Sat05042024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 20 May 2010
புலிகளின் ஆள்தான் தீப்பொறி இளங்கோ என்று தெரிந்தவுடன் .. PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 20 May 2010 20:33
அரசியல்_சமூகம் / விருந்தினர்

1992களில் இங்கிலாந்தில் இயங்கிய தீப்பொறி குழுவினருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது.  அவர்களுடன் சிலகாலம் வேலை செய்த அனுபவங்களை இங்கு பகிர்வதன் மூலம், இன்று அதன் தொடர்ச்சியென கூறி இயங்கும் மே-18 இயக்கத்தினரிடம் கடந்த காலத்தின் செயல்பாடுகளிற்கான பதில்களை எதிர்பார்க்கின்றேன். இதற்கான பதில்கள் கிடைக்குமா?

Read more...
Last Updated ( Thursday, 20 May 2010 20:35 )

ஜயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...05 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 20 May 2010 17:26
அரசியல்_சமூகம் / ரூபன்

1974 ஆம் ஆண்டு புதுவருடத்தைத் தொடர்ந்து, வடக்கே நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டுக்கான ஆரவாரங்கள் ஆரம்பமாகியிருந்தது. வடக்கே தென்னோலைத் தோரணங்களும், வாழைமரங்களும், மின் அலங்காரங்களும், சப்பறங்களும், அலங்கார வளைவுகளுமாக யாழ்நகரம் விழாக்கோலம் கொள்ளத் தொடங்கியது.

Read more...

Last Updated ( Wednesday, 16 June 2010 19:14 )

மின்கட்டண உயர்வைத் திணிக்க கருத்துக் கேட்பு நாடகமாடாதே!” -புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 20 May 2010 10:58
புதிய ஜனநாயகம் / 2010

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில் மின்கட்டண உயர்வு பற்றி பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம் சென்னை மதுரைஇ கோவைஇ திருச்சி ஆகிய தமிழகத்தின் 4 பெரிய நகரங்களில் நடைபெற்றது. திருச்சியில் 15.4.10 அன்று கூட்டம் நடைபெற்றபோது மின்திருட்டு மின் பற்றாக்குறை மின்சார சிக்கனம் குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகளும் நுகர்வோர் அமைப்புகளும் பொதுமக்களும் இக்கூட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவித்தனர். ஆணையத்தின் தலைவர் கபிலன் இது அரசியல் கூட்டமல்ல என்றும் கூச்சல் குழப்பம் கலகம் செய்தால் போலீசார் அவர்களை வெளியேற்றுவார்கள் என்றும் எச்சரித்தார். அதற்கேற்ப அரங்கத்தினுள் எல்லா பக்கமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சுமார் 200 பேர் வீதம் பங்கேற்ற இக்கூட்டத்தில் ஒவ்வொருவரின் முகவரி பெற்று வீடியோ படம் எடுத்துப் பீதியூட்டினர். ஏற்கெனவே ஏற்பாடு செய்து அழைத்து வரப்பட்டவர்கள் பிரச்சினைகளைப் பேசாமல் திசைதிருப்பினர்.

Read more...


பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் வேட்டைக் காடாகிறது இந்தியா! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 20 May 2010 10:34
புதிய ஜனநாயகம் / 2010

இனி திரும்பி வரவே முடியாத தங்கள் மகள் சரிதாவை எண்ணி எண்ணி அழுது கொண்டிருக்கின்றனர் அவளின் பெற்றோரான நாகேஸ்வராவெங்கட்டம்மா தம்பதியினர். ஆந்திரப் பிரதேசத்தின் கம்மம் மாவட்டத்திலுள்ள லெச்சுமி நகரம் மாணவிகள் விடுதியில் தங்கிப் படித்து வந்த அந்த 13 வயது சிறுமி கடந்த ஜனவரி 21 அன்று காலையில் அசைவற்ற நிலையில் தரையில் விழுந்து கிடந்ததைக் கண்ட அப்பெற்றோர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். செல்லும் வழியில் கடுமையான வலிப்பு ஏற்பட்டு சரிதா இறந்துவிட்டார்.

