Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் தோழர்களுடனான ஒரு உரையாடல் : 20 வருடமாக தனி மனிதனாக தனித்து நின்று போராடியது என் தவறா!?

தோழர்களுடனான ஒரு உரையாடல் : 20 வருடமாக தனி மனிதனாக தனித்து நின்று போராடியது என் தவறா!?

  • PDF

இது என் மீதான அரசியல் அழுத்தங்களாகின்றது. இதன் மீதான எதிர்வினை,  இறுதியான 20 வருடத்தில், தனித்து நிற்கும் அரசியல் சூழல் எனக்கு எற்படுத்தியது. மக்கள் அரசியல், மக்களின் விடுதலை, இதை முன்னிறுத்தி இதற்கு எதிரான அனைத்துப் போக்குகளையும் நான் தனித்து எதிர்கொண்டது என்பது இயல்பில் என்னை தனிமைப்படுத்தியது.

 

அரசியல் ரீதியாக எம் சரியான கருத்தை, யாராலும் முறியடிக்க முடியவில்லை. இதில் இருந்து தப்ப எனக்கு எதிரான முத்திரை குத்தும் பிரச்சாரத்தை இவர்கள், இலங்கை இந்தியா புலம் என்று எங்கும் செய்தனர். இது எம் தோழர்கள் மத்தியிலும் கூட, உடன்பாடான எம் அரசியலுக்கு வெளியில் இதன் செல்வாக்கு கணிசமாக காணப்படுகின்றது.

 

நாம் எம்மைப் பற்றி, என் நிலை பற்றி தனிப்பட்ட ரீதியில் எதையும் பிரச்சாரம் செய்வது கிடையாது. எமது கட்டுரைகளை தொடர்ச்சியாக வாசிக்காதவர்கள் மத்தியில், எம் அரசியல் நிலையுடன் இல்லாத எதிர்த்தரப்பின் செல்வாக்கு எமக்கு எதிராக இயல்பாக அதிகரிக்கின்றது. இதனால் தோழர்கள் மத்தியில் இருந்து, நாம் தவறான அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றோம்.  

  

தனிநபராக இதை நான் எதிர்கொள்ள முடியாதளவுக்கு, திணிக்கப்படும் அரசியல் அழுத்தங்கள்;. அதேநேரம் அனைத்துக்கும் எதிர்வினையாற்றவேண்டிய சமூக கடமையும், பொறுப்பும். சமூகம் சந்திக்கும் துயரம் கண்டு கொதிக்கும் மன அழுத்தங்கள். எப்படி இதை எதிர்கொள்வது என்ற உளவியல் சார்ந்து எனக்குள் எழும் போராட்டம்.

 

தனிமனித இயக்கம் என்பது வரையறுக்கப்பட்டது. அதற்கு ஒரு எல்லை உண்டு. சமூகமே பாசிசமாகி, எல்லாம் அதுவாகி இன்று இது எம்மை வதைக்கின்றது. அதை எதிர்கொண்டு போராடுவதே எம் வாழ்வாகின்றது. இந்தப் போராட்டம் தனிநபர்களின் முன்னெடுப்பாக இருக்கும் இன்றைய நிலையில், இந்த சுமையோ பல பக்கத்தில் இருந்து பலமடங்காகின்றது.

 

இந்த நிலையில் சர்வதேசிய தோழர்கள் இந்த நிலைமையை மேலேழுந்த வாரியாக புரிந்து கொண்டு, அவர்களின் செயல்கள் கண்ணோட்டங்கள் அழுத்தங்கள் இந்த சுமையை தாங்க முடியாத அளவுக்கு இட்டுச் செல்லுகின்றது. இதனால் இதை வெளிப்படையாக விவாதிக்க வேண்டியுள்ளது. முன் கூட்டிய முடிவுகள், தொலைபேசி விவாதத்தை தடம் புரள வைக்கின்றது.  இப்படி எழும் முரண்பாடுகளை விவாதிக்கவும் சரிசெய்யவும் முடியாத அரசியல் சூழலில், அதுவே எமக்கு எதிரான அரசியல் போக்காக மாறுவதை நாம் காண்கின்றோம். அதேநேரம் நாம் எமக்குள் கூடி விவாதிக்க முடியாத முரண்பாடுகளுடன் உள்ளோம்.  

