Wed04242024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் வேலையில்லை எனில் தொழிலகம் தகர்த்திடுவோம்

வேலையில்லை எனில் தொழிலகம் தகர்த்திடுவோம்

  • PDF

பிரான்ஸ், Nortel தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், நஷ்டஈட்டுத் தொகை வழங்காவிட்டால் தொழிற்சாலையை தகர்க்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

Nortel நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட 480 தொழிலாளர்கள், தொழிற்சாலையை ஆக்கிரமித்திருந்தாலும், அவர்கள் வைத்திருக்கும் சிலின்டர்களில் இன்னும் 'காஸ்' நிரப்பப்படவில்லை, என்று Le Parisien நாளேடு தெரிவித்துள்ளது. கனடிய வர்த்தக நிறுவனமான Nortel நிதி நெருக்கடிக்கு உள்ளானதால், கடன்களை அடைக்கும் காலக்கெடுவை ஒத்தி வைக்குமாறு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

 

 

 


New Fabris என்ற வாகன உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று பொருளாதார நெருக்கடி காரணமாக தொழிலாளரை நஷ்ட ஈடு வழங்காமல் பணி நீக்கம் செய்தது. இதனால் ஆத்திரமுற்ற தொழிலாளிகள், தாம் வேலை செய்த தொழிற்சாலையை ஆக்கிரமித்ததுடன் மட்டும் நில்லாது, எரிவாயு சிலிண்டர்கள் மூலம் தகர்க்கப் போவதாக எச்சரித்துள்ளனர். இம்மாத இறுதியில் ஆளுக்கு 30000 யூரோ நஷ்டஈடு வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வாகன உதிரிப்பாக தொழிலகம் கடந்த ஜூன் 16 ம் திகதி திவாலானதாக அறிவிக்கப்பட்டது. தொழிற்சாலை இயந்திரங்களின் மொத்த பெறுமதி இரண்டு மில்லியன் யூரோ என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடன் வழங்கிய பிரெஞ்சு அரசு இயந்திரங்களை விற்று, தொழிலாளிகளின் பணத்தை கொடுக்குமாறு, தொழிற்சாலை நிர்வாகம் கையை விரித்துள்ளது. பிரான்ஸில் ஏற்கனவே இது போன்ற போர்க்குணம் மிக்க தொழிற்சங்க நடவடிக்கை மூலம் தொழிலாளர்கள் தமது உரிமைகளைப் பெற்றுள்ளனர். மேலதிக விபரங்கள் தொடரும்.

ஏப்ரல் மாதம், பிரான்ஸ், கிரனோபில் நகரில் அமைந்துள்ள Caterpillar தொழிற்சாலையில் 733 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து கம்யூனிச தொழிற்சங்கத்தின் தலைமையில் அணி திரண்ட தொழிலாளர்கள், நான்கு உயர்மட்ட நிர்வாகிகளை பணயக்கைதிகளாக பிடித்து வைத்தனர். நிர்வாகிகள் நாட்கணக்காக தமது அலுவலகத்தினுள் கைதிகளைப் போல அடைந்து கிடந்தனர். இருதய சுகயீனமுற்ற ஐந்தாவது நிர்வாகி ஒருவரை மட்டும் வீடு செல்ல அனுமதித்தனர். அதுவும் "முரட்டு முதலாளி" என்ற வசவுகளுக்கு மத்தியில் தான் வெளியேற வேண்டியிருந்தது. பிரான்ஸில் பணயமாக தடுத்து வைப்பது ஐந்து வருட தண்டனை வாங்கித் தரும் குற்றமாக கருதப்படுகின்றது. இருப்பினும் பிரெஞ்சு அரசு தொழிலாளரை தண்டிக்க முன்வரவில்லை. ஒரு சில வாரங்களுக்குள், பிரான்ஸில் இது போன்ற நான்கு சம்பவங்கள் நடந்து விட்டன.

பிரான்ஸில் 'பிதிவியேர்' என்ற சிறிய நகரில் உள்ள 3M தொழிலகத்தில் 110 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படப்போகிறார்கள், என்ற முடிவை கேள்வியுற்ற அந்தக் கணமே, நிர்வாகி தனது அலுவலகத்தில் 24 மணிநேரம் கைதியாக அடைத்து வைக்கப்பட்டார். பணி நீக்கம் செய்யும் முடிவை வாபஸ் வாங்கிய பின்னரே வீடு திரும்ப முடிந்தது. ஒக்செர் என்னும் நகரில் தொழிற்சாலையை மூடுவதற்கு எதிராக தொழிலாளர்கள் நடத்திய ஊர்வலத்தில் சம்பந்தப்பட்ட முதலாளியும் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அதாவது அந்த முதலாளி தன்னையே எதிர்த்து கோஷம் போட நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இதுவரை நடந்த போர்க்குணாம்சம் மிக்க தொழிற்சங்க போராட்டங்கள் பல வெற்றியடைந்துள்ளன. பிரெஞ்சு அரசாங்கம் ஒன்றில் தொழிலாளர் பக்கம் நிற்கின்றது, அல்லது நடப்பதை வேடிக்கை பார்க்கின்றது. இதே நேரம், தொழிற்சாலைகளில் பல்வேறு இடதுசாரி அமைப்புகள், தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. யாருடைய போராட்ட அணுகுமுறை சிறந்தது, என்பதில் அவர்களிடையே ஒரு போட்டியே நடக்கின்றது.



மேலதிக தகவல்களுக்கு: 
French workers take boss hostage
French auto workers threaten to blow up factory

 

http://kalaiy.blogspot.com/2009/07/blog-post_15.html

 

 

Last Updated on Thursday, 16 July 2009 06:07