Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் மோசடிக்காரன் அன்னா ஹசாரேவுக்கு பின்னால் படித்த பகுத்தறிவற்ற முட்டாள்கள்

மோசடிக்காரன் அன்னா ஹசாரேவுக்கு பின்னால் படித்த பகுத்தறிவற்ற முட்டாள்கள்

  • PDF

மோசடிக்காரன் அன்னா ஹசாரே ஊழல் என்று சொல்வது எதை? இதன் மூலம் யாருக்கு சேவை செய்கின்றார்? இந்த அடிப்படையில் இதை அணுகாதவரை, இதன் பின் மூடிமறைத்துள்ள சூக்குமத்தை விளங்கிக்கொள்வது என்பது, விளக்கிக் கொள்வது என்பது சிரமமானது. இங்கு "ஊழல் எதிர்ப்பு" என்பது, மூலதனத்திடம் ஊழல் செய்வதை தடுத்து நிறுத்தக் கோருகின்றது. இதற்குச் சிறப்பு சட்டம் தேவை என்பதை கூறாது, ஊழல் எதிர்ப்பாக மக்கள் உணர்வுகளை திருடி முன்வைக்கின்றது.

 

 

ஊழல் என்று மோசடிக்காரன் அன்னா ஹசாரே கூறிப் போராடுவது, தனியார்மயமாக்கலின் போது இடையில் உள்ளவருக்கு பணம் கொடுக்கவேண்டி இருப்பதையே தடுக்கும்படி கோருகின்றார். இதைத்தான் அவர் ஊழல் என்கின்றார். இந்த இடைக் கமிசனால் உலகெங்கும் பல நூறு கோடி டொலர் கொடுக்கவேண்டி இருப்பதாக கூறும் உலகமயமாக்கல் அறிக்கைகள், இதைத் தடுத்து நிறுத்த எடுக்கும் முயற்சியின் வெளிப்பாடகத்தான் அன்னாவின் போராட்டம் பெரும் மூலதனத்தின் துணையுடன் அரங்கேறுகின்றது. அரசு பொதுச் சொத்துகளைத் தனியாருக்கு விற்கும்போது, கமிசன் வாங்காது விற்குமாறு, அதை நெறிப்படுத்தும்படி கோருகின்றது மூலதனம். அதாவது தனியார் சொத்துகளை கமிசன் இன்றி, தனியார் அதிக இலாபம் பெறும் வண்ணம் அரசு பாதுகாக்க வேண்டும் என்பது தான் இந்த போராட்டத்தின் சாரம். வேலியை ஆடு மேய்ந்துவிடக் கூடாது என்பது தான் அன்னா தெரிவிக்கும் ஊழல் எதிர்ப்பு மோசடி. பொதுச்சொத்து விற்பனையில் அதிக இலாபத்தை அரசு பெறுவது பற்றி இங்கு அன்னா பேசவில்லை, தனியார் கமிசன் கொடுக்க வேண்டி இருப்பது பற்றிய கவலைதான், இங்கு ஊழல் எதிர்ப்பு போராட்டம். இப்படி பெருமூலதன நலன்தான், அன்னாவின் ஊழல் ஒழி;ப்பு பற்றிய கூச்சல். தனியார்மயப்படுத்துவதில், தனியார் சொத்தை பெருக்கும் வகையில், அதில் ஊழல் இருக்கக் கூடாது என்பதே ஒழிய, அரசு அதிக விலைக்கு விற்பது பற்றியதல்ல அன்னாவின் போராட்டம்.

இலவசங்களையும், மானியங்களையும், சலுகைளையும் கொடு, இடையில் நின்று கமிசன் வாங்குவதை நிறுத்துங்கள் என்பதுதான் மூலதனத்தின் கோரிக்கை. இதைத்தான் மோசடிக்காரன் அன்னா ஹசாரே முன்னிறுத்தி கூச்சல் போடுகின்றார்.

