Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் 'ஜனநாயகம்' வரும் ஆனால் வராது. 

'ஜனநாயகம்' வரும் ஆனால் வராது. 

  • PDF

நோர்வேயில் நடைபெறும் தமிழ் அரசியலைப் பார்த்தால் மேலே சொன்ன நகைச்சுவை வசனம் தான் நினைவுக்கு வருகிறது


தாங்கள் ஜனநாயகத்திற்கு வந்துவிட்டதாக தம்பட்டம் அடித்த மக்களவைத் தேர்தலில் 20% இற்கு குறைந்த மக்களே வாக்களித்தார்கள். 

கடந்த 6 மாதகாலமாக இந்த மக்களவை என்னத்தை தமிழ் மக்களிற்கு செய்தார்கள்? 


மக்களவை முக்கிய நபர் ஒருவர், திரு.எரிக் சூல்ஹெய்ம் அவர்களையும் SV கட்சியையும் திட்டி அறிக்கை விட்டார்.பின் அதே நபர் 3 மாதம் கழித்து நோர்வே பத்திரிகையில் திரு.எரிக் சூல்ஹெய்மிற்கு கடிதம் எழுதினார், அதாவது இலங்கையில் தமிழர்களின் மீள்குடியேற்றத்திலும் பிரதேச வளர்ச்சியிலும் பங்கெடுக்க தஙகளையும் சேர்த்துக் கொள்ளும்படி.

 

அண்மயில் நாடுகடந்த தமிழீழ அமைப்பினரின் பிரச்சாரக் கூட்டத்தில், மக்களவை உறுப்பினர் கூட்டம் நட்த்துவதற்கான ஜனநாயக உரிமையை மதியாது-குளப்பம் விளைவித்தனர், நீண்ட காலம் நோர்வேயில் வாழ்ந்துவரும் முக்கிய தலைவர் ஒருவரையும் தள்ளிவிட்டனர்.இதைப் பார்த்த மக்கள் ஜனநாயகம் திரும்புமா என் பயப்பட தொடங்கி விட்டனர். 


இதுவரை "நாடுகடந்த தமிழீழ அரசு" அமைப்பின் பலரையும் துரோகிகள் என்றும்,கள்ளர் என்றும்,உளவாளிகள் என்றும் தீவிரமாக தமது ஊடகங்களில் பிரச்சாரத்தை நடத்தியவர்கள் -திடீரென தமது சுய கட்டுபாடை விட்டு கைமாறி விடும் எனப் பயந்து- தங்களின் வேட்பாளர்களையும் இந்தத் தேர்தலில் நிறுத்தி- தாங்கள் தமிழீழ தாயகம் என்று ஏமாற்றும் அதிகார தாகம் கொண்டவர்கள் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து விட்டார்கள். 

 

தமிழர்களின் மீதான ஈவிரக்கமற்ற போர் முடிந்து பலர் மாவீரர்கள் ஆகிவிட்ட போதிலும். மக்கள் இன்னமும், தமது வீடுகளுக்குச் சென்று மீள வாழ வளியின்றி,உணவு உடை தங்கவசதியின்றி,கைகால் இழந்தவர்களிற்கு போதிய மருத்துவ வசதிகள் இன்றி தவித்து வரும் வேளையில், இவர்கள் வெளிநாடுகளில் பல இலட்சம் செலவு செய்து 'தேர்தல் திருவிளா' நடத்துகிறார்கள்.அதிகாரப் போட்டியில் 'தீவிரமாக' ஈடுபடுத்தி வருமிவர்களின் நடவடிக்கையைப் பார்த்து கண்கல்ங்கிவிடாதீர்கள். 


சண்டியர்களையும், சவடால் காரர்களையும், தீவிரவாதம் பேசிய- இவர்களால் பல உதவிகளும் வளங்கப்பட்டவர்களை, இலங்கையில் நடந்த கடைசித்தேர்தலில் மக்கள் நிராகரித்து விட்டார்கள். அவர்களின் கூட்டாளிகள் இங்கு வாக்குக்கேட்டு 'திருவோடு' ஏந்தி மீண்டும் வருகிறார்கள் உங்களை ஏமாற்ற. 

 


இவற்றிகுப் பதிலாக வாழ்வின் விழும்பில் தினமும் நொந்து நொடிந்து போன மக்களை மீண்டும் தமது சொந்த இடங்களில் வாழ்வை அமைத்துக் கொள்ள்வதற்கு நடவடிக்கை எடுப்பதே அவசிய தேவையாகும். 

 

விழித்துக்கொண்ட தமிழ் மக்களமைப்பு 22 .04 .2010 

Last Updated on Friday, 23 April 2010 04:58