உறிஞ்சடைச் சிரங்கு - Nappy Rash

இவ்வகையான சொறி அல்லது கரப்பானானது கூடுதலாக குழந்தைகளுக்கு ஏற்படும். ஈரமான அல்லது அழுக்கான உறிஞ்சடை (நப்பி - Diapher) குழந்தைகளின் தோலில் சொறிவை ஏற்படுத்தும்.

 

நோயின் அறிகுறிகள்: உறிஞ்சடை (நப்பி - Diapher) அணிந்த பகுதி சிவந்து போய் அல்லது இளஞ்சிவப்பு நிறப்புள்ளிகள் ஏற்பட்டு காணப்படும்.

 

நோயைக்குறைக்க அல்லது தடுக்க கையாளவேண்டிய முறைகள்

உறிஞ்சடை (நப்பி - Diapher)யை கழற்றிவிட்டு அப்பகுதியை காற்றுப்பட விடவேண்டும். இவ்வகை நோய் ஏற்படாமலிருப்பதற்கு குழந்தை சிறுநீர் கழித்தபின்போ அல்லது மலம் கழித்தபின்போ ஒவ்வொரு முறையும் உறிஞ்சடையை மாற்றிவிட வேண்டும். அத்துடன் குழந்தையின் கீழ் பகுதியை நீரினால் சுத்தமாக கழுவி நன்றாக ஈரமின்றி துடைத்தபின்பு நீரைத்தடுக்கக்கூடிய வகையை சார்ந்த அதாவது Water Repellent Cream வகையை சார்ந்த பாலேட்டைப் பாவிக்க வேண்டும்.

 

இந் நோய் சில நாட்களின் பின்பும் மாறாமல் இருப்பின் உங்கள் மருத்துவரையோ அல்லது சுகாதார அதிகாரியையோ (Health Visitor) காணுவது சிறந்ததாகும். சில வேளைகளில் அவர்கள் இந் நோயின் இரணத்தை குறைப்பதற்கு Mild corticosteroid ஜ தரக்கூடும்.

 

http://www.tamilhealth.net/index.php?option=com_content&task=view&id=3&Itemid=92