Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் புளாட்டின் (தலைமையின்) ஆணாதிக்கத்தை மறுக்கும், அசோக்கின் ஆணாதிக்கம் (எதிர்ப்புரட்சி அரசியல் பாகம் 20)

புளாட்டின் (தலைமையின்) ஆணாதிக்கத்தை மறுக்கும், அசோக்கின் ஆணாதிக்கம் (எதிர்ப்புரட்சி அரசியல் பாகம் 20)

  • PDF

குற்றச்சாட்டு 18.3 தொடர்ச்சி

 

3. புலியிடம் அந்த அமைப்பால் காட்டிக்கொடுக்கப்பட்டு தீப்பொறியால் அரசியல் அனாதையாக்கப்பட்டு மரணித்த தீப்பொறி கேசவன், இந்த விடையத்தை புதியதோர் உலகம் நாவலில் எப்படி அம்பலப்படுத்துகின்றார் என்று பார்ப்போம்.

 

"நான் இந்த நெருக்கடிக் கட்டத்தில் என் (உமாமகேஸ்வரன்) திருமணத்தைப் பற்றியே யோசிக்கவில்லை. ஆனால் கலாதரன் (சந்ததியார்) வேண்டுமென்று தமிழீழத்தில் இருந்த என் காதலியை இங்கு வரவழைத்து எனக்குக் கட்டிவைத்தார். என் புகழை குறைக்க வேண்டும் என்று இப்படி திட்டமிட்டுச் செய்திருக்கிறார்"

 

இதை சந்ததியாருக்கு பதிலாக புதிதாக பொறுப்பெற்ற ஜானிடமே, உமாமகேஸ்வரன் ஒரு குற்றச்சாட்டாக கூறுகின்றார். சந்ததியார் இந்த திருமணத்தை உமாமகேஸ்வரனுக்கு அவசரமாக ஏற்படுத்தியது, அவரின் பாலியல் நடத்தை சார்ந்துதான். அந்தளவுக்கு உமாவின் பாலியல் நடத்தைகள் பற்றிய பல செய்திகள் உண்டு. இதுதான் புளாட் தலைவரின் நிலையாகும். 

 

புளட்டை ஆட்டிப்படைத்த மற்றொரு முக்கிய உறுப்பினரான வாமதேவனுக்கு இதே நடைமுறையையே புளாட் கையாளுகின்றது.

 

"இரகசிய வேலைகளை திறமையாக செய்யக் கூடியவனானாலும், மோசமான பாலியல் பலவீனம் உடையவன். அந்தப் பலவீனம் கழகத்தைப் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்று இவன் (வாமதேவன்) மனைவியை தமிழீழத்திலிருந்து இங்கு வரவழைத்துப் பார்த்தார்கள். ஆனாலும் அவனில் எவ்வித மாற்றமுமில்லை என்று எல்லோரும் வருந்திக் கொண்டார்கள்."

 

என்று அந்த கேடுகெட்ட பாலியல் நடத்தைகள் தொடர்ந்ததை அம்பலப்படுத்துகின்றார் கேசவன்.

 

அது பற்றி

 

"தேவனை (வாமதேவன் - நாலாம் மாடி பி. காம்ப் சித்திரவதை கொலைகளுக்கு முன்னோடி ) அந்த வியாபாரி தங்கவிட்ட இடத்தில், இவன் தன்னைப் பற்றியும் தான் கொண்டுவந்திருக்கும் பணத்தின் பெறுமதி பற்றியும் அந்த வீட்டுகாரரின் மனைவியிடம் கூறியிருக்கின்றான். மறுநிமிடமே அவளுடன் இவன் சல்லாபிக்கவும் ஆரம்பித்திருக்கின்றான். இரண்டு நாட்கள் வரை இது போயிருக்கின்றது. மூன்றாம் நாள் அந்தத் தம்பதிகளே வீட்டைவிட்டு இவனுடைய சூட்கேசுடன் மாறிவிட்டார்கள். விபரமாக எல்லாம் கூறிவிட்டு அந்த நேர்மையான வியாபாரி செயலதிபரிடம் நேரிலேயே சொன்னான்"

 

இப்படிப்பட்ட நடத்தைகள் பற்றி அசோக் எப்போதும் பேசியது கிடையாது.

