Sat05042024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 12 May 2010
மே 15 -18 வரையான நாட்களை பாசிச-ஏகாதிபத்திய எதிர்ப்பு நாட்களாக அனுஷ்டிக்க தமிழ் இடதுசாரிகள் முன்வர வேண்டும். - தீவான் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 12 May 2010 22:53
அரசியல்_சமூகம் / தீவான்

முன்பு  போராளிகளின் இரத்தம் சிந்திய தியாகத்தை மாவீரர் தினமென அறிவித்து ரோல்சும், வடையும், பிளாஸ்டிக் கார்த்திகைப் பூவும் விற்று மில்லியன் கணக்கான காசு உழைத்தவர்கள், இந்த புலிப்பினாமிகள். ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது. அதுபோல ஒருவருடமாக உழைப்பில்லாமல் இருந்த புலம்பெயர் புலிப்பெருச்சாளிகளுக்கு, நாலுகாசு பார்க்க வாய்ப்பு வந்துள்ளது. அதற்கு வசதியாக, மக்களின் சாம்பல் பூத்த மேட்டை வியாபார இஸ்தலமாக்கி, தொடர்ந்தும் பணம் சம்பாதிக்க இந்தப்  பினாமிகளில் ஒரு தரப்பு  "துக்கதினம் என்கிறது" இன்னொரு தரப்பு மே18 போர்க்குற்றவியல் நாள் என்கிறது. மற்றொரு தரப்பு கடந்த 2009 ஆண்டு தமிழின அழிப்பின் உச்ச ஆண்டாகவும், மே 12 முதல் 18 வரை உச்ச நாட்களாகவும், அனுஷ்டிக்கும்படி தமிழ் மக்களை அழைக்கின்றனர்.

Read more...

Last Updated ( Wednesday, 16 June 2010 19:17 )

"வேறு தெரிவு எங்களுக்கு இல்லை" என்று கூறி, மக்களுக்கு தெரியாது சரணடைந்ததை புலிகள் அறிவித்தது ஏன்? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 12 May 2010 07:55
பி.இரயாகரன் - சமர் / 2010

மக்களுக்கு தெரியாமல் தான், புலிகள் முன்கூட்டியே தாங்கள் தப்பிச்செல்லும் சதிக்குள் சரணடைந்திருந்தனர். இந்தச் சதி அவர்களின் இறுதி முடிவானவுடன், "வேறு தெரிவு எங்களுக்கு இல்லை" என்று கூறி, இந்தச் சரணடைவை வெளிக்கொண்டுவந்தனர். இதை புலிகளின் அன்றைய சர்வதேச பொறுப்பாளராக இருந்த கேபி என்னும் பத்மநாதன் அறிவித்தார். அன்று சரணடைந்தவர்கள், இதை உலகறிய சொல்லிவிட்டு செய்திருந்தால்,

Soosai.jpg

 

 அவர்கள் இன்று உயிர் வாழ்ந்திருப்பார்கள். இதை மீறிக் கொல்லப்பட்டிருந்தால் என்ன நடந்தது என்ற தெளிவு, மக்களுக்கு இருந்திருக்கும். இதன் பின் இருந்த துரோகிகள் யார் என்ற விபரம் தெரிந்திருக்கும். இப்படியிருக்க அன்று இதை உலகறிய ஏன் சொல்லவில்லை? செய்யவில்லை?

Read more...

Last Updated ( Wednesday, 12 May 2010 08:11 )