Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் தம் பெண்களைக் கூட்டிக் கொடுத்து வாழக் கூடியவர்கள்தான், மகிந்தாவின் பாசிசத்தை ஆதரிக்கின்றனர்.

தம் பெண்களைக் கூட்டிக் கொடுத்து வாழக் கூடியவர்கள்தான், மகிந்தாவின் பாசிசத்தை ஆதரிக்கின்றனர்.

  • PDF

மகிந்தாவின் பாசிசம் மக்களுக்கானதே என்று வைக்கின்ற வாதங்கள் அனைத்தும், தவிர்க்க முடியாதவை என்கின்றனர். இதற்கு வலுச்சேர்க்கும் வண்ணம், புலியின் கடந்த இதற்கு ஒப்பிட்டு நியாயம் செய்கின்றனர். நாங்கள் விரும்பியோ விரும்பாவிட்டாலோ, இதை ஏற்றேயாக வேண்டும் என்கின்றனர்.

 

இப்படிப்பட்ட இவர்கள் நாளை தாம் வாழ வழியில்லை என்றால் என்ன செய்வார்கள்? தம் பெண்டுபிள்ளைகளை விபச்சாரத்துக்கு விட்டு வாழக் கூடியவர்கள். இவர்களின் வாழ்வு சார்ந்த சிந்தனை முன், வேறு மாற்று வழி எதுவும் கிடையாது. தமிழ்மக்கள் பற்றி இவர்கள் வைக்கும் நிலைப்பாடு சார்ந்த இந்த நிபந்தனை, பெண்டுபிள்ளைகளை விபச்சாரத்துக்கு விடுவதையே கோரும். இந்த வகையில் தான் இன்று, தமிழ்மக்களை அணுகுகின்றனர். இவர்கள் வைக்கின்ற தீர்வுகள், நியாயங்கள், தர்க்கங்கள் என்று அனைத்தும், இதற்குள் அடங்கிக் கிடக்கின்றது.  "கவுரவமான" பூர்சுவா வர்க்க நிலையில் வாழ்ந்தபடி, மக்களுக்கான எந்த அரசியலையும் வைக்க வக்கற்றவர்கள். மகிந்த பாசிசத்தின் நன்மைகள் பற்றியும், அதன் தவிர்க்க முடியாத தன்மை பற்றியும் உபதேசிக்கின்றனர். இதற்கு இணங்கி வாழ் என்று, மற்றவனுக்கு உபதேசம் செய்யும் மாமாக்கள தான் இவர்கள்.

 

மக்களை ஒடுக்கியும், அவர்களை சுரண்டியும், அவர்கள் (சுய) உரிமைகளை மறுத்தும் நிற்கும் பாசிச அரசை எதிர்த்தால், இது புலியை ஆதரிப்பதாகவும் புலியை மீள கொண்டு வரமுனைவதாகவும், மீண்டும் நாட்டில் அமைதியிழக்க செய்யும் முயற்சியாகவும் சித்தரிக்க முனைகின்றனர். இது எப்படி இருக்கின்றது என்றால், பெண்ணின் விவாகரத்து மற்றும் சுதந்திர உரிமையை ஆதரிப்வர்கள், குடும்பத்தை சிதைப்பவர்கள் என்று கூறும் அறிவற்ற முட்டாள்தனத்துக்கு நிகரானது.

 

இப்படித்தான், இதற்குள் மகிந்தாவின் பாசிசத்துக்கு துதிபாடும் பச்சோந்திக் கூட்டம், தர்க்கம்  செய்கின்றது. இவர்களால் வேறு எந்த விதத்திலும், இந்த மகிந்தாவின் பாசிச அரசை நியாயப்படுத்த முடியாது.

 

ஜனநாயகத்தையோ, சுதந்திரத்தையோ, உரிமைகளையோ, இந்த பாசிச அரசு மக்களுக்கு வழங்கியதாக கூறி நியாயப்படுத்த அதனிடம் எதுவுமில்லை. மக்களின் உரிமைகளை மறுத்துதான், இந்த சுரண்டும் அரசு பாசிச நகர்வுகள் அனைத்தும் உள்ளது. இதற்கு வெளியில் அரசு இருப்பதாக கூறக் கூடிய எந்த தர்க்கத்தையும் யாரும் முன்வைக்க முடியாது.

 

இதை மூடிமறைக்க, அரசு தனக்கு ஜனநாயக வேஷத்தைக் கட்டியாடும். இதற்கமைய  வழங்கும் சீர்திருத்தங்கள், சலுகைகள், கண்துடைப்பு தீர்வுகள் என அனைத்தும், மக்களை ஒடுக்கி வைத்திருப்பதற்காகத்தான். இதை அனுபவிக்கின்ற கூட்டம் சலசலக்கும். இந்த விபச்சாரத்துக் மயங்கும் கூட்டம், விபச்சாரத்தின் பளபளப்பைக் காட்டி விவாதம் செய்யும்;. சூழலின் மாற்றத்தைக் காட்டி, விபச்சாரத்தின் மகிமை ஜனநாயகமாக புதிய மாற்றமாக புகழ்கின்றது. நாளை தேனும் பாலும் ஒடும் என்று சத்தியம் செய்கின்றது.   