 

இயக்கப் பெண்களை அவன் எப்படி அணுகினான் என்பதை புதியதோர் உலகம் நாவலில்

 

 "இவர்களுக்கு (இரு பெண்கள்) நேர் எதிரே தேவன் இருந்தான். அவனின் சிறிய கண்கள் அசிங்கமாக இவன் அருகில் இருக்கும் றூபியில் அடிக்கடி மேய்ந்து திரிவதை இவன் இனங்கண்டு மனதுக்குள் கறுவினான்"

 

இப்படிபட்ட நாய்களை உள்ளடக்கியது தான்,  புளாட்டின் தலைமை. இந்த நாய்கள் தான் புளாட்டின் மேல் அதிகாரத்தைச் செலுத்தினர். ஆண் - பெண் மேல் தங்கள் படுகொலை அரசியல் முதல் பாலியல் வக்கிரத்தையே ஏவினர். குறிப்பாக வாமதேவனின் பாலியல் நடத்தையை தணிக்க மனைவியை சேர்த்து வைத்தனர். இதுதான் புளட் வழங்கிய தண்டனை. மறுதளத்தில் அவனின் மனைவியுடன் இருவர் சல்லாபித்தனர். இந்த ஆவணம் மிக விரைவில் வெளியிட உள்ளோம். அவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கவில்லை, இடமாற்றம் தான் தண்டனை. இப்படி தான் ஆணாதிக்க பாலியல் நடத்தைகள், அசோக்கின் புளாட்டில் பூத்துக்கிடந்தது. இதை மூடிமறைத்து நியாயப்படுத்துவதுதான் அசோக்கின் வரலாற்று ரீதியான அரசியல். அவருடன் இன்று கூடி கும்மியடிக்கும் கூட்டத்தின் அரசியலும் கூட. 
 
மேலும் புதியதோர் உலகம் நூலில் வேறு முக்கிய உறுப்பினர்களின் பாலியல் நடத்தை பற்றியும் பேசுகின்றது. அதைப் பார்ப்போம்.

 

"அவன் வீட்டு மேல்மாடியில் இருக்கும் பெண்ணோடு பிரச்சினையாம்" உமாமகேஸ்வரன்.  யார். "அது பழைய கதையல்லோ. அந்த அக்கவுண்டன் மனிசியும் சாதாரண ஆள் இல்லை. முன்பும் ஆயுதங்களுக்கு பொறுப்பாக இருந்த சிதம்பரத்தோட (?) உறவென்றுதானே அவனை முகாமிற்கு அனுப்பியது. ராமநாதனுக்கு (மட்டக்களப்பு வாசுதேவா) அந்த மனுசியோட உறவென்ற விசயம் ராமநாதன் மனைவிக்குத் தெரியும். அந்த அக்கவுண்டனுக்கும் தெரியும். அவர்கள் யாருமே சூடு சொரணை இல்லாதவர்கள்."

 

என்கின்றார் சந்ததியார்.

 

செயலதிபர் (உமாமகேஸ்வரன்) குறும்புச் சிரிப்போடு கூறினார்,

 

"நீர் சொல்லிறது பழைய விசயம். நான் கேள்விப்பட்டது வேறு. இதுவும் அந்த மாடியில் புதிதாக குடிவந்த ஒரு தம்பதிகள் தான். அது ஒரு கண்ணியமான குடும்பமாக்கும். ராமநாதன் (வாசுதேவா) அந்தப் பெண்ணிடமும் சேட்டை விட்டிருக்கிறான். அவளோ விரட்டி கலைச்சிருக்கிறாள். இனிமேலும் சேட்டை விட்டால் தன் புருசனுக்கு சொல்லப் போவதாக எச்சரித்திருக்கிறாள்."

