உழைப்பதை நிறுத்து

உழைத்து உழைத்து 
மாடாய் போனாய் 
வளைத்து வளைத்து 
வறுமையின் வாயில்- போதும் 
உழைப்பதை நிறுத்து

 

மூட்டை தூக்கி 
முதுகில் கூணல் 
கொக்கி மாட்டி 
கிழிந்த சட்டை -போதும் 
உழைப்பதை நிறுத்து

 

மெலிந்து சிறுத்த 
கால்கள் கெஞ்சும்
கொஞ்ச நேர ஓய்வை
கருணை இல்ல 
மனங்கள் சொல்லும் 
முதலில் முடி வேலையை- போதும் 
உழைப்பதை நிறுத்து

 

இரவு முழுவதும் 
வேலை செய்வாய் 
விடிந்ததும் கடன் 
வாசலில் நிற்கும் -போதும் 
உழைப்பதை நிறுத்து தோழனே

 

கழுத்து நோவை 
காக்கைகள் கேளா
வயித்து பசியை 
வர்க்கம் கேளா -போதும் 
உழைப்பதை நிறுத்து தோழா

 

பருத்த வயிறும் 
பகட்டில் உடையும் 
நகையும் நட்டும் 
நழுவும் புடவையும் 
உனக்கில்லையெனில் -போதும்

 

உழைப்பதை நிறுத்து

 

கொழுத்தும் வெயிலில் 
கூலி வேலை கிடைத்தும் நாளை
கிடைப்பது எளிதா -போதும் 
உழைப்பதை நிறுத்து

 

வேலை வேண்டும் 
கூலி வேண்டும் 
சோறு வேண்டும் 
கேட்டால் வராது  - போதும் 
உழைப்பதை நிறுத்து 


-- 
 
தொழிலாளர்களின் உழைப்பை இன்னும் எத்தனை நாளைக்கு இந்த முதலாளித்துவ ஏகாதிபத்திய சமூகம்
சுரண்டி வாழும்
 
பிளாஸ்மா டிவி இருக்கும் வீடும் குடிக்க கஞ்சி இல்லாத பாட்டாளிகளும் ஒரே பூமியில் வாழ்வதை
 
கண்டு சகிக்க கூடாது , போராட முன்வரவேண்டும் பொதுவுடமை சமூகம் படைக்க எனும் ஆதங்கத்தில்
 
இந்த கவிதை எழுதப்பட்டது
 

Last Updated on Wednesday, 28 January 2009 08:17