இதனால் தான் இந்தப் போராட்டத்தை பெருமூலதனம் ஆதரிப்பதுடன், அதன் தயவில் இயங்கும் ஊடகங்கள் போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றது. தி.மு.க ராஜா, கனிமொழி உள்ளே இருப்பதும் கூட இதனால்தான். இங்கு நடப்பது பெருமூலதனத்துக்கும், அதனிடம் இருந்து கமிசன் பெற்று பல நூறு கோடியை திரட்டிய அரசியல் கூட்டத்துக்கும் இடையிலான இழுபறி. திமுக ராஜா எழுப்பும் தனியார்மயமாதல் பற்றிய அரசின் கொள்கை தான் பின்பற்றியதல்ல அவரின் கைதுக்கான காரணம், அவர் இதற்காக வாங்கிய கமிசன்தான் என்பது இதன் பின்னுள்ள சூக்குமம். பெரு மூலதனம் கமிசன் இன்றி, தனியார்மயப்படுத்தக் கோருகின்றது. இங்கு இதைத் தடுத்து நிறுத்த, ராஜா, கனிமொழி கமிசன் வாங்கி குறைந்தவிலையில் விற்றதாக கூறுவது உலகத்தை ஏமாற்றத்தான். இந்த விலைக்கு விற்பது அரசின் கொள்கை. அரசின் கொள்கை இதுதான் என்று ராஜா வாதிடுவதன் மூலம், குறைந்த விலையில் விற்றதாக கூறும் "ஊழல் எதிர்ப்பு" பொய்யை அம்பலமாக்க முடியும். ஆனால் கமிசன் வாங்கியதை இதன் மூலம் சரிக்கட்ட முடியாது.

மோசடிக்காரன் அன்னா ஹசாரே இந்தக் கமிசனைத்தான் ஊழல் என்கின்றார். அரசு எந்த விலைக்கும் விற்கலாம், அது பற்றி கவலை கிடையாது. அது ஊழல் இல்லை என்பது தான் மோசடிக்காரன் அன்னா ஹசாரேயின் நிலை. இதுதான் மூலதனத்தின் கொள்கை.

இங்கு அரசு இரண்டையும் சமாளிக்க (மூலதன நலன், கமிசன்காரனின் நலன்;), அன்னா பெரு மூலதனத்தை சார்ந்து நின்று முன்மொழிவை முன்வைக்கின்றார். இதுதான் இவர்களுக்கு இடையிலான முரண்பாடு. மோசடிக்காரன் அன்னா ஹசாரே பின்னால் பெருமூலதனம் போராட்டத்தை நடத்துகின்றது. இப்படி போராட்டமே, போராட்ட வடிவமே மூலதனத்தின் தயவில் ஊழல் நிறைந்தது.

இங்கு அன்னா ஹசாரே என்ற மோசடிக்காரன், பெருமூலதனம் இடைத்தரகு பணத்தை கொடுக்காவிட்டால், அதிக விலைக்கு தனியார்படுத்த முடியும் என்ற படித்த முட்டாள்களின் நம்பிக்கையின பின் அவர்களை அணிதிரட்டுகின்றார். பொதுவாக ஊழலுக்கு எதிரான மக்கள் அபிப்பிராயத்தை, பெருமூலதனத்தில் நலனுக்கு தாரைவார்க்கும் மோசடியை அரங்கேற்றுகின்;றார். "சந்தை விலைக்கு" (இந்தச் சந்தை விலை என்பது மோசடிதான்) கீழ் மக்கள் சொத்தை வழங்கியும், மூலதனத்துக்கு மானியம் வழங்கியும், இலவசங்கள் மூலமும், தனியார் மயப்பபடுத்தும் நடைமுறை சார்ந்த அரசியல் அமைப்பை ஊழல் கொண்டதாக காட்டாத கமிசன் வாங்கும் இடைத்தரகருக்கு எதிரான போராட்டம்.

