Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் குமுதத்தின் ராகுல்காந்தி ENCOUNTERED BY வினவு !

குமுதத்தின் ராகுல்காந்தி ENCOUNTERED BY வினவு !

  • PDF

விடைபெறுகிறார் பிரபாகரன் என்று அவருக்கு 83 ஆம் பக்கத்தை ஒதுக்கியிருக்கும் குமதம் காங்கிரசின் குலக்கொழுந்தும், ராஜீவ் - சோனியாவின் பட்டத்து இளவரசரும், இந்தியாவின் அடுத்த பிரதமருமான ராகுல் காந்தியின் பத்து மேன்மைகளை 2ஆம் பக்கத்தில் வெளியிட்டு யாருக்கு முதலிடம் என்பதில் நன்றி விசுவாசத்தைக் காட்டியிருக்கிறது. குமுதத்தின் அந்த பத்து வரலாற்றுப் புகழ்மிக்க சாதனைகளை வினவு என்கவுண்டர் செய்கிறது.

 

குமுதம்: டெல்லியில் உள்ள ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படிக்க ராகுலுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் இடம் கிடைத்ததாம்.

வினவு: இதனால் ராகுல் எந்த விளையாட்டில், எந்த இந்திய அணியில் விளையாடினார் என்று  தேடாதீர்கள். பிரதமரின் பிள்ளையை நன்கொடை வாங்கி சேர்த்துக் கொள்ள கல்லூரி நிர்வாகத்திற்கு பயமிருந்திருக்கும் என்பதால் இந்த ஸ்போர்ட்ஸ் கோட்டா!

குமுதம்: உங்களுக்கு ராகுல்வின்சியைத் தெரியுமா? இது ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிப்பதற்கு ராகுல் கொடுத்த பெயர். ராகுல் காந்தி என்றால் எல்லோருக்கும் தெரிந்து விடும் என்பதால் இந்த மாற்றமாம்.

வினவு: ராகுல் காந்தி படிப்பில் மகாமட்டம் என்பது உலகறிந்த விசயம். இதில் ஹார்வர்டில் எப்படிச் சேர்த்துக் கொண்டார்கள் என்பதும் மகா ரகசியம். இந்த தலைமறைவு வாழ்க்கையில் அவர் தனது கொலம்பியா தோழியுடன் ஊர்சுற்றி விட்டு இப்போது பிரதமர் இமேஜூக்குகாக அந்த அப்பாவிப் பெண்ணை கழட்டி  விட்டதாக அறிகிறோம். உண்மையா?

குமுதம்: விமானப் பயணங்களின் போது ராகுல் மறக்காமல் எடுத்துச் செல்வது புத்தகங்கள். அரசியல், வரலாறு, பன்னாட்டு உறவுகள் உட்பட சற்று கனமான டாபிக்குகள் ராகுலின் சாய்ஸ்.

வினவு: தமிழ் சினிமா ஷூட்டிங்குகளில் நடிகைகள் ஆங்கிலமே தெரியாவிட்டாலும் பந்தாவுக்காக ஆங்கில கிரைம் நாவல்களைப் படிப்பதாக பேட்டியில் அளப்பார்கள். கல்லூரியின் பாபா பிளக்ஷிப் பாடத்திட்டத்தை படிப்பதற்கே ஸ்போர்ட்ஸ் கோட்டா தேவைப்பட்டவர் இப்படி கண்ட கண்ட கனதியானதை எல்லாம் படிக்கிறார் என்றால்…..?

குமுதம்: வெளிநாடுகளில் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பியபோது அவரது ஆசை மும்பையில் ஒரு அவுட் சோர்ஸிங் கம்பெனி நடத்த வேண்டும் என்பதுதான்.

வினவு: காங்கிரசு ஆட்சியில் இந்தியாவையே முழுதாக விற்றுவிட்டு அவுட்சோர்சிங் செய்கின்ற வேளையில் ராகுல் அந்த சின்ன ஆசையை மறந்ததில் என்ன வியப்பு?

குமுதம்: நிருபர்களுக்கு ராகுல் ‘நோ கமெண்ட்ஸ்’ சொல்கிற ஒரே கேள்வி, “அமிதாப்பச்சன் பற்றி என்ன நினைக்கிறீங்க?” அமிதாப் குடும்பம் என்றாலே ராகுலுக்கு அல்ர்ஜியாம்.

வினவு: டாடி இந்திய அமைதிப் படையை ஈழத்திற்கு அனுப்பி எத்தனை தமிழ் மக்களைக் கொன்றார் என்று கேட்டால் அவருக்கு அலர்ஜி இல்லாமல் போகுமா என்ன?

குமுதம்: அரசியலில் இல்லாத தனது நண்பர்கள் மூலம் உத்தரப் பிரதேசத்தில் அடிக்கடி ரகசிய கருத்துக் கணிப்புகள் நடத்தி, மக்களின் நாடி பிடித்துப் பார்ப்பது ராகுலின் வழக்கம்.

வினவு: செட்டி நாட்டு சிதம்பரத்திற்காக தேர்தல் பரப்புரை செய்ய சிவகங்கை வந்த ராகுலுக்கு எமது தோழர்கள் கருப்புக்கொடி காண்பித்து முழக்கமிட்டதும் அவரது பேர்&லவ்லி முகம் இருண்டுபோனது. அடுத்த முறை இங்கும் கணிப்பு எடுத்து விட்டு வரவும்.

குமுதம்: மிதுன ராசிக்காரரான ராகுலுக்கு வாட்ச், மோதிரம் அணிவதில் விருப்பம் கிடையாது. அக்கா கட்டிய ராக்கியை தனது சென்டிமெண்ட்டாக நினைத்து தேர்தலின்போது அணிந்திருந்தார்.

வினவு: தங்கை பிரியங்காவை அக்காவாக குமுதம் ஏதோ தமிழ்நாட்டு அக்காவை நினைத்து எழுதிவிட்டது போலும். போகட்டும். தங்கை பாட்டி இந்திராவின் சேலையை சென்டிமெண்ட்டாக அணிந்து தேர்தல் பரப்புரை செய்து எல்லோரிடமும் இதுதான் இந்திரா சேலை என பீற்றினாராம். அதுபோல அப்பாவின் குர்தாவை ராகுல் அணியலாம். இதையெல்லாம் நியூசாக்கி காசு பார்ப்பதற்கு இளித்தவாய இந்தியர்கள்தான் இருக்கிறார்களே.

குமுதம்: அக்கா பிரியங்கா காந்தியின் செல்லக் குழந்தைகள் மிராயாவும், ரைகானும்தான் ராகுலின் ஃபேவரைட் புஜ்ஜிமாக்கள்.

வினவு: பின்னே ஈழத்தில் பெற்றோரை குண்டுவீச்சில் இழந்து கதறிக்கொண்டிருக்கும் குழந்தைகளா அவருக்கு பிடிக்கும்?

குமுதம்: ராகுலுக்குப் பிடித்த விளையாட்டுகள் ஸ்குவாஷூம், செஸ்ஸும், ஸ்கூபா டைவிங்கும்.

வினவு: டாடிக்கு விமானம் ஓட்டுவது பிடிக்கும். மம்மிக்கு என்ன பிடிக்கும்?….சிங்கள விமானங்கள் போடும் குண்டுகள்…..?

 

http://www.vinavu.com/2009/05/23/rahul-gandhi-encountered-by-vinavu/

Last Updated on Saturday, 23 May 2009 05:51