          

சந்திக்கும் பொது அழுத்தங்கள்

 

மாறி வரும் அரசியல் போக்குகளை எதிர்கொள்ள, ஒரு புரட்சிகரமான சமூகப்பிரிவு ஒரு கூட்டு அரசியல் வேலை முறைக்குள் இன்னமும் வந்துவிடவில்லை. அதை உருவாக்க நாம் முனைகின்றறோம். மக்களின் எதிரிகளை கருத்தியல் தளத்தில் எதிர்கொள்வது, இன்னமும் தனிமனிதர்களைச் சுற்றி இயங்குகின்றது. இதை மாற்றியமைக்க இன்று நாம் போராடுகின்றோம். அதே நேரம் தோழர்கள் மத்தியில் இருந்து பலவிதமான அரசியல் தர்க்கங்கள் விவாதங்கள் முரண்பாடுகள். நாம் ஒரு கடுமையான அரசியல் அழுத்தத்தைச் சந்திக்கின்றோம்.   

  

இந்த வகையில்

 

1.புலிப் பாசிச அரசியல் போக்குகள்


1.தலைவர் உயிருடன் உள்ளார் என்ற பிரிவின் அரசியல்


3.தலைவர் உயிருடன் இல்லை என்ற புலத்து தமிழீழக்காரரின் போக்கு

 

4.பேரினவாத அரசின் பாசிசப் போக்குகள் (இதில் பல அரசியல் கூறுகள் உள்ளது)

 

5.மக்கள் அரசியலை முன்வைக்காத, அதேநேரம் அதை மறுக்கின்ற பிரிவுகளின் செயல்கள், செயல்பாடுகள், சுத்துமாத்துகள் 

 

6.ஈழத்து தோழர்களுடான எமது முரண்பாடுகள்


7.உதிரியான கண்ணோட்டம் சார்ந்த பற்பல முரண்பாடுகள்.


8.தமிழகத்து தோழர்களின் நிலைப்பாடு சார்ந்து, எம்முடனான இவர்களின் முரண்பாடுகள் விவாதங்கள்

 

9.தமிழகத் தோழர்களுடன் தொடர்ச்சியான நேரடியான அரசியல் விவாதங்களின்றி ஏற்படும் முரண்பாடுகள்;. ஈழம் தொடர்பான பொதுக் கருத்தை உருவாக்குவதிலும், அதை பிரச்சாரம் செய்வதிலும், ஒருமித்த அரசியல் போக்கு கோசங்கள் உருவாகவில்லை.

 

இப்படி இன்று நாம் பல முனையில் அன்றாடம் முரண்பாடுகளைச் சந்திக்கின்றோம். அரசியல் அழுத்தங்களை உணருகின்றோம். மன உளைச்சலுக்கு உள்ளாகின்றோம்.

 

புலிகளின் அழிவிலும், அழிவின் பின்னும் புதிதாக பல முரண்பாடுகளைச் சந்திக்கின்றோம்.  இப்படி இலங்கை மற்றும் தமிழக தோழர்களின் முரண்பாடுகள், இன்று நாம் எதிர்கொள்ளும் கடுமையான புதிய அரசியல் அழுத்தங்களாக உள்ளது. இது எமக்கு இந்த நெருக்கடியான இக்கால கட்டத்தில் புதிது. இரண்டாவது மாறிவரும் அரசியல் சூழலை எதிர்கொண்டு போராட, கடுமையான உழைக்கக் கூடிய சூழல் அவசியம்;. ஆனால் தோழமை, இன்னமும்  அதற்கு இசைவாக கைகொடுக்கவில்லை. பல்வேறு போக்குகளுடாக கடுமையாக மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகின்றோம்.