 

"இது யார் உங்களுக்குச் சொன்னது"

கலாதரன் (சந்ததியார்) இப்பொழுது ஆர்வமுடன் கேட்டார்.

"சசிதரன் (?) சொன்னவர். தன் மனைவியிடம் அந்தப் பெண் வந்து முறையிட்டாளாம்" என்றவர் பென்சிலால் மேசையில் இருந்த காகிதத்தில் எழுதிக் கொண்டு சொன்னார், "இது மிகவும் மோசம். அக்கவுண்டன் மனைவி விருப்பத்தோடு சம்மதிக்குது, பரவாயில்லை. இதுவென்றால் பலாத்காரமில்லையா"

"நீங்கள் கூறுவதைப் பார்த்தால் பலாத்காரம் செய்வதை மாத்திரம் வேண்டாம் என்பது போலவும், விரும்பிச் சம்மதித்தால் கள்ள உறவு வைக்கலாம் என்பது போலவும் அல்லவா இருக்கிறது" கலாதரன்(சந்ததியார்) குறும்பாகக் கேட்டார். "நீர் இதுபற்றி ஒருக்கால் ராமநாதனோடு(வாசுதேவாவோடு) கதையும். இந்த விசயம் வெளியே வந்தால் கழகத்திற்கு எவ்வளவு அவமானம் தெரியுமா"

"நான் கதைக்கிறேன். ஆனால் ராமநாதன்(வாசுதேவா) பிரச்சினைகளையெல்லாம் எப்பொழுதும் நானே கதைக்கிறதால் ராமநாதன் என்னைத்தான் பகையாகப் பார்க்கிறான். நீங்களே தலையிடாதபோது, நான் மாத்திரம் ஏன் அவர் விசயத்தில் தலையிடுகிறேன் என்று யோசிக்கலாம்தானே" என்று கூறிவிட்டு தேநீரை பருகத் தொடங்கினார். "என்ன செய்வது. நான் பேசினால் அது இறுதி முடிவாகத்தான் எதையும் சொல்ல வேண்டியிருக்கும். அதனால்தான் நான் இதுபற்றி எதுவும் பேசுவதில்லை" "இருந்தாலும் நீங்கள் எப்பொழுதும் ராமநாதனுக்கு (வாசுதேவாவுக்கு) சலுகை காட்டுகிறீர்கள்" அவர் சிறிய விழிகளுக்குள் பார்த்துக் கொண்டு சொன்னார்.

"என்ன செய்வது! நான் எனக்காகவா செய்கிறேன். கழகத்தில் மட்டக்கிளப்பைச் சேர்ந்த வேறு முக்கியமானவர்கள் யார் இருக்கிறார்கள். நாம் இவன் மீது ஏதும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் அதுவே வெளியே கழகத்திற்குள் யாழ்ப்பாணம், மட்டக்கிளப்பு பிரச்சினை போல் காட்டப்பட்டுவிடும்" என்று கூறிவிட்டு, தேநீர்க் கோப்பையை கையில் எடுத்தார். "ராமநாதன் (வாசுதேவா) மாதிரி ஆக்கள் எங்களோட இருக்கிறது தெரிந்த பிறகும் மட்டக்கிளப்பிலிருந்து வேறு நல்ல சக்திகள் யார்தான் எங்களோடு வரப் போகிறார்கள்" என்று கலாதரன் (சந்ததியார்) வெடுக்கென்று கேட்டபோது, செயலதிபர் வழமையான அந்தப் புன்னகையையே பதிலாகக் கொடுத்தார்.

 

இப்படி உமாமகேஸ்ரன் சந்ததியார் விவாதம் அமைகின்றது. இங்கு உமாமகேஸ்வரன் விரும்பினால் கள்ள உறவு கொள்ளலாம் என்ற ஆணாதிக்க தத்துவத்தை முன்வைத்து தலைமை தாங்குகின்றார். "இந்த விசயம் வெளியே வந்தால் கழகத்திற்கு எவ்வளவு அவமானம் தெரியுமா" என்ற எல்லைக்கு அப்பால், புளாட் தலைமைக்கு இதில் வேறு முரண்பாடு இருக்கவில்லை. இதுதான் அசோக்கின் நிலையும். மூடிமறைத்து அவர்களை பாதுகாத்து, அமைப்பின் நலனுக்காகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் நலனுக்காவும்… என்று கூறி அனைத்து ஆணாதிக்க நடத்தையையும் புதைத்தனர். அதனால் ஆணாதிக்கவாதிகளுடன்   இன்று வரை உறவுகளை தொடர்ந்தனர், தொடர முடிகின்றது.

 

"விருப்பத்தோடு சம்மதிக்குது, பரவாயில்லை" என்ற உமாமகேஸ்வரின் தத்துவத்தைத்தான், இன்று பலர் சொல்லுகின்றனர். சோபாசக்தி முதல் பெண்ணியம் வரை இதற்குள் தான், இன்று பெண்ணியமாக ஓடிப்பிடித்து விளையாடுகின்றனர்.  

   

தொடர்ந்து புதியதோர் உலகம் என்ற நூலில் கேசவன் ஆணாதிக்கத்தை எப்படி அம்பலப்படுத்துகின்றார் என்று பார்ப்போம்;.

 

"பெண்கள் பற்றி எப்பவும் சந்தேகம் தான் எங்கும் நிலவுகின்றது. அது சமூகத்தில் மாத்திரமல்ல கழகத்திலும் கூடத்தான். கழகம் ஆணாதிக்கம் நிறைந்ததாக இருப்பதால் பெண்கள்மீது மிகச் சுலபமாக பழியைப் போட்டு விசாரிக்க வந்து விடுவார்கள்" என்கின்றார். இந்த விவாதத்தின் எதிர்விவாதத்தை உள்வாங்கி "கழகம் ஆணாதிக்கம் குறைந்ததென்று வேண்டுமானால் சொல்லுங்கள். ஆனால் இல்லாததென்று சொல்ல வேண்டாம். நீங்கள் எல்லோருமே பெண்விடுதலையைக் கூட ஆணாதிக்கத்திற்கூடாகத் தான் பார்க்கிறீர்கள்" என்றவள் சற்று நிறுத்தி விளக்கமாக "நான் உங்களை மாத்திரம் தனிப்பட குறிப்பிட்டு குற்றம் சாட்டவில்லை. எல்லா ஆண்களையுமே பொதுவாகக் குறிப்பிடுகிறேன். அவர்கள் இன்னமும் பெண்களை தமக்குச் சமமாக மதிக்கவோ, பெண்களின் திறமையை வளர்த்துப் போற்றவேண்டும் என்றோ கருதுவதில்லை. அந்தளவிற்கு இன்னும் அவர்கள் பக்குவப்படவில்லை. கழகத்தின் பெரும்பாலான பெண்கள் அப்படித்தான் நினைக்கிறோம். கழகத்தில் மகளிர் அமைப்பு ஒன்று இருப்பதே ஒரு கௌரவமாக பெருமையாக இருக்கவேண்டும் என்பதுபோல் கருதப்படுகின்றதேயல்லாமல் அது பெண்விடுதலைக்காகவே இருக்கிறது என்ற மனோபாவம் இன்னும் பல ஆண்களுக்கு ஏற்படவில்லை"

 

இப்படி மிக அழகாகவே இதைப் போட்டு உடைக்கின்றார். இதை அசோக் எழுதவில்லை, அசோக் போன்றவர்களுக்கு எதிராக கேசவன் எழுதுகின்றார். இன்றுவரை இதை அசோக் ஏற்றது கூட கிடையாது. மேலும் பாருங்கள்

 

4. புதியதோர் உலகத்தில் புலிகளைச் சேர்ந்த 6 பேரை கொன்ற போது, இதில் வெளிப்பட்ட ஆணாதிக்தை அம்பலப்படுத்துகின்றார்.

 

"உங்களுக்கு ஆண்மை இருக்கிறபடியால் தானே இப்படியெல்லாம் செய்கிறீர்கள். இந்தாபார் செய்து காட்டுகிறேன் வேலை." என்று கத்தியை உருவி எடுத்தான். அந்தப் பாலகனின் கைகள் இரண்டையும் ஒருவன் அமுக்கிப் பிடிக்க இவன் அவனை நிர்வாணமாக்கி ஒரே வெட்டாக அவன் ஆண்குறியை வெட்டி, கோரமாகச் சிரித்தான். நிலமெங்கும் இரத்தம் குபுகுபுவென்று பாய அந்த இளம் குருத்து துடிதுடித்து நெளிந்தது"

 

இந்த ஆணாதிக்க படுகொலை நிகழ்வையே, நடக்கவில்லை என்று அசோக் (யோகன் கண்ணமுத்து மற்றும் குமரன் - மாதகல் பொன்னுத்துரை) கோஸ்டி துண்டுப்பிரசுரம் வெளியிட்டு அன்று கொக்கரித்தது. இது அன்றைய நிகழ்வு. இப்படிப்பட்ட புளாட்டில் ஆணாதிக்கத்தை மறுக்கின்ற, வக்கிரத்தையே இன்றும் கடைவிரிக்கின்றார்.  

 

5. தளத்தில் போட்டுத்தள்ளும் அதிகாரங்களுடன் இயங்கிய புளாட்டின் தலைமையகத்தில் எப்படி ஆணாதிக்கம் கொலுவேற்று இருந்து என்பதை கேசவன் வெளிப்படுத்துகின்றார்.

 

"சினிமா சஞ்சிகைகளின் முன்பக்க நடுப்பக்க கவர்ச்சி நடிகைகளின் படங்கள் வெவ்வேறு கோலத்தில் சுவரெல்லாம் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்தன. இரத்தக் கீறல்களுடனான புரூஸ்லீயின் கலண்டரும், மொகமட் அலியின் குத்துச்சண்டை புகைப்படமும் நடுவில் இருந்தன. வாசலுக்கு எதிர்ப்புற சுவரில் கழகத்தின் இலட்சினையும், அதன்கீழ் "சகல அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்" என்ற வாசகமும் பெரிதாக பென்சிலால் எழுதப்பட்டிருந்தது. நிலமெல்லாம் கொட்டிக் கிடந்த சிகரட் கட்டைகள் நீண்ட நாட்களாக அந்த அறை கூட்டிப் பெருக்காமல் விடப்பட்டதை அப்படியே சுட்டிக்காட்டியது. தூசியும் குப்பையும் கலந்து ஒரு துர்நாற்றம் சதா உள்ளே வீசிக்கொண்டிருந்தது. மேற்கூரையில் சுழன்று கொண்டிருந்த விசிறியின் வேகமான காற்றால் கூட அந்தப் புழுங்கி அவியும் பிணவாடை நாற்றத்தை விரட்டியடிக்க முடியாமல் இருந்தது."

 

இந்த முன்பக்க நடுப்பக்க பெண்களின் பாலியல் உறுப்புகளால் அலங்கரித்த ஆணாதிக்க தலைமையகங்களுடன், அசோக்கின் அரசியல் சோரம் போனது. இவர்கள் எப்படி பெண்ணை அணுகியிருப்பார்கள் என்பது, நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 

6. மேலும் பாருங்கள்.

 

"கலாதரன் (சந்ததியார்) என் தனிப்பட்ட நடத்தை பற்றி கண்டவர்களிடமெல்லாம் கதைகளைப் பரப்பியிருக்கிறார்." ஒரு அப்பாவிபோல முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு ராமநாதன் (வாசுதேவா) கூறவும் பிறேமுக்கு (ஜான்) சுள்ளென்றது.

அவரும் ஒன்றும் புரியாதவர் போலக் கேட்டார்,
கலாதரன் (சந்ததியார்) உம்மைப் பற்றி என்ன கதைத்தவர்."


ராமநாதனுக்கு(வாசுதேவாவுக்கு) அது பெரும் தர்மசங்கடமாகிவிட்டது. ஊரறிந்த அந்த உண்மைகளை தன் வாயாலேயே அவருக்குக் கூறவேண்டுமா.
அவர் குழம்பிப்போய் திருதிருவென்று விழித்தார்.


அந்த அக்கவுண்டன் மனைவியோடு இவ்வளவு நாளும் கள்ள உறவு வைத்துக் கொண்டிருந்த ராமநாதன் (வாசுதேவா) இப்பொழுது அவர் மகளுடனும் சல்லாபம் புரியத் தொடங்கிவிட்டார். கழகத்திற்குள் இதுபற்றி கசமுசாவென்று பேசுவது மாலைநேரச் சிற்றுண்டிக்குப் பின் வரும் சுவையான உரையாடலாகிவிட்டது."

 

7. மேலும் பாருங்கள்

 

"சிதம்பரம் (?) முன்பு சென்னையில் இருந்தபோது ராமநாதன்(வாசுதேவா) கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் அக்கவுண்டன் மனைவியுடன் உறவாக இருந்தவன். அந்தத் தொடர்பிலிருந்து துண்டிக்க வேண்டியே இவனை ஒரு முகாமிற்குப் பொறுப்பாக அனுப்பினார்கள்."

 

இதுவே புளாட் வழங்கிய தண்டனை. அங்கு ஆண் உறுப்பு மேலான ஆணாதிக்க சித்திரவதைகள். (விரைவில் வெளிவரும் ஆவணம் அதை அம்பலமாக்கும்)

 

8. மேலும்

 

"போதைப் பொருள் கடத்தலில் கழகம் தனித்து முதலிடவில்லை. பல இந்திய சர்வதேச கடத்தல் முதலாளிகளுடன் சேர்ந்தே அதைச் செய்கிறது. இதனால் கழகத்தின் நிதிப் பிரச்சினை வெகுவாகத் தீர்கிறது என்றாலும் கழகக் கொள்கைக்கு முரணாக இருப்பதோடு மத்திய குழுவிற்குத் தெரியாமலேயே இரகசியமாக இது நடைபெறுவது வேறு செயலதிபரை (உமாமகேஸ்வரன்) கலவரத்திலாழ்த்தியது.

"இப்படி பேருக்குத்தான் சொல்கிறீர்கள். இந்த போதைப் பொருள் கடத்தல் விசயங்களை எல்லோரிடமும் கேட்டா செய்தீர்கள். உங்கள் இஸ்டத்திற்கே செய்தீர்கள். அதனால்தான் கழகத்திற்குள் வரும் மோசடிகள், ஊழல்களைத் தடுக்க உங்களுக்கு நெஞ்சுரம் இல்லாமலிருக்கிறது."

 

"நீங்கள் விடுதலை இயக்கத்திற்கு தலைமை தாங்கவில்லை. போதைப் பொருள் கடத்தல் வேலைக்குத்தான் தலைமை தாங்குகிறீர்கள். போதைப் பொருள் கடத்தலைச் செய்யும் நாம் ஒரு விடுதலை இயக்கம் என்று சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது."

 

"இதை நீர் மாத்திரம் எப்படித் தீர்மானிக்க முடியும். இப்படி பிடிவாதமாக தூய்மையைப் பேண நினைத்தால் கழகத்தில் யாருமே இருக்க மாட்டார்கள். யாருடைய உதவியும் கிடைக்காது."


செயலதிபரும்(உமா மகேஸ்வரன்) சிறிது பரபரப்போடு கூறினார். அவர் கையிலிருந்த பென்சிலை இப்போது பொத்திப் பிடித்திருந்தார்."

 

இப்படி தான் அசோக்கின் புளாட் இயங்கியது. இதை எல்லாம் அசோக் அம்பலப்படுத்தவில்லை. அசோக்குக்கு எதிரானவர்கள் அம்பலப்படுத்தினர். இவர்களை இன்று வரை தூற்றுவது தான், அசோக்கின் அரசியல். இதை பற்றிப் பேசாத கூட்டாளிகள், இன்று கூடிக் கூத்தாடுகின்றனர். இதை மேலும், இன்னும் பலவற்றை நீங்கள் தெரிந்து கொள்ள

 

1.எமது வெளியேற்றம் அராஜகத்துக்கு எதிரானதே தவிர விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானதல்ல

2. புளட்டின் குளறுபடிகள் அம்பலம் 

 

3. புளட்டின் போலி முகத்திரையைக் கிழித்தெறிவோம்
 

4. புதியதோர் உலகம் 
 
பி.இரயாகரன்
12.04.2008

 

20. பெண்களை என்பெயரால் தூற்றும் அசோக். இதுவோ கொலைகார புளாட் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பாகம் 19)

 

18. வங்கியின் வீட்டை என் சொந்த வீடாக திரித்துக் கூறும் "அசை"யின் அவதூறு அரசியல் (எதிர்புரட்சி அரசியல் பாகம் 18)

 

17.எனது வீடு எரிக்கப்பட்டதையே திரித்து, அதைக்கொண்டு அவதூறு செய்த இனியொரு அசோக் (எதிர்புரட்சி அரசியல் பாகம் 17)

 

16.நாங்கள் அவதூறு செய்தோம் என்கின்றார் அசோக், சரி எந்த அரசியலை - (எதிர்புரட்சி அரசியல் பாகம் 16)

 

15. அசோக் இனியொருவில் புனைந்த அவதூறுகள்; - (எதிர்புரட்சி அரசியல் பாகம் 15

 

14.பல்கலைக்கழகப் போராட்டம் தொடர்பாக அசோக், நாவலன் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் - (எதிர்புரட்சி

 

13.இனியொரு என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் - (எதிர்ப்புரட்சி அரசியல் பாகம் 13)

  

12.புனிதத்தை கட்டமைக்க, இனியொரு தன்னை மூடிமறைக்கின்றது. (எதிர்புரட்சி அரசியல் பாகம் 12)


11.றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ் வும், அசோக் முன்னின்று வழிநடத்திய ஈ.என்.டி.எல்.எவ் வும் -அரசியல் பகுதி 11)


10.நாவலனின் புரட்சிகர அரசியலும், வியாபார அரசியலும் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 10)


9.சிவப்புக் குல்லா அணிந்தபடி, தமக்கு ஓளிவட்டம் கட்டும் இனியொரு (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 9)


8.கடந்த வரலாற்றை சொல்வது "இடதுசாரி" அரசியலுக்கு எதிரானதா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 8)

  

7.சீ, நீங்கள் எல்லாம் மத்திய குழு உறுப்பினர் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 7)


6.பிரபாகரனின் மரணம் மாற்றுக்கருத்து தளத்தை நேர்மையாக்கி விடுமா!? மக்கள் நலன் கொண்டதாகி விடுமா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 6)


5.நடந்த போராட்டத்தை திரித்து மறுக்கும் இனியொருவின் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 5)


4.வரலாற்றை இருட்டடிப்பு செய்து, அதை தமக்கு ஏற்ப வளைத்து திரிப்பதும், புலிக்கு பிந்தைய அரசியலாகின்றது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 4)


3தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத அரசியல் "நேர்மை" (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 3)

  

2.அரசியல் நேர்மை என்பது உண்மைகளைச் சார்ந்தது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 2)


1.எதிர்புரட்சி அரசியலோ தனக்கு தானே லாடம் அடித்து தன்னைத் தான் ஓட்ட முனைகின்றது. (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 1)

Last Updated on Monday, 12 April 2010 07:50