Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் தோழர் வினவின் தளத்தின் கட்டுரையாளர் ஒரு அப்பாவியல்ல, ஒரு பாசிட்டே (பகுதி 4)

தோழர் வினவின் தளத்தின் கட்டுரையாளர் ஒரு அப்பாவியல்ல, ஒரு பாசிட்டே (பகுதி 4)

  • PDF

 குறிப்பு : இக்கட்டுரை "அறிவிப்பு : “ஈழத்தின் நினைவுகள்” இனி தொடராது! தொடரும்….. வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!" என்ற வினவு குழுவின் அறிவுப்புக்கு முன் எழுதியது. 5வது பகுதி வினவு குழுவுக்கான பதிலாகவும், 6 வது பகுதி கட்டுரையின் தொடராகவும் வெளி வரும்.  

நாங்கள் இதை எந்த அடிப்படையில், எந்த அரசியலில் இதைச் சொல்லுகின்றோம் என்பது, இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பொது மக்களையும், அப்பாவிகளையும் புலிப் பாசிசத்தில் இருந்து பிரித்து அணுகவும், அறியவும் இது எமக்கு உதவும்.

வினவு கொள்கையளவில் கூட பாசிசம் இங்கு மூடிமறைக்கும் என்பதை ஏற்க மறுத்தார். பாசிசத்தை இந்த உள்ளடக்கத்தில் வைத்து பிரிக்க முடியாது என்பது வாதமாக மாறும் போது, அரசியல் ரீதியான ஒரு முரண்பாடாக அது மாறிச் செல்லுகின்றது.

 

இந்த வகையில் இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் புலிக்கு ஆதரவாக "எதையும்" எழுதவில்லை என்ற வாதம் எம்முன் முன்வைக்கப்படுகின்றது. கட்டுரையாளர் முன் வைப்பதே புலிவாதம் தான். புலிக்கு ஆதரவாக "எதையும்" எழுதவில்லை என்று கூற, கட்டுரையாளரோ கொள்கையளவில் புலிப் பாசிசம் வைத்த தேசியத்தை, தான் ஏற்;றுக் கொள்வதை மறுக்கவில்லை என்ற உண்மை இங்கு வெளிப்படையானது. அதை அவர் ".. எனக்கு புலிகள் மீது எப்பொழுதுமே எங்கள் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் என்ற மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால், இது அவர்களைப்பற்றி விவாதிக்கும் களமாக தற்போது இல்லை என்றுதான் நினைக்கிறேன்." என்கின்றார். இப்படி விவாதிக்காமல் அவர் தன்னை மூடிமறைக்க, புலிபற்றிய விவாதம் நேர்த்தியாகவே திட்டமிட்டு தவிர்க்கப்படுகின்றது. மறுபக்கத்தில் புலிக்காக அவர் இன்னமும் கதைக்கவில்லை என்ற தர்க்கம் முன்வைக்கப்படுகின்றது. இங்கு கட்டுரையாளரின் "புலியற்ற" "பாசிசமற்ற" "வர்க்கமற்ற" வரலாற்றுப் பார்வையிலான, வர்க்க புலிப் பாசிச அரசியலை, எவராலும் தங்கள் வர்க்க அரசியலில் நின்று விவாதத்துக்கு உள்ளாக்க முடியவில்லை. இதனால் இது "புலியற்ற" "பாசிசமற்ற" "வர்க்கமற்ற" ஒரு அரசியல் அனுபவமாக வினவு தளத்தில் உலாவுகின்றது. இதைக் கேட்ட எமக்குதான், "புலியற்ற" "பாசிசமற்ற" "வர்க்கமற்ற" ஒன்றின் மேல், கற்பனையான வயிற்று வலி என்கின்றனர். இப்படியிருக்க, அவர் அல்லது அவரைப் போன்றவர்களை புலியில் இருந்து விடுவிக்க, அவரின் இந்தக் கட்டுரை எந்த விதத்திலும் தோழர்களுக்கு உதவவில்லை. விவாதத்தை நடத்தியவர்களுக்கு, இக்கட்டுரையிலும் இந்த வரலாற்று அனுபவத்திலும் முரண்பாடு இல்லாமல் போய்விடுகின்றது. ஆனால் எமக்கு அது முரண்பாடாக மாறிவிடுகின்றது. இங்கு புலியில் இருந்து அவர்களை விடுவிக்க எடுத்த அனுமானங்கள், அதை தர்க்கித்து விவாதிக்க முடியாமல் தவறானதாக மாறி நிற்கின்றது.

