மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
lankasri.comநீங்கள் சர்க்கரை நோயாளியா? இனி கவலை வேண்டாம். தினமும் "பிஞ்சு' முட்டைக்கோஸ் (ஆரஞ்சு பழ அளவிலிருந்து சற்று சிறியதாக இருக்கும்) தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் உறுப்பு பாதிப்புகளை தவிர்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமானால் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்கள் பாதிப்படையும். அதனால் மாரடைப்பு ஏற்படும். அதேபோல் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டால் வலிப்பு ஏற்படும்.

இவற்றுக்கு காரணம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே செல்வதால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. அதன் மூலம் மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

"பிஞ்சு' முட்டைக்கோûஸ தொடர்ந்து சாப்பிடுவதால் மாரடைப்பு மற்றும் வலிப்பு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்ததை இதற்கு முன்னர் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த பேராசிரியர் பால் தோர்நல்லே தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் பிஞ்சு முட்டைக்கோஸினால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் மாற்றங்கள் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

பிஞ்சு முட்டைக்கோஸில் உள்ள ‘நன்ப்ச்ர்ழ்ஹல்ட்ஹய்ங்’ எனும் புரதச் சத்து, உடலில் செரிமானம் செய்யும் உறுப்புகளை மேலும் தூண்டச் செய்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, ரத்தக் குழாய்கள் பாதுகாக்கப்படுவதுடன், உயிரணுக்கள் பாதிப்படைவதையும் தடுக்க செய்கிறது.

ரத்த நாளங்களில் ஏற்படும் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மேற்கொண்ட பரிசோதனை மூலம் இது தெரியவந்தது.

06 Aug 2008
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1218084050&archive=&start_from=&ucat=2&