 

இதை இன்று பொது தளத்தில் வெளிப்படையாக விவாதிப்பது அவசியமானது. ஈழத்து தோழர்களை ஒரு கூட்டு வேலை முறைக்குள் கொண்டுவர முனைகிறோம். நாம் ஒன்றாக விரைவில் சந்திப்பதன் மூலம், அரசியல் சூழலை எதிர்கொள்ளும் வண்ணம் புரட்சிகர  அரசியல் போக்கை உருவாக்க முனைகின்றோம்.

 

தமிழக தோழர்கள் ஈழத்து நிலைபற்றி எடுக்கும் நிலைப்பாடுகள் மேல், எம் தோழர்கள் எழுப்பும் கேள்விகள் மற்றும் விவாதங்களும், எமது சில கருத்துகளும் 

 

இதை இன்று வெளிப்படையாக விவாதிப்பது அவசியமாகின்றது. இவை அனைத்துக்கும் இன்று அடிப்படையாக இருப்பது, புலிப்பாசிசம் பற்றிய எமது அரசியல் நிலைப்பாட்டை நாம் வெளிப்படுத்திய விதம் தான்;. பு.ஜ, பு.க இதழ்கள் 1985 – 1995 க்கு இடைப்பட்ட காலத்தில் புலிப்பாசிசம் தொடர்பாக அம்பலப்படுத்திய உத்தி, இன்று அந்த அரசியல் வடிவத்தில் இல்லாமல் போயுள்ளது. இந்த சாராம்சத்தில் தான் எம் முரண்பாடுகளும் உள்ளது. 1995 பிந்தைய காலகட்டத்தில் ஈழத்து நிலைப்பாடு மீதும், அதன் பாசிசப் போக்குகள் மீதும் தொடர்ச்சியான அரசியல் பிரச்சாரத்தை பு.ஜ, பு.க இதழ்கள் செய்யவில்லை. தமிழகத்து அரசியல் நிகழ்ச்சி நிரலாக இதை தொடர்ச்சியாக முன்னெடுக்கவில்லை. தமிழினவாதிகள் புலிப்பாசிசத்தைக் கொண்டு தான், தங்கள் அரசியல் போக்கை வளர்த்து வந்திருந்தனர்.

 

ஈழத்து விவகாரம் மீண்டும் தமிழக அரசியலான போது, புரட்சிகரப் பிரிவுகள் புலிப்பாசிசம் மற்றும்  அரசு பாசிசத்துக்கு எதிராக எம்முடன் ஒரே நிலைப்பாட்டில் நிற்க கூடிய வகையில் ஒரு தொடர் பிரச்சாரத்தை அவர்கள் செய்திருக்கவில்லை. அவர்கள் புலிப்பாசிசம் மீது மென்மையான போக்கை அல்லது கண்டும் காணாமல் அணுகும் போக்கினை கையாண்டனர். இந்திய அரசுக்கு எதிரான போராட்டத்தின் ஊடாக, இலங்கை அரசுக்கு எதிரான புரட்சிகர கோசங்களை சரியாக மையப்படுத்தினர். இந்திய அரசு பற்றி தமிழகத்து தமிழினவாதிகள் கொண்டிருந்த பிற்போக்கான பாத்திரத்தை மையப்படுத்தி, அதனூடாக ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான ஒரு புரட்சிகர நிலைப்பாட்டை எடுத்தனர்.

 

இந்தியாவில் பேரினவாத அரசை ஆதரித்த பிரிவு, புலிப் பாசிசத்தை முன்னிறுத்தி தன்னை நியாயப்படுத்தியது. பேரினவாதத்தை எதிர்த்த பிரிவு, புலிப் பாசிசத்தை முன்னிறுத்தி அதை தேசியம் என்றது. இப்படி இருந்த இந்த அரசியல் நிலை இரண்டையும் எதிர்த்து, தமிழக புரட்சிகர பிரிவின் கோசங்கள் மையப்படுத்தப்படவில்லை. இரண்டும் கடைப்பிடித்த இந்தியா பற்றிய நிலைப்பாட்டை எதிர்த்து, தங்கள் புரட்சிகர கோசத்தை முன்வைத்தது இந்த இடத்தில் இது மிகச்சரியானது. மறுபக்கத்தில் தமிழக மக்களின் கருத்தைத் தீர்மானித்தது, புலி பற்றிய நிலைப்பாடுதான். புரட்சிகர பிரிவுகள் புலிப் பாசிசத்தை, பாசிசமாக வரையறுத்த போதும், அதை சமகால அரசியல் பிரச்சாரத்தில் தெளிவாக முன்னிலைப்படுத்தவில்லை. இதுவே எமக்கும் அவர்களுக்கும்; இடையிலான முரண்பாட்டின் மையமான தோற்றுவாயாக மாறிவருகின்றது.

