Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் இனியொருவும், தேசம்நெற்றும்- வன்முறைக்குள்ளான ராஜின் அறிக்கை

இனியொருவும், தேசம்நெற்றும்- வன்முறைக்குள்ளான ராஜின் அறிக்கை

  • PDF

கருத்தை கருத்தல் வெல்ல முடியாதவர்களின் சர்ந்தர்ப்பவாத அரசியலை தோலுரித்துக் காட்டும் வண்ணம் அண்மையில் எனக்கு நடந்த தாக்குதலை மையாமாக வைத்து ஒரு சில இணயங்கள் தமக்கு வேண்டிய அரசியலை எனது பெயரை பாவித்து செய்கின்றனர். இவ்வாறான அரசியல் போக்கையும் அனாகரீகனமான செய்றபாட்டையும் நான் கண்டிப்பதுடன் அவர்களது செய்திகள் அறிக்கைகள் மீதான மறுப்பறிக்கையை முன்வைக்கின்றேன்.

 

எனக்கு என்ன நடந்தது என்பதை முதலில் நான் கூறியாக வேண்டும். தீபம் தொலைக்காட்சியில் புலிகளின் கொடியை ஊhவலங்களில் பிடிப்பது சரியா? தவறா? என்ற விவாதத்தில் கலந்து கொண்ட நான் எதேட்சையாக தேசம் நெற் ஆசிரியரில் ஒருவரும் இலங்கை அரசு சார்பாளருமான கொன்சன்ரைனுக்கு அருகாமையில் அமர்ந்தேன். உண்மையில் அவ்விவாதத்தை அவதானிப்பீர்கள் ஆனால், அதில் ஓருவர் இந்தியா சார்புதன்மை கொண்டவரும் மற்றவர் புலிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியவரும் ஒருவர் இலங்கை சார்பு அரசில் கொண்டவரும் நான்காவதாக நான் மாற்றுக்கருத்தை கொன்டவனாகவும் இருந்தோம். இதில் இலங்கை சார்பு தன்மை கொண்டவரின் அருகாமையில் இருந்ததால,  நான் இலங்கை சார்பானவன் என்ற பார்வை முட்டாள் தனமானது. அத்தகைய பார்வையை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இனியொரு குறித்து:

எனக்கு அடித்தது புலிகளின் அரசியல் என்பது கருத்தை கருத்தால் வெல்ல முடியாத செயற்பாடு.  இதை அரசியல் ரீதியல் அம்பலப்படுத்துவதை விடுத்து ஒவ்வோருவரும் தாம் சார்ந்த அரசிலை மறைமுகமாக இப்பிரச்சனைக்கும் செயற்படுத்த முனைகின்றனர்.


இனியொருவில் நான் புதிய திசைகள் அமைப்பினருடன் தொலை பேசியல் கதைத்ததாக கூறி ஒரு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  இதில் நான் அவர்களிடம் கூறாத பல விடையங்களை தமது கற்பனையில் ஏன் தமது அரசியல் இலாபத்திற்காக புனைந்துள்ளனர்.

 

இவர்கள் புலிகளின் அரசியலை மறைமுகமாக செயற்படுத்தும் நோக்கம் இங்கு வெளியாகியுள்ளது. வன்னியன் பூட்க்கு முன்பாக 26.06.2011 காலை பத்து மணிக்கு ஜனநாயகவாதிகளால் நடத்தப்பட்ட ஒன்று கூடலை  திசை திருப்ப முனைந்துள்ளனர். இவ்வாறான செயற்பாடடை நான் வன்மையாகக் கண்டிப்பதுடன்,  இனிவரும் காலங்களில் பொறுப்புடன் செயற்படுவதே சிறந்தது.


தேசம்நெற் குறித்து:

 


புலம் பெயர்ந்த காலத்தில் இருந்தே மற்றுக் கருத்துக்காக புலம் பெயர் நாடுகளில் குரல் கொடுப்பவர்களில் நானும் ஒருவன். இக்காலத்தில் ஈழபூமி என்ற பத்திரிகையை வெளியிட்டும் அதன் பின் உயிர்ப்பு, தமிழீழ மக்கள் கட்சி,……….. இயங்கி வரும் என்னை அரச ஆதரவாளர் என்று தேசம் நெற்றில் ‘புலிகளின் வால்கள் நியூமோல்டன் பகுதியில் சண்டித்தனம்‘ என்ற கட்டுரையில் விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்து, சிறீலங்கா அரசுடன் இணைந்தே தமிழ் மக்களின் உரிமைகளுக்குப் பரிகாரம் தேட வேண்டும் என்ற கருத்துப்பட ரி.கொன்ஸ்ரன்ரைன், எஸ் வாசுதேவன், வி சிவலிங்கம், என்.கங்காதரன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சஞ்சீவ்ராஜ் (குட்டி) ஆகியோர் மாறிமாறி கலந்து கொள்கிறார்கள். எனக் குறிப்பிட்டதன் மூலம் என்னை இலங்கை அரசு சார்பானவர் என்று கருதப்படுவதை வன்மையாக கண்டிப்பதுடன், இவ்வசனத்தை நீக்குமாறு தேசம் நெற்றுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அதையும் அவர்கள் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. கொன்சன்ரைனும் ஜெயபாலனும் தமது அரசியலை எனது பெயரில் திட்டமிட்டு தி
ணிக்கிறார் மாற்றுக் கருத்தாளர்களை சிதைக்கும் முயற்சியாகவே நான் கருதுகின்றேன்.

நட்புடன்
குட்டி
(தயவுசெய்து இதை உங்கள் இணையங்களில் பிரசுரிக்கவும்)

Last Updated on Tuesday, 28 June 2011 12:29