Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் இந்தியத் தேர்தலும் ஈழத்தமிழரும்

இந்தியத் தேர்தலும் ஈழத்தமிழரும்

  • PDF

1983 க்கு பின்பாக தமிழக அரசியல் தளத்திலான பிழைப்புவாதம், ஈழத்தமிழர் விவகாரம் ஊடாகவே நடந்தேறி வந்துள்ளது. தமிழன், தமிழினவுணர்வு என்ற முகமூடியை தரித்துக்கொண்டு, ஈழ ஆதரவு போராட்டங்கள் ஊடாக பிழைத்துக்கொள்ளவும் தமக்கேற்ப கூலிக் குழுக்களை உருவாக்கினர்.

 

 

ஆயுதம், பணம், பயிற்சி, அரசியல் என்று, ஒரு இனத்தின் சொந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தி, வெறும் கூலிக் குழுக்களின் போராட்டமாக ஈழ ஆதரவு என்ற பெயரில் சிதைத்தனர். இப்படி உருவான கூலிக் குழுக்கள், சொந்த மக்களை ஒடுக்கத் தொடங்கியது.

 

இதன் பின்னணியில் தான் அன்று இந்திய அரசு முதல் இன்று போலிக் கம்யூனிஸ்டுகள் வரை இயங்குகின்றது. இப்படி ஈழத் தமிழ்மக்களுக்கு எதிரான போராட்டத்தை உருவாக்கியதன் மூலம், இந்த மனிதவிரோத செயலை செய்தனர். அதையே அரசியலாக ஊக்குவித்தனர். இவர்கள் கொடுத்த ஆதரவு, எதிர்ப்பு என்று அவை எந்த நிலையில் இடம்மாறினாலும், இது ஈழ மக்களுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது. அதாவது இவர்கள் எதைச் செய்தாலும், அது ஈழத்தமிழ் மக்களுக்க எதிராகவே இருந்துள்ளது.

 

ஈழ ஆதரவு பிழைப்புவாதிகளின் விருப்பம் மற்றும் துணையுடன் அத்துமீறி ஆக்கிரமித்த இந்தியா, இதன் மூலம் புலிகளை அவமானப்படுத்தியும் ஈழத் தமிழ்மக்களை படுகொலையும் செய்தனர். இதனால் ராஜீவ் புலிகளால் கொல்லப்பட்டார். இதன் பின் ஈழ ஆதரவு பிழைப்புவாதம் எதிர் நிலைத்தன்மை பெற்றதுடன், புலி எதிர்ப்பு ஆதரவு என்று குறுகி இரண்டு அணிகளாகியது. இங்கு பிழைப்புவாதம் சார்ந்து வெளிப்படையாகவே புலியெதிர்ப்பு, புலியாதரவு என்று தன்னை கன்னை பிரித்துக் கொண்டது. இதற்கூடாக தம் பிழைப்பு வாதத்தை நடத்தத் தொடங்கியது. தமிழ் மக்களை இவை கண்டு கொள்ளவில்லை.

 

இவ்விரண்டும் இந்திய மேலாதிக்கத்தை அடிப்படையாக கொண்டு இயங்கியதுடன்,  புலியை ஆதரிக்கக் கோரியது அல்லது எதிர்க்கக் கோரியது. இப்படி புலியைச் சுற்றி இயங்கியது,  இந்த பிழைப்புவாதம். இது ஈழத் தமிழ் மக்களையிட்டும், அதன் நலனில் இருந்தும், அன்று முதல் இன்று வரை சிந்தித்தது கிடையாது. தன் சொந்த மக்களை ஏமாற்றி பிழைக்கும் இந்தக் கும்பல், அதே போல் ஈழ மக்களையும் நட்டாற்றில் விட்டுத்தான் பிழைத்தது.    

 

இன்று புலிகள் தாம் தப்பிப்பிழைக்க, ஈழ மக்கள் கொல்லப்படுவதாக காட்டி நடத்தும் பலி அரசியலை வலிந்து செய்யத் தொடங்கினர். எவ்வளவு மக்கள் பலியாகின்றனரோ, அதுவே தாம் தப்பிப்பிழைக்கும் அரசியல் பிரச்சாரத்துக்க உதவும் என்பது புலி அரசியல். அதற்கு அமைய மக்களை பலியிட்டு வரும் புலிகள், தமக்கு ஆதரவான இந்திய விஸ்தரிப்புவாதிகளின் துணையுடன் ஈழத்து எழுச்சியை தமிழகத்தில் உருவாக்கினர்.

