Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் காதலுக்கு அவமரியாதை! இஸ்ரேலின் இனத்தூய்மை!!

காதலுக்கு அவமரியாதை! இஸ்ரேலின் இனத்தூய்மை!!

  • PDF

இஸ்ரேலிய- பாலஸ்தீன யுத்தம், கலாச்சார தளத்திலும் முன்னெடுக்கப்படுகின்றது . ஒரு காலத்தில் நாசிச ஜெர்மனியிலும், நிறவெறி தென்னாப்பிரிக்காவிலும் நடைமுறையில் இருந்த இனப்பாகுபாடு இன்றையஇஸ்ரேலில் தொடர்கின்றது.

 வெளிப்பார்வைக்கு மதச்சார்பற்ற நாடாகதோன்றும் இஸ்ரேலில், யூத மத அடிப்படைவாத குழுக்கள் அரசியல்அதிகாரத்தை கைப்பற்றி வருகின்றன. இந்த மதவாத சக்திகளின் அண்மைய இலக்கு "கலப்புத் திருமணங்கள்". இஸ்ரேலில் காலங்காலமாக பின்பற்றப்படும்இனப்பாகுபாடு காரணமாக யூத-அரபு கலப்புத் திருமணங்களுக்கான வாய்ப்பு குறைவு. இஸ்ரேலிய சட்டப்படி மதச்சார்பற்ற சிவில் திருமணங்களுக்கு இடமில்லை. அனைத்து திருமணங்களும் யூத அல்லது இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ மத விதிமுறைகளுக்கு உட்பட்டே பதிவு செய்யப்பட வேண்டும். இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள் பதிவுத் திருமணம் செய்ய விரும்பினால், இஸ்ரேலை விட்டு வெளியேறி, அந்நிய நாடொன்றில் திருமணம் செய்துவிட்டுவர வேண்டும். அந்த திருமணம் பின்னர் இஸ்ரேலில் சட்டப்படிஅங்கீகரிக்கப்படும்.

பொதுவாகவே யூத குடியிருப்புகளும், அரபு குடியிருப்புகளும் பாதுகாப்புவேலியிடப் பட்டு பிரித்தே வைக்கப்பட்டுள்ளன. இரண்டு இனங்களும் "கலந்து" வாழும் பெரு நகரங்களில் கூட, தனித்தனியான குறிச்சிகள் உள்ளன. இருப்பினும் ஜெருசலேமை அண்டியிருக்கும் அரபு புற நகர்ப் பகுதியொன்றில் வாழும் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய வதிவிட அனுமதி கொண்டவர்கள். இவர்களுக்கு ஜெருசலேமின் பிற பகுதிகளில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கமுடியும். அதே போல பல்லின மக்கள் வாழும் டெல் அவிவ் நகரிலும் தொழில்வாய்ப்பு தேடிவரும் அரபு இளைஞர்கள் வசிக்கின்றனர்.

இஸ்ரேலில் காலங்காலமாக இறுகிய மத சமூகக் கட்டுப்பாடுகளுடன் வாழும் யூத நங்கைகள், அரபு ஆண்களுடன் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம்குறைவு. கடந்த இருபதாண்டுகளுக்குள் வந்து குடியேறிய (முன்னாள் சோவியத்யூனியனை சேர்ந்த) ரஷ்ய யூதர்கள் மத்தியில் மதக் கட்டுப்பாடுகள் குறைவு. சுதந்திர மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்த ரஷ்ய-யூத கன்னிகள், அரபுஆடவருடன் காதல் கொள்வது அதிகரித்து வருகின்றது. காதலிப்பவர்கள்பின்னர் கலியாணம் செய்து கொண்டு, அரபு கிராமங்களிற்கு சென்று தங்கிவிடுகின்றனர். யூத இளம் பெண்களின் சுதந்திரப் போக்கால் கலவரமடைந்த யூத மதஅடிப்படைவாதிகள் கலப்புத் திருமணங்களை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். "அரபு இளைஞர்கள் வேண்டுமென்றே யூத பெண்களை மயக்கி, காதல் வலையில் விழ வைக்கிறார்கள். இதுவும் அவர்களின் யூத இனத்தின் மீதான போர்முறைகளில் ஒன்று." என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