 

தமிழ் தேசியத்தையும் இனப் பாசிசத்தையும் வேறுபிரிக்காது இணங்கி வென்று எடுக்கும் அரசியல் போக்காக மாற, அதுவே எமக்கு எதிரான ஒரு அரசியலாக மாறுகின்றது. 

 

இங்கு இந்திய அரசுக்கு எதிரான புரட்சிகர நிலைப்பாடு, புலிப்பாசிசத்தை அம்பலப்படுத்தாத கோசமாகும் போது புலிக்கு இது சாதகமாக இருந்தது. புலிப் பாசிசம் அதிகாரத்தில் இருந்ததுடன், இந்திய தமிழினவாதிகள் இந்த புலிப்பாசிசத்தின் பின் அணி திரண்டு இருந்தனர். சரியான இந்தக் கோசத்தை பயன்படுத்துவதில், ஈழத்தில் புலிகளாக இருந்தனர். புரட்சிகரப் பிரிவுகள் ஈழத்தில் பலம்பெற்று இருக்கவில்லை. தமிழகத்தில் தமிழினவாதிகள் இதை தமக்கு சார்பாக கண்டனர்.

 

இந்த நிலையில் தமிழக புரட்சிகர சக்திகளின் நிலை பற்றி, எம்மத்தியில் ஒரு முரண்பாடும் என்னுடன் விவாதங்களும்  நடைபெற்றது. இந்த விவாதத்தின் மையமான அம்சம், புலிப் பாசிசம் பற்றி தமிழழ புரட்சிகர சக்திகளின் கண்டு காணாமல் போன போக்கு அல்லது மௌனம் தான். இரண்டாவது விடையம் தமிழினவாதிகள் புலியைச் சார்ந்து அவர்களின்  செய்தியை கருத்தை முன்னிலைப்படுத்திய கருத்துகள் தான், ஊடகங்களை மையப்படுத்தியது. எதிர்த்தளத்தில் பேரினவாத  அரசை மையப்படுத்தி செய்திகள் கருத்துகள்  தமிழகத்தில் வெளிவந்தது. இரண்டு பாசிசங்கள் கட்டமைத்த தரவுகள் செய்திகள் கருத்துகள் என்ற சார்பு வீச்சுக்குள் தான், தமிழக புரட்சிகரப் பிரிவுகள் ஓரளவுக்கு சார்ந்து நின்றனர். தங்கள் புரட்சிகர அரசியல் நிலையில் நின்று, இந்த கருத்து செல்வாக்குள் இந்தப் பிரச்சனையை அணுகினர். ஈழத்து புரட்சிகர பிரிவுகள் சிறிய ஒரு பிரிவாக இருந்த போதும், இது வேறுபட்ட சரியான  கோசத்தை முன் வைத்தது. இதை தமிழக புரட்சிகரப் பிரிவு தன் கோசமாக முன்னெடுக்கத் தவறியது.

 