Read more...

Last Updated ( Thursday, 20 May 2010 10:58 )

இருதலைக் கொள்ளி எறும்பாய் ஐதராபாத் நகரம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 20 May 2010 10:19
புதிய ஜனநாயகம் / 2010

கடந்த எட்டாண்டுகளாக மதக் கலவரமின்றி அமைதியாக இருந்த ஆந்திர மாநிலத் தலைநகரான ஐதராபாத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் மீண்டும் மதவெறித் தாக்குதல்கள் நடந்துள்ளன. கடந்த மார்ச் 27ஆம் தேதி முதலாக நான்கு நாட்களுக்கு நடந்த இம்மதவெறித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்துமுஸ்லிம் மதவெறியர்கள் தமக்கிடையே கல்லெறிந்துநடத்திய கலவரத்தில் பலர் படுகாயமடைந்தனர். ஐந்து மசூதிகளும் ஒரு இந்துக் கோயிலும் சேதமடைந்தன. ஆண்களையும் வாகனங்களையும் கடைகளையும் அடித்து நொறுக்குவது பெண்களை அவமானப்படுத்துவது என்பதாக இரு தரப்பும் வெறியோடு தாக்குதலை நடத்தின. 8 போலீசு நிலையங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஊரடங்கும் கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டன. 1800க்கும் மேற்பட்ட துணை இராணுவப் படைகள் இப்பகுதியில் குவிக்கப்பட்டுஇ 272 பேர் கைது செய்யப்பட்டு இக்கலவரத் தீ மேலும் பரவாமல் தற்காலிகமாகத் தடுக்கப்பட்ட போதிலும் இன்னமும் நீறுபூத்த நெருப்பாகவே நீடிக்கிறது.

Read more...


முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு விழுந்த முதல் அடி! ஓசூர் கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர் போராட்டம் வெற்றி! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 20 May 2010 10:00
புதிய ஜனநாயகம் / 2010

ஓசூர் சிப்காட்டில் இயங்கிவரும் கமாஸ் வெக்ட்ரா எனும் ரசிய பன்னாட்டு நிறுவனம் தனது ஆலையில் கடந்த 12 ஆண்டுகளாக வேலை செய்துவந்த 47 நிரந்தரத்தொழிலாளர்களைப் போலி நிறுவனம் ஒன்றுக்கு மாற்றம் செய்துள்ளதாகக் கூறி அனைவரையும் வீதியில் வீசியெறிந்தது. வேலையிழந்து வாழ்விழந்த தொழிலாளர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையில் அணிதிரண்டு போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். உழைக்கும் வர்க்கத்தின் பேராதரவுடன் கடந்த ஜனவரி 27ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதிவரை 69 நாட்கள் நடந்த இப்போராட்டம் ஓசூர் தொழிலாளர் இயக்க வரலாற்றில் முதன்முறையாக மகத்தான வெற்றியைச் சாதித்துள்ளது. தொழிலாளர்கள் இன்று வெற்றிப் பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். முதலாளித்துவப் பயங்கரவாதத் திமிரையும் கொட்டத்தையும் தமது உறுதியான ஒற்றுமையான போராட்டத்தால் முறியடித்த பெருமையில் அவர்களது நெஞ்சங்கள் விம்மித் தணிகின்றன.

Read more...