 

இப்படி உருவான அரசியல் எழுச்சி, ஈழ ஆதரவு புலிப் பிழைப்புவாதிகளுடன் மட்டும் நிற்கவில்லை. மாறாக புலியெதிர்ப்பு பிழைப்புவாதிகளையும், அம்பலப்படுத்தியது. இதற்கு அப்பால் ஈழ மக்களுக்கான ஆதரவு அலை, படிப்படியாக இந்திய அரசுக்கு எதிரான, அதன்  விஸ்தரிப்புவாதத்துக்கு எதிரானதும், பிழைப்புவாதத்துக்கு எதிரான அரசியல் போராட்டமாக மாறியுள்ளது. இன்று அது தேர்தல் புறக்கணிப்பு முதல் தேர்தல் சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான போராட்டமாக மாறி வருகின்றது. இதில் இனவுணர்வும், தேசிய உணர்வும் கொண்ட அலையை, சர்வதேசிய உணர்வு கொண்ட ஒன்றாக கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு சர்வதேசியவாதிகளின் உடனடிக் கடமையாக உள்ளது.  

    
 
இந்த நிலையில் புலி ஆதரவு கொண்ட கட்சிகள், தேர்தல் பிழைப்புவாதத்தில் தம்மை மூழ்கடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக தேர்தல், ஊசலாட்டத்தை சந்தர்ப்பவாதத்தை, பிழைப்புவாதத்தை உருவாக்கி வருகின்றது. இதற்குள் உள்ள தமிழின உணர்வாளர்களை, தேர்தலை பகிஸ்கரிப்பதா இல்லையா என்ற ஒரு முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கின்றது.

 

இந்த இந்தியத் தேர்தலை குறைந்தபட்சம் உண்மையான தமிழின உணர்வாளர்கள் யார் என்பதை, அவர்கள் எடுக்கும் முடிவுகள் தான் இன்று தீர்மானிக்கின்றது. புலி ஆதரவு ஈழ ஆதரவு பிழைப்புவாதத்தை, ஒரு அணியில் நின்று தேர்தலில் பிழைப்பதுதான் மாற்று என்கின்றனர். புலி சார்பு ஈழ ஆதரவு குரல்கள் எல்லாம், இப்படி பம்முகின்றது. ஆனால் இதை வைத்து பிழைத்த பிழைப்புவாதிகள், இதனால் பிழைப்புக்கு வழியில்லை என்பதால் தம் கூட்டாளிகளை களத்தில் அடையாளத்துக்காகவேனும் போராடக் கோருகின்றனர். தேர்தல் பிழைப்புக்காக nஐயலலிதா திடீரென களத்தில் இறங்குகின்றார். பிழைப்புக்கான தேர்தல் கூட்டு, போல் ஈழ ஆதரவு கூத்துகள்;. இவை எல்லாம் எம் மக்களின் பிணத்தில் மேல் அரங்கேறுகின்றது.

 

இவர்கள் அமைக்கும் எந்தக் கூட்டும், இந்திய விஸ்தரிப்புவாதத்தின் அரசியல் எல்லைக்குள் ஈழத்தமிழனை ஒடுக்கவே செய்யும். இதற்கு மாறாக இந்தப் போலியான பிழைப்புவாத ஆளும் வர்க்கத்தின் தேர்தலை புறக்கணித்து, புரட்சிகரமான வழியில் தேர்தல் பகிஸ்கரிப்பதை தம் அரசியலாக கொண்டு மக்களுக்காக போராடுவது அவசியம். இதன் மூலம்தான், ஈழ தமிழ் மக்களுக்கு, தமிழக மக்கள் அரசியல் உணர்வுடன் உதவிவிடமுடியும்.  

 

பி.இரயாகரன்
07.03.2009

 

Last Updated on Saturday, 07 March 2009 14:17