 

அடுத்து கட்டுரையாளர் கட்டுரையில் சொன்ன வரலாற்றை சரி என்று ஏற்றுக்கொண்டு, எம்முடன் எதிர்வினை செய்கின்றனர். அதாவது "புலிகளின் பாசிச நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அவர் எதையும் எழுதவில்லை." என்று கூறி, எம்முடன் தர்க்கிக்கின்றனர். கட்டுரையாளரின் முதலாவது கட்டுரையே புலி பாசிசம் சார்பானது. பாசிச சித்தாந்தம் சார்ந்தது. அது எப்படி என்று பின்னால் நாம் பார்ப்போம்.

 

இங்கு கட்டுரையாளர் சொன்ன தகவல்கள் முதல், அது சொல்லப்பட்ட விதம் புலிசார்பு திரிபாகும். வரலாறு சொல்லப்படும் விதத்தில் கூட பாசிசமே உண்டு.

 

ஒரு பாசிட்டும், ஒரு பொதுமகனும் ஓரே சூழலை இதை எப்படி வேறுபடுத்தி அணுகுவார்கள்? இந்த வேறுபடுத்தலை நாம் அறிந்து கொள்ள, குறித்த வரலாற்று சூழலை நன்கு தெரிந்து இருக்கவேண்டும்.

 

1.கட்டுரையாளர் பேசிய காலத்தின் முரண்பட்ட வரலாற்று சூழல் தெரிந்து இருக்க வேண்டும்.

 

2.புலிப் பாசிசத்தின் நுட்பமான நெழிவு சுழிவான பிரச்சாரத்தின் முழு வரலாற்றுப் போக்கையும் நன்கு தெரிந்து இருக்க வேண்டும்.  

  

3.இந்த விடையத்தை புலிப்பாசிசமும், பொது மக்களும் எப்படி வேறுபட்டு சொல்வார்கள் என்ற அடிப்படையான அரசியல் தெளிவு இருக்கவேண்டும். 

 

இப்படி இருக்க வினவு தளம் "புலி அபிமானிகள் அனைவரும் பாசிட்டுகளா" என்று தனிப்பட நாம் அவருக்கு எழுதிய ஒரு கடிதத்தை பிரசுரித்து "இரயாகரனுக்கு ஒரு பதில்!" என்று எம்மையே ஆச்சரியப்பட வைத்தார். "விமரிசனம் வெளியிடுவதை நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்" என்று கூறியவர், "எமது கடிதத்திற்கு அவர் பதிலேதும் அளிக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். ஆச்சரியமான தர்க்கம் தான். 

 

"புலி அபிமானிகள் அனைவரும் பாசிஸ்டுகளா" என்ற தலைப்பிலேயே, இங்கு அனைவருமல்ல என்று கூறுகின்றது. சரி அனைவரும் அல்லாதவர்கள் யார்? அதன் அரசியல் வரையறை என்ன? இதில் இருந்து அனைவருமல்லாத ஒருவராக குறித்த கட்டுரையாளர் எப்படி வேறுபடுகின்றார். கட்டுரையாளர் எழுதும் குறித்த சம்பவங்கள் பற்றி, இரண்டு தரப்பும் அதை எப்படி வேறுபடுத்தி அணுகுவார்கள்;? 

  
 
கடந்த 30 வருட வரலாற்றின் எந்தப் பக்கத்தையும், அது யாரைச் சார்ந்து எப்படி ஏன் எதற்கு சொல்லுகின்றனர் என்ற விவாதம் தான், அதை தெளிவாகப் பிரிக்கின்றது. கட்டுரையாளரால் சொல்லப்பட்டவை இதில் எந்த வகைப்பட்டது.

 

1.தகவல்கள் திரிக்கப்பட்டவை. அத்துடன் தகவல்கள் அன்னிய சூழலில் நின்று மிகையாக்கி புனையப்படுகின்றது.

