கனகமணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலகெங்கும் பரந்து வாழும் பலவேறுபட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பணி மிகப்பெரியது. தனிமனித விருப்பு வெறுப்புக்களுக்கப்பால், ஊடகத்தின் அடிப்படை நியதிகளையும் விட்டு விலகாது ஒரு செய்திக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைப் பொறுத்து அதன் உள்ளடக்கத்தையும், தரவுகளையும் கொண்டு செல்வது ஊடகங்கள்தான்.  ஆனாலும், ஒரு சில ஊடகங்களைத் தவிர, பெரும்பாலான ஊடகங்கள் வியாபாரத்தையே நோக்கமாகக் கொண்டிருப்பதால்  போட்டி மனப்பான்மை தானாகவே வந்து விடுகிறது. அச்சு ஊடகங்கள் போன்று செய்தியை முந்தித் தருவது யார் என்று இன்றைய இணைய யுகத்தில் போட்டி போட முடியாது. ஆகவே அதிகமான தகவல்களையும், மேலதிக விபரங்களையும் யார் தருவது என்பதில் இணைய ஊடகங்கள் போட்டி போடுகின்றன.

 

ஒரு செய்தியை அல்லது கட்டுரையை, விமர்சனத்தை எழுதுகையில், தங்களால் வழங்கப்படும் மேலதிக விபரங்கள் அல்லது தகவல்கள் யாருக்குச் சாதகமானவை? யாருக்குப் பாதகமானவை? என்பது பற்றியெல்லாம் ஊடக வியாபாரிகள் ஒரு போதும் சிந்திப்பதில்லை.

வியாபார நோக்கம் கொண்ட ஊடகங்கள் மட்டுமல்லாமல் சமூக அக்கறையோடு செயற்படுகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட தங்களுடைய கையில் ஊடகத்தைத் தங்கள் கையில் உள்ள அதிகாரமாகவே பாவிக்கின்றனர்.

போட்டி மனப்பான்மை, தனிமனிதனைப் பழிவாங்கல் என ஊடகங்களால் வழங்கப்படும் அதி கூடிய தரவுகளால் பாதிக்கப்படும் தனி மனிதர்கள் பற்றியோ அவர்கள் சார்ந்த குடும்பங்கள் பற்றியோ ஒருபோதும் இவர்கள் சிந்திப்பதில்லை. இவ்வாறன செயற்பாடுகள் திட்டமிட்ட ஒரு கொலைக்குச் சமானமாகும்.

சனநாயகத்தின் நான்காவது தூணாக வர்ணிக்கப்படும் ஊடகங்கள் சனநாய மறுதலிப்புடன் எவ்வாறான செய்திகளை வெளியிடுகிறது என்பதையே இங்கு பார்போம். தமக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்று காட்டிக் கொள்வதில் மட்டும் அக்கறை கொள்ளும் இவர்களால், பாதிக்கப்படுவது யார்? பலனடைவது யார் என்று நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

செய்தி 1

உதயகாந்தன் 2000 ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி அரபு நாடொன்றுக்கு சென்றிருந்தவர். 2002ம் ஆண்டு காலத்தில் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் போது நாட்டுக்கு திரும்பிய இவர் தன்னை ஒரு புகைப்பட கலைஞனாக மாற்றிக் கொண்டவர்.

"கொழும்பில் தமிழர் ஒருவரின் சடலம் மீட்பு" என்ற தைலைப்பின் கீழ் வெளியான செய்தி:

"கொழும்பில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் லெ.கேணல் கௌசல்யனின் மெய்ப்பாதுகாவலராகப் பணியாற்றியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டி தேசிய  பாடசாலை ஒன்றின் முன்பாக கொலை செய்யப்பட்டு அனாதரவாக விடப்பட்ட சடலம் பின்னர் அவரது தந்தையாரால் நேற்று அடையாளம் காட்ட்டப்பட்டுள்ளது.

இவர் மட்டக்களப்பு, கல்லாறைச் சேர்ந்த 38 வயதான கணபதிப்பிள்ளை உதயகாந்தன் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2004ம் ஆண்டு வரை புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யனின் மெய்காவலராக பணியாற்றியவர். இதன்பின்னர் பிரித்தானியாவுக்குச் சென்று குடும்பத்துடன் வசித்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கொழும்பு திரும்பிய இவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் முகவராகத் தொழிற்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட பின்னர் இவரது சடலம் பம்பலப்பிட்டியில் வீசப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்."

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/78287/categoryId/2/language/ta-IN/-2-----.aspx

மேற்படி செய்தியில் "புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் லெ.கேணல் கௌசல்யனின் மெய்ப்பாதுகாவலராகப் பணியாற்றியவர்"  என்ற தரவுகளைக் கொடுப்பது இறந்தவரின்  குடும்பத்தினருக்கும் அவரது சுற்றத்திற்கும் அரசியல் அச்சுறுத்தல்களாக இருக்கப் போவதைத் தவிர செய்தி படிப்பவர்களுக்கு கிடைக்கப் போவது என்ன? இந்த இடத்தில் உயிரோடிருப்பவர்கள் எதிர்கொள்ளப் போகும் பிரச்சினகள் செய்தியை வெளியிட்ட ஊடகங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.

