Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் இது துரோகத்தின் விளைநிலம் - 2

இது துரோகத்தின் விளைநிலம் - 2

  • PDF

போபால் வழக்குத் தீர்ப்பு மற்றும் இந்திய மக்களுக்கு இந்த அரசு செய்த மாபெரும் துரோகம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்த துரோகத்திற்கு உள்ளேயே இன்னொரு உப துரோகம் உள்ளது.

போபால் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நீக்கப்படாமல் சேர்த்து வைக்கப்பட்டிருந்த யூனியன் கார்பைடு ஆலையின் நச்சுக் கழிவுகள் அந்தப் பகுதியில் கடுமையான உடல் நலக் குறைபாடுகளையும், காற்று, நிலம், நீர் மாசுபாட்டையும் ஏற்படுத்தி வந்தது. இதனை எதிர்த்து மக்களும் தொடர்ந்து போராடி வந்தனர். போபால் கழிவுகளை சுத்தப்படுத்தி அப்புறப்படுத்தும் பொறுப்பு அசுத்தப்படுத்திய யூனியன் கார்பைடு (இன்றைய டௌ கெமிக்கல்ஸ்) நிறுவனத்துக்கே சொந்தம் என்பது மக்களின் முக்கியக் கோரிக்கை. ரத்தன் டாடா சில வருடம் முன்பு மாமா வேலை பார்க்கும் முகமாக நான் வேண்டுமானால் சுத்தம் செய்கிறேன் என்று சொல்லிப் பார்த்தார். அதனை எதிர்த்தும் மக்கள் போராடினார்கள். இனி உலகில் போபால் போல ஒன்று நடைபெறாமல் இருக்க வேண்டுமெனில் சுத்தப்படுத்தும் பொறுப்பு யூனியன் கார்பைடிற்கே செல்ல வேண்டும் என்று உறுதியுடன் நின்று போராடி வருகிறார்கள் மக்கள்.

இன்னிலையில் போபால் வழக்குத் தீர்ப்பு வந்தது. தீர்ப்பு எனும் துரோகம் கிளப்பிய சந்தடி அடங்கும் முன்பே அடுத்தக்கட்ட துரோகம் ஒன்றும் வெளி வந்துவிட்டது. யூனியன் கார்பைடு ஆலையின் நச்சுக் கழிவுகளில் 40 டன்களை ரகசியமாக பிதாம்பூர் என்ற கிராமத்தில் கொண்டு போய் கொட்டியுள்ளது அரசு.இதை 2008லேயே செய்துள்ளனர். அதாவது ரத்தன் டாடா மாமா வேலை பார்க்கிறேன் என்று சொன்னார் அல்லவா? அதற்கு எதிர்ப்பு வந்தது அல்லவா? எனவே வெளிப்படையா செய்தால்தான் பிரச்சினை என்று ரகசியமாக செய்துள்ளனர். இப்போது அம்பலமாகியுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

எந்தளவுக்கு மக்களை கிள்ளுக் கீரையாக எண்ணியிருந்தால் இந்த அரசு இந்தத் துரோகத்தைச் செய்திருக்கும்? போபால் மக்கள் எக்கேடு கெட்டால் என்ன என்று டௌ கெமிக்கல்ஸுக்கு ஆதரவாக நின்று அந்த மக்களை இன்று வரை வதைத்து வருகிறது எனில், இன்னொரு பக்கம் அதே டௌ கெமிக்கல்ஸை தப்பிக்க வைக்க, திருப்திப்படுத்த ரகசியமாக நச்சுக் கழிவுகளை இன்னொரு கிராமத்தில் சென்று பதுக்குகிறது. அந்தக் கிராம மக்களுக்கும் பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படுமே, அங்கும் நீர், நிலம், காற்று பாதிகப்படுமே என்பது பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலையில்லை. இந்தியாவில் கம்பனி ஆரம்பிக்கும் அமெரிக்க நிறுவனங்கள் தாம் ஏற்படுத்தும் விபத்துக்களுக்கு பொறுப்பேற்க வேண்டாம் என்றும் சட்டம் கொண்டு வர ஏற்பாடு செய்த அரசுதானே இது. கீழே தள்ளிய குதிரை குழியும் பறித்ததாம்.

இப்படி மக்களை காட்டிக் கொடுத்து கழுத்தறுப்பதைப் பற்றி ஒரு துளியளவு கூட கவலைப்படாத, பன்னாட்டு கம்பனிகளுக்கு பாதசேவை செய்யும் ஒரு துரோக அரசை தாங்கி நிற்கின்ற அமைப்பின் பெயர் ஜனநாயகம் என்றால் நம்மால் வாயால் சிரிக்க இயலவில்லை.

தயவு செய்து உன்னோட ஜனநாயக உளறல்களைத் தூக்கி கக்கூஸில் போடு.....

(போபால் பற்றிய விரிவான செய்திகள் கட்டுரைகள் ஜூலை மாத புதிய ஜனநாயகம் சிறப்பிதழில் கிடைக்கும்)

அசுரன்

Air, Water, Earth And The Sins Of The Powerful

Ramesh apologises for dumping of Carbide waste

End Of Bhopal Protests?

The Night Bhopal Was Poisoned In Its Sleep

Timeline: The Toxic Trail

அணு உலை விபத்து இழப்பீடு மசோதா: அமெரிக்காவின் இலாபவெறிக்கு இந்திய மக்கள் பலிகிடா!

போபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு!

முள்ளிவாய்க்கால் – போபால்

புதிய ஜனநாயகம்,போபால் – சிறப்பிதழ், ஜூலை-2010, மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

Last Updated on Thursday, 15 July 2010 19:55