Language Selection

அசுரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

துரோகம் 1:

கயர்லாஞ்சி (2006 செப்) என்ற பெயர் பலருக்கு மறந்திருக்கும். ஞாபகம் இல்லாதோர் இந்த சுட்டியில் படித்துக் கொள்ளவும்.

கயர்வாஞ்சி தாழ்த்தப்பட்டோர் படுகொலை : சாதிவெறியர்களின் வக்கிரம்-கொடூரம்!

கயர்லாஞ்சி சாதிவெறிப் படுகொலை இந்தியாவைவே உலுக்கியது. ஏனென்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய மாதக்கணக்கிலான வீரம் செறிந்த போராட்டத்தின் காரணமாக இந்தியா குலுங்கியது. பத்திரிகைகள் இந்தப் படுகொலையை போராட்டங்கள் வீரியமாக மாறிய ஒரு மாதம் முழுவதும் வெளியிடமால் ரகசியமாகவே வைத்திருந்தன. ஆனந்த் தெல்தும்பெடே அவர்கள் இந்தப் படுகொலையை ஒட்டி உலகமய அரசியல் சாதியத்தை எத்தகைய பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது என்று விரிவானதொரு ஆய்வுக் கட்டுரையையும் எழுதினார். உலகமயம் அடிப்படையில் உழைக்கும் மக்களை ஒடுக்குகிறது என்ற வகையில் தாழ்த்தப்பட்டவர்களும் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பதே அதன் சாரம்.   கயரலாஞ்சி காட்டும் பேருண்மைகள் - உலகமயம் - தலித்தியம் - தலித் விடுதலை

இந்தப் படுகொலை வழக்கை கையிலெடுத்த சிபிஐ வழக்கம் போல தனது துரோகத்தை அரங்கேற்றத் துவங்கியது. சிபிஐ கேட்டுக் கொண்டதன் பேரில் பிப்ரவரி 2007ல் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 46 பேரில் 35 பேர் விடுவிக்கப்பட்டனர்.

செப் 2008ல் குற்றம்ச்சாட்டப்பட்ட 11பேரில் 6 பேருக்கு மரண தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் மூவரை விடுவித்தும் தீர்ப்பானது.

ஆனால் தண்டனைக்கான காரணங்களாக சாதிவெறி வன்கொடுமையோ, பெண் மீதான பாலியல் அத்துமீறலோ, திட்டம்மிட்ட படுகொலை முயற்சி என்பதோ சொல்லப்படவில்லை. அதாவது மொத்தத்தில் கயர்லாஞ்சி படுகொலை ஒரு படுகொலை மட்டுமே. அதில் சாதியோ, பெண்ணடிமைத்தனமோ இல்லை இல்லை இல்லைவேயில்லை என்பதே செப் 2008 தீர்ப்பின் சாரம்.

கயாலாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும் 

இவ்வாறாக, வழக்கு அடுத்தக்க்கட்ட நீர்த்துப் போதலுக்குச் சென்றது. சாதிவெறிப் படுகொலை வெறும் 'கொலை வழக்காக' மாறியது. மேல் முறையீடு செய்யப்பட்ட இந்த நீர்த்துப் போன வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நடந்துவந்தது. இதோ இன்று அந்தக் 'கொலை வழக்கில்' தீர்ப்பு வந்துள்ளது. ஆறு சாதி வெறியர்களுக்கும் வழங்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகமாற்றப்பட்டுவிட்டது.

இதே போலத்தான் கிருத்துவர்கள் மீது ஒரிஸ்ஸாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தி வந்த பஜ்ரங் தள் இந்து பயங்கரவாதி தாராசிங்ன் மீதான வழக்கும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளது. போபால் வழக்கு பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

துரோகம் 2, 3.. என்று பட்டியலிட கீழ் வெண்மணியிலிருந்து, போபால் வரை பெரிய பட்டியலே உள்ளது.

இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாம். உலகின் மிகப் பெரிய துரோகிகளின் நாடு என்று பெயர் மாற்றுங்கள் அதுவே பொருத்தமாக இருக்கும்.

அசுரன்

தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்கொடுமைகளின் தொகுப்பு

நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!

காவிக் கறை படிந்த தீர்ப்புகள் 

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியுமா எது உள்ளே எது வெளியே என்று?

சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்... அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

http://poar-parai.blogspot.com/