“டி.ஆர்.பாலுவின் சாராய ஆலைக்கு எதிரான வடசேரி மக்களின் போராட்டம் ஓங்கட்டும்!” -அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 20 May 2010 09:57
புதிய ஜனநாயகம் / 2010

கடந்த 9.4.10 அன்று முன்னாள் தி.மு.க. மத்திய அமைச்சரான டி.ஆர்.பாலுவின் குண்டர் படையும் போலீசு கும்பலும்சேர்ந்து கொண்டு தஞ்சை மாவட்டம் வடசேரி வட்டார மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலை அரங்கேற்றின. காரணம் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்க வரும் டி.ஆர்.பாலுவின் சாராய ஆலைக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து போராடியதுதான். பாலுவின் சாராய ஆலை ஒரு நாளைக்கு 15 லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சினால் நிலத்தடி நீரையே நம்பியுள்ள இப்பகுதியில் விவசாயமே நாசமாகிப் போகும் என்பதாலேயே இப்பகுதிவாழ் மக்கள் இந்த ஆலையை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இச்சாராய ஆலைக்கு ஊராட்சி மன்றம் அனுமதியளித்து பின்னர் மக்களின் எதிர்ப்பால் அதை இரத்து செய்தது. இருப்பினும் ஆலைக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக காட்டுவதற்காக மாவட்ட ஆட்சியர் போலீசு அதிகாரிகள் மற்றும் பாலுவின் அடியாட்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்த மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய போலீசு முப்பது பேர் மீது பொய்வழக்கு போட்டுச் சிறையில் அடைத்துள்ளது.

Read more...


நிதிச் சூதாட்டத்தால் திவாலானது கிரீஸ்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 20 May 2010 09:44
புதிய ஜனநாயகம் / 2010

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நெருக்கடி பல்வேறு நாடுகளின் வங்கிகள் காப்பீடு நிறுவனங்கள் தொழிற்சாலைகளை விழுங்கி ஏப்பம் விட்டு வருவதோடு மட்டுமின்றி தேசிய அரசுகளை மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைக்கும் தள்ளிவருகிறது. துபாய் அரசு நான்கு மாதங்களுக்கு முன்பாக தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தவணை கேட்டபொழுதுதான் இந்த அபாயம் வெளியுலகுக்குத் தெரியவந்தது. துபாயில் வேலை செய்துவந்த அந்நிய நாட்டுத் தொழிலாளர்களைப் பலியிட்டும் பக்கத்து அரபு நாடுகளிடமிருந்து "உதவி' பெற்றும் மஞ்சள் கடுதாசி கொடுப்பதில் இருந்து தப்பித்தது துபாய் அரசு.

Read more...


கழுதைக்குத் தெரியுமா? கற்பூர வாசனை?” -தியாகிகள் நினைவிட இடிப்புக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம். PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 20 May 2010 09:39
புதிய ஜனநாயகம் / 2010

அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் 1960களில் தோழர் சீனிவாச ராவ் தலைமையில் தோழர்கள் வாட்டாக்குடி இரணியன், களப்பால் குப்பு, பூழந்தாங்குடி பக்கிரி, ஜாம்பவானோடை சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், மனோன்மணியம்மை என்று சாதிய எல்லைகளைக் கடந்து கம்யூனிசப் போராளிகள் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடினர். அவர்களின் அளப்பரியத் தியாகத்தால் தஞ்சை மாவட்டம் சிவந்து, கூலி விவசாயிகளின் வாழ்வில் புதிய விடியலை உருவாக்கியது. சவுக்கடியும் சாணிப்பால் கொடுமையும் ஒழிந்தது.

Read more...


முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராகக் குலுங்கியது புதுச்சேரி! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 20 May 2010 09:32
புதிய ஜனநாயகம் / 2010

தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், வழக்குரைஞர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வுரிமையும் பறிக்கப்படும் காலமிது. பன்னாட்டு இந்நாட்டு (தரகு) முதலாளிகளின் இலாபவெறிக்காக மக்களின் வாழ்வுரிமைகளைப் பறித்து வருகிறது காங்கிரசு அரசு. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் மறுகாலனியாதிக்கத்தைத் தீவிரப்படுத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தொழிலாளர் தினமான மே நாளில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக புதுச்சேரியில் பேரணி பொதுக்கூட்டம் நடத்த ம.க.இ.க. பு.மா.இ.மு. வி.வி.மு. பு.ஜ. தொ.மு. பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பில் திட்டமிடப்பட்டது.

Read more...


Page 1 of 2