 

ஆனால் எதார்த்தம் என்;ன? மக்கள் நாயிலும் கீழான இழிவான வாழ்வை எதிர்கொள்கின்றனர். இதற்குள் பாசிட்டுகள் நடத்தும் தேர்தல் கூத்துகள். அதுவும் "ஜனநாயகத்தின் பெயரில்" அரங்கேறுகின்றது. முந்தைய வன்முறை நிலையுடன் ஒப்பிட்டு, இதை ஜனநாயகம் என்கின்றனர் அல்லது ஜனநாயகத்தின் முதல் படி என்கின்றனர்.

 

இப்படி மக்கள் வேஷங்கள், கூத்துகள்;. பாசிசத்தின் எல்லாக் கடைக்கோடியிலும், இது அரங்கேறுகின்றது. இதை நியாயப்படுத்தி பேசுபவர்கள், உண்மையில் ஜனநாயகம் பற்றிய அடிப்படை அறிவைக் கூட கொண்டிருப்பதில்லை.

 

ஜனநாயகம் என்றால் என்ன? அது எப்படி மக்களின்; உரிமையாக எதார்த்தத்தில் இருக்கும் என்பதை, புரிந்து கொள்ள முடியாதவர்களாக அல்லது அதை மறுப்பவர்களாக உள்ளனர். இவர்களிள் அறிவு, சிந்தனை எல்லாம் மட்டமானது. மனைவி மக்களைக் கூட்டிக் கொடுத்துவிட்டு அதற்கு விளக்கு பிடிப்பது போல், மக்கள் ஓட்டுப்போடுவது தான் ஜனநாயகம் என்கின்றனர். இதைத்தான் பல "ஜனநாயகக்' கோமாளிகள், மீண்டும் மீண்டும் கீறி ரெக்கோட் மாதிரி கூறுகின்றனர்.

 

கடந்த காலத்தில் ஒட்டுப்போடும் உரிமையைக் கூட மறுத்;த வன்முறை சூழலில், இன்று அது கிடைப்பதால் அது ஜனநாயகமாகி விடாது. மக்களை விற்றுத்தின்னும் கும்பல் தான், இதை "ஜனநாயகம்" என்று கூறுகின்றது. இங்கு "ஜனநாயகத்தின்" பெயரில் நடப்பது, மக்களை விற்றுத்தின்னும் பொறுக்கி அரசியல் தான். சொல்லப்போனால் மக்கள் விரோதிகள் போட்டி போடும் உரிமையைத்தான், "ஜனநாயகமாக" காட்டப்படுகின்றது. மக்களின் சொந்த அரசியல் அதிகாரத்துக்கு பதில், பொறுக்கிகளுக்கும் திருடர்களுக்கும், சுரண்டும் கும்பலுக்கும்   வோட்டு போடக் கோருகின்றனர்.   

   

வேடிக்கை என்னவென்றால், இதில் முன்னின்று ஈடுபடுபவர்கள் எல்லாம் யார்? மக்களா? இல்லை. மக்களை பலவழிகளில் ஒடுக்குபவர்கள் தான். சாதியின் பெயரில், இனத்தின் பெயரில், மதத்தின் பெயரில், இன்னும் பல பெயரிலும், சுரண்டும் வர்க்கமாக மக்களை ஒடுக்கி சுரண்டி வாழ்பவர்கள் தான்;. இந்தக் கூட்டத்தில் இணைந்து, எவர் ஈடுபட்டாலும் இதைத்தான் செய்வார்கள். கடந்தகாலத்திலும்;, நிகழ்காலத்திலும் ஜனநாயகத்தை மக்களுக்கு மறுத்தவர்கள் தான் இவர்கள். காலத்துக்கு காலம் புதுவேஷம், புதுக்கோசம்.  மக்கள் அதிகாரத்தை மறுப்பது மட்டும், அடிப்படையான கொள்கையாக கொண்டவர்கள். அவர்கள் புலி வேஷம் போட்டாலும், மகிந்த வேஷம் போட்டாலும் இது மட்டும் மாறாது. மக்கள் அதிகாரத்துக்கு எதிரான அரசியலே, இவர்களின் அரசியல் அடிப்படையாகும். இதில் அங்குமிங்கும் நடுநிலை வேஷம் போட்டாலும் சரி, நல்லதை ஆதரிப்போம் மற்றதை எதிர்ப்போம் என்று கூறி கயிறு திரித்தாலும் சரி, இவை அனைத்தும் மக்களின் அதிகாரத்துக்கு எதிரானது. 

  

இன்று இப்படி பலர் மகிந்தாவின் அரச பாசிசத்தின் பின் கடை விரித்து நிற்கின்றனர். அனைத்தையும் இதற்கமைய நியாயப்படுத்துகின்றனர். மக்களின் விடிவிற்கான, அவர்களின் சொந்த அரசியல் அதிகாரத்துக்காக குரல் கொடுக்க மறுப்பவர்கள் தான் இவர்கள். அதற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். விவாதம் செய்கின்றனர். தர்க்கிக்கின்றனர். இன்று இதை இனம் கண்டு, மக்களுக்காக மக்கள் அதிகாரத்துக்காக போராடுவது தான், எம்முன் இருக்கும் ஓரேயொரு மக்களுக்கான மாற்று அரசியல் வழியாகும்.

 

பி.இரயாகரன்
28.06.2009
 

 

Last Updated on Sunday, 28 June 2009 18:22