வட இஸ்ரேலிய யூத நகரம் ளுயகநன இல், யூதப் பெண்களை எச்சரிக்கும்சுவரொட்டிகள் காணப்படுகின்றன. "அரபுக்களை காதலிக்கும் அப்பாவி யூத நங்கைகள் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும், விபரச்சாரத்திற்கு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும்" இந்த போஸ்டர்கள் பகிரங்கமாக இனவாதம்பேசுகின்றன. நாசிச ஜெர்மனியிலும் இதே போன்ற போஸ்டர்கள் யூதர்களுக்கு எதிராக ஒட்டப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்னொரு யூதநகரமான Pளைபயவ ணுநநஎ இல், 35 இளைஞர்களைக் கொண்ட விழிப்புக் குழுவொன்றுஇயங்கிவருகின்றது. “குசைந கழச துரனயளைஅ” என்ற பெயர் கொண்ட இந்த இளைஞர்பட்டாளம் நகர தெருக்களில் ரோந்து செல்கின்றனர். தெருக்களில் எங்காவதுஅரபு ஆண்களுடன், யூதக் கன்னிகைகள் காணப்பட்டால் எச்சரித்து அனுப்பிவைக்கின்றனர். இருப்பினும் தாம் அரபு இளைஞர்களை தாக்குவதில்லை என்றுஇவர்கள் கூறினாலும், ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள்இடம்பெற்றுள்ளன.

"ஜெருசலேம் போஸ்ட்" பத்திரிகைக்கு தகவல் கொடுத்த Pளைபயவ ணுநநஎ வாசி ஒருவர், கடந்த பத்தாண்டுகளில் "தனது நகரத்தில் இருந்து அறுபது யூதப் பெண்கள் அரபுகிராமங்களுக்கு சென்று விட்டதாகவும், அதற்குப் பின்னர் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை." என்றார். தென் இஸ்ரேலிய நகரமான முசைலயவ புயவ நகர சபை, பாடசாலைகளில் "விழிப்புணர்வு வீடியோ" ஒன்றை காண்பித்துவருகின்றது. "எதிரியுடன் படுத்தல்" என்ற பெயரிட்ட அந்த வீடியோ, கலப்புத்திருமணங்கள் இஸ்ரேலிய நெறிகளுக்கு முரணானது என்று பரப்புரைசெய்கின்றது.

மேற்குறிப்பிட்ட நகரங்களில் லுயன டு’யஉhiஅ என்ற யூத மத அடிப்படைவாதஅமைப்பின் உறுப்பினர்கள், இனப்பாகுபாட்டு பிரச்சார இயக்கத்தில் முன்நிற்கின்றனர். இனத்தூய்மை குறித்து வலியுறுத்தும் இந்த அமைப்பு, யூதப்பெண்களை அபாயத்தில் இருந்து காப்பாற்ற பாடுபடுவதாக கூறி வருகின்றது. பாலஸ்தீன கிராமங்களில் ஆபத்தில் சிக்கியுள்ள யூதப் பெண்கள் தினசரி தமதுதொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்வதாகவும், பொலிஸ் உதவியுடன்இவர்களை மீட்டு வருவதாகவும், லுயன டு’யஉhiஅ அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

"ஆரிய இனத்தூய்மை" பற்றி பேசிய ஹிட்லரின் இனப்பிரிவினைக் கொள்கை, இன்று இஸ்ரேலில் நடைமுறைப்படுத்தப் படுவதை, அங்கு இடம்பெறும்சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

மேலதிக விபரங்களுக்கு:
Yad L'achim யூத மத அடிப்படைவாதிகளின் இணையத்தளம்
'Protecting' Jewish girls from Arabs (Jerusalem post)

http://kalaiy.blogspot.com/2009/09/blog-post_27.html

Last Updated on Sunday, 27 September 2009 18:50