Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் லீனாவுக்காக, தமிழ்ச்செல்வன் வாரிசாக மாறிய கருங்காலி சோபாசக்தி

லீனாவுக்காக, தமிழ்ச்செல்வன் வாரிசாக மாறிய கருங்காலி சோபாசக்தி

  • PDF

கூலி கேட்டதற்காக நான் அடிக்கவில்லை. கசெற்றை பெறத்தான், தொலைபேசி எண்ணைப் பெறத்தான் அடித்தேன். இங்கு எந்த கூலிப் பிரச்சனையும் கிடையாது. இப்படி சோபாசக்தி விளக்கம் கொடுக்கின்றார். சரி, நீ சொல்வது தான் உண்மை என்று எடுத்து, இது தான் உண்மையா நியாயமா என்று பார்ப்போம். 

 

சரி, அவங்கள் ஏன் கசெட்டை எடுத்துக் கொண்டு போனாங்கள்;. அவங்களுக்கு என்ன லூசா? கசெட்டை கொண்டு போனதற்கு கூலிப் பிரச்சனை காரணமில்லை என்றால், அந்த இனந்தெரியாத காரணம் தான் என்ன? நீ அடித்தாயே, அந்த தீபக் சொல்லித்தான் அவர்கள் அதைக் கொண்டு போனார்களா!? தீபக் அப்படி செய்தான் என்றால், அதற்கு ஆதாரம் என்ன? அப்படி என்னதான் காரணம்? இதைச் செய்வதற்கு இருந்தது. "உலகின் அழகிய முதல் பெண்" அடையும் கதாநாயகன் வில்லன் சண்டைப் படமா இது? 

 

"பழி நாணுவார்" என்ற உனது கட்டுரையில் நீ கூறுகின்றாய் "நான் தாக்கியது ஒரு தொழிலாளியையல்ல. நான் தாக்கியது ஒரு கருங்காலியை." என்கின்றாய். சரி இந்த "கருங்காலி" என்ற சொல்லைத் தெரிந்து வைத்திருப்பதால் தான், நீ உன்னை "கம்யூனிஸ்ட்" என்கின்றாயோ!? மார்க்சியத்தை நீ தெரிந்து கொண்ட திரொஸ்கியம், முதலாளிக்காக வேலை செய்வதை மறுப்பதைத்தான் கருங்காலித்தனம் என்று சொல்லித்தந்தது!? சரி உன் அகராதியில் "கருங்காலியை" தாக்கலாம் என்றால், நீ அதை பச்சையாக புலி நடேசன்  பாணியில் நியாயப்படுத்தலாம் என்றால், லீனாவையும் கூட அடிக்கலாம்.

 

கருங்காலி என்ற சொல்லுக்குரிய மார்க்சிய அர்த்தத்தைப் பார்ப்போம். தொழிலாளர்களின் போராட்டங்களை முறியடிக்கும் முதலாளிகளின் கைக் கூலிகளை குறிக்கும்சொல். இங்கு தீபக் அப்படி என்னதான் லீனா என்ற அந்த முதலாளிக்கு செய்தான் சொல்? நீ தான் லீனா என்ற முதலாளிக்காக, கருங்காலி வேலை பார்த்தாய். "உலகின் அழகிய முதல் பெண்" என்று கூறும் லீனாவுக்காக, அவரிடம் வேலை செய்தவர்களை தாக்குகின்றாய். சரி எதற்காக? நீ கசெட் என்கின்றாய். சரி, இதற்காக ஒரு தொழிலாளியை தாக்க முடியுமா? அப்படி தாக்க முடியாது. இதை ரவுடிகள், கருங்காலிகள் தான் செய்வார்கள். நீ அந்த "உலகின் அழகிய முதல் பெண்"ணின் கதாநாயகனாக இருக்க, ஒரு முதலாளிக்காக தாக்குகின்றாய்.

 

அடுத்த உன் வாதத்தைப் பார்ப்போம்;." ஃபுட்டேஜ்களை இரவே தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது உதவி இயக்குனர் தீபக்கின் வேலை." என்கின்றாய். இது தன் வேலையில்லை என்று அவர் மறுக்கின்றார்.  நீ சொல்லுகின்றாய் அவர் வேலை என்கின்றாய். அப்படியே எடுப்போம். தரவிறக்கம் செய்யவில்லை என்பதால், அவரைத் தாக்க முடியுமா? இதை எப்படி நியாயப்படுத்த முடியும்? இங்கு இதிலும் கூட தான் நீ அசல் கருங்காலி.

