Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் பிரபாகரன் துப்பாக்கி முனையில் உருவாக்கிய புலித்தேசியம், இன்று துரோகத்துக்காக தனக்குள் மோதுகின்றது

பிரபாகரன் துப்பாக்கி முனையில் உருவாக்கிய புலித்தேசியம், இன்று துரோகத்துக்காக தனக்குள் மோதுகின்றது

  • PDF

புலித் தலைவர் முள்ளிவாய்க்காலில் சரணடைந்ததன் மூலம், தன் கொள்கைக்கே துரோகம் செய்தார். அவரின் துப்பாக்கிக்கு கீழ் வாழ்ந்த புலித்தேசியம், பிரபாகரனின்  துரோகத்தைப் போல் போட்டிபோட்டு புளுக்கின்றது. மகிந்தா, சரத்பொன்சேகா முதல் ஏகாதிபத்தியம் வரை ஆளுக்காள் தங்கள் தலைவரின் புலித்தேசியம் இதுதான் என்ற விளக்கத்துடன், தங்கள் நக்குண்ணித்தனமான துரோகத்தை தேசியமாகக் கூறிப் பிரகடனம் செய்கின்றனர்.

பிரபாகரன் தன் துப்பாக்கி மூலம் மேய்த்த புலித் "தேசியம்", படுகொலைகள் மூலம் கட்டமைக்கப்பட்டது. இது புலித்தேசியமாக மாற, துரோகம் தியாகம் என்ற வறையறையின் எல்லைக்குள் அரசியலை முடக்கியது. இதற்கு வெளியில் சிந்திப்;பது துரோகமாக காட்டி, பிரபாகரன் தன் வழியில் அனைத்தையும் போட்டுத் தள்ளினான். 

 

இதற்கு அப்பால் பிரபாகரனின் துப்பாக்கிக்கு கீழ் வாழ்வதே தேசியமாகியது. இப்படி துப்பாக்கிக்கு கீழ் மேய்ந்தவர்கள் தேசிய தியாகிகளாக, அதை மீறி மேய்ந்தவர்கள் துரோகிகளானார்கள். இன்று அதை மேய்க்க பிரபாகரனுமில்லை, அவனின் துப்பாக்கியுமில்லை. அவனின் துப்பாக்கிக்கு கீழ் மேய்ந்தவர்கள், இன்று பிரபாகரனை மேய்கின்றனர்.

 

அன்று பிரபாகரன் தன் துப்பாக்கி மூலம் எதையெல்லாம்  துரோகம் என்று சொன்னானோ, அதை செய்வது தான் "தேசியம்" என்கின்றனர். மகிந்தாவை ஆதரிப்பதும், சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்று தொடங்கி பாரிஸ் ஈழநாடு நடத்தும் அலுக்கோசு தேசியத்தை வழிகாட்டுவது வரை, தங்கள் பிழைப்புத்தனத்தையே பிரபாகரனின் "நேர்" வழி என்கின்றனர். இதற்குள் நக்கக் கூடியவர்கள், பிரபாகரனின் பெயரிலும் தேசியத்தின் பெயரிலும் நக்குகின்றனர்.

 

துரோகங்கள் புழுக்க, புலித் தேசியம் நாறுகின்றது. புலியின் கோடிக்கான பணத்தை கைப்பற்றி அதை தமதாக்கும் துரோகம் ஒருபுறம். இது கிடைக்காதவன் இதை வைத்து எப்படி வியாபாரத்தையும், பேரத்தையும் செய்து பிழைக்கும் துரோகம் மறுபுறம்.

 

பிரபாகரன் தன் துப்பாக்கி மூலம் இந்த நக்குண்ணி கூட்டத்தை முன்னிறுத்தி கட்டமைத்த புலித்தேசியம், பிரபாகரனையே போட்டுத் தள்ளிவிட்டு மறுபடியும் மக்களை விற்றுப் பிழைக்கின்றது. இதைவிட இதனால் இதற்கு வெளியில் சிந்திக்க, செயல்பட முடியாது.

 

அப்படிப்பட்ட ஒரு தலைவரால் இவர்கள் வழிநடத்தப்பட்டவர்கள். இந்த தலைவர் எப்படிப்பட்டவர் என்பதை, அவருடன் இருந்த ஐயர் தன் வரலாறாக எழுதி வருகின்றார்.

 

இந்த வரலாற்றுக் குறிப்பு பற்றிய பார்வையில் எமக்கு விமர்சனம் உண்டு. அது ஒருபுறம் இருக்க, முக்கியமாக அது சில விடையங்களை தன் கவனத்தில் இருந்து விட்டு விடுகின்றது. இதுபற்றி சுட்டிக் காட்டுவது அவசியமாகப் படுகின்றது. அவர் முன்னாள் என்.எல்.எவ்.ரி மத்திய குழு உறுப்பினர் என்ற வகையிலும், எமது தோழராக இருந்தவர் என்ற வகையில் இது மேலும் அவசியமானது. இது பற்றி அவருடன் நேரடி உரையாடல் ஒன்றில் விவாதித்துள்ளேன். அதை அவர் தெளிவுபடுத்துவார் என்று நம்புகின்றேன்.