இதன் பின்னணியில் யார் எல்லாம் அரசுக்கு எதிராக போராடக் கூடாது என்று சொன்னார்களோ, அவர்கள் எல்லாம் மோசடிக்காரன் அன்னா ஹசாரே பின் அணிவகுத்து நிற்கின்றனர். போராட்டங்கள் தனிமனித உரிமையையும் சுதந்திரத்தையும் பாதிப்பதாக கூறி போராட்டத்தை வெறுத்தொதுக்கியவர்கள் எல்லாம், மோசடிக்காரன் அன்னா ஹசாரேவின் போராட்டத்தின் பின் கூவி அழைக்கின்றனர். மக்கள் போராட்ட செய்திகளை எந்த ஊடகங்கள் இருட்டடிப்பு செய்ததோ, அந்த ஊடகங்கள் மோசடிக்காரன் அன்னா ஹசாரேவின் போராட்டத்தை தலைப்புச் செய்தியாக போட்டு போராட்டத்தை நடத்துகின்றது.

இப்படி மக்கள் போராட்டத்தை வெறுத்து ஒதுக்கிய கூட்டம் தான், மோசடிக்காரன் அன்னா ஹசாரே பின் நிற்கின்றது என்றால், இதுவொரு திட்டமிட்ட கூட்டு மோசடியாக அரங்கேற்றப்படுகின்றது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஊழலுக்கு எதிரான சட்டப்பிரிவுகள் இருக்க, அதைக்கொண்டு ஊழலை தண்டிக்க முடியவில்லை என்றால் இந்த அரசியல் அமைப்பை தூக்கியெறிய வேண்டும். இப்படி உண்மையிருக்க, புதிய சட்ட நடைமுறையாலும் தண்டிக்க முயுயும் என்பது, அதன் பின் அணிதிரண்டுள்ள படித்த முட்டாள்களின் துணையுடன் மக்களை ஏய்க்கும் மாபெரும் அரசியல் மோசடி. இப்படிப் பார்த்தால் இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தில் சாதிய ஒடுக்குமுறை, மத ஒடுக்குமுறைக்கு எதிராக சட்டம் தண்டிக்கவில்லை என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டு, இந்த இந்து பார்ப்பனிய சாதியக் கூட்டம் சிறப்புச் சட்டத்தைக் கோர வேண்டியது தானே. இங்கு ஊழல் எதிர்ப்பு என்பது, மூலதனத்திடம் ஊழல் செய்வதை தடுத்த நிறுத்தக் கோருகின்றது. இதற்கு சிறப்பு சட்டம் தேவை என்பதைக் கூறாது, ஊழல் எதிர்ப்பாக அதை முன்வைக்கின்றனர்.

இந்த மோசடிக்கு காந்திய வழிகள் தான் மீண்டும் உதவுகின்றது. காந்தி இந்திய "சுதந்திரத்தை" பெற்றுத் தந்தான் என்று நம்புகின்ற, நம்ப வைக்கின்ற அதே பின்னணியில் இது அரங்கேறுகின்றது. 2ம் உலக யுத்தத்தின் பின் பல நாடுகளில் விடுதலைப் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், ஏகாதிபத்தியம் பல நாடுகளை தங்கள் விசுவாசமான வளர்ப்பு நாய்களிடம் ஆட்சியை கொடுத்துவிட்டு அதைச் சுதந்திரம் என்று கூறி வெளியேறியது. இதைத்தான் இந்திய "சுதந்திரம்" என்றும், இந்திய "விடுதலை" என்றும் கூறியவர்கள் தான், காந்திதான் இதை பெற்றுத தந்தாகவும் கூறினர்.

இதை நம்பும் படித்த முட்டாள்கள் தான், மோசடிக்காரன் அன்னா ஹசாரே பின் நின்று ஊழல் ஓழிப்பு பற்றி கூச்சல் எழுப்புகின்றனர். இங்கு ஊழல் என்ற மோசடிக்காரன் அன்னா ஹசாரே எழுப்புவது, பொதுச் சொத்துகளை தனியாருக்கு விற்றலையல்ல. பொதுச்சொத்து மக்களுக்கு சொந்தமானது. கடல் நீர், ஆகாயம் என அனைத்தும் மக்களுடையது. அதாவது இயற்கையின் சொத்து. பல இயற்கை உயிரினங்களின் சொத்தும் கூட. இதை அரசு தனியாருக்கு விற்க எந்த உரிமையும் கிடையாது.

