Sat05042024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Tuesday, 25 May 2010
முள்ளி வாய்க்காலைப் பிரபலப்படுத்திய கொலைக்களம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 25 May 2010 20:52
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

டந்த வருடம் 15.05.09 இல் இருந்து 18.05.09 வரையான ஏதோவொரு தினத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட அவரைக்குறித்துத் தமிழ்மக்கள் இன்னும் உயிர்வாழ்வதெனக்கொள்ளும் பரப்புரைகளைப் புலத்துப் புலிகள் செய்ய முனைவதில் நாளை மீளவொரு ஈழத்தைக் காணலாம்.

Read more...
Last Updated ( Friday, 28 May 2010 11:53 )

வடகிழக்கத்தைய மாநிலங்கள் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 25 May 2010 13:28
பி.இரயாகரன் - சமர் / சமர் - 11 : 06/06 -1994

1970களில் பலரால் வரவேற்ப்பட்ட வடகிழக்கத்தைய தேசிய இனங்களின் சுயநிர்ணய, சுயாட்சி உரிமைக்கான போராட்டங்கள் இன்று புரட்சிகர அரசியல் தலைமை இல்லாமல் சீரழிந்து குட்டிபூர்சுவா தலைமையிலான குறுந்தேசிய இனவெறிக்குள் மூழ்கி விட்டது. அன்று மணிப்பூர், நாகலாந்து, மீசோராம், அசாம், திரிபுரா என்று கொழுந்து விட்டெரிந்த தேசிய விடுதலைப்போராட்டங்கள் இன்று இனவெறி வன்முறையாளர்களாக சீரழிந்து போயுள்ளன. 

Read more...


புரட்சிகரத் தலைமை அற்று சீரழியும் தேச விடுதலைப் போராட்டங்களும். ஏகாதிபத்திய தலையீட்டு அபாயமும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 25 May 2010 13:20
பி.இரயாகரன் - சமர் / சமர் - 11 : 06/06 -1994

ஆசியாவில் பல தசாப்தங்களாக பல தேசவிடுதலைப் போராட்டங்கள் தொடர்கின்றன. இன்று தென் கிழக்கு ஆசியாவே தேசவிடுதலைப் போராட்டங்களின்  முக்கிய களமாக திகழ்கிறது. உண்மையில் இப் போராட்டங்கள் அனைத்தும் ஏகாதிபத்திய, தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பை நேரடியாகவோ,  முறைமுகமாகவோ கொண்டவையே. ஆனாலும் கூட இம் மக்கள் போராட்டங்களை தலைமை தாங்குபவை யாவும் புரட்சிகர சக்திகள் அல்ல என்பது தான் மிகவும் கவலைக்குரிய விடயம். பரந்துபட்ட மக்களின் தியாகங்களை அர்ப்பணிப்புக்களை, ஒரு சிறுபகுதி அற்ப சலுகைக்காக காட்டிக்கொடுப்பதைக் காணமுடியும்.

Read more...


மனிதப் படுகொலைகள் இன்று எலும்புக்கூடுகளாக புதைகுழிகளில். PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 25 May 2010 13:13
பி.இரயாகரன் - சமர் / சமர் - 11 : 06/06 -1994

இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலியபிட்டிய பிரதேசத்தில் உள்ள சூரியகந்த எனும் இடத்தில் புதைகுழி எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இப்புதைகுழி பற்றி வரைபடத்துடன் பத்திரிகைக்கும், சுதந்திரகட்சிக்கும் கிடைத்ததை தொடர்ந்து அவ்விடம் தோண்டப்பட்டது. இவ் எலும்புக்கூடுகள் 1988,1989,1990 களில் ஜே.வி.பியின் தீவிர வளர்ச்சிக் காலத்தில் கொல்லப்பட்டவர்களினதாகும்.

Read more...


G.A.T.T காட், டங்கல் திட்டங்கள் மூன்றாம் உலக நாடுகளின் சுயசார்புக்கு சாவுமணி மேல்நிலை வல்லரசுகளின் மறுகாலனியாதிக்கம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 25 May 2010 12:56
பி.இரயாகரன் - சமர் / சமர் - 11 : 06/06 -1994

1930 களில் அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய பொருளாதார வல்லரசாக வளர்ந்து விட்டது. அது பிற காலனிய ஏகாதிபத்தியங்களிடமிருந்து உலகச் சந்தையை பகிர்ந்து கொள்ள விரும்பியது. அதற்காக உலக மேம்பாட்டிற்கும் சமாதானத்துக்கும் சுதந்திரமான உலகச் சந்தை அவசியம் என்ற கருத்தை முன் வைத்தது. அவ்வடிப்படையில் 1948 இல் 23 ஏகாதிபத்திய தொழில்வளமிக்க நாடுகளிடையே சிக்கலற்ற சீரான உலக வணிகத்திற்காக ஒரு பொதுஒப்பந்தம் ஹவானாவில் ஏற்பட்டது. உலக நாடுகளிடையே ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் மற்றும் சுங்கத்தீர்வை ஆகிய பிரச்சனைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் ஏற்பட்ட இந்த பொது ஒப்பந்த அமைப்பு தான் காட்.

