Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் பார்ப்பன குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் பாருங்கள்?

பார்ப்பன குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் பாருங்கள்?

  • PDF

நான் பல ஆண்டுகள் பார்ப்பனர்களின் சதியோ, அவர்களின் சாதிவெறியோ அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்களைப்பற்றி சரியாக அறிந்த பின்பு அவர்கள் எந்த அளவுக்கு ஒவ்வொரு செயலிலும் , அணுவிலும், மூச்சிலும் சாதியத்தை , பார்ப்பனீயத்தை பரப்புகிறார்கள் , இவர்கள் எவ்வளவு ஆழமாக சிந்தித்து தனது கருத்துக்களை பரப்புகிறார்கள் என்பதை நினைக்கும் போது ஆச்சரியத்தில் ஆழ்ந்து போகின்றேன்.



அவர்களின் பார்ப்பன வெறியை பார்ப்பன குழந்தைகள் இடத்திலிருந்து ஆரம்பிக்கிறார்கள். இதனை நான் புரிந்து கொள்ளவே இல்லை அப்பொழுது. ஆனால் பல ஆண்டுகள் கழித்து நான் “அட அந்த நாய் எப்புடி பேசியிருக்கான்” என நினைப்பதுண்டு.

 



——————————

கதை – 1

இப்போது நான் ஏழாவது படிச்சுக்கிட்டுருக்கிறேன். என்னோட க்குளோஸ் நண்பன் விஷ்ணு. நானும் விஷ்ணுவும் அரைக்கிளாஸ்ல இருந்து நண்பர்கள். அரைக்கிளாஸ்ல அவன் தன்னோட பேனாவை விட்டுட்டு போயிட்டான். அடுத்த நாள் நான் அவனுக்கு அதைத்தந்தேன் அப்படித்தான் நானும் அவனும் பிரண்டானான். நானும் அவனும் சில வருடங்கள் வேற வேற செக்சனில் படிச்சாலும் ஒண்ணாவே ஸ்கூலுக்கு போவோம், ஜாலியா விளையாடிகிட்டு இருப்போம்.

அவனோட அப்பா, அம்மா எல்லாருமே எனக்குத்தெரியும். எங்க வீட்டுக்கு போகணுமின்னா அவங்க வீட்டத்தாண்டித்தான் போகனும். பையன் நல்லா வெள்ளையா கொழுக் மொழுக்குன்னு இருப்பான். ஐந்தாவது படித்து முடிக்கறதுக்குள்ள அவனுக்காக பல பேர்கிட்ட நான் சண்டை போட்டிருக்கேன், அடி கொடுத்துட்டும் பல சமயம் அடி வாங்கிட்டும் வருவேன்.

5 வது வரைக்கும் ஒண்ணா படிச்ச எங்களை 6-ம் வகுப்புக்கு மேல் நிலைப்பள்ளிக்கு போனதால அவனும் நானும் வேற வேற பிரிவுக்கு மாத்தி போட்டுட்டு பிரிச்ச்சுப்புட்டாங்க. 7-ம் வகுப்பு ரெண்டு பேரும் ஒரே வகுப்புல போட்டுட்டாங்க. எனக்கு அவாஅளவு சந்தோசம் சரி பழைய பிளாஷ் பேக்குக்குள்ள ரொம்ப நேரம் போகாம நேரா கதைக்குள்ள வந்துடறேன்.

நான், ஜான், சுரேஷ், அப்புறம் என் உயிர் நண்பன் விஷ்னு எல்லோரும் ஒரே குரூப். விளையாடுனாலும் சரி என்ன பண்ணினாலும் ஒரே மாதிரிதான். நாங்க எல்லோரும் அவன வெள்ளையான்னுதான் கூப்பிடுவோம், இல்லை “பாப்பா” ன்னு தான் கூப்பிடுவோம். பாக்குறதுக்கு பையன் குழந்தை மாதிரி வெள்ளையா கொழுக்மொழுக்குன்னு இருக்கறதால அந்தப்பெயர்.

திடீர்ன்னு ஒரு நாள் சுரேஷ்க்கும் விஷ்ணு வுக்கும் சண்டை வந்துடுச்சு. இவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டு இருந்தங்க. என்ன சண்டை? ஓடிப்புடிச்சு விளையாடறதுல இருந்த தப்புதான். திடீர்ன்னு விஷ்ணு டீச்சர்கிட்ட போனான் என்னவோ சொன்னான். டீச்சர் சுரேஷை கூப்பிட்டாங்க, குச்சி உடையற வரைக்கும் அடிச்சாங்க. அப்புறாம் உன்னோட பிரண்ட்ஸ்களை கூப்பிடுன்னு விஷ்ணு கிட்ட சொன்னாங்க.

நாங்க எல்லாம் பயந்துகிட்டே போய் நின்னோம்.

“டேய் சுரேஷ் உன்னை என்னடா சொன்னான்?” அப்படீன்னு டீச்சர் கேட்டாங்க? அதுக்கு விஷ்ணு சொன்னான் “டீச்சர் என்னை பாப்பான் பாப்பான்னு கூப்பிட்டன் டீச்சர், என் சாதிப்பேரை சொல்லறான் டீச்சர்”.
உண்மையில் எங்கள் யாருக்கும் அய்யரை பார்ப்பான் என்றூ கூப்பிடுவார்கள் என்ற விசயமே தெரியாது. குழந்தையை பாப்பா என்பார்கள் அப்படித்தான் அவனை அழைத்தோம். ஆனால் அவன் விளையாட்டுப்பிரச்சினையில் சாதியை இழுத்து அடி வாங்கிக் கொடுத்துவிட்டான்

இந்த சம்பவத்தை நினைக்கும் போது இப்போது கூட ஆச்சரியமாய் இருக்கிறது. பார்ப்பன குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் பாருங்கள்?

இது மாதிரி நிறைய கதைகள் இருக்கிறது பிறகு ஒவ்வொண்ணா வரும்

http://kalagam.wordpress.com/

Last Updated on Sunday, 31 October 2010 06:26