 

இங்கு உன் அடுத்த தர்க்கத்தைப் பார்ப்;போம். ".. கமெராவோடு கிளம்பிப் போனவர்களோடு பேசி ஃபுட்டேஜ்களை உடனே திரும்பப் பெறுவதற்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களைத் தாருங்கள்” என்றேன். அந்த இலக்கங்கள் தன்னிடமில்லை என்றார் தீபக். படப்பிடிப்புக் குழுவிலுள்ள மற்றவர்களும் கேட்டுப் பார்த்தார்கள். அவர் தன்னிடம் அந்தத் தொடர்பிலக்கங்கள் இல்லையெனச் சாதித்தார். அவர் சொல்வது பொய்யென எனக்குத் தெரியும். கமெரா யூனிட் குறித்த அனைத்துத் தொடர்பு இலக்கங்களும் அவரிடமிருக்கும். அவரின் கையில் கைத்தொலைபேசி இருந்தது. எப்படியாவது ஃ புட்டேஜைக் காப்பாற்ற வேண்டுமென்ற பதற்றத்திலிருந்த நான் சடுதியாகத் தீபக்கின் முகத்தில் தாக்கிவிட்டு அவரின் கைத்தொலைபேசியைப் பிடுங்கிவிட்டேன்." என்கின்றாய். இப்படி முதலாளிக்காக கருங்காலி வேலை பார்த்தாய்;. இதன் மூலம் "உலகின் அழகிய முதல் பெண்"ணின் கதாநாயகனாக மாறிய கதை, இதுதான் என்கின்றாய். சரி தொலைபேசி எண்ணை ஒருவன் தரமறுத்தால், அடிக்கலாமா? எந்த ஜனநாயகம் இந்த உரிமையை உனக்கு வழங்கியது. இதில் என்ன நியாயம் தான் உண்டு?

 

சரி தீபக் வைத்துக்கொண்டு தர மறுத்தான் என்றால், ஏன். தீபக்குக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்சனை? இங்கு பிரச்சனை இருக்கின்றது. அதுதான் கூலிப் பிரச்சனை. இல்லாத ஒரு பிரச்சனை ஒன்றுக்காக, தீபக் உங்களுடன் முரண்படவில்லை. இங்கு நீ சொன்னது போல், தீபக் பொய் சொல்லவில்லை. உங்களை நியாயப்படுத்த நீ தான் பொய் சொல்கின்றாய் என்பது, இங்கு வெளிப்படையான உண்மையாகின்றது.

 

தீபக் தொலைபேசி எண்ணை வைத்துக்கொண்டு, அதை உங்களுக்கு தரமறுத்து இருந்தால், அது மிகச் சரியானது. உன்னைப்போல் ஒரு கருங்காலியாக இல்லாமல் மாறாக, அதைத்தர மறுத்து போராடியிருக்கின்றான். இதற்காக ஒரு தொழிலாளியாக, ஊழியனாக மாறி, உங்களிடம் அடிவாங்கியிருக்கின்றான். இப்படி அடிவாங்கியவன் தன் நியாயத்தைக் கூட சொல்ல முடியவில்லை. இலக்கிய ஜம்பவான்கள் என்ற திமிருடன், அதை காயடித்து கோயபல்ஸ் பாணியில் கதை சொல்லுகின்றனர். அதை மார்க்சியவாதிகள் அம்பலப்படுத்துவதைத் தடுக்க,  கார்ல்மார்ஸ்சுக்கு வைப்பாட்டி இருந்ததாக, இந்த விடையத்துக்குள் அவதூறுகளையம் புகுத்தி புதுக் கதை சொல்லுகின்றனர். லீனா ஒரு பெண், ஆகவே அது பெண்ணின் குரல் என்று கூறி நியாயம் கற்பிக்கின்றனர்.  