 

2.குறித்த வரலாற்று பொதுச் சூழலை மூடிமறைத்து, அன்னியமான நிலையில் நின்றும், புலிக்கு ஏற்ப அதைத் திரித்தும் புரட்டுகின்றார்.

 

இங்கு அவர் தன் அனுபவத்தை பேசவில்லை. மக்களின் பொது அனுபவத்தை, தனக்கு ஏற்ப  திரித்து புரட்டிச் சொல்லுகின்றார்.

 

இங்கு அவர் 1986-1987 க்கு பிந்தைய காலத்தில் மண்ணில் இருக்கவில்லை என்கின்றார். அதற்கு பிந்தைய காலத்தைப் பற்றி அவரின் கருத்துகள், சொந்த தனிப்பட்ட அனுபவமல்ல. பொதுவான ஒன்றின் மேலான, புலி பற்றிய அவரின் "மதிப்பும் மரியாதையும்" சார்ந்து செய்யப்படும் அரசியல் புனைவு. பொது மக்களைச் சார்ந்து நின்று சொல்லும் ஒன்றல்ல. இப்படி இயல்பாகவே 1986-1987 க்கு பிந்தைய வரலாற்றை, புலியின் ஊடாக எமக்கு கூற முனைகின்றார்.

 

1986-1987 முந்தையதை இந்த "மதிப்பும் மரியாதையும்" என்ற பார்வை ஊடாகத்தான், திரித்து புரட்டி சொல்லுகின்றார். இங்கு குறிப்பாக அவரால் எதையும் தன் சொந்த தனி அனுபவமாக சொல்லமுடியவில்லை. 1985 யூலையில் நடந்த திம்பு பேச்சு வார்த்தையும் அதைத் தொடர்ந்து இராணுவம் வெளியேறுவதை கண்காணிக்க புளாட் உருவாக்கிய தற்காப்பு மண் அரண்கள் தடுப்புகள் பின், இராணுவம் தன் முந்தைய சுதந்திரமான நடமாட்டத்தை நடத்த தன் முகாமைச் சுற்றி நடத்திய மோதல்களும், அந்த முற்றுகையை உடைக்க 1000 மீற்றருக்கு (ஒரு கிலோ மீற்றருக்கு) குறைவான தூரத்தில் பயன்படுத்திய சிறிய ரக செல்களும், 1986 (அநேகமாக ஏப்பரலில்) தொடங்கிய விமானத் தாக்குதலை ஓட்டியும், கட்டுரையாளர் பொதுவான இதை மிகைப்படுத்தி தன் அனுபவமாக திரித்துச் சொல்லுகின்றார். இப்படி தன் சொந்த அனுபவத்தை இதில் சொல்லவில்லை. புலிப் பாசிசம் சொன்னதை, திருப்பிச்  சொல்லுகின்றார். 1986  ஏப்ரல் 29 இல் தொடங்கி மே 5 இல் சிறீ சபாரட்ணம் கொலை வரை நடந்த ரெலோ அழிப்பும், அவர்கள் வீதிகளில் உயிருடன் கொழுத்திய காலகட்டத்தைப் பற்றிப் பேசுகின்றாரா. இவரின் ஊரின் அருகில் இருந்த மண்டான் நிலப்பறிப்பு போராட்டமும், இயக்கங்களின் சாதிய அட்டகாசமும் நடந்த அந்தக் காலத்தைப் பற்றி பேசுகின்றாரா?.

 

இக்காலத்தில் கட்டுரையாளரின் சொந்த ஊருக்கு அருகில் வைத்து மனோ மாஸ்டரை (இவர் முன்னாள் புலியும், பின் ரெலோவின் முக்கிய உறுப்பினர். ரெலோவில் உள்ளே அதன் பாசிசப்  போக்குக்கு எதிரான போராட்டத்தை நடத்தியதுடன், சென்னை மரீனா பீச்சில் ரெலோ பெண்களுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்தவர். பின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை அரசியலை முன்வைத்த போது புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர். புலிகள் சுட்டு படுகொலை செய்த போது, மக்களும் மாணவர்களும் போராடினார்கள். (படங்கள் உண்டு. விரைவில் ஆவணப்பகுதியில் இணைப்போம்). இப்படி பல. இதன் போதெல்லாம் கட்டுரையாளருக்கு எந்த மனித உணர்வும், சமூக பாதிப்பும் ஏற்படவில்லை. புலி சொல்வது போல், பேரினவாதம் மட்டும்தான் அவர் கண்ட உண்மையாக, இக்காலத்தில் இருந்ததாக காட்ட முனைகின்றார்.

