Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் இன ஐக்கியத்துக்குப் பதில், இன ஆக்கிரப்பை முன்னிறுத்தும் "ஜனநாயக" நாய்கள்

இன ஐக்கியத்துக்குப் பதில், இன ஆக்கிரப்பை முன்னிறுத்தும் "ஜனநாயக" நாய்கள்

  • PDF

சிங்கள இராணுவ இயந்திரம் மூலமான பௌத்த ஆக்கிரமிப்பையும், சிங்களக் குடியேற்றத்தையும் நியாயப்படுத்துகின்றனர், தனக்கு மட்டும் "ஜனநாயகம்" கோரிய மரமண்டைகள்.

 

இப்படி இன்று தமிழ்ப்பகுதியில் அரசால் கட்டப்படும் பௌத்த கோயில்கள், சிங்கள பேரினவாத மேலாதிக்கத்தின் அடையாளங்கள். இனவழிப்பு சிங்கள இராணுவ இயந்திரத்தைக்கொண்டு, மக்களின்; விருப்புக்கு மாறாக நிர்மாணிக்கப்படும் இனவாத அடையாளங்கள். இரண்டு மக்களும் சேர்ந்து இதைக் கட்டவில்லை. இனத்தை அழித்த சிங்கள இராணுவ இயந்திரமே, இதைச் செய்கின்றது. 

 

இதன் மேலான பொது விவாதம் மீது, தமக்கு மட்டும் "ஜனநாயகம்' கோரிய கூட்டம் ஏன் கட்டக் கூடாது என்கின்றது. சிங்களப் பகுதியில் பௌத்தமல்லாத மதங்களில் கோயில்கள் இல்லையா என்கின்றது!? சிங்கள் குடியேற்றத்தைக் கூட தமிழ்ப் பகுதியில் ஏன் நடத்தக் கூடாது என்கின்றது. சிங்களப் பகுதியில் தமிழ்மக்கள் வாழவில்லையா என்கின்றது!?

 

அரை லூசுத்துமான "ஜனநாயகம்", தனக்கு மட்டும் "ஜனநாயகத்தைக்" கோரியது. இது மகிந்தாவின் பாசிசத்தின் பின், ஓடி நக்குகின்றது. இந்த கூட்டம் தமிழ்மக்களை தான் தின்பதற்கு, தனக்கு மட்டும் "ஜனநாயகத்தைக்" கோரியது. இன்று இந்தக் கூட்டம் புற்றீசல் போல், புலியின் முடிவுடன் பெருகி வருகின்றது. இது எல்லாவிதமான சிங்கள மேலாதிக்க நடத்தைகளையும் ஆதரிக்கின்றது, ஆதரிக்கக் கோருகின்றது.

 

தமிழ்மக்களின் ஜனநாயகப+ர்வமான விருப்பங்களுடன் பௌத்த கோயில்கள் கட்ட முடியும். சிங்கள மக்களும் தமிழ்மண்ணில் சேர்ந்து வாழ முடியும். இதை மட்டும் தான், நாம் ஆதரிக்க முடியும்;. இப்படி தமிழ்மக்களின் ஜனநாயகத்தை மறுத்த எந்தச் செயலும், ஜனநாயகத்துக்கு விரோதமானது. தமக்கு மட்டும் "ஜனநாயகம்" கோரிய கூட்டம், இந்த ஜனநாயக விரோதத்தையே ஆதரிக்கின்றது. இதன் மூலம் அனைத்து மக்களையும் இனவாத ரீதியாக பிரித்தாளுகின்ற சூழ்ச்சியை இங்கு அரசியலாக்குகின்றனர். இது மக்களுக்கு எதிரானது, இனத்துக்கு எதிரானது.

 

தமிழ்மக்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து இணங்கி வாழ்வதை நடைமுறைப்படுத்தும் வண்ணம், இனங்களுக்குள் புரிந்துணர்வு ஏற்படுத்தும் வண்ணம், அனைத்துச் செயல்களும் அமைய வேண்டும். மனிதர்களின், மக்கள் கூட்டங்களின் அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். இனங்களுக்கு இடையிலான தப்பபிராயங்களை களைய, இணக்கமான ஜனநாயக வழிமுறைகளை கையாளவேண்டும். மக்கள் தம் ஜனநாயக உரிமையின் அடிப்படையில் தான், பௌத்த கோயில்களையும், சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்தலையும் மக்கள் முன்னின்று உருவாக்கவேண்டும். இது தான் ஜனநாயகம். இதற்கு மாறாக அதிகார மையங்கள் இதைச் செய்தால், அது இன ஆக்கிரமிப்பாகவும் இன அழிப்பாகவும் இருக்கும்.

 

தமக்கு மட்டும் "ஜனநாயகம்" பேசும் தமிழ் நாய்கள், மக்களைக் கடித்துக் குதறி நடத்தும் குடியேற்றத்தையும், பௌத்த மத ஆக்கிரமிப்பையும் நியாயப்படுத்துகின்றனர். அது அவர்களுக்கு போடும் எலும்புக்கு ஏற்ற விசுவாசம். சிங்களப் பகுதிகளில் தமிழ் மக்கள் வாழவில்லையா, கோயில்கள் இல்லையா என்று, அரை லூசுத்தனமாக உளறுகின்றனர்.