 

இந்தவகையில் தொழிலாளியை தாக்கியதை மூடிமறைக்க, அடிக்கும் காரணம் தேவையில்லாமல் போகின்றது. இப்படியாகச் சொல்லி அடிப்பவன் தான் ரவுடி. அவனுக்குத்தான் காரணம் தேவையில்லை.  ரவுடியிலும் பல ரகம். "உலகின் அழகிய முதல் பெண்" என்று கூறும் பெண்ணை அடைய, கருங்காலியான ரவுடி கதாநாயகனாகின்றார். இதை நியாயப்படுத்த, தன் கோயபல்ஸ் இலக்கிய ஆளுமையை கொண்டு திரித்து புரட்டுகின்றார். எந்த வித்தியாசமுமின்றி, ஒரு சினிமா படம் இப்படித்தான் அரங்கேறியது. இப்படி இந்த தர்க்கத்துக்குள் எத்தனையோ பொய்கள் புரட்டுகள்.

 

உதாரணமாக "நடந்த தகராறு பேட்டா, ஊதியம் தொடர்பானதல்ல. படச்சுருள் எடுத்துச் செல்லப்பட்டதால் மட்டுமே எனக்கும் தீபக்குக்கும் தகராறு நடந்தது. ஊதியத்தின் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டதாகவும் மிகுதியைத் தானே நிராகரிப்பதாகவும் தீபக் தெளிவாகவே சொல்லியிருக்கும்போது எங்கிருந்து வந்தது ஊதியப்பிரச்சினை? எந்தத் தொழிலாளி என்னால் ஊதியப் பிரச்சினையால் தாக்கப்பட்டார்?" என்கின்றாh சோபாசக்தி. என்ன பாசிச வக்கிரம். தீபக் இதை வேண்டாம் என்று கூறியது, நீ அடித்ததால் தான். உங்களைப் போல் பணத்துக்காக மானம்கெட்ட உங்கள் நடத்தையை எள்ளிநகையாடித்தான் "மீதி பணத்தை நானே வேண்டாம் என்று கூறிவிட்டேன். எனக்கு பணம் ஒரு விடயம் அல்ல ஆனால் மான அவமானம்" பெரிது என்று கூறித்தான் நிராகரிக்கின்றான். கஞ்சனான உன் "உலகின் அழகிய முதல் பெண்" முதலாளி, அதையும் லாபமாக கருதி, உன் ரவுடியிசத்தை பயன்படுத்தியதன் மூலம் இப்படியும் சுருட்டிவிட்டார். இப்படி நீ திரித்து புரட்டிய இதற்குள் பலவற்றை எடுத்துக்காட்ட முடியும். 

 

நடந்ததை நியாயப்படுத்த இலக்கிய அரசியல் சதிகள் உதவுகின்றது. தன் இலக்கிய மொழியில் இதை நியாயப்படுத்தும் போது, ரவுடியிசம் பாசிசமாக கொப்பளிக்கின்றது. எதற்;கும் அ.மார்க்ஸ் கொண்டு ஒரு உண்மையறியும் குழு, இந்த பாசிசத்தையும் ரவுடியிசத்தையும் கண்டறியுமா! தன் அரசியல் எடுபிடிகளின் கோயபல்ஸ் கூத்தை அறியும், ஒரு விசப்பரீட்சையில் அ.மார்க்ஸ் இறங்கத் துணியார் என்று துணிந்து கூறலாம்.

 

5.லீனா சொன்னது தான் பெண்ணியம் என்றால்! அதன் வர்க்க உள்ளடக்கம் தான் என்ன?

 

4.நான் பெண், ஆகவே நான் பெண்ணியவாதி. நீ ஒரு ஆண், ஆகவே நீ ஆணாதிக்கவாதி

 

3.ஒரு காவாலி "உன் கேள்விக்கு காவாலித்தனம் என்று பெயர் வை!" என்கின்றது

 

2.லீனாவும், அ.மார்க்ஸ்-சோபாசக்தி நடத்திய தொழிலாளர் விரோதக் கூட்டம்  

 

1.தொழிலாளர் விரோத உணர்வுடன் கூடும் சோபாசக்தியும் லீனாவும்

 

பி.இரயாகரன்
26.04.2010

 

Last Updated on Monday, 26 April 2010 13:37