Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் கடாபி என்றும் எப்போதும் ஏகாதிபத்திய கைக்கூலியே ஒழிய, ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் அல்ல.

கடாபி என்றும் எப்போதும் ஏகாதிபத்திய கைக்கூலியே ஒழிய, ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் அல்ல.

  • PDF

இன்று கடாபியைக் கொன்றவர்களும் ஏகாதிபத்திய கைக்கூலிகள் தான். கடாபி கொல்லப்பட்டது, லிபியா மக்களால் அல்ல. ஏகாதிபத்தியம் நடத்திய யுத்தம் மூலம் தான் கடாபி கொல்லப்பட்டான். கடாபிக்கு எதிரான லிபிய மக்களின் கோபங்களை, தங்கள் கைக்கூலிகள் தலைமையில் மேற்கு ஏகாதிபத்தியங்கள் ஆயுதபாணியாக்கியது. இதை வான்வெளித் தாக்குதல் மூலம் ஒருங்கிணைத்து, தரைவழியாக தலைமை தாங்கியதன் மூலம் கடாபியின் கதையை முடித்தன அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள். இதற்காக ஐ.நா தீர்மானத்தை தனக்கு ஏற்ப திரித்தும், வளைத்துப் போட்டும், தனக்கு எதிரான முரண்பட்ட ஏகாதிபத்திய நாடுகளுடன் ஒரு ஏகாதிபத்திய யுத்தத்தை நடத்தி முடித்திருக்கின்றது.

இந்த வகையில் அரபுலகில் தொடர்ந்து நடக்கின்ற போராட்டங்கள், கிளர்ச்சிகள் அனைத்தும் மீண்டும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நலன் சார்ந்ததாகவே முடிகின்றது.

கடாபி பற்றிய மாயைகள் முதல் ஏகாதிபத்;திய எதிர்ப்பு பற்றிய கற்பனைகள் பல. கடாபி என்றும் எப்போதும் ஏகாதிபத்திய கைக்கூலியே ஒழிய, ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் அல்ல. இன்று அரசியல் தளத்தில், முன்னைய ஏகாதிபத்திய எதிர்ப்பாளனாக கடாபியைக் காட்டி சித்தரிப்பது பொய்யானது கற்பனையானது. மேற்கை மட்டும் ஏகாதிபத்தியமாக கருதுகின்ற, மேற்கை எதிர்த்தால் ஏகாதிபத்திய எதிர்ப்பு நாயகனாக கருதுகின்ற இடதுசாரிய வங்குரோத்து அரசியல் புளுத்துப்போன இன்றைய நிலையில், கடாபியையும் அவனின் அரசியலையும் புரிந்துகொள்வது இன்று அவசியம்.

கடாபி 1969ம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த போது, கடாபியின் நோக்கம் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலா!? இல்லை. லிபியாவில் இருந்த மன்னர் ஆட்சி அமெரிக்கப் பொம்மை ஆட்சியாக செயல்பட்டதால் தான், கடாபி ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தினாரா!? இல்லை. மாறாக மன்னருக்கு பதில் ஓரு சர்வாதிகார ஆட்சியை தன் தலைமையில் நிறுவும் நோக்கில் நடத்தப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்புத்தான் கடாபியின் தலைமையில் நடந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்போ, தேசிய நலன் சார்ந்ததல்ல, கடாபி இராணுவ சதி மூலம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு.

 

இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் 1960 களில் புதிதாக உருவாகியிருந்த சமூக ஏகாதிபத்தியமான ருசியாவின் பின்னணியியுடன் தான் அரங்கேறியது. அமெரிக்கா தலைமையிலான ஏகாபதித்தியத்துக்கு எதிராக முன்னேறித் தாக்கிய ருசிய ஏகாதிபத்திய நலன் தான், லிபியாவை அமெரி;க்காவுக்கு எதிராக முடுக்கிவிட்டது. ஆக புரட்சி வேஷம் கடாபிக்கு மட்டுமல்ல ருசியாவுக்கும் தேவைப்பட்டது.

அரபுலகிற்கு எதிரான இஸ்ரேலிய யுத்தமும் ஆக்கிரமிப்பும், அதற்கு ஆதரவான அமெரிக்காவின் நிலையை எதிர்த்து, அரபுலகிலும் லிபியாவிலும் மக்களின் கொந்தளிப்பான போக்கை ருசியாவின் ஏகாதிபத்திய நலனுடன் ஏற்ப கடாபி முன்தள்ளினான்.

