Mon02262024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

பெண்களை நிர்வாணப்படுத்தியது புலியென்று, அரச ஆதரவாக ஆய்வு செய்கின்றனர்

  • PDF

இராணுவத்தின் வெற்றிகரமான இனவழிப்பின் போது,  பெண்களுக்கு நடந்த அவமானத்தை உறுதிசெய்யும் வண்ணம் இராணுவம் எடுத்த நிர்வாணப்படத்தை அதிரடி இணையம் வெளியிட்டு இருந்தது. அதிரடியில் தொடர்ச்சியாக எழுதும், கிழக்கான் ஆதம் என்ற நபர், 'இராணுவத்தினரை விட புலிகளே செய்திருக்கச் சாத்தியங்கள் அதிகமுள்ளது." என்று  எழுதுகின்றார்.

 

அதிரடி ஆசிரியர்கள் இதை வெளியிட்டு, தம் மறுப்பை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அதிரடியின் நிலை என்பது, பொறுப்புமிக்கதும் ஆரோக்கியமானதுமாகும். அத்துடன் இன்னும் பல படங்கள் தமக்கு கிடைத்ததாகவும் கூட அறிவித்துள்ளனர்.

 

கிழக்கான் ஆதம் எழுதுகின்றார் 'அப்பெண் போராளிகள் இராணுவத்தினரால் தான் நிர்வாணமாக்கப்பட்டனரா? என்பதற்கு எந்த ஆதாரத்தையும் அதில் காண முடியவில்லை மாறாக பல சந்தேகங்களே தொக்கி நிற்கின்றன. அவைகளை நோக்கும் போது தங்கள் சக போராளிகளால் நிர்வாணப்படுத்தப்பட்டு அவைகள் புகைப்படங்களாக்கப்பட்டு இறுதியில் பிரச்சாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் போலத்தான் அவை தெரிகின்றன." இங்கு பேரினவாத ஆணாதிக்க இராணுவத்தைக் காப்பாற்றும் வக்கிரம் கொப்பளிக்கின்றது. இராணுவம் செய்ததற்கான ஆதாரத்தைக் காட்டவில்லை என்றவர், புலி செய்ததாக காட்ட ஆதாரத்தைத் தேடுகின்றார். அதைப்பார்ப்போம்.

 

1. "புகைப்படத்தில் நான் ஒன்று என சிகப்பால் குறித்த இடம் இங்கு புகைமூட்டம் காணப்படுகின்றது மற்றுமல்லாது ஏனைய புகைப்படங்களிலும் காணப்படுகின்றது அவ்வாறாயின் அது சண்டை நடந்து கொண்டிருக்கும் போது பிடிக்கப்பட்ட படம். அப்படியாயின் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது உடனே அவசரமாக இராணுவத்தினர் புலிகளின் பகுதிகளுக்குள் பிரவேசித்திருக்க சாத்தியமில்லை என்பதுடன் அவ்வாறு அவர்கள் பிரவேசித்திருந்தாலும் தங்கள் உயிர்களை காக்க சண்டையிடுவதிலேயே கவனம் செலுத்தியிருப்பர். எனவே பெண் போராளிகளின் உடைகளை அவர்கள் நீக்கச் சாத்தியமில்லை.

அத்துடன் அவ்வாறு உடைகளைக் கழற்றி புகைப்படமெடுப்பதால் அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியிலோ அல்லது போரியில் ரீதியிலோ எந்த இலாபமும் இல்லை. அத்துடன் இறந்த உடலங்களை சில தினங்கள் கழியாமல் இராணுவத்தினர் கிட்டச்சென்று உடைகளை அகற்ற முற்பட மாட்டார்கள் ஏனெனில் அவர்களின் உடைகளில் குண்டுகள் பொருத்தப் பட்டிருக்கலாம் எனப் பயப்படுவர்.