இது மட்டுமல்லாமல், இறந்தவர் தனிநபர் என்று பார்க்காமல் புலியோடு தொடர்பு படுத்தி, கொல்லப்பட்டது புலி தானே என்று கொலைக்குச் சாயம் பூசி மூடி மறைத்து விடலாம்.

இந்த தகவல்களை பொலீஸ் மூலமாகத்தான் பெற்றோம் என்று இதைப் பிரசுரித்தவர்கள் கூறுவார்களாக இருந்தால் செய்தியாளர்களுக்கும் அவர்களின் ஊடகங்களுக்கும் உள்ள பொறுப்பு கேள்விக்குள்ளாகிறது.

செய்தி 2

சில வருடங்களுக்கு முன் ஊடறு இணையத்தளத்தில்  பெண்கள் பெயரில் ஆண்கள் கவிதை எழுதியது பற்றிய விவாதம் இடம்பெற்றது.

http://udaru.blogdrive.com/archive/524.html

அந்த விவாதத்தில் ஆண்கள் பெண்பெயர்களில் கவிதை எழுதியுள்ளார்கள் என்ற விமர்சனத்தையும் தாண்டி, பெண் பெயரில் எழுதியவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டு தமது துப்பறியும் மேதாவித்தனத்தைக் காட்டியிருந்தனர். இந்த விவாதம் நடைபெற்ற நேரத்தில் இவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் இலங்கை அரசினதும், புலிகளினதும் அதிகார மற்றும் வன்முறைச் சூழலுக்குள் இருந்தனர்.

இந்த நிலமையில் அவர்களை அடையாளம் காட்டுவது போட்டுக் கொடுப்பது என்பதாக இவர்களது ஊடக அதிகாரம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டப்பட்டு வந்த விமர்சனங்களுக்கும் தாம் செய்தது முற்போக்கானது என்பதே இவர்கள் பதிலாக இருந்தது.

விமர்சனங்களைத் தாண்டி மேலதிக விபரங்களைக் கொடுப்பது அதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு உயிராபத்தைக் கூட ஏற்படுத்தலாம் என்ற மிகச் சிறிய உண்மையைக் கூட கண்டு கொள்ளவில்லையென்றால் இப்படியானவர்களது சமூக அக்கறை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

செய்தி 3

"புலத்தில் மகிந்தருக்கு எதிராக போராட்டம்- யாழ் மாணவர்களால் யாப்புக்கள் தீக்கிரை" என்ற தலைப்பிடப்பட்ட செய்தியில்,

"மாணவர்களது இப்போராட்டம் பாதுகாப்பு அச்சறுத்தல்களின் மத்தியில் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதி தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து தற்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளது நடமாட்டங்கள் முடங்கிப்போயுள்ளன.

இந்நிலையில் தம்மை அடையாளப்படுத்த விரும்பாதவர்களாகவே மாணவர்களில் ஒரு அணியினர் இன்றைய போராட்டத்தையும் நடத்தியிருந்தனர். தொழில்நுட்பக்கல்லுரி மற்றும் நகர முன்னணி பாடசாலைகளின் மாணவர்கள் அணியினரும் இவர்களுள் உள்ளடங்கியிருந்ததாக கூறப்படுகின்றது" என்று தொடருகிறது.

http://tamilarulakam.com/2012/06/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%

AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95/

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினதும், அரச புலனாய்வுப் பிரிவினதும் மறைமுகமானதும் நேரடியானதுமான நெருக்குதல்களின் மத்தியில் மாணவர்கள் இருக்கின்ற சூழ்நிலையில்,  ஊடகங்கள் 'தொழில்நுட்பக்கல்லுரி மற்றும் நகர முன்னணி பாடசாலைகளின் மாணவர்கள்' என தகவல்களை வழங்குவது யாருக்காகவென்று தெரியவில்லை.

இதனால் எதிர்காலத்தில் இராணுவத்தினாலோ அல்லது அரச புலனாய்வுத்துரையினராலோ குறி வைக்கப்படப் போவது இம் மாணவர்கள்தான் என்பதை கருத்திற் கொள்ளாமலோ அல்லது வேண்டுமென்றுதான் இப்படிச் செய்கிறார்களோ தெரியவில்லை.

எது எவ்வாறிருப்பினும் இங்கே உதாரணகளாக எடுக்கப்ப்பட்ட மூன்று செய்திகளும், மூன்று ஊடகங்களும் தங்களுடைய நலன்களுக்காக ஒரே நேர் கோட்டில் சந்திக்கின்றன. வெவ்வேறு பாணியில் இடம்பெறும்  "காட்டிக்கொடுப்பு" இங்கே சமூக அக்கறையாகவும், ஊடக தர்மமாகவும் விற்பனையாகிறது.

கனகமணி

19.06.2012

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது