Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் அம்மன் கோயில் அய்யாமுத்து - "மேதகு மருதையன் என்று கூப்பட்டால் எப்படி இருக்கும்!?" : பகுதி - 1

அம்மன் கோயில் அய்யாமுத்து - "மேதகு மருதையன் என்று கூப்பட்டால் எப்படி இருக்கும்!?" : பகுதி - 1

  • PDF

அய்யாமுத்து ஒரு தமிழன்.  ஆகவே தமிழர்களின் தமிழ் பண்பாடுகளை ஒழுங்காகப் பின்பற்றிக் கொண்டு வந்தான்.

அவையாவன

1.    கோயிலிற்குப் போதல்

2.    ஆண்கள் தமிழர் பாரம்பரியப்படி கோட் சுட்டும், பெண்கள் பட்டுச்சேலையும் கட்டிக்கொண்டு திருமணங்கள், பிறந்தநாள், புhப்புனித நீராட்டு விழாக்களிற்கு போதல் .(முதல் முறை மட்டும் அல்லாது ஒவ்வொரு மாதமும் புhப்புனித நீராட்டு விழாவை பெரிதாக கொண்டாடுவது நல்லது என தமிழ்க்கலாச்சார காவலர்கள் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள்)

3.    கதாநாயகன் காலைத் தூக்க அந்தப் பக்கம் பத்துப் பேர் இந்த பக்கம் பத்துப் பேர் மயங்கி விழும் (அடி வாங்கித் தான்) தமிழ் படங்களிற்கு போதல்.

4.    நான்காம் தமிழான தூசணத் தமிழ் மங்களகரமாக ஒலிக்க வாள் வெட்டுகள், பொல்லடிகளுடன் நிறைவுறும் தமிழர்களின் ஒன்று கூடல்களிற்கு போதல்.

5.    வேறுநாடுகளில் இருந்து யாராவது லண்டன் வந்தால் பிரித்தானியாவிலேயே பார்க்க வேண்டிய முதலாவது இடமாக வேல்ஸ் கந்தசாமி கோவிலிற்கு கூட்டிக் கொண்டு போதல்.

6.   பிரான்ஸில் லூவர் முதலான அருங்காட்சியகங்கள் ஈபெல் கோபுரம் இயற்கை வனப்பகுதிகள் எல்லாவற்றையும் தாண்டி தமிழர்களின் முதல் தெரிவான லூர்து மாதா கோயிலிற்கு போதல். அந்த மாதா கோவில் படிகளில் முழங்காலால் ஏறுவேன் என நேர்த்திக் கடன் வைத்து குரங்குகள் போல் தாவித் தாவி பக்திப் பரவசத்துடன் ஏறுதல்.

7.    முன்பு தமிழர் விடுதலைக் கூட்டணியையும் பின்பு இயக்கத்தையும் ஆதரித்தல் (அன்பும் கருணையும் ஜனநாயகத் தன்மையும் கொண்ட தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்று நிச்சயமாக தெரியாததால் தான் இயக்கத்தின் பெயரை தையிரிமாக எழுதவில்லை என எண்ண வேண்டாம்)

அய்யாமுத்துவிற்கு நண்பன் ஒருவன் இருக்கின்றான் அவன் ஏதோ ஒரு தாசன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுவான். அவன் பேசுவது பெரும்பாலானவர்களிற்கு விளங்காது. அவன் பேசத் தொடங்கினால் நிறுத்தவும் மாட்டான். எனவே அவனை கவிஞர் அறுவைதாசன் என்று அனைவரும் கூப்பிடுவார்கள். அறுவைதாசனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. தமிழர்களின் மற்றைய பண்பாடுகளை அவன் பின் பற்றுவது கிடையாது. எனவே அவனை திருத்துவதற்காக அய்யாமுத்து லண்டனில் உள்ள அம்மன் கோயில் ஒன்றிற்கு கூட்டிக் கொண்டு போனான்.

கோயிலுக்கு போகும் போது இருவருக்குமிடையில் ஒரு விவாதம் நடந்தது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஜனநாயகம் வேண்டி நடாத்தப்பட்ட போராட்டத்திற்கு,  இயக்கத்தின் யாழ் மாவட்ட தேசியத் தலைவர் கிட்டு அளித்த பதிலில் ஜனநாயகம் மற்றும் பேச்சுச் சுதந்திரத்தை மக்களிற்கு கொடுத்தால், நாம் அரசியல் அனாதைகளாகி விடுவோம். ஆகவே இதை எல்லாம் சின்னப்பிள்ளைத் தனமாக கேட்க கூடாதென வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு தத்துவார்த்த கருத்தை வெளியிட்டதைப் போன்றதொரு நிகழ்வாக அது அமைந்தது.

அறுவைதாசன்: 
கோயிலை, சிற்பிகள், கட்டிட வேலை செய்பவர்கள்,  தச்சர்கள், கூலித் தொழிலாளர்கள் எனப் பலரினது உழைப்பிலேயே கட்டுகிறார்கள்.  தொழிலாளி தான் கருவறையைக் கட்டுகின்றான். சாமியின் சிலையை செய்கின்றான்.  அது வரையும் ஒரு கல்லைக் கூட பொறுக்கிப் போடாத அய்யர் வந்து மந்திரம் சொன்ன பிறகு கட்டிட தொழிலாளியினால் அவன் கட்டிய கருவறைக்குள் போக முடியாது.  அவன் செதுக்கிய சிலையை அவனால் தொட முடியாது.  தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலிற்கு உள்ளேயே போக முடியாது.  ஏன் இந்த பித்தலாட்டம்.

அய்யாமுத்து: சிலைக்கு மந்திரம்  சொன்னவுடன் புனிதமாகி சக்தி வாய்ந்த கடவுளாகி விடுகின்றது. அதனால் தான் எல்லோரும் தொட முடியாது.

அறுவைதாசன்: விவசாயி விளைத்த நெல்லைச் சாப்பிடுவேன்.  ஆனால் அவன் அதை சோறாக்கி தந்தால் சாப்பிடமாட்டேன் என்று பிராமணர்கள் சொல்லுகிற புனிதம்,  பெற்ற தாயைக் கூட பள்ளிவாசலில் பக்கத்தில் வைத்து தொழமாட்டேன் என்று முஸ்லீம்கள் சொல்லும் புனிதம்,  கத்தோலிக்க தேவாலயத்தில் புசை செய்பவன் திருமணம் செய்யக் கூடாது என்ற கட்டுப்பாட்டினை மீற முடியாமல் சின்னப் பொடியன்களை புனிதமாக கவனித்து விட்டு,  அது பிடிபட்டால் சிறை போகும் கத்தோலிக்க குருமார்களின் புனிதம்.  இவை தான் சமயவாதிகளின் புனிதங்கள்.

கோயில் வாசலில் கள்ளருக்கு பயந்து பெரிய புhட்டு போட்டு விடுகிறீர்கள். கள்ளரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத சக்தி வாய்ந்த சாமி உன்னையும் உலகத்தினையும் காப்பாற்ற போகின்றதா? கொலைக்காரன் மகிந்தாவால் இத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு மண்ணோடு மண்ணாகிப் போனபோது உங்கள் கடவுள் எங்கே போயிருந்தார்?

அய்யாமுத்து: அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

அறுவைதாசன்: நாடு கடந்த தமிழீழம் போல் வரும் ஆனால் வராது என்கிறாயா?

(இருவரும் கோயிலிற்;குள் செனடறார்கள் உள்ளே ஜயர் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லிக் கொண்டு ஆட்டிக் கொண்டு நின்றார் மணியை)

அறுவைதாசன்: உலகத்தில் உள்ள எல்லாச் சமயங்களிலும் அந்தச் சமயத்தினை படித்தவர்கள் குருவாக போதகராக வர முடியும்.  உங்கள் சமயத்தில் மட்டும் ஏன் பிராமணராக பிறந்தவர்கள் மட்டுமே புhசை செய்கின்றனர்.  பிராமணர்களிற்கு புhசை செய்யும் உரிமை என்ன தங்கத்திலே செய்திருக்கின்றதா?

அய்யாமுத்து: கோயில் புனிதமான இடம் புhசை செய்பவர்கள் சுத்தமானவர்களாகவும் நல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரே குலத்தினை சேர்ந்தவர்கள் புhசை செய்கின்றனர்.

அறுவைதாசன்: கடவுள் தான் உலகத்தினை படைத்தான்.  உயிர்களை படைத்தான் என்கிறீர்கள்.  அப்படி என்றால் எல்லா உயிர் பிறப்புகளும் சமம் தானே. பிராமண உயிர்,  பிராமணர் அல்லாத உயிர் என்று இருக்கின்றதா?

கொலை செய்த சங்கராச்சாரி,  கோயில் கருவறைக்குள் படுக்கை போட்ட காஞ்சிபுரம் தேவநாதன்,  தமிழ் நாட்டையே கொள்ளையடித்த ஜெயலலிதா, கொலைகாரன் மகிந்தாவின் உற்ற நண்பன் இந்து பத்திரிக்கை ராம்,  துக்ளக் சோ,  அன்று தெலுங்கானாவில் பாசிச வெறியாடிய நேரு,  இன்று ஈழத்திலும் இந்தியாவிலும் கொலை செய்யும் நேரு குடும்ப வாரிசுகள் என்ற இவர்கள் தான் ரொம்ப நல்லவர்களா?

(அறுவைதாசனுக்கு பக்கத்தில் நின்ற பெண் குனிந்து பஞ்சாங்க நமஸ்காரம் செய்ததால் அறுவைதாசன முகத்தினை மறுபக்கம் திருப்பினான் அந்தப் பக்கம் நின்ற பெண்ணும் பஞ்சாங்க நமஸ்காரம் செய்ததால் முகத்தினை எந்தப் பக்கம் வைப்பது என தெரியாது தடுமாறினான்)

அய்யாமுத்து: தேவையில்லாத குறைகளை சொல்ல வேண்டாம்.  இலங்கை இந்தியா எங்கும் புகழ் பெற்றவை சைவமும் சிவனும் ……..

அறுவைதாசன்: என்ன கோபால் பற்பொடியா? உலகத்தினையே படைத்த சிவனை ஏன் இலங்கை இந்தியாவிற்கு வெளியே தெரியாது?   கறுப்பின மக்களிற்கும் வெள்ளையர்களிற்கும் சிவனோடு என்ன  பிரச்சினை? அரேபியர்கள் வாளால் மக்களை கொன்ற பிறகு தான் அல்லா இந்தியா வந்தார்.  வெள்ளையர்கள் பிரங்கிகளால் மக்களை பிளந்த பிறகு தான் இயேசு காலனி நாடுகளிற்கு வந்தார்.

ஆயிரக்கணக்கான வருடங்களாக ஒரே வாழ்க்கை வாழ்ந்து வரும் பழங்குடி மக்களிற்கு அல்லா யேசு புத்தன் சிவன் என எந்த ஒரு கடவுளையும் தெரியாது.  உலகத்தினை படைத்து காப்பாற்றும் இவர்களை தெரிந்திருக்க வேண்டிய பழங்குடி மக்கள் ஏன் ழூதாதையர்களையும் இயற்கை சக்திகளையும் வழிபடுகின்றனர்?

பிராமண ஆதிக்கமும் அரசுகளின் தோற்றமும் ஏற்படும் வரை தமிழர்களும் இயற்கை சக்திகளையே வழிபடடார்கள்.  மாரியம்மன் யார்? மழையை தாயாக வாழ்வின் ஆதாரமாக உருவகித்த தாய்த்தெய்வம். தமிழர்களின் மழைத்தாயிற்கு ஏன் சமஸ்கிருதத்திலேயே புhசை செய்கின்றீர்கள்? தமிழ் மொழிக்கும் சமஸ்கிருதத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? சமஸ்கிருதம் இந்தோ ஜரோப்பிய மொழிக் குடும்பத்தினை சேர்ந்தது சமஸ்கிருதத்திலே உள்ள பல சொற்கள் ஜரோப்பிய மொழிகள் எங்கும் உள்ளன.

பிராமணர்களிற்கும் தமிழர்களிற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? பிராமணர்கள் இந்தியா முழுவதும் சாஸ்திரி,  சர்மா என்று ஒரே சாதியாக இருக்கின்றனர்.  அவர்கள் தமிழர்களின் மீது தமது ஆதிக்கத்தினை செலுத்துவதற்காக தமிழ் மொழினை நிராகரித்து சமஸ்கிருதத்தினை மேலே வைக்கின்றனர்.


சிதம்பரம் நடராசர் கோயிலில் தேவாரம் பாட முயன்ற ஆறுமுகசாமி என்ற முதியவரை பாடவிடாமல் தடுத்து வழக்குப் போட்டார்கள். பின் நீதிமன்ற அனுமதியுடன் பாடமுயன்ற அவரை கூச்சல் போட்டுத் தடுத்து வன்முறையில் ஈடுபட்டார்கள்.  அவரிற்கு ஆதரவாக எந்த ஒரு சைவத்தமிழ் பக்தனும் வரவில்லை.  ம.க.இ.க என்ற மக்கள் இயக்கம் தான் அவருடன் சேர்ந்து செயல்பட்டது.

அய்யாமுத்து: அப்படியும் ஒரு இயக்கம் இருக்கின்றதா? அவர்களிற்கும் நமது தலைவர்கள் போல் தலைவர்கள் இருக்கிறார்களா?


(மேதகு மருதையன் என்று கூப்பட்டால் எப்படி இருக்கும் என்று அறுவைதாசன் யோசித்துப் பார்த்தான்)
-    தொடரும் –

 http://www.psminaiyam.com/?p=3579


Last Updated on Sunday, 28 March 2010 19:11