Read more...


தேடகம் தீக்கிரை PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 25 May 2010 12:33
பி.இரயாகரன் - சமர் / சமர் - 11 : 06/06 -1994

அராஜகத்துக்கு மூளையே இல்லை என்பது அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது. அண்மைக்காலங்களில் புலம்பெயர்ந்த நாடுகளிலும் அரசியல் வன்முறையின் தீவிரம் பரவிவருவதை கண்டுவருகிறோம். பாரிஸ் ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் தீவைப்பு,  திரு சபாலிங்கம் படுகொலை, தேடகம் நூல் நிலையம் எரிப்பு என சம்பவங்கள் தொடர்கின்றன.

Read more...


சில இராணுவ அதிகாரிகள் இனவாதிகளை அம்பலப்படுத்தினர். PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 25 May 2010 12:28
பி.இரயாகரன் - சமர் / சமர் - 11 : 06/06 -1994

சிங்கள இனவாதத்தை கக்கிவந்த ஜாதிக சிந்தனை இயக்கத்தினை சில இராணுவ அதிகாரிகள் கூட்டாக அம்பலப்படுத்தியுள்ளனர்.  பல் வைத்தியரான குணதாச அமரசேகரவின் இனவாத பேச்சுக்களையும் அதனால் தொடரும் யுத்தத்தையும் எதிர்கொள்ளும் இராணுவ அதிகாரிகள் சினம் கொண்டு ஒரு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Read more...


யூத மக்கள் 1942 இல் கொல்லப்பட்டதற்கு பிரித்தானியா பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சிலும் துணைபோனார். PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 25 May 2010 12:23
பி.இரயாகரன் - சமர் / சமர் - 11 : 06/06 -1994

அண்மையில் பிரித்தானியாவில் வெளிவந்த சில தகவல்கள் 2 ம் உலகயுத்தத்தில் பிரித்தானிய பிரதமர் யூத மக்களை கொல்ல துணைபோனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 1942 இல் ஒஸ்விச் நகரில் 8354 யூத மக்கள் ஒரே மாதத்தில் கொல்லப்பட்ட தகவல் பிரிட்டிஸ் பிரதமருக்கு தெரிந்திருந்தும் அதை அம்பலப்படுத்தாதது மட்டுமின்றி அதற்கு எதிராக சர்வதேசரீதியாக எதையும் செய்யாது யூதமக்கள் கொல்லப்படுவதற்க்கு பச்சைக் கொடி காட்டினார்.  பிரிட்டனும், அமெரிக்காவும் 2ம் உலகயுத்தக் காலத்தில் ஜேர்மனி சோவியத்தை தாக்கி அழிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.  அந்தவகையில் ஜேர்மனிக்கு எதிராக சோவியத் ஜக்கிய முன்னணியைக் கோரியபோது பிரான்ஸ், அமெரிக்கா என்பன நிராகரித்து ஜேர்மனிக்கு பக்கபலமாக செயற்பட்டனர். யூத இனவாதத்தை கொண்டு இவ்வரசுகள் கூட யூதமக்கள் கொல்லப்பட்டபோது கண்மூடியபடி பால் குடித்தனர். 

Read more...


வெளியீடுகளும் அவைகள் மீதான பார்வையும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 25 May 2010 12:00
பி.இரயாகரன் - சமர் / சமர் - 11 : 06/06 -1994

எமது போராட்டம் பாசிசத்தால் மூழ்கடிக்கப்பட்ட இன்றைய நிலையில் அதை எதிர் கொள்ள பலதரப்பினரும் குரல் கொடுக்க முனைந்தனர். இந்த வகையில் சஞ்சிகைகள், பத்திரிகைகள் என பல தோன்றி வருகின்றன. சில நின்றும் போய்விடுகின்றன.  எம் போராட்டத்தில் எழுந்த சஞ்சிகைள் பத்திரிகைள் வளர்ச்சிப்போக்கில் தத்தம் நோக்கங்களைக் கூட இனறு மாற்றி வருகின்றன. சில பத்திரிகைகள் தமது சுயதிருப்திக்காக என்ற நிலைக்கு பரிணாமம் அடைந்துள்ளது. சில பத்திரிகைகள் பிழைப்புவாத பிரமுகர்களை காப்பாற்றும் நோக்கில் சீரிழிந்துள்ளது.

Read more...


தூசு தூசு PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 25 May 2010 09:32
பி.இரயாகரன் - சமர் / சமர் - 11 : 06/06 -1994

 ஒரு கோடிக் கவிதைகளால்

உலகம் போற்றும் கவிஞன் நானே

என நாமம் பெற்றாய்

ஒரு சொட்டு இரத்தத்தை உரிமைப் போரில்

தருபவனின் புகழ் முன்னே

தூசு தூசு!

 

---------சுபத்திரன்------------

Read more...

Page 1 of 3