இதன் வெளிப்பாடுதான் இராணுவச் சதியிலான ஆட்சிக் கவிழ்ப்பு. இதைத் தொடர்ந்து நடந்த தேசியமயமாக்கல் முதல் மேற்கு ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நிலையை கடாபி வெளிப்படையாக முன்னெடுத்தான். இதன் போது மேற்கை ஏகாதிபத்தியத்தை எதிர்த்தல் என்பது, சமூக ஏகாதிபத்தியமான ருசியாவைச் சார்ந்து நின்றுதான் வெளிப்பட்டது. இங்கு ஏகாதிபத்திய எதிர்ப்பல்ல கடாபி அரசியல். இப்படி இருக்க இதைத்தான் ஏகாதிபத்திய எதிர்ப்பாக இன்று பலரும் கடந்தகால அரசியல் சூழலை மறுத்;து, தங்கள் அரசியலைத் துறந்து சித்தரிக்கின்றனர்.

கடாபி சமூக ஏகாதிபத்தியமான ருசியாவைச் சார்ந்து, உள்நாட்டு கிளர்ச்சிகளுக்கு ஆயுதமும் பணம் வழங்கியது எல்லாம் இந்த பின்னணியில்தான். உலகளாவில் மக்கள் போராட்டங்களை சீரழிக்கவும், திசைதிருப்பவும் கடாபி சமூக ஏகாதிபத்தியமான ருசியாவின் கைக்கூலியாக செயல்பட்டான்.

1990 களில் சமூக ஏகாதிபத்தியத்தின் முடிவும், கடாபியின் போலியான ஏகாதிபத்திய எதிர்ப்பை முடிவுக்கு கொண்டு வந்தது. இதற்கு பிந்தைய காலத்தில் தடுமாறிய கடாபியின் "ஏகாதிபத்திய" எதிர்ப்பு நாயகன் வரலாறு அம்பலமானது. அதுவரை காலமும் மேற்கிற்கு எதிராக இருந்ததால், கடாபியின் சூறையாடப்பட்ட பணம் உள்நாட்டின் சுழற்சிக்குள் இருந்தது.

1990 களில் பின் மேற்கு சார்ந்து கடாபி பிழைக்க முற்பட்டதும், தான் கொள்ளையிட்ட செல்வத்தை மேற்கில் கொண்டு சென்று முதலிடுவதற்கு ஏதுவாக கடாபி தன்னை மாற்றிக்கொண்டான். மேற்கு ஏகாதிபத்தியங்கள் கடாபி கொள்ளையிட்ட செல்வத்தை தனக்குள் உள்ளிழுக்கும் கொள்கை மூலம், கடாபி – மேற்கு ஏகாதிபத்;தியதுக்கும் இடையிலான தேன்நிலவு தொடங்கியது.

இதற்கமைய உலகமயமாக்கல் கடாபியின் கடந்தகால எதிர்ப்;பு அரசியலை இல்லாதாக்கியது. உள்நாட்டில் புரண்ட பணம் மேற்கு நோக்கி சென்றது. எண்ணை வயல்கள் மேற்கு பன்நாட்டு நிறுவனத்தின் துணையுடன் இயங்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அதை அவர்கள் சொந்தமாக்க முனைந்ததும், பல நாடுகள் இதற்காக போட்டியிட்டதும், ஏகாதிபத்திய முரண்பாடுகள் மீண்டும் கூர்மையாகி வரும் புதிய சூழலில் தான், கடாபி கதை மேற்கு ஏகாதிபத்தியத்தால் முடிக்கப்பட்டது.

இதற்கான யுத்தத்தை நடத்திய ஏகாதிபத்தியங்கள் 30000 மக்களை கொன்று இருக்கின்றனர். லிபிய மக்கள் பெறப்போவது எதுவுமில்லை. முந்தைய சமூக பொருளாதார நலன்களை ஏகாதிபத்தியத்திடம் இழந்துவிடுவதைத் தவிர, வேறு எதையும் அடையப்போவது கிடையாது. கடாபி கொள்ளையிட்டதுக்கு பதில் புதிய கும்பலும், ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் சூறையாடலும் தான் கடாபிக்கு பிந்தைய லிபியாவில் நடக்க இருக்கின்றது. லிபிய பழங்குடி மக்களிடையே மோதலை பரிசாக கொடுத்து, இஸ்லாமிய அடிப்படைவாதத்தைத் தூண்டி லிபியாவை கொள்ளையிடுவது தான் மேற்கு ஏகாதிபத்தியத்தின் இன்றைய கொள்கையாகும். இதற்காக தான் யுத்தத்தை நடாத்தி, கடாபியைக் கொன்று போட்டது.

பி.இரயாகரன்

24.10.2011

Last Updated on Monday, 24 October 2011 17:08