து கட்டங்களில் இந்நெருக்கடி முற்றி வந்துள்ளதைப் பற்றிய சித்திரத்தைத் தொகுப்பாக வழங்குகிறது. இக்கட்டுரையின் மொழியாக்கம், நெருக்கடியின் பரிமாணத்தை வாசகர்கள் புரிந்து கொள்ள உதவும்.

Read more...
Last Updated ( Thursday, 16 August 2012 13:30 )

இரான்: அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக்குஞ்சு! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 16 February 2012 13:23
புதிய ஜனநாயகம் / 2012

லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போரை முடித்த கையோடு, இரானைக் குறிவைக்கத் தொடங்கிவிட்டன, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள். அமெரிக்கா, ஆப்கான் மற்றும் இராக்கின் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்த சமயத்திலேயே, “இரான், சிரியா, வட கொரியா ஆகிய மூன்று நாடுகளையும் ரவுடி அரசுகள்” எனப் பழித்துப் பேசி வந்தார், அந்நாட்டின் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ். குறிப்பாக, இரானின் இசுலாமியக் குடியரசைக் கவிழ்த்துவிட்டு, அங்கு தனது அடிவருடிகளின் ஆட்சியைத் திணிக்க, அமெரிக்கா கடந்த பத்தாண்டுகளாக வெளிப்படையாகவே முயன்று வருகிறது.

Read more...
Last Updated ( Thursday, 16 August 2012 13:29 )