அங்கு வாழும் மக்களையும், அதைச் சார்ந்து வாழும் மக்களையும் ஒடுக்கி, தனியார் மயமாக்கும் அரசியல் கொள்கை, அரசுடையது மட்டுமல்ல மோசடிக்காரன் அன்னா ஹசாரே கொள்கையும் கூட. மக்களின் வாழ்வுக்கு ஏற்படும் இழப்பை ஊழலாக கருதாத கூட்டம், மோசடிக்காரன் அன்னா ஹசாரே பின் நிற்கின்றது. இதன் கவலைகள் என்ன? இதை வாங்கும் பெருமூலதனம் இடைத் தரகர்களுக்கு கொடுக்கும் கமிசனை ஒழிக்க வேண்டும் என்கின்றது. இதையே ஊழலாகக் காட்டி அதை ஒழிக்கக் கோருகின்றது. இங்கு பணம் வாங்கும் இடைத்தரகர்களை குறிவைக்கும் மோசடிக்காரன் அன்னா ஹசாரேவின் திட்டம், பணம் கொடுத்தவனை குற்றவாளியாக முன்நிறுத்தவில்லை. விபச்சாரத்தில் பெண்ணை குற்றவாளியாக்கும் ஆணாதிக்கம், ஆணை குற்றவாளியாகக் கருதாத அதே உள்ளடக்கத்தைத்தான் ஊழல் பற்றிய மோசடிக்காரன் அன்னா ஹசாரே முன்தள்ளுகின்றார்.

இங்கு ஊழல் என்பதே தனியார் மயமாக்கல் தான். பொதுச் சொத்தை தனியார் மயப்படுத்தும் கொள்கையும், அதன் நடைமுறையும் தான். மக்கள் வளங்களை வன்முறை மூலம் பலாத்காரமாக அபகரித்து கொடுக்கும் அரசின் நடைமுறையே ஊழல்தான். இதை ஊழலாக கருதாத மூலதனம் தான், இங்கு இதன் பின் இயங்குகின்றது. அரச அதிகாரத்தைக் கொண்டு இடைதரகர்கள் பெறும் பணத்தை மட்டும் ஊழலாக காட்டும் மோசடியை, அதை மட்டும் ஒழிக்கக் கோரும் பெருமூலதனத்தின் கோரிக்கையையே, மூடிமறைத்து நடத்தும் போராட்டமே ஊழல் தான். காந்தி போல், மோசடிக்காரன் அன்னா ஹசாரேயும் முன்வைக்கின்றார். படித்த முட்டாள்களின் பகுத்தறிவற்ற மூட நம்பிக்கையின் துணையுடன், மோசடிக்காரன் அன்னா ஹசாரேவை பெருமூலதனம் ஆதரித்து நிற்கின்றது. மோசடிக்காரன பெரும் போராட்டக் காரணாக விளம்பரம் செய்கின்றது.

அரசு பெரும் மூலதனத்தின் நலனை பாதுகாக்க, கமிசன் பெற்று பணக்கார கூட்டமாக உயர்ந்த தனது சொந்த அரசியல் சகாக்களை மூலதனத்தின் நலன் சார்ந்து கைவிடுவது தவிர்க்க முடியாது. மோசடிக்காரன் அன்னா ஹசாரே போராட்டம் இந்த வகையில் பெருமூலதனத்தின் விருப்புடன், அரசின் அங்கீகாரத்துடன் தொடர்ந்து அரங்கேறுகின்றது. படித்த முட்டாள்களின் "ஊழல் எதிர்ப்பு" விருப்புடன் அல்ல.

 

பி.இரயாகரன்

21.08.2011

Last Updated on Sunday, 21 August 2011 17:49