 

அதை இந்த கட்டுரையில் குறிப்பிடுவதன் மூலம் பிரபாகரன் துப்பாக்;கி மூலம் வழிநடத்தியது எது என்பதை, தெரிந்து கொள்ள உதவும்.

 

1. பிரபாகரனையும், ஏன் ஐயரையும் உருவாக்கிய அரசியலையும், அது தூண்டிய கொலை அரசியலைப் பற்றியும் இந்த வரலாற்றுக் குறிப்பு எதையும் சொல்லாமல் விட்டுள்ளது. அதைக்  கேள்விக்குள்ளாக்கவில்லை அல்லது அடையாளம் காட்டவில்லை. துரையப்பாவை துரோகியாக அறிவித்தது யார்? அதற்கு முன் புலியல்லாதவர்கள் நடத்திய கொலைகள், கொலை முயற்சிகள் என அனைத்தையும் வழிகாட்டிய அரசியல், பேசப்படாத வரலாறாக மாறிச்செல்லுகின்றது. பிரபாகரனை உருவாக்கியதும், கொல்லத் தூண்டிய அரசியலும் இங்கு பேசப்படவில்லை. 

 

2. மார்க்சியம் தெரியாததால் தான் இது போன்ற கொலைகள், அரசியலற்ற வங்குரோத்துத்தனம்  நடந்ததாக கூறுகின்ற ஒரு மறைமுகமான தர்க்கம், நியாயப்படுத்தல் இந்த வரலாற்றுத் தொடரில் பிரதிபலிக்கின்றது. மார்க்சியத்தை மறுத்த அரசியலே, இதை வழிகாட்டியது.     

                

3. "மார்க்சிய" அல்லது கூட்டணி அல்லாத ஒரு அரசியலை முன்வைத்த பற்குணம் இங்கு நிராகரிக்கப்படுவதும்;, இறுதியில் கொல்லப்;படுவதும் நிகழ்கின்றது. ஆகவே இங்கு அரசியல் தெரிவு இருக்கவில்லை என்பது, தவறானது 

 

4. பிரபாகரனின் "தேசியம்" கொல்லுதல் என்பது, அவனின் தனிப்பட்ட குணாம்சமோ தேர்வோ அல்ல. இது கூட்டணியின் வலதுசாரிய அரசியல். அதன் வன்முறை வடிவம் தான் பிரபாகரன் குழுவின் செயல்பாடாகின்றது. (இங்கு "வரலாற்றில் பிரபாகரன்" என்ற 07.12.2008 இல் எழுதிய கட்டுரையை பார்க்கவும்- )

 

 

5.சாதாரணமாக மனிதப் பண்பை ஒரு விடுதலைப் போராட்டத்தில் கொண்டிருப்பதற்கு, மார்க்சியம் அவசியமில்லை. இதை ஐயர் மார்க்சியம் தெரியாததால் பெறமுடியவில்லை என்று சுட்டிக் காட்டி (வரலாற்றின் இன்றைய நோக்கில்) நிற்பது, செய்ததை மார்க்சியம் தெரியாததால் செய்தாக நியாயப்படுத்தி விடுகின்றது.

 

6.அடுத்த அபாயம் கடந்தகால மக்கள் விரோத போக்கை அந்த காலத்தின் எல்லைக்குள் சரியானதாக காட்டி, அதை நியாயப்படுத்திவிடுகின்ற போக்கு இங்கு முதன்மை பெற்று பிரதிபலிக்கின்றது.

 

இவை ஐயரின் கவனத்துக்கு நேரடி உரையாடலிலும், இதன் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

இங்கு பிரபாகரன் தன் துப்பாக்கி முனையில் கோரிய புலித்தேசியம், கூட்டணியின் வலதுசாரிய தேசியம் தான். இதன் அரசியல் நடத்தைகளும், விளைவுகளும் கூட அதனுடையது தான். வலதுசாரிய அரசியல் அடித்தளத்ததை அது கொண்டது. அதன் மிதவாதத் துரோகம், புலித்தேசியத்தின் ஆயுதப் போராட்டம் மூலம் சந்திக்கு வந்தது. ஆயுதப் போராட்டத்தின் துரோகம், பிரபாகரனின் சரணடைவுடன் துல்லியமாக அம்பலமானது. இதன் பின் மிதவாதமும், வன்முறையும் அம்மணமாக, தங்கள் துரோகம் தான் சரியானது என்று தமக்குள் போட்டிபோடுகின்றது.

 

தமிழ்தேசிய வலதுசாரியத்தின் அரசியல், தன் வங்குரோத்துடன் கடந்த 60 வருடமாக நடத்திய துரோகங்கள் எல்லையற்றது, முடிவற்றது. பிரபாகரனின் துரோகத்தின் பின், இந்தத் தேர்தலில் மூலமான துரோகத்தையே தன் அரசியலாக கொண்டு அதை முடிவற்றது என்பதை பிரகடனம் செய்துள்ளது. தமிழ் தேசிய வலதுசாரியத்தின் எந்த முகமும், துரோகமின்றி இன்று குரைக்கவில்லை.

 

பி.இரயாகரன்
21.01.2010
    

Last Updated on Thursday, 21 January 2010 11:30