 

முதலில் வரலாற்றை இருட்டடிப்பு செய்கின்றனர். 1987, 1983 இனகலவரங்கள் நடக்க முன்பு, வடக்கு கிழக்கில் சிங்கள் மக்கள் தமிழ் மக்களுடன் இணங்கி வாழ்ந்தார்கள், சிங்கள மக்கள் தமிழ் பகுதியில் தொழில் செய்தார்கள். பௌத்த கோயில்கள் இருந்தன. மக்களுடன் இணக்கமாக வாழ்ந்தார்கள். திருமணங்கள் செய்தார்கள். இது எம் பின்னால் மறைந்து போன வரலாறு. இனவாதம் கொழுந்து விட்டெரியாத சூழலில், மக்கள் இணங்கி வாழ்ந்தார்கள்.  மக்கள் சுதந்திரமாக தமிழன் சிங்களவன் என்ற தீவிரமான இனப்பாகுபாடின்றியும் வாழ்ந்தார்கள். இன்று சிங்கள பகுதியில் எப்படி தமிழ்மக்கள் வாழ்கின்றனரோ, அப்படித்தான். இது மனிதர்கள் வரலாறு.

 

நாளை, அப்படித்தான் தமிழ்ப்பகுதியில் சிங்கள மக்கள் வாழவேண்டும்;. இதை நாம் உருவாக்கவேண்டும். ஆனால் இன்று நடப்பது, இதை இல்லாததாக்கும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள்தான். அதை அரசு முன்னின்று செய்கின்றது. தனக்கு மட்டும் "ஜனநாயகம்" கோரிய தமிழ் நாய்கள், குலைத்து அதை பாதுகாக்க முனைகின்றது.

 

இதற்கு மாறாக நாம் இனங்களுக்கு இடையிலான ஜக்கியத்தை உருவாக்கவும், உரிமைகளை வென்றெக்கவும் வேண்டும். மக்களின் சுதந்திரமான, பரஸ்பர இணக்கத்துடன் சேர்ந்து வாழ்வதை மறுக்கும், ஆக்கிரமிப்புக்களை அதிகார முயற்சிகளையும் முறியடிக்கவேண்டும். இதை யாரும் அங்கீகரிக்க முடியாது. எலும்புக்கு அலையும் கூட்டம் மட்டும், அதை ஆதரிக்கும். 

 

இன்று இன அழிப்பின் உச்சத்தின் ஒரு அங்கமாகத்தான், பௌத்த கோயில்கள் கட்டப்படுகின்றது நாளை சிங்கள குடியேற்றங்கள் நடக்கும். இவை இன முறுகல்களை தணிக்கின்ற, செயல்கள் அல்ல. இனமோதலை முன் தள்ளுகின்ற, திட்டமிட்ட இனவிரோதச் செயல்கள். மக்கள் இணங்கி வாழ்வதை விரும்பாத, தமிழ் சிங்கள பாசிட்டுகளாக உள்ள  இனவாதிகளின் வக்கிரமான மனிதவிரோதச் செயல்கள்.

 

மக்கள் தாமாக விரும்பி சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்வது வேறு. பலாத்காரமாக வாழவைப்பது வேறு. இன்று சிங்கள பேரினவாத அரசு செய்வது, பலாத்காரமாக தமிழனை ஒடுக்க முனைகின்றது. கடந்தகாலத்தில் நடத்திய இன அழிப்பு குடியேற்றங்கள் (பார்க்க : 1.இனங்களின் தனித்துவத்தை அழித்தொழிக்க நடத்திய நிலச் சூறையாடல் 2. மலையக மக்களின் வாழ்விடங்களையே சூறையாடிய இனவாதிகள் ) போன்று, இவையும் திட்டமிட்ட இன அழிப்புத்தான். வவுனியா சந்தியில் புத்தர் சிலையே 1983 க்கு முன் இருந்ததில்லை. இராணுவத்தின் துணையுடன் முளைத்த புத்தர், இன்று பாரிய பௌத்த கோயிலாகிவிட்டது. இதுதான் திருகோணமலை நகர பஸ்தரிப்பிலும் நடந்தேறியது. இப்படி எத்தனை ஆக்கிரமிப்புகள், அத்துமீறல்கள் தொடருகின்றது. இவை எவையும் மக்களின் விருப்புடன் நடக்கவில்லை. சிங்கள ஆக்கிரமிப்பு அரச இயந்திரம் மூலம் கட்டமைக்கப்பட்டவை.

 

இவையும் சரி, இன்று நடப்பவையும் சரி, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கான செயல்களல்ல. இனங்களைப் பிளந்து மோதவிடுகின்ற செயல்கள். மத சார்பற்ற அரசு, எப்படி ஒரு மதத்தை முன்னிறுத்தி செயற்படமுடியும்;!? அதுவும் ஒரு இன மக்களை கொன்ற தன் இராணுவத்தைக் கொண்டு, இதை நிர்மாணம் செய்யமுடியும்!?

 

இன நல்லிணக்கத்தை முன்னிறுத்த முடியாத சிங்கள பேரினவாத மேலாதிக்க அடிப்படையில்  தான், இன்று அனைத்தையும் கையாளுகின்றனர். தமக்கு மட்டும் "ஜனநாயகம்" பேசும் தமிழ் நாய்கள், இதற்கு விசுவாசமாக குலைப்பது எலும்புக்குத்தான். மக்களின் ஜனநாயகத்துக்கு அல்ல. மக்கள் தாமாக சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழக் கூடாது என்ற இவர்களின் அரசியல், இதற்கு அடிப்படையாக உள்ளது. மக்கள் தாமாக சேர்ந்து இணங்கி வாழ்ந்தால், தமக்கு மட்டுமான "ஜனநாயகம்" இல்லாததாகிவிடும் என்ற அச்சம், சிங்கள பேரினவாத அரசின் இனவாதச் செயலை ஆதரிக்கக் கோருகின்றது. இனத்தை விற்று, தான் தின்ன நினைக்கின்றது.

 

பி.இரயாகரன்
30.06.2009
 

 

Last Updated on Wednesday, 01 July 2009 06:20