சமர் - 22 :11 - 1997
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சமரானது கேள்வி-பதில் பகுதி ஒன்றை தொடர்ச்சியாக வெளியிட உத்தேசித்துள்ளது. உங்கள், எங்கள் கேள்விகளை, கேள்விக்கு உட்படுத்தி, எமது சமுதாய அறிவை உயர்த்துவது என்ற அடிப்படையில் வெளிவரும் இப்பகுதிக்கு, உள்கள் கேள்விகளையும் சமர் வெளியிடவும் பதில்தரவும் தயாராகவுள்ளது. நண்பர்களே எழுதி அனுப்புங்கள்.

மனிதன் ஏன் வறுமையில் வாடுகின்றான்?

உலகில் இன்று 120 கோடி மனிதர்கள், அதாவது 5 பேருக்கு ஒருவக் அடுத்த நேர உணவின்றி கையேந்துகின்றான். இந்த நிலைமை என்பது சனத்தொகை அதிகரிப்போ, உணவின்மையாலோ எழுந்தவையல்ல. அதாவது உலகிலுள்ள மக்கள் இனவருக்கும் உண்மையாகவே இன்று உணவு உள்ளதுடன், மேலதிக உணவும் உள்ளது.

ஆனால் இன்று உணவானது சரியான பகிர்வின்றியும், லாபநோக்கில் பெருமளவு உணவானது திட்டமிட்டு அழிக்கப்படுவதுடன், மிருகங்களுக்கு கொடுக்கப்படுவதுடன், மேட்டுக்குடியின் பணத்திமிரில் பெரும் சேதத்தை உணவு சந்திப்பதுடன், உற்பத்தியை கட்டுப்படுத்தி அழித்தொழிப்பது என மக்கள் பல வழிகளில் உணவின்றி தவிக்கின்றனர்.

அதாவது ஆபிரிக்காவின் பிரதான உணவான சோளம், போதிய உற்பத்தியைக் கொண்டிருந்த போதும், அவை மேற்கு நாட்டு மிருகங்களுக்கு கொடுக்கும் கட்டாயப்டுத்தப்பட்ட ஒப்பந்தம் மூலம் மக்கள் பட்டினியாக்கப்படுகின்றனர். பின்னர் மனிதாபிமான உதவி என்ற பெயரில் அந்த மக்களின் சோளத்தையே மேற்கு நாட்டு சின்னம் பொறித்த சாக்கு மூட்டைகளில் அடைத்து கஞ்சிக்காகவும், இறந்துகொண்டவர்களின் வாயை நனைக்கவும் கொடுக்கப்படுகிறது.

உணவுப் பங்கீட்டையும், உலகளவில் மக்கனிள் தேவையானதை அங்கீகரிக்காத வரை, ஏற்றத் - தாழ்வான மனிதவாழ்க்கை உள்ளவரை பசி என்பது ஒரு பகுதி மக்களின் விதியாகவே இருக்கும். இதை மூடி மறைக்க பலவித கட்டுக்கதைகளை வசதியானவன் சொல்லிக்கொண்டிருப்பதும் தொடரும். அதை அறிவியல் துணையுடனும் ஆதாரங்களுடனும் ஒப்பிட்டுப் பார்ப்பது மட்டுமே அறிவாகும்.

கடவுள் உலகத்தைப் படைத்தாரா?

கடவுள் தான் உலகத்தபை; படைத்தார் எனவும், மனிதனின் நன்மை தீமைகளை தீர்மானிப்பதும் அவர் ஒருவரே என எல்லா மதங்களும் கூறுகின்றன. இதற்கு எதிராக உலம் உயிர்வாழ்தல் மற்றும் நன்மை தீமை என அனைத்தையும் சூழலும், மனித போராட்டங்களும் தான் தீமானித்துவிடுகின்றன.

நாம் இனி அறிவியல் கோணத்திலிருந்து இதை ஆராய்வோம்.

உலகை கடவுள் தான் படைத்தார் என்போர் எப்போது உழைக்கும் ஒரு பிரிவையும், உழைக்காத சுரண்டும் பிரிவையும்: ஒரு தொழிலாளியும்  ஒரு முதலாளியும் இருப்பதை கடவுள் வழியாக சித்தரித்து அங்கீகரித்து பாடுபடுகின்றனர்.

உலகை கடவுள் படைக்கவில்லை என்போர் மனிதனின் வேறுபாட்டையும் நீக்கவேண்டும் என்கின்றனர்.

மனிதநேயத்தை தேடின், எல்லா மக்களுக்கும் ஒரே அளவுகோலை யார் கோருகின்றார்களோ அவர்கள் உண்மையைத் தேடுபவர்களாக உள்ளனர்.

கடவுள் உலகை படைத்தார் என்போர் தமது எல்லாக் கோட்பாட்டையும் பூமியில் நின்று, தமது கண்களால் கண்டதைக் கொண்டும் கானாத கற்கனை வாயிலாகவும்  உலகைப் படைக்கின்றனர்.

பூமி தட்டையானது எனவே எல்லா மதங்களும் சொல்லுகின்றன. ஆகார் பூமி உருண்;டை என்பதை மிக அண்மையில்தான் நிறுவமுடிந்தது. கடவுள் சொன்ன பூமியின் தட்டைக் கோட்பாடு இன்று பொய்யாகிப்போய் உள்ளது அல்லவா? ஆகவே கடவுளும் பொய்யல்லவா?