இந்த இடத்தில் நாம் தமிழக புரட்;சிகப் பிரிவுகளின் சூழலைச் சார்ந்து புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. இதை எம் தோழர்கள் பலர் புரிந்து கொள்ள முடியவில்லை. இது எம்முடன் ஒரு சுற்று விவாதத்தை நடத்த காரணமாகியது. தமிழக புரட்சிகரப்பிரிவுகள் புலியை பாசிசமாக வரையறுத்து அதன் அடிப்படையில் இயங்கிய போதும், சமகாலத்தில் வெளிப்படுத்திய கோசங்களில் கருத்துகளில் அது தெளிவாகப் பிரதிபலிக்கவில்லை. தொடர்ச்சியாக புலிப் பாசிசத்தை வைத்து பிரச்சாரம் செய்யாமை உருவாக்கிய சூழல் இதற்கு மையமான காரணமாக உள்ளது. தமிழினவாதிகளுடன் இணங்கிச் சென்று, அவர்களை புரட்சிகர பக்கத்திற்கு வென்று எடுக்க முனைந்தனர்.  இந்திய அரசுக்கு எதிரான கோசத்தை மையப்படுத்தி அதை முன்வைத்தனர். புலிப் பாசிசத்தை அம்பலப்படுத்தி, ஒரு மாற்றுப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்கவில்லை. இன்று திரும்பிப் பார்க்கும் போது புலிப்பாசிசம் மறுதலித்த மனிதவுரிமை மீறல்களை தங்கள் கோசத்தின் உள்ளடக்கியிருந்தால், அரசியல் ரீதியாக தமிழினவாதிகளில் இருந்த புரட்சிகரப் பிரிவை இலகுவாக வென்று எடுத்திருக்க முடியும். அது போல் இலங்கை அரசுக்கு சார்பான பிரிவில் இருந்த, புலிப்பாசிசத்துடன் முரண்பாடுகளைக் கொண்டிருந்த பெரும்பான்மையான சமூகப் பிரிவை, புரட்சிகர கோசத்தின் கீழ் அவர்களின் கருத்தை கொண்டுவந்திருக்க முடியும்.

 

மாறாக தமிழினவாதிகளை மையப்படுத்தி, அவர்களை புரட்சிகரமான பகுதிக்கு வென்றெடுத்தல் குறிப்பாக மையப்பட்டது. இதன் அரசியல் விளைவு பற்றி எமக்கு தெரியாது. ஆனால் தமிழினவாதிகள் புரட்சிகர பிரிவை வென்றெடுக்கும் ஒரு அரசியல் போக்கும் இங்கு வளர்ச்சியுறும். இன்று இந்த போக்கு பாசிசத்துக்கு எதிரான எமது போராட்டத்துக்கு மறைமுகமாக நிர்ப்பந்தம் தருகின்றது.

 

எழுத்து முறை, மற்றவருடனான அணுகுமுறை, கட்டுரையில் வெறும் தரவுகள், யாரும் படிப்பதில்லை அல்லது படித்தால் வெறும் தரவுக்காகவே படிக்கின்றனர், தனித்த தனிமனித போராட்டம், தனிப்பட்ட வெறும் தனிநபராக காட்டுதல், இப்படி இதன் மூலம் எமது புரட்சிகர அரசியல் நிலையை மறுக்கின்றனர். இதை தமிழினவாதிகள் மற்றும் புரட்சிகர அரசியலை முன்னனெடுக்காத பிரிவினர் ஊடாக பெற்று, அதில் இருந்து எமக்க எதிராக அணுகுகின்றனர். புலிப் பாசிசத்தை அம்பலப்படுத்தாது தமிழினவாதிகளுடன் கையாண்ட அதே அரசியல் வடிவத்தை, புலிப்பாசிசத்துக்கு எதிராக கையாள்வதுடன் அதை எமக்கு எதிராக முன்னிறுத்துகின்றனர்.

 

தமிழக புரட்சிகர பிரிவுடன் நாம் சந்திக்கும் அரசியல் நெருக்கடி, இப்படி மெதுவாக எமக்கு எதிராக வளர்ச்சியுறுவதைக் காண்கின்றோம். இந்த வகையில் இதை விவாதிக்கவும், தெளிவுபடுத்தவும் வேண்டியுள்ளது. நாங்கள் புலிப் பாசிசத்தை சித்தாந்த ரீதியாக முறியடிக்காமல், பேரினவாத பாசிசத்தை எதிர்கொண்டு போராட முடியாது என்பதே எமது தெளிவான அரசியல் நிலைப்பாடாகும்.  

        

பி.இரயாகரன்
22.07.2009

 

Last Updated on Thursday, 23 July 2009 18:34