 

இப்படி இவரைச்சுற்றிய வரலாறு இருக்க, ஒரு பாசிட்டாகவே வரலாற்றைச் சொல்லுகின்றார். சமூகத்தின் பொது அனுபவத்தை திரித்தும், மிகைப்படுத்தியும், மறைத்தும் கூறுகின்றார். இதுதான் பாசிசத்தின் பிரச்சார அம்சமாகும். இந்த மிகைப்படுத்தல், திரித்தல் என்ன என்பதை பார்க்க முன், இந்த பாசிசத்தின் மற்றைய சமூகக் கூறுகளைப் பார்ப்போம். இங்கு பாசிசத்தையும் மக்களையும் பிரிப்பது, உண்மைகளை மறுத்து அதைத் திரித்தலாகும்.   

    

1. நடந்த சூழலை பக்கச்சார்பின்றி சொல்லுதல் தான் பாசிசத்தைப் பிரிக்கும் அளவுகோல். பொது மக்கள் நடந்ததை அப்படியே சொல்லுவார்கள். பாசிட்டுகள் தமக்கு ஏற்ப அதை திரித்து சொல்லுவார்கள்.

 

2. பொது மக்கள் வரலாற்றின் போக்கை பக்கசார்பின்றியும் சொல்லுவார்கள். பாசிட்டுகள் சார்புடன் தமக்கு ஏற்ப அதை திரித்துக் கூறுவார்கள்.  

 

3. புலி தன் இறுதிக் காலத்தில் மக்கள் மேல் நடத்திய கொடூரமான நிகழ்வின் பின், இது மக்களை புலியில் இருந்து மேலும் துல்லியமாக வேறுபடுத்தியுள்ளது. அந்த நிகழ்வுகள், மக்களுக்கு ஒரு பாரிய கல்வியையே, கற்றுக்கொடுத்தது. பொதுமக்கள் இயல்பாக, தம்மில் இருந்து புலியை வேறுபடுத்தி நிராகரிக்கின்றனர். இதன் பின்பும், புலிக்கு பின் நிற்கின்ற எவரும் பாசிட்டுகள் தான். (இந்த அனுபவத்தை கேட்டும், அறிந்தும், உணர்ந்தும், உணராத தமிழ்நாட்டவர் பொதுவாக இதற்கு விதிவிலக்கு) ஈழத்து மக்கள் இதை விட வேறு எந்தக் கல்வி மூலமும், பாசிசத்தில் இருந்து விடுபடவும் கற்றுக்கொடுக்கவும் முடியாது. சொந்த மக்களை படுகொலை செய்தவர்களை ஆதரிக்கின்ற எவனும், எவளும் பாசிட்டு தான். மக்களுக்கு பதில்சொல்வதை விட, மக்களை ஒடுக்கியதை சரி என்பவர்கள் தான் இவர்கள். மக்களைக் கொன்று ஆட்டம் போட்டவர்கள் மேல் தான், பாசிட்டுகள் "மதிப்பும் மரியாதையும்" கொள்கின்றனர். தம்மை அப்பாவியாக அகதியாக காட்டி "மதிப்பும் மரியாதையும்" உண்டு  என்று சொல்லி நிற்பதும் கூட, பாசிசத்தின் மற்றொரு தந்திரம்தான்.       

  

இப்படி பாசிசத்தின் ஊடாக வரலாற்றை அணுகி, வரலாற்றை திரித்து கட்டுரையாளர் காட்டுகின்றார். வினவு கூறுவது போல் "புலி அபிமானி" இப்படித்தான் அணுகிக் காட்டமுடியும் என்றால், ஒரு பாசிட் இதை விட வேறு எப்படி வேறுபட்டு காட்டுவார்!?

 

பி.இரயாகரன்
27.08.2009

 

தொடரும்

Last Updated on Friday, 28 August 2009 05:52