நாம் எமது மனித வாழ்விலும், எமது தலைமுறையின் வாழ்விலும்  பெற்ற, பெறுகின்ற அனைத்துப் பொருட்களும் மனித உழைப்பின் பயன்பாட்டின் விளைவே ஒழிய ஆண்டவனின் படைப்பல்ல. நாம் இன்று 5 நாள் வேரைநேரம், 40 மணித்தியால வேலை நேரம், லீவு, பிரசவ விடுமுறை, தொழில் பாதுகாப்பு, மருத்துவம், என அனைத்துமே உழைக்கும் மனிதனின் போராட்டங்களால் கிடைத்தனவே ஒழிய ஆண்டவனோ முதலாளியோ அருளிவிடவில்லை.

எமது பயன்பாட்டுப்  பொருட்கள் அனைத்தும் மனிதனின் கண்டுபிடிப்பும், அதன் மீதான உழைப்பின் விளைவுமேயாகும். நெருப்பைக் கண்டுபிடித்தது என்பதும், அதை பாதுகாக்க நடந்த யுத்தம் என்பது எல்லாம் மனிதவாழ்வின் போராட்டங்களே. நெருப்பு இறைவனால் கொடுக்கப்பட்டதல்ல. நெருப்பு எப்படி உண்டானது என்ற அறி வியலின் விளைவே இன்று தீப்பொட்டிகளாக எம்கையில் எள்ளது. அறிவியல்தான் அனைத்தும். அதுவே இனைத்தினதும் உண்மையுமாகும்.

விரதமும், அதையொட்டிய உயிர்கொல்மை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்தியப் பண்பாட்டில் ஒரு காலத்தில் குதிரையை இறச்சியாக மனிதன் உண்டான். குதிரை இறச்சிக்காக கொல்லப்பட்ட நிலையில், குதிரையின் அழி வைக்கண்ட அண்றைய சமூகம் குதிரை இறச்சி உண்பதை தடைசெய்தனர். இன்று குதிரை இறச்சி சாப்பிடுவது என்பதே ஒரு காட்டுமிராண்டித்தனமாக பார்க்கப்படுகிறது.

ஒன்றின் தடை, செயல்கள் சில சூழல், பண்பாட்டு பழக்கவழக்கத்துடன்  தொடர்புடையதே ஒழிய, மனிதனின் ஆதியின் தொடர்ச்சியல்ல. இதுபோன்றே விரதமும் ஆகும். இந்தியாவின் எல்லா ஏழைகளும் நாள்தோறும் விரதம் இருக்கும் வகையில் அவர்கள் பட்டினியில் வாழ்கின்றனர். மேட்டுக்குடி பார்பனன் மேலதிகமாகத் திண்டதனால் ஏற்படும் உடற்பெருக்கைக் கட்டுப்படுத்த உண்ணாமையிருந்தனர் ஒரு பகுதியினர். இதுபோன்றவற்றையே பின்னால் சமயமாக்கி பின் அதற்கென்று விதிவிலக்குகளை உருவாக்கி அதை தமது அடக்கும் வடிவின்  சின்னமாக மாற்றினர்.

உயிர்கொல்லாமையை சமனர் என்ற சமயத்தில் இருந்து உள்வாங்கிய பார்பனியம் அதை இந்துமதம் ஆக்கியதன் மூலம் அதை இந்துக்களின் பொதுப்பண்பாடாக்கினர். பார்பனியமும் இந்துவும் உயிர்கொல்லாமையை இன்று கண்களுக்குத் தெரிவதில் இருந்து விலத்தினர். ஆனால் உண்மையில் உயிரானது கண்களுக்கு தெரியாது உள்ளதுடன் சொல்பவனே அதைக் கொன்று புசிக்கின்றான்.

விரதமிருந்தபின் உண்ணும் உணவுடன் தயிரைக்கலந்து உண்ணுகின்றனர். இந்தத் தயிரானது பக்சிரியா என்ற உயிரினத்தால் நிறைந்துளளது. இந்த உயிரினத்தை உண்டு, அது செமிபாடடையத் தொடங்கியவுடன் கொன்ற உயிரின் மீது நின்று உயிர் கொல்லான்மை பற்றிப் பேசுபவன்  அறிவற்ற மூடன்.

ஒரு நோய் ஏற்படின் அதற்கு மருந்துண்டு நோய்க்குக் காரணமான உயிர்க்கிருமியை உடலுக்குள்ளேயே கொல்லுகின்றனர். நுளம்பு, கரப்பான், எறும்பு, மூட்டைப்பூச்சி..... என எண்ணற்ற பூச்சி வகைகளை உயிர்கொல்லாமையில் இருந்துபாதுகாக்கவில்லை. அதை கூட்டங்கூட்டமாக கொன்றபடியேதான்  உயிர்கொல்லாமை, விரதம் பற்றி பேசுகின்றனர் - அறிவிலிகள். உண்மை என்பது அறி வின்பாலானதே ஒழிய நம்பிக்கையின் பாலானவை அல்ல. அத்துடன்  முட்டாள்களின் பிரச்சாரத்தின் பாலானதுமல்ல.