Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் மகிந்தரின் தோள்துண்டில் புரட்சிகாணும் படித்த புலத்துமந்தைகள்

மகிந்தரின் தோள்துண்டில் புரட்சிகாணும் படித்த புலத்துமந்தைகள்

  • PDF

போரென்று எழுந்தநிலம் புதைகுழியாய்
படைகளிடம் பதையுண்டுபோனதென்ன---விதியாஇது
சாவென்று அஞ்சியவர் வாழ்ந்ததில்லை-- பாரின்று
சந்ததியை அழிக்கின்ற பகைமுகாமில்
சோறின்றி வாழ்தலல்ல உறுத்துதலாய்
வேர்விட்ட நிலமழிந்து சுடுகாடாய்--கண்முன்னே


உறவழிந்த கனவுகளாய் விழிமூடா
வெடியொலியாய் செவிபிளந்த கணங்கள் ரணமாய்
மண்ணென்ற உணர்வோடு நடந்தவர்கள்
வேதனையின் வெடிப்பெலாம் பாரெங்கும்--வெறும்
கண்துடைப்பாய் காய்;நகர்த்தும் சுற்றுலாவாய்
பாரதத்து அரசியலின் பாதத்து நசிகிறதே.......

 

சிறுகவே கட்டிய கூடெலாம் சிதைந்துபோய்
தெருஅலையவிட்டதென்ன-- விதியாயிது
நாம் நடந்ததெருவெலாம் இராணுவமாய்
நம்மூர் வெளியெலாம் படைமுகாம்
காடெலாம் கருகிப்போய் பாலைவனம்
ஓருகாக்கை குருவியில்லை பேய்களே
நோக்குமிடமெலாம் கவசவாகனம் --இனி
வெற்றிலைக்கு வாக்கிடவோ கையென்ற
விதியாகி மாறியது புலிஅழிய.....


மகிந்தவின் தோள்த்துண்டில் மயங்கியே    
மாற்ரம் நிகழுமென பிதற்றுறார்--புலத்தே
புலியெதிர்ப்பு புத்திமான்கள் கூடியே
அரசநிதியொடு அடிவருடி வீழ்கிறார்
படியழப்பில் படிப்பினைகள் மாண்டதோ--இனியென்ன
கொடியேற்ரி தேசியகீதமொடு கூடுங்கள்

 

வானிரைந்துவந்தகிபீர் கூவிவந்தசெல்
அவலமெலாம் நேரிடை கண்டவர்கள்
வெடியொலியில் மீண்டவர்கள் இதயத்தே
இடியாய் விழட்டும் பெரிதல்ல....
காத்துவந்த பிள்ளைகளை பறிகொடுத்து
வாட்டிடும் துயரத்துள்
ஈட்டியாய் ஏறட்டும் பெரிதல்ல.....
பஞ்சத்துள் வாழ்ந்திடினும்--தன்
உணர்வே பெர்pதெனும் மனிதமே உயர்வு
வஞ்சத்துள் கைகோர்ப்பு வர்க்கபுத்தி

 

பிஞ்சுமுதல் பெரியோர் வரையிழந்து
எஞ்சியுள்ள இளையவர் வஞ்சகத்து வலையில்
நெஞ்சுருகா இதயமெனின் நீமிருகம்
கொஞ்சிட அரசொடு குழைந்து வாலாட்டு
அஞ்சிடாதெழும் புதுயுகம்--புலம்கடந்து  
வஞ்சகம் அழியக் குரலெப்பும் நிலமெங்கும்.........

Last Updated on Tuesday, 27 October 2009 07:16