ஆகவே யுத்தம் நடைபெறுகின்ற போது இதை அவர்களின் உடலில் எந்த தன்னியக்க வெடி குண்டுகளும் பொருத்தப்படவில்லை என்று உறுதியாகத் தெரிந்தவர்களால் தான் அதனைச் செய்ய முடியும். எனவே இதை யார் செய்திருப்பர் என்பதை நீங்கள் கண்டுபிடியுங்கள்" என்கின்றார்.

 photo4cons1.jpg

 

 

 

 

 

ஐயா இராணுவ பேச்சாளரே! உண்மையை பொய்யாக உங்களால் ஒருநாளும் திரிக்க முடியாது. இங்கு புகை என்பது, உண்மையை பொய்யாக்க உங்கள் கண்டுபிடிப்பு. அது யுத்தத்தினால் ஏற்பட்ட புகையல்ல. அது புகையே அல்ல. கமராவில் படிந்துள்ள புகை, அதாவது மாசு. எப்படி? இங்கு இதைக் கவனியுங்கள், மூன்று வெவ்வேறு கோணத்தில் எடுக்கப்பட்ட ஓரே காட்சி, நீங்கள் புகையாக கூறியது மட்டும் இடம்மாறுகின்றது. இது கமராவின் நிலைக்கு ஏற்ப இடம்மாறுகின்றது. நீங்கள் புகையாக காட்டி திரிக்கும் பகுதி, இடம் மாறுகின்றது.

 

நீங்கள் புகையாகக்காட்டும் பகுதியை விட, படத்தின் உட்பகுதி அவை இல்லாமல் விலகி இருக்கின்றது. கமரா படிவுதான் புகை.

 

உங்கள் இராணுவ பேச்சாளரின் அறிவு  கேட்பது 'அவ்வாறு உடைகளைக் கழற்றி புகைப்படமெடுப்பதால் அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியிலோ அல்லது போரியில் ரீதியிலோ எந்த இலாபமும் இல்லை." ஆணாதிக்க இராணுவம் என்பது பெண்ணை புணர்வதற்குரிய அடிப்படையாகும். இந்த இராணுவ ஆணாதிக்க உணர்வு என்பது பெண்ணை புணர தேடுவதும், பெண்ணை நிர்வாணமாக ரசிப்பதற்குரிய அடிப்படையைக் கொண்டதுமே.

 

யுத்தத்தில் இராணுவத்தை தக்கவைக்க விபச்சாரிகளை கூட, கூட்டிக்கொடுக்கும் நிலை இலங்கையிலும் உள்ளது. பெண்களின் நிர்வாணம் என்பது யுத்தத்தை ஊக்கப்படுத்த, பெண்ணை உயிருடன் பிடிக்க, அவளை நிர்வாணமாக்கிப் புணர விரும்பும் இராணுவ மனநிலையை உருவாக்குகின்றது. யுத்தத்தில் பெண்கள் பலாத்காரத்துக்கு உள்ளாகுவது, ஆணாதிக்க இராணுவத்தின் பொதுவான கண்ணோட்டமாகவே உள்ளது.இங்கு இறந்த நிர்வாணமான பெண்களை புணர்ந்து இருக்கும் சந்தர்ப்பத்தைக் கூட,  யாரும் நிராகரிக்க முடியாது.   

 

2. 'புகைப் படத்தில் இரண்டு என்று சுட்டிக் காட்டியுள்ள இடம். இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டவுடன் முழு நிர்வாணமாக வெளியிடப்படவில்லை. காரணம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மாக்கர் ரக பேனாக்களினால் புகைப்படத்துக்கு மேலே பெண்னுறுப்புக்கள் மறைக்கப்பட்டுள்ளன. இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது இராணுவத்தினர் அந்த புகைப்படங்களை எடுத்திருந்தால் நிச்சயம் முழு நிர்வாணமாக வெளியாகியிருக்கும் அவ்வாறு வெளியாகியிருந்தால் அவற்றை வெளியிடுபவர்கள் கணணியில் நான் அம்புக்குறியால் மறைத்துக் காட்டியதுபோல மறைத்திருப்பர் எனவே அதை நிர்வாணமாக வெளியிடவும் கூடாது அதே நேரத்தில் வெளியிடப்படவும் வேண்டும் என்ற நோக்கில் அவை எடுக்கப்பட்டுள்ளது."

photo4cons4.jpg 

 

இந்த இராணுவப் பேச்சாளர் இரண்டாவது ஆதாரத்துக்கு, அதிரடியின் பதிலே போதும் "இரண்டாவது சந்தேகமான புகைப்படங்கள் எடுக்கப்பட்டவுடன் முழு நிர்வாணமாக வெளியிடப்படவில்லை. காரணம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மாக்கர்ரக பேனாக்களினால் புகைப்படத்துக்கு மேலே பெண்னுறுப்புக்கள் மறைக்கப்பட்டுள்ளன. இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். எமக்குக் கிடைத்த அனைத்துப் புகைப்படங்களும் முழுமையாகவே கிடைக்கப் பெற்றன. அப்படங்களின் மேல் பெண்ணுறுப்புகளை கறுப்பு மையால் மறைத்தவர்கள் “அதிரடி” நிர்வாகத்தினரே. ஆகவே அச்சந்தேகத்தை விட்டுவிட்டு.."

 

3. இராணுவ பேச்சாளர் கிழக்கான் ஆதம் கூறுகின்றார் "அப்புகைப்படங்கள் எடுக்கப்படும் போது அருகிலிருந்தவர்கள் அனைவரும் சாதாரண பாதணிகள் அணிந்துள்ளனர். இது கவனிக்கத்தக்க ஒன்றாகும். இராணுவத்தினர் நிச்சயம் சாதாரண காலணிகளை அணிந்து யுத்தமுனையிலோ அல்லது சாதாரணமாகவோ இருக்க மாட்டார்கள். அவர்கள் தங்களின் இராணுவ உடையணியும் போதெல்லாம் நிச்சயம் சப்பாத்து பூட்ஸ் அணிந்தே இருப்பவர்.

இந்தப் புகைப்படங்களின் பக்கத்தில் காணப்படுகின்ற எவரும் இராணுவ சப்பாத்து அணிந்து காணப்படவில்லை. எனவே இது இராணுவமில்லாத ஒரு சாராரால் எடுக்கப்பட்டுள்ளது.

 

யுத்தமுனையில் இராணுவம் மற்றும் புலிகள் மட்டுமிருந்த இடத்தில் இராணுவம் இல்லாவிட்டால் நிச்சயம் அது புலிகளின் கைவரிசை தான் என்பது புலனாகிறது."

 photo4cons2.jpg

photo4cons3.jpgஇராணுவம் சாதாரண காலனியுடன் நிற்காது என்பது, அவர்கள் எப்போதும் இராணுவ சப்பாத்துடன் தான் நிற்பார்கள் என்று காட்ட முனைவதாகும். சுத்த அயோக்கியத்தனமான விளக்கம். அவர்கள் தங்கள் தங்குமிடத்தில் காலணிகளையே அணிவார்கள். அதாவது யுத்தம் செய்யாத நேரத்தில். காலணி உள்ள படம், இராணுவம் தங்குமிடமாக ஏன் இருக்கக் கூடாது.! செருப்புடன் நிற்றல் என்பது, பெண்களை அவர்கள் தங்குமிடம் வரை (உயிரற்ற நிலையில்) கொண்டு வந்ததைக் காட்டுகின்றது. இதில் இரண்டாவது அம்சம், தமிழ் கூலிக் குழுக்கள் ஏன் அங்கு இருந்திருக்க முடியாது. இந்த யுத்தத்தில் அவர்களும் செயற்பட்டனர்.

 

பெண்கள் உறுப்புகள் மூடப்பட்டு, அவை அகற்றப்படுகின்றது. நிர்வாணமாக்கப்பட்ட பெண்கள், பொதுவாக அங்கு காட்சிக்குட்படுத்தப்படுகின்றது. இதனால் பெண் உறுப்புகள் மறைக்கப்பட்டு படத்தில் அகற்றப்பட்டுள்ளது. இங்கு சில படத்தில் போர்த்தப்பட்ட போர்வை, இராணுவ தங்குமிட கூடாரங்களுக்கு பாவிக்கப்படும் கூடாரத் துணி.

 

4. அடுத்து இராணுவ பேச்சாளர் கூறுகின்றார் "இங்கே நிர்வாணமாக்கப்பட்ட பெண்போராளிகள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்படாமல் அவர்கள் பலியான இடத்திலேயே ஆடை அகற்றப்பட்டுள்ளது. மட்டுமல்லாது ஆடைகள் அகற்றப்பட்ட முறை மிகவும் அவசரமாக நீக்கப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அவர்கள் இந்தப் போராளிகளின் உடல்களை ஒரிடத்துக்கு எடுத்துச் சென்று அவ்விடத்திலேயே ஒன்றாக வைத்தே ஆடைகளை கழற்றி புகைப்படம் எடுத்திருப்பர்.

அத்துடன் மிகவும் அவசரமாக இந்தப் போராளிகளின் மேலாடையை நீக்கிவிட்டு புகைப்படம் எடுத்திருக்கத் தேவையில்லை மிகவும் நிதானமாக அனைத்து ஆடைகளையும் நீக்கிவிட்டு எடுத்திருக்கலாம்.

இந்த புகைப்படங்களை நாங்கள் நோக்குகின்ற போது இந்தப் பெண் போராளிகளை நிர்வாணப்படுத்திய கீழ்த்;தரமான செயலை இராணுவத்தினரை விட புலிகளே செய்திருக்கச் சாத்தியங்கள் அதிகமுள்ளன."

 

'ஒரிடத்தில் ஒன்று சேர்க்கப்படாமல்" என்பது எப்படி. பெண் கிடைக்கும் இடத்தில் தான் நிர்வாணம். இந்தப் படங்கள் ஒரு நாளில் ஒரு சண்டையில் எடுக்கப்பட்டவையல்ல. அதிரடி கூறுவதை பாருங்கள் "மேலும் எமக்குக் கிடைத்த பெரும்பாலான இதுபோன்ற படங்களில் (சிலரது மின்னஞ்சல் மூலமும்) ஒரு சிலவற்றை மட்டுமே நாம் பிரசுரித்துள்ளோம்." ஒன்றல்ல பல, பல சம்பவங்கள். 

 

அவசரமாக எடுத்ததாக கூறுவது எந்த அடிப்படையில். இதுபோன்ற செயல், சமூகத்தில் அங்கீகரிப்பட்டதல்ல. இது கள்ளத்தனமானது. இதில் ஒளிமறைவு சமூக ரீதியானது. பெண் இறந்தால், பிடிபட்டால் அங்கேயே நிர்வாணமாக்குவது, படம் எடுப்பது தான் நடக்கும். மேலாடைகளை அவசரமாக நீக்கியது என்று கூறுவது எல்லாம், அவனின் வக்கிரத்தைப் பொறுத்தது. நாம் முன்பு வெளியிட்ட வீடியோ காட்சி, ஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம். இதை மேலும் வலுவூட்டுகின்றது.

 

இதை புலிகள் பிரச்சாரம் என்றும், 'இராணுவத்தினரை விட புலிகளே செய்திருக்கச் சாத்தியங்கள் அதிகமுள்ளது." என்று கூறுவதும், சுத்த அபத்தம். இராணுவத்தைக் காப்பாற்றும் அசிங்கம்.

 

ஐயா, இராணுவ ஆய்வாளரே, ஏன் இதை ஒரு விசாரணை செய்யக் கோரக் கூடாது. இதுபோன்ற யுத்தக்குற்றங்கள் நடந்ததா அல்லது நீங்கள் கருதுவது போல் இது புலி விளையாட்டா என்பதை அறிய, ஒரு சர்வதேச விசாரணைக்காக ஏன் உத்தரவிடக்கூடாது. அதை நேர்மையாக அரசிடம் கோருங்கள்.

 

பி.இரயாகரன்
08.06.2009 
  

Last Updated on Monday, 08 June 2009 11:23