இங்காலும் அங்காலும்....

சிறிரங்கன் ஏன் உணர்ச்சிவசப்படுகிறார்?

 

1971ம் ஆண்டு ஜேவிபிக்கு எதிரான போரில் இதே இராணுவம், பிரபல அழகியும் ஜேவிபி உறுப்பினருமான பிரபாவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, நிர்வாணமாக தெருவில் இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றதே. இந்தக் கொடுமையை சிங்கள மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 1987 வரை இந்தக் கொடுமையைப் புரிந்தவனுக்கு எந்தத் தண்டனையும் இந்த அரசுகளால் வழங்கப்படவுமில்லை. ஜே.வி.பியே இவனைச் சுட்டுக் கொன்றது.

 

1985ல் மணியந் தோட்டம் மற்றும் ஆனைவிழுந்தானில் புளட் அமைப்பினர் இவ்வாறான கொடுமைகளைச் செய்தனர்

..

இன்னும் பதிவுக்கு வராத எத்தனையோ பாலியல் கொடுமைகள் நாலா திசையிலும் இராணுவத்தாலும், இயக்கங்கங்களாலும் நடத்தப்பட்டவை., இவை இன்னும் செவிவழிச் செய்தியாக மக்களிடம் வாழ்ந்து வருகிறது. அடிப்படையில் மக்கள் நலன்களைக் கொண்டிராத எந்த இராணுவமும், இயக்கங்களும் இவற்றை நடத்தவில்லை அல்லது நடத்தாது என்பதற்கான எந்த உத்தரவாதமும் எமது வரலாறிலும் இல்லையே. அப்ப ஏன் சிறிரங்கன் உணர்ச்சிவசப்படுகிறார்?

 

இந்த வீடியோ படத்தில் பெண்ணின் உடலை இழுத்துச்செல்லும் ஆளின் முகம் சரிவர எடுக்கப்படவில்லை. இறந்த பெண்ணின் உடலில் காணப்படும் இரத்தக் காயங்கள் சொல்லும் சேதி என்ன? இவ்வாறு ஆயிரத்தெட்டுக் கேள்விகள் இன்னும் இருக்கு.... அதற்குள் இறந்த பின்னர் தான் புணருகிறார்கள் என்று ஏன் இந்த அவசரம்? இனியும் மக்கள் - இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் - இன்னும் இன்னும் இங்காலும் அங்காலும் ஆட வேண்டுமா?

 

சு.தே.கு 010109

Last Updated